நாலுக்கோட்டை – நாலு பேருக்கு தெரிய வைக்கணும்.!

சமீபத்தில் ஜுனியர் விகடனில் நாலுக்கோட்டை ஊராட்சி பற்றி செய்திகள் வெளியாயிருந்தன.

தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி ஊராட்சியாக 1965லிருந்து பஞ்சாயத்து தலைவராக ஒருவரே வந்தாலும், கட்சி சார்பின்றி இருந்தாலும், இந்தளவுக்கு ஊரின் நலனை மட்டுமே, முக்கியமாக கொண்டு பணி செய்து வருவது ஆச்சர்யம்தான்! இதுவே எங்க ஊரு பஞ்சாயத்து தலையா இருந்தா, ஊருக்கு அதிபராகி,தனி கவர்ன்மெண்டயே நிர்மாணிச்சிருக்கும்..!(பாதி ரோடு மெட்டீரியல்ஸ் அவரு வூட்ல (வீடாகவும்) இருக்குன்னா பாருங்களேன்.!?) நாலுக்கோட்டை மக்கள் உண்மையிலேயே கொடுத்து வைச்சவங்கதான்!

இது போலவே எல்லாம் ஊராட்சிகளும் இருக்கணுமுனு ஆசைப்பட்ட அது பேராசை..!
அது வேணாம்.!
இந்த ஊராட்சியில் நடந்துக்கிட்டிருக்கற அல்லது நடக்க இருக்கற திட்டங்கள பத்தி தெரிஞ்சுக்கற மாதிரி, அனைத்து மாவட்டங்களுக்கும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை ஒளிப்படக்காட்சிகளா எடுத்து,

சும்மா வந்து ஒரு டீக்கு கூட வழியில்லாம உட்கார்ந்துவிட்டு, கலைந்து செல்லும் கிராம சபா கூட்டங்களில் வீடியோ ஒளிப்பதிவை காண்பித்தால், அட்லீஸ்ட் அத பார்க்குற பத்து பேருல, ஒருத்தருக்காவது, அது மாதிரி நம்மூருலயும் பண்ணணுமேன்னு ஒரு ஆசையாவது வருமே..! அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாவது மாற்றம் வரலாமுல்ல?

விருது கொடுத்து,போட்டோ எடுத்து கொளவதோடு,அரசு கட் பண்ணிக்காம இது மாதிரியும் கன்டினீயு பண்ணனும்?

பண்ணுமா?

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இன்னமும் அட்லிஸ்ட் உதாரணத்திற்காகவாவது ஒரு சிலர் இருக்கிறார்களே...பாராட்ட வேண்டிய ஒன்று.
ஆனால் அவரைப் பற்றிய செய்தி பிரபலமானால் ,உடனே தன் கட்சிக்கு ஆதரவு தர கட்டாயப்படுத்தும் அரசியல்வாதிகலும் இங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.

-ரசிகன்