Showing posts with label கட்டுமானம். Show all posts
Showing posts with label கட்டுமானம். Show all posts

ரஜினி பஞ்ச்'கள் - ஒரு மேனேஜ்மெண்ட் லுக்

Photo Sharing and Video Hosting at Photobucket

கண்ணா..! நான் யோசிக்காம, சொல்றதில்ல சொல்லிட்டு யோசிக்கறதில்ல!

திட்டமிடுதல் என்பது ஒவ்வொரு செயல் அல்லது நிகழ்வுக்கும் முக்கியமான ஒன்று,ஒரு முறை சரியாக திட்டமிட்டுவிட்டால் பின்பு அதை பற்றி மறு முறை சிந்திக்க தேவையின்றி, இலக்கை அடைவதில் திட்டமிட்டபடி கவனத்தை செலுத்தவேண்டும்!

இது எப்படி இருக்கு?

ஒரு செயலை செய்ய, அதற்கு முன்பு அதை சக அலுவலக நண்பர்களிடம், பணியாளார்களிடம், கூறி அதைப்பற்றி கருத்து கேட்பதன் மூலம் அதை சரியாக, செய்யமுடியும்!

நான் தட்டி கேட்பேன் ஆனா கொட்டி கொடுப்பேன்!

தலைமையிடத்திலிருந்து எவ்வளவோ கடுமையாக நடந்துக்கொண்டாலும்,இரு செயலை சிறப்பாக செய்து முடித்தால் கண்டிப்பாக அதற்கான பலனை நீங்கள் பெறுவீர்கள்!

சொல்றேன்..! செய்யிறேன்...!!

நிர்வாகத்தில் இந்த சொற்கள் மிகுந்த பலம் வாய்ந்தவை!
ஒரு செயலை சொல்வதிலும் அதை செயற்படுத்துவதிலும் நாம் செலுத்தும் அக்கறை நம்மை மேன்மையாக்கும்!

ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி!

ஒரு கருத்தினை உள்வாங்கிக்கொள்ளும் திறன் மற்றும் செயல்படுத்தும் திறனை நாம் மேம்படுத்திக்கொள்வதன் மூலம் தேவையற்ற கால விரயத்தை தவிர்க்கமுடியும், ஒரு முறை சொல்லும் வார்த்தை எந்த அர்த்ததில் சொல்லப்படுகிறதோ, அதற்கான புரிந்துகொள்ளும் திறனை பெறுவது நம்மை முதலிடத்திற்கு கொண்டு செல்லும்!

நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்!

ஒரு த்யாரிப்பு அல்லது செயல் குறிப்பிட்ட காலத்தில் செயல்படுத்தபட முடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் செயலாக்கப்படும் காலத்தில் அந்த காலக்கட்டதிற்கேற்ப மாற்றங்களுடன் இருத்தல் அவசியம்

என் வழி தனி வழி!

ஒவ்வொரு பணியிலும், அவரவர்கள் தங்களுக்கென்று ஒரு தனி பாணியில் சென்றால் வெற்றி + புகழ் அடையலாம்!

(ரஜினி ரசிகர்கள் இணையத்தில பார்த்தது, சரி நம்ம பீல்டு சம்பந்தமா, ஆங்கிலத்தில இருக்கே1 அப்படியே தமிழ்ப்படுத்தி நம்ம பிரெண்ட்ஸ்க்கு அனுப்பி கலக்குவோம்னு, பண்ணது! இவ்ளோ பிரெண்ட்ஸ்க்கும் மெயில்"ரதத்தில்"விடறதுக்கு இங்க போட்டா ஒ.கேதானே...!!!!)

செங்கல்

தமிழகத்தைப் பொறுத்தவரை செங்கல் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவை இப்போதும் அமைப்புசாராதொழிலாகவே உள்ளது. இதனால் இதற்கான விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. செங்கல் உற்பத்தி சூளைகள் அனைத்தும் ஆற்றுப்படுகைகளிலேயே இருப்பதால் மழைக்காலங்களில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அதனால் இதன் விலையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் செங்கல் சூளைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செங்கல் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது.

நன்றி தினமணி

செங்கல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் இந்நேரத்தில், என்னதான் கான்கீரிட் பிளாக்குகளின் வருகையிருந்த்தாலும் மக்கள் அதிகம் விரும்புவது செங்கல்லால் கட்டப்படுவதைத்தான்!

Photo Sharing and Video Hosting at Photobucket


செங்கல் தயாரிப்புக்கு தேவையான மண் வளம் சில இடங்களில் மட்டுமே இருக்கும் அதன் மூலம் தயாரிக்கப்படும் செங்கல்லிலிருந்தே நமது கட்டிடத்திற்கு தேவையான பளு தாங்கும் தன்மை அல்லது உறுதிதன்மை பாதுகாப்பானதாக இருக்கும். அப்படியான மூலப்பொருளான மண் பெரும்பாலும், ஆற்றங்கரைகளிலோ, அல்லது வாய்க்கால் கரைகளிலோதான் களவாடப்படுகின்றன. பின்னர், அரசு செலவில் பொதுப்பணித்துறை மூலம் கரை பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது!

ஆற்று பாதுகாப்புக்கு அரசுப்பணியாளர்கள் இருந்தாலும் கூட அவர்கள் செயலற்றுத்தான் உள்ளார்கள். லோக்கல் பாலிடிக்ஸ் சமாளிக்கறதுங்கறது சும்மா லேசான விஷயம் இல்லை..!

இது போன்ற சூழ்நிலையில், மண் விற்பனையை அரசே ஏற்றுக்கொண்டு, நல்ல லாபத்துடன் (யாருக்குன்னு கேட்காதீங்க்??!!) செயல்பட்டு கொண்டிருக்கும்போது, இநத தொழிலையும் அரசு ஏற்று அல்லது அரசு மேற்பார்வையில், மாவட்டங்கள்தோறும் உள்ள சுய உதவிக்குழுக்களின் துணையோடு, இவ்விற்பனையை நடத்திட முன்வரலாம்! இதன் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு வேலை கிடைக்கும்! எல்லோருக்கும்(!?) லாபம் கிடைக்கும்..! ஆற்றுக்கரைகள் காணாமல் போவதும் காப்பாற்றப்படும்!