கத்தார் புது டிரெஸ் கோடு - வெளிநாட்டினருக்கு?

வெளிநாடுகளிலிருந்து வந்து பணிபுரிபவர்கள் கத்தார் நாட்டின் கலாச்சாரத்திற்கேற்ப நடந்துகொள்ளும் பொருட்டு, ஆடை அணிதல் தொடர்பாக புதிய சட்ட விதியினை கத்தார் அரசு வெளியிட இருப்பதாக,உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது!

ஏற்கனவே இங்கு பொறியாளர்கள், தொழில்நுட்ப பணிகளில் ஈடுபடுவோர் மற்றும் தொழிலாளர்கள் கட்டாயம் பணியிடங்களில் யூனிபார்ம் அணிந்துதான் பணி மேற்கொள்ளவேண்டும் இது பாதுகாப்பு சம்பந்த பட்ட விதிமுறையாகவும், இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் சுழலில்,தற்போது அறிவிக்கப்பட உள்ள ஆடை அணிவது பற்றிய பரிந்துரைகள்,பெரும்பாலும் அலுவலகங்கள், வங்கிகள் சார்ந்த பணி செய்பவர்களுக்காத்தான் என தெரிகிறது!

Photo Sharing and Video Hosting at Photobucket


அலுவலங்களை பொருத்தமட்டில் ஆசியாவை சார்ந்தவர்கள், பெரும்பாலும் ஃபார்மல் டிரெஸ் எனப்படும் பேண்ட் சர்ட் அணிகிறார்கள் மற்ற நாடுகளிலிருந்து வருபவர்கள் – எகிப்து, லெபனான், சூடான், ஜோர்டான், சிரியா & பிலிப்பைன்ஸ் - அவர்களின் இஷடப்பட்ட உடைகள்தான்! (அலுவலகத்துக்கு வருவதே ஏதோ ஸ்போர்ட்ஸ்க்கு செல்வது போன்று ஜீன்ஸ் டீ-ஷர்டோடுதான்!)

எதிர்பார்ப்போம் என்ன மாதிரியான சட்டவிதிகள் அமலாகின்றனவென்று...?!

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஐஐயோ.....ஒரு வேளை நைட்டி மாதிரி அரபி டிரஸ் போட சொல்லுவார்களோ?....
எனக்கு மாட்ச் ஆகாதே...
அப்போ.. வாங்கின டி-சட்டை/காப்பி-சட்டை எல்லாம் வீணா?
உடனே மன்னரோடு ஒரு மீட்டிங் அப்பாய்ன்மென்ட் எற்பாடு செய்யனும்.நஷ்ட ஈடு வாங்கனும்.