மலைக்கோட்டை - இடம் அல்ல படம்!


விஷாலின் வழக்கமான ஆக்ஷன் படம்!

Photo Sharing and Video Hosting at Photobucket


அனேகமா இவருக்குன்னு கதை ரெடி பண்ற்துக்கு டைரக்டருங்க ரொம்ப கவலையோ அல்லது யோசனையோ பண்ண மாட்டங்க போல, அதே ஸ்டைல் கதைகள்தான்,ஆனால் கொஞ்சம் விறுப்பு விறுப்பு கூட்ட, மத்தவர்களிடமிருந்து கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முயற்சிப்பண்றாங்க!

டைரக்டரு காமெடி லைன் போல, அவரப்போயி ஆக்ஷன் லைனுக்கு கொண்டு வந்தா என்னா ஆகும் சில இடங்களில் காமெடியாத்தான் இருக்கு..! அதுவும் அவ்ளோ பெரிய உருவமான பொன்னம்பலமே என்னமோ வடிவேலு லெவலுக்கு கொண்டு போகப்போற மாதிரி காமெடி பண்ண வச்சுருக்காரு டைரக்டரு!

பாடல்கள் ஆஹா ரகம் இல்லையென்றாலும் மணிஷர்மாவின் கடைசியில் ஒரு ரீமிக்ஸ் சாங்குடன் முடித்து அவர் பணியை பின்ணணி இசையில் அதிக கவனம் செலுத்தினாலும்,அதுல பாருங்க ஒரு ஆளு இன்னொரு ஆள இரும்பு ராடால அடிக்குபோது,வர்ற சத்தம் பொதுவா அய்யோவாகத்தான் இருக்கும், ஆனா இங்க டிங்...! டிங்ணு..! என்னமோ பள்ளிக்கூடம் விடற மணிச்சத்தம் மாதிரியெல்லாம் மியூசிக் கொடுக்கறது ஒவரோ ஒவருங்க..!

படத்துக்கு தனியா காமெடி டிராக்னு இல்லாம கதை போகும் பாதையிலேயே காமெடியும் பயணிக்கிறது! அதுவும் குறிப்பாக ஆஷிஷ் வித்யார்த்தி,ஊர்வசி தனது காதல் ஜெயித்து பின் தோற்ற பிளாஷ் பேக் சொல்வதிலும் சரி, பின்னர் டீ பன் கொடுத்து கொஞ்சும் காட்சிகளும் அசத்தல்தான்..! (காமெடியாக பார்த்தால் மட்டுமே! இல்லையேல் அந்த பழக்க வழக்கமே நடக்காத ஒன்றுதான்..! – பின்ன காதலித்து விட்டு ஆண் இன்னொருவளை திருமணம் செய்து கொள்கிறான், ஆனால் பெண் அவன் வேலை பார்க்கும் இடங்களிலேயே, தானும் போலீஸாக வேலை பார்க்க அதுவும் கல்யாணமாகாமல்! )

Photo Sharing and Video Hosting at Photobucket


மெயின் கதைக்கு வருவோம்,கதாநாயகன் இந்த படத்திலிருந்து புரட்சி தளபதி ஆகியிருக்கிறார்! (ஆக்ஷன் சம்பந்தமா ஒண்ணும் பட்டமில்லையா..??? – ஆமாம் இவரு என்ன புரட்சி பண்ணாருன்னு கேள்வியெல்லாம் கேட்காதீங்க? நான் தமிழ் சினிமா விஷயத்தில் தரை டிக்கெட்டு!)

ஜாமீன் கையெழுத்துப்போட பட்டுக்கோட்டையிலிருந்து மலைக்கோட்டை மாநகருக்கு வரும்போது கதாநாயகியை கண்டு கண்டதும் இவருக்குள் காதல்..!? அதற்கேற்றாற் போலவே சந்தர்ப்பங்களை அமைத்துக்கொண்டு காதலிக்க தொடங்க,ஆனால் கதாநாயகி தான் வேறு ஒருவனை காதலிப்பதாக கூற, அவள் கூறிய ஆளோ குடும்பமா ரவுடியிஸம் பண்றவங்க! கதா நாயகன் தன் காதலியின் காதலனிடம் சென்று வாழ்த்து தெரிவிக்க,அப்ப ஆரம்பிக்கு(குத்)து (வாழ்த்து தெரிவித்தல்..! விஷன் 2020 இதுவும் உண்டா.??!!)

வில்லனாக கன்னட நடிகர் நன்றாகவே செய்துள்ளார்( டைரக்டர் சார் வில்லன் அடிக்கடி செருப்பை கழற்றிவிட்டு சிகரெட்டை அணைப்பது எதுக்கு?)

பின்ணணி இசை, சண்டை காட்சிகள்,நெறைய அடியாட்கள் ,மழை & கிராபிக்ஸ் உதவியுடன் வில்லனுக்கு சங்கு ஊதப்பட்டு சுபமாக முடிகிறது!

எல்லாம் முடிந்தப்பிறகு நடக்கும் விஷயங்களாக வில்லன் அடியாட்கள் திருந்தி வாழ்வதை சொல்லி தனது காமெடி ரசனையோடே படத்தை முடித்துள்ளார் டைரக்டர்!

சிலருக்கு தேவையான அல்லது தேவையில்லாத செய்திகளாக

தமிழக முதல்வர் இத்திரைப்படத்தை பார்வையிட்டார்..!

நம்ம அபி அப்பாவின் மனம் கவர் நாயகிதான் இந்த படத்தை ஆரம்பத்திலேயே அழுது தொடங்கி வைத்து,பின் அழுது தொடர்ந்து,கடைசியில் அமைதியாக செல்கிறார்!

பயங்கர வன்முறை நகரில் நடந்துகொண்டிருக்கும் போது,தமிழ்நாட்டுக்கே சென்டர் திருச்சி, திருச்சிக்கே சென்டர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்ல ஹீரோவும் வில்லனும் மோதிக்கொள்வதை, லைன் கட்டி பார்க்கும் அவ்ளோ மக்களை பார்த்ததும் தான் நமக்கு தோணுகிறது அட நம்ம தமிழ் படம்டா...!

0 பேர் கமெண்டிட்டாங்க: