ஆயில்ய(ன்) நட்சத்திரத்தில்...!

வந்த நடசத்திரங்கள்;
வரப்போற நட்சத்திரங்கள்;
பழைய நட்சத்திரங்கள்;
என எல்லா நட்சத்திரங்களுக்கும்,

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தா னமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி,
அருள்வாய் அபிராமியே! ன்னு சாமிய வேண்டிக்கிட்டு,

எங்க ஊரு பிரசன்ன மாரியம்மன் கோவில் ஸ்பெஷல் பிரசாதம் வாங்கிட்டு வந்து வைச்சிருக்கேங்க! எடுத்துக்கோங்க!



மாரியாத்தா!

காளியாத்தா!

இந்த ஒரு வாரமும் நல்லபடியா, போகணும்பா!

நட்சத்திர வாரத்தில யாரும் என்னைய ஒட்டாம, நான் இந்த வாரத்தை நல்லபடியா ஒட்டிட்டு,ஒடணும்...!

31 பேர் கமெண்டிட்டாங்க:

said...

(*)(*)வாழ்த்துக்கள்(*)(*)

said...

//இந்த ஒரு வாரமும் நல்லபடியா, போகணும்பா!//

ஆயில்யன்

வாழ்த்துக்கள் !

உங்களுக்கு ஆயில்ய நட்சத்திரம் கடக ராசி, அதனால் தான் இந்த பெயரும், வலைப்பூவின் தலைப்பும் ?

சரியா ?

பிறந்த நட்சத்திரத்தை வெளியில் சொல்லாதீர்கள். யாராவது சூனியம் வச்சிடப் போறாங்க !
:))

எண்ணை எடுக்கிற ஊரில் வேறு இருக்கிறீர்கள். ஆயில்(?)யன் நல்ல பெயர் !
:)

said...

ஆயில்யனுக்கு இன்னொரு ஆயில்யனின் நட்சத்திர வாழ்த்துக்கள்!

//பிறந்த நட்சத்திரத்தை வெளியில் சொல்லாதீர்கள். யாராவது சூனியம் வச்சிடப் போறாங்க !//

எனக்கு யாராவது சூனியம் வையுங்கப்பா! :-))))

said...

//எண்ணை எடுக்கிற ஊரில் வேறு இருக்கிறீர்கள். ஆயில்(?)யன் நல்ல பெயர் !
:)//

நட்சத்திர வாழ்த்துக்கள்...

said...

வாழ்த்துக்கள். ஆயில்யன்.

said...

wishes for star week

said...

வாழ்த்துக்கள்!!!!

said...

ஆயில்யம் நட்சத்திரமே இந்த வார நட்சத்திரமா?

அப்படிப்போடுங்க.

வாழ்த்து(க்)கள்

Anonymous said...

வாழ்த்துக்கள்

said...

ஆயில்யன்,

மரபுக் கவிதை நன்றாக எழுதுகிறீர்கள். அருமையான தொடக்கம்.

அதென்ன, நட்சத்திர வாரத்தில் யாரும் உங்களை ஓட்டாமப் பார்த்துக்க, காளியாத்தாவையும் மாரியாத்தாவையும் காவலுக்கு வைத்து பயமுறுத்துகிறீர்கள்?

எதற்கும் இருக்கட்டும் என்று பிரசாதத்தையும் இட்டுக் கொண்டேன்.

வாழ்த்துக்கள்.

said...

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் புகழ் பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
வாழ்த்துக்கள்

said...

இன்னைக்கு சங்கடஹரசதுர்தி

இன்னைக்கு எது ஆரம்பிச்சாலும் மிக நன்றாக நடக்கும்.

நட்சத்திர வாரத்தை இன்று ஆரம்பித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!

said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.
( இன்னும் கடகத்தை Mozilla Fire fox ல் பார்க்க முடிவதில்லை. எழுத்துகள் உடைந்து வருகின்றன். அதை இந்த ஒரு வாரம் மட்டுமாவது கவனியுங்கள். எல்லோரும் படிக்காம பின்னூட்டம் போடுவாங்க. நான் படிக்க முடியாம பின்னூட்டம் போடுகிறேன்.)

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மாயா!

கோவி.கண்ணன் சார் நன்றி!

//ஆயில்(?)யன் நல்ல பெயர் !//

ஊரைப்பார்த்து கண்டுபிடிச்சீங்களா இல்லை போட்டேவிலேயே தெரியுதா
எண்ணெய் வழியிறது???


லக்கிலுக் நன்றி!

//எனக்கு யாராவது சூனியம் வையுங்கப்பா!//
எனக்கும்,வேணும்!
எனக்கும் வேணும்!

நன்றி ஜமாலன் சார்!...

நன்றி முத்துலெட்சுமியக்கா
பொறந்த வீட்டு வாழ்த்து.!!!
.

நன்றி முரளி கண்ணன் ..

நன்றி ஜெகதீசன்!

வாழ்த்துக்கள்!!!!

நன்றி டாக்டரம்மா..!

நன்றி துளசியக்கா..!

நன்றி அம்மிணி!

பிரசாதம் எடுத்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ் ரத்னேஷ்
மரபுக்கவிதையாஆஆஆஅ???!!!!


//ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் புகழ் பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.//
அட மெய்யாலுமேவாஆஅ!!!
நன்றி வந்தியத்தேவன் !


நன்றி மங்களூர் சிவா! .

வாழ்த்துக்களுக்கும்,சங்கடஹரசதுர்தின்னு சொன்னதுக்கும்!
இங்க வந்த பிறகு அதெல்லாம் கனவாகி போயிட்டு!


நன்றி கலைவாணியக்கா!
என்னமோ பிரச்சனை ஆனா என்னான்னுதான் தெரியலை!
நானும் முயற்சி பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்!
முடிஞ்சா இந்த ஒரு வாரத்துக்கு மட்டும் நீங்க IEலேர்ந்து எனக்கு ஹாய் சொல்லுங்களேன்!

Anonymous said...

//இந்த ஒரு வாரமும் நல்லபடியா, போகணும்பா!//

நட்சத்திர வாழ்த்துக்கள், All the best.

said...

முதலில் வாழ்த்துக்கள்:)

நம்ம ஊரு ஆளு அதனால் ஸ்பெசல் வாழ்த்து ஒன்னு எக்ஸ்ட்ரா வெச்சுக்குங்க!!!

said...

இந்த ஒரு வாரமும் நல்லபடியா, போகணும்பா!

நட்சத்திர வாரத்தில யாரும் என்னைய ஒட்டாம, நான் இந்த வாரத்தை நல்லபடியா ஒட்டிட்டு,ஒடணும்...!///

கொஞ்சம் செலவு ஆகுமே பரவாயில்லையா? அப்படின்னா இந்த டீலுக்கு ஒத்துவருகிறேன்.

said...

"எல்லோரும் படிக்காம பின்னூட்டம் போடுவாங்க. நான் படிக்க முடியாம பின்னூட்டம் போடுகிறேன்.)"

இங்கு வேண்டும் என்றே அமீரக நண்பர்களை தாக்கும் வித்யாகலைவாணியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்:)

said...

ஊர்க்காரங்ககிட்டேருந்து வாழ்த்துக்களை
எதிர்பார்த்திருந்தேன் !

நன்றி!

போட்டோ வா அது ஒரு பெரும்கதையாச்சே..!

ஆனாலும் நொங்குனத கண்டுபிடிச்சுட்டீங்க ரொம்ப புத்திசாலி..!

said...

வாழ்த்துக்கள் ஆயில்யன்

said...

ஆயில்யன் said...
//போட்டோ வா அது ஒரு பெரும்கதையாச்சே..!

ஆனாலும் நொங்குனத கண்டுபிடிச்சுட்டீங்க ரொம்ப புத்திசாலி..!///

என்னையும் ரொம்ப புத்திசாலின்னு சொன்னா நீங்க ரொம்ப பெரிய புத்திசாலிங்கோ

said...

வாழ்த்துகள் ஆயில்யன்.

இரத்னேஷ். இந்த இடுகையில் இருக்கும் 'கலையாத கல்வியும்...' பாட்டைப் பார்த்துவிட்டு ஆயில்யன் மரபுக்கவிதை நன்றாக எழுதுகிறார் என்று நினைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி என்றால் ஆயில்யனே சொல்லுவார் அது யார் எழுதியது என்று.

said...

நட்ச்சதிர வாழ்த்துக்கள்

said...

நன்றி வள்ளி!
நன்றி குசும்பன்!
நன்றி கண்மணியக்கா!

நன்றி குமரன்!

சீர்காழி கோவிந்த ராஜன் குரலில் எனக்கு கேட்ட ஞாபகம்தான்..!

தாங்களே சொல்லிவிடுங்களேன் யார் அதை இயற்றியது என்று?

said...

மிக்க சந்தோஷம் மிக்க சந்தோஷம் மிக்க சந்தோஷம், நான் இப்போதான் ஆயில்யா பார்க்கிறேன்!!! மிக மிகசந்தோஷம் ஆயில்யா, வண்டிகாரதெரு மாரியம்மன் பிரசாதத்தை எடுத்து கொண்ண்டேன்! நம்ம ஊர் பேரை கண்டிப்பா காப்பாத்துவீங்கன்னு நல்லா தெரியும் வாழ்த்துக்கள்!!! கலக்குங்க ஆயில்யா!!

said...

குமரன்,

// இரத்னேஷ். இந்த இடுகையில் இருக்கும் 'கலையாத கல்வியும்...' பாட்டைப் பார்த்துவிட்டு ஆயில்யன் மரபுக்கவிதை நன்றாக எழுதுகிறார் என்று நினைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.//

இல்லையே,

"வந்த நடசத்திரங்கள்;
வரப்போற நட்சத்திரங்கள்;
பழைய நட்சத்திரங்கள்;
என எல்லா நட்சத்திரங்களுக்கும்",

நான் மரபுக்கவிதைன்னு சொன்னது இந்த வரிகளைன்னு நினைச்சுக்கக் கூடாதா? முதல் வரிலயும் ரெண்டாவது வரிலயும் 'வ' , 'வ' ன்னு வருதே மோனை தானே?

அதுக்குக் கீழயும் ஒரு பாட்டு இருந்ததில்ல? ஆமா யாரு எழுதினது? நல்லா இருந்துச்சு.

said...

அபி அப்பா நீங்க கொஞ்சம் லேட்டுதான் பரவாயில்லை!
அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன்!

என்னது ஊர் பேர காப்பாத்துணுமா?
டிரை பண்றேன்! முடியலைன்னா உதவிக்கு வாங்க....!!!!

said...

ரத்னேஷ்

எனக்கும் கவிதைக்கும் ரொம்ம்ம்ப தூரம்!

டி.ராஜேந்தர் ஊருங்கறதால கொஞ்சம் எதுகை மேனை வந்திருக்குமோ தெரியலை!?!?

அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அம்மன் பதிகத்தில அந்த வரிகள் வருமாம்!

நன்றிகளுடன்...!

said...

கோவிச்சுக்காதப்பா! நான் காலை முதல் நெம்ப பிசிப்பா, இந்த வாரம் முழுக்க அப்படித்தான் அதனால சாயந்திரம் வந்து குமுறிடுறேன்! இந்த நாற பசங்க தம்பி, கோபி எல்லாம் கூட "ஆயில்யன் உங்க ஊரா உங்க ஊரா"ன்னு கேட்டப்ப கூட எனக்கு நீர் ஸ்டாரா ஆகிடேன்ன்னு சொல்ல வில்லை அநத மகாபாவிங்க!!

said...

வாழ்த்துகள் ஆயில்யன்.

said...

நட்சத்திர வார நடுவினில் நல் வாழ்த்துகள் ஆயில்யன்.