மதியம் வெள்ளி, அக்டோபர் 26, 2007

தோஹா 2016 - ஒலிம்பிக்ஸ்..?

2016ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தப்போகும் நாடுகளுள், கத்தாரும் தனது தகுதிகளை சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் தெரிவித்து, 2016ல் தேஹாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்து முழு முயற்சியுடன் களத்தில் இறங்கியுள்ளது!

அரபு நாடுகளில் முதல் முறையாக ஒலிம்பிக் நடத்த, தகுதிகளின் அடிப்படையிலான தேர்வுகளில் கலந்துகொள்கிறது கத்தார்!

கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளுக்காக சுமார் 2பில்லியன் டாலர் செலவழித்து,சிறப்பான அடிப்படை கட்டுமானங்கள் மற்றும் புதிய மைதானங்களை அமைத்து, வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

அதன் பிறகு கத்தாரின் அடுத்த இலக்கு ஒலிம்பிக்கை மையமாக வைத்துதான் செயல்பட தொடங்கியது!

கத்தாரில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப்படவேண்டும், என்று சர்வதேச அளவில் கவன ஈர்க்கும் விதமாக நேற்று தோஹாவில் நடைப்பெற்ற தோஹா கடற்கரையில் பொதுமக்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒலிம்பிக் 2016க்கான சின்னம் வெளியிடப்பட்டது!

Photo Sharing and Video Hosting at Photobucket



எது எப்படியோ 2016ல் இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றால் இந்தியர்கள் நமக்கும், கூட பெருமைதான்!

பெரும்பாலும் வாலண்டியர்கள் உதவியோடு சிறப்பாக நடத்தி முடித்த ஆசிய விளையாட்டு போட்டிகளை போன்றே, ஒலிம்பிக்கிலும் அதிகளவில் வாலண்டியர்கள் ஈடுபடுத்தப்படபோவது உறுதி!

அதில் அதிகளவில் இந்தியர்கள் இடம்பெறப்போவதும் உறுதி! (விளையாட்டுல் இல்லைங்க..!!!)

3 பேர் கமெண்டிட்டாங்க:

M.Rishan Shareef said...

Yes friend.

goma said...

2016 ஒலிம்பிக் சின்னத்தைப் பார்த்தால் நம் பிள்ளையார் உருவம் தெரிகிறதே!....இப்பொழுதே வேண்டிக் கொள்வோம் நம் நாடும் நிறைய தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று .....

கானகம் said...

//2016 ஒலிம்பிக் சின்னத்தைப் பார்த்தால் நம் பிள்ளையார் உருவம் தெரிகிறதே!...//

Ithellaam Ovaru... May qatar get this Olympics 2016.. We wish them all the Best.. ( Qatar Bloggers, Branch Industrial Area)