Showing posts with label தமிழ் நாடு. Show all posts
Showing posts with label தமிழ் நாடு. Show all posts

சட்டக்கல்லூரி - போலீஸ் - நோ எண்ட்ரீ!


நடைப்பெற்று முடிந்த சட்டக்கல்லூரி வன்முறை சம்பவங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் இப்பொழுது காவல்துறையின் பக்கம் திரும்பி நிற்கிறது!

ஒரு வார காலத்திற்கும் மேலாக சட்டக்கல்லூரியில் சிலச்சில பிரச்சனைகள் முட்டிக்கொண்டிருந்த நிலையில்,உளவுப்பிரிவால் தகவலும் அளிக்கபட்டிருந்த நிலையில் காவல்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தாலும் கூட கட்டாயம் இச்சம்பவம் வேறு மாதிரியான பிரச்சனைகளாகவே அரங்கேறியிருக்ககூடும்!

வாசல்வரை வந்து நின்ற காவல்துறைக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற செய்தியும் போலீஸ் அதிகாரிகளின் கண்முன்னேயே மாணவர்கள் மாணவனை தாக்கியதும் எல்லோரிடமும் ஒட்டுமமொத்த வெறுப்பினை காவல் துறை வாங்கிக்கட்டிக்கொண்டது!

(சாமி பட ஸ்டைலில் யாராவது ஒரு சில இளைய தலைமுறை போலீஸ் களமாடியிருந்தால் பொதுமக்களால் பாராட்டுப்பெற்றிருக்கக்கூடும்! )

முன்பு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காவல்துறைக்கு விடுக்கப்பட்ட செய்தி குறிப்பாக காவல்துறை கல்லூரிகளுக்கு குறிப்பாக சட்டக்கல்லூரிகளுக்கு நுழைவதற்கு அக்கல்லூரியின் முதல்வரின் அனுமதியினைப்பெற்றிருக்கவேண்டும் என்ற ஒரு நடைமுறை பழக்கம் கொண்டு வரப்பட்டிருக்கிறது!

(இது மற்ற மருத்துவ பொறியியல் கல்லூரிகளுக்கு கிடையாது! - போலீஸால், சட்டம் படித்தவர்களினை அத்தனை எளிதில் கைது செய்து விட முடியாது அதே நேரத்தில் மற்ற எத்துணை பெரிய படிப்பு படித்த மனிதராக இருந்தாலும் தூக்கிடலாம் அப்படிங்கறதும் ஒரு விந்தையான நடைமுறை விதி!)

ஜாதி ரீதியான பிரச்சனைகளை முன்வைத்து வன்முறை சம்பவம் அரங்கேற்றப்பட்டது, அதற்கு என்ன காரணம் மாணவர்களின் படிப்பு சார்ந்த விசயங்கள் தவிர்த்து மற்ற ஏனைய விசயங்களில் கல்லூரிக்குள் என்ன நடக்கிறது? எப்படி வெடித்தது இப்பிரச்சனை? என்ற எந்த விசயமும் இப்போதைக்கு எழுப்பப்படாமல் சில காவல்துறை அதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்டும், சஸ்பெண்ட் செய்யப்பட்டும் உள்ளார்கள்! - ஒட்டுமொத்த பிரச்சனையுமே காவல்துறை மூக்கை நுழைக்காமல் வெளியே நின்று வேடிக்கை பார்த்ததுதான் காரணம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்!

கேட்டுக்கு வெளியே நின்று அடித்தால் போலீஸ் வந்து பிடித்து துவைக்கும் என்ற சட்டம் தெரிந்தே அழகாய் உட்புறம் நின்று வன்முறையாடிய மாணவர்களுக்கு இப்படியான வன்முறையில் ஈடுபட்டால் என்ன விதமான தண்டனைகள் சட்டத்தில் இருக்கு என்று சொல்லிக்கொடுக்காமல் விட்டுவிட்டார்களா ஆசிரியர்கள்?

இந்த சம்பவத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு என்ன விதமான தண்டனை அளித்தால் இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையிலும் இருக்கும்? இந்த மாணவர்கள் தண்டனை பெற்ற மீண்ட பிறகு நல்லவிதமாக சமூகத்தில் கடமை ஆற்ற மனதளவில் தயாராக இருப்பார்களா? அல்லது வன்முறையின் ஆணி வேர்களாக மாறுவார்களா? - சிந்திக்கப்படவேண்டிய விசயம் - யார் சிந்திப்பது....?

வாழ்த்துக்கள் அமைச்சரே! - தங்கம் தென்னரசு


விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்களுக்காக காரியாபட்டியில் ஒரு வளாக நேர்காணல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், பள்ளிக்கல்வி அமைச்சருமான தங்கம் தென்னரசு. சென்னையை மையமாகக் கொண்ட ஐம்பதுக்கும் அதிகமான நிறுவனங்கள் அடுத்த மாதம் நடக்க இருக்கும் இந்த நேர்காணல் தேர்வில் பங்கெடுக்கின்றனர். இதன் மூலம் பல படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது என்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார் அமைச்சர்.

இதைப் பின்பற்றி, இன்னும் பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் இதுபோன்ற நேர்காணல்களை நடத்த முற்படுவார்கள் என்பது மட்டுமல்ல, பல்வேறு தொழில் நிறுவனங்களும் கிராமப்புறத் திறமைகளை அடையாளம் கண்டு வேலைவாய்ப்பு அளிக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் இந்த நேர்காணல் ஏற்படுத்தித் தரும் என்று நம்பலாம்.

நன்றி - தினமணி

மேலும் இவர்தம் சாதனைகளுள் சிலவாக,

பாடப்புத்தகங்கள் சிறப்பாக வடிவமைத்து அதை இணையத்தளங்களில் காணச்செய்தது!

எல்லோருக்கும் அடிப்படை கல்வி தேவையின் நலன் கருதி ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தலில் கொடுத்த முக்கியத்துவம்!

வெகுவிரைவிலேயே, அமல்படுத்தபடப்போகும் ஒவ்வொரு 5 கி.மீ சுற்றளவிலும் ஒரு பள்ளி அமைந்திருக்கவேண்டும்! என்றதொரு திட்ட முடிவு! கண்டிப்பாக கிராம புற மாணவர்களின் கல்வி வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சமாக இருக்ககூடும்!கிராமப்புறங்களில் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படும் பெண் மாணவிக்களுக்கு நிச்சயம் நல்ல விஷயம்தான் இது!

தொடரட்டும் இவர்தம் சாதனைகள்!

தொடரட்டும் இவர்தம் எண்ணங்களை செயலாக்கும் அரசுத்துறையினரின் ஒத்துழைப்பு !

மழைக்காலம் - இன்று ஆரம்பம்..?!

Photo Sharing and Video Hosting at Photobucket



ராமர் பிரச்சனை;

முன்னாள முதல்வர் - கொடநாடு பிரச்சனை;

சேதுசமுத்திரம் பிரச்சனை;

கேபிள் டிவி பிரச்சனை;

முதல்வரின் உண்ணாவிரதம்;

சுப்ரீம் கோர்ட்டின் அரசுக்கான கண்டனங்கள் சம்பந்தமான பிரச்சனைகள்,

போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சனைக்களுக்கு தீர்வு காணும் பொருட்டு இன்று முதல் மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது! முடிஞ்சா டிவியில போடுங்கப்பா! சிம்பு அழுகை+ ஆக்ஷன் மேட்டரால விஜய் டிவி டி.ஆர்.பி ரேட்டிங்க எகிறிடிச்சாம்! அதுக்கு உடனடியா நடவடிக்கை எடுங்க..!ஆனா ஒரு நல்ல விஷயம் போன ஆட்சி மாதிரி ஜால்ராஸ் சத்தம் அதிகம் வராதுன்னு நம்பலாம்!

(இவர இந்த மாதிரி கூட்டங்கள்ல பார்த்தாதான் உண்டு அதான் இந்த போட்டோ..!)