பிரபலமான கதை

ஒரு நாள்லயே உலகமே தெரிஞ்சுக்கற மாதிரி லைம் லைட்டுக்கு வந்துட்டான்யா..!

பெரிய லக் உள்ள ஆளு! திடீருன்னு உலகமே பேசுற மாதிரியாயிட்டன்ய்யா..!

இது போன்ற வார்த்தைகள் பல இடங்களில் கேட்டதுண்டு!

சில வருடங்கள் முன்பு வரை இணையதளங்களை ஒபன் செய்தால் “நீங்கள் கோடியாவது ஆளு நீங்கதான் எங்க இணையத்திற்கே வர்ர மொத ஆளு போன்ற ஜொலிக்கும் விளம்பரங்களை பார்த்தே என்னை போல ஆளுங்க,கனவுலேயே ஒலக நாடுகள சுத்தி வந்ததுமுண்டு!
அது ஏங்க எவனாவது வீடியோ கேமராவ எடுத்திக்கிட்டு வந்தா, டிவியில காமிப்பாங்கன்னு ஒரு அல்ப ஆசையில, ஒடிப்போய் மூஞ்ச காட்ற ஆர்வம் எல்லாருக்குமே இருக்குமுல்ல!
பிரபலமாக எல்லாருக்குமே ஆசை இருக்கத்தானே செய்யும்!

சரி என்னா சொல்ல வர்றங்கிறீங்களா?

ஒண்ணுமில்லைங்க! ஒரு பொண்ணு கலிபோர்னியாவுல கணவரோட ஒரு கம்பெனியில மார்கெட்டிங்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்குங்க! போன வருசம் அந்த பொண்ணு படிச்சுக்கிட்ருந்தப்ப,அவங்க ஃபிரெண்டு ஒரு நாள் வந்து ஒரு மாடல் போட்டொ புடிக்க போகலாம் வாங்கன்னு, கூப்பிட்டு போக, இந்த பொண்ணும் போய் வந்தாங்க..!

போட்டோ கிராபரோ இந்திய கலாச்சாரத்திற்கும் கம்ப்யூட்டர் காலத்திற்கும் லிங்க் பண்ற மாதிரி,ஒரு ஐடியாவோட இருந்துருக்காரு! ஏற்கனவே இந்த பொண்ணுக்கு பரத நாட்டியம் ரொம்ப அத்துபடின்னு தெரிஞ்சு, அதே காஸ்டீயும்ல, போட்டோ எடுத்து தள்ளி விட , ஆனால் அப்போது இந்த பெண்ணுக்கு தோன்றிய, எண்ணம் ஆமாம் இத போய் எங்க யூஸ் பண்ண போறங்கன்னு நினைச்சுகிட்டே போயிட்டாங்க..! அப்புறம் அந்த விஷயத்தையும் மறந்து,குடும்ப மற்றும் ஆபிஸ் வேலைகளில் முழ்கிவிட..!

கடந்த ஜுன் மாதம் வீட்டுக்கு காலை முதலே கால்கள் வந்து குவியத்தொடங்கின, எல்லாம் பிரெண்ட்ஸ் கால் பண்ணி வாழ்த்துக்கள் சொல்ல ,முதலில் எதற்கென்றே புரியாமல்,கணவரும் மனைவியும் எல்லா வாழ்த்துக்களையும் ரீசிவ் பண்ணிக்கிட்டிருக்க,அப்புறம் பார்த்த வெளிநாட்லேர்ந்தெல்லாம் போன் கால்கள் வரத்தொடங்க ஆஹா, என்னாடா விஷயமுன்னு பார்த்தா....!

இதான்

Photo Sharing and Video Hosting at Photobucket





வளர்ந்து வரும் இந்தியாங்கற ஒரு கவர் ஸ்டோரிக்கு,கவர் படமாக ஜொலித்துக்கொண்டிருந்தார் அந்த பெண்! அதுவும் டைம் பத்திரிக்கையில..!

யு.எஸ்ல டைம் பத்திரிக்கையில போட்டோ வருதுன்னா, அது உலகமே பாரட்டுனா மாதிரி அப்படிப்பட்ட கவர் படத்தைத்தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி அந்த போட்டோ கிராபர் எடுத்திருந்தார்!


அந்த பெண் குஞ்சன் தியாகராஜா இந்திய வம்சம்,வளர்ந்தது ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் , மணந்து கொண்டது இலங்கையை சேர்ந்த ரமணன் தியாகராஜவை வாழ்ந்துகொண்டிருப்பது, கலிபோர்னியாவில், இந்த போட்டோ அப்படியே, அச்சு அசலா நம்ம கலாச்சாரத்த பிரதிபலிக்குதுன்னு, வந்த கமெண்ட்லதான் இந்த பொண்ணுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாம்..! இருக்காதா பின்னே, வெளிநாட்டுக்கு போன பின்னனடியும்,என்னம்மா நீ இன்னும் அப்படியே உங்க நாட்டு கலாச்சாரத்தோடவே இருக்கியேன்னு சொன்னா எல்லாருக்கும் சந்தோஷமதானே இருக்கும்!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

புகைப்படம் அருமையாக தமிழ்க் கலாசாரத்தைப் பறை சாற்றுகிறது. நைஜீரியாவோ இலங்கையோ கலிபோர்னியாவோ தெரியவில்லை - பாரதம் தான் மிளிர்கிறது

said...

அழகிய படம்!

வாழ்த்துகள்!

said...

என் போட்டோ எப்பொழுது வரும்:((( நானும் வெளிநாட்டில் நம் கலாச்சாரத்தோடுதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்!!!