மருதமலை – படம் அல்ல இடம்..!

1995 ஆம் வருடம் சபரிமலை சென்று திரும்புகையில், கோவை வந்து, மருதமலையில் இரவு தங்கி அதிகாலை 4.30க்கு கோயிலுக்கு செல்ல தயாரகும் வரை எனக்கு மருதமலை பற்றி ஒரு துளிச்செய்தி கூட அறிந்திராதவன், ஏன் கோயமுத்தூர் என்னும் ஊரை கூட அறிந்திருக்கவில்லை.!

5.00 மணிக்கு மலைப்படிகளில் ஏற ஆரம்பிக்கும்போதுதான் எதோ ஒரு இனம்புரியாத உணர்வு, மகிழ்ச்சியாகவும் இருந்தது அந்த அனுபவம்!



படிகளில் அமைந்துள்ள மண்டபங்களில், காணப்பட்ட சாண்டோ சின்னப்ப தேவரின் பெயரை படித்துக்கொண்டே வர கூட வந்த என் குடும்ப நண்பர் (சிறுவனான நான் மட்டுமே அந்த சபரிமலை பயணத்தில் இவரின் துணையுடன் சென்றேன்..! அது வரையிலும் யாரும் எங்கள் குடும்பத்திலிருந்து சபரிமலை பயணம் மேற்கொண்டது கிடையாது.)

தேவரின் கதைகளை சுவரஸ்யமாக, தேவரின் மருதமலை முருகன் மீதான் பக்தி குறித்தும் தனக்கு தெரிந்த தகவல்களை கூறிக்கொண்டே அவ்வப்போது மலைப்படிகளில் நின்று திரும்பி அந்த அதிகாலை நேரத்து விளக்கு வெளிச்சத்தில் கோவையின் அழகை கண்டது இன்னும் நினைவை விட்டு அழியாத நினைவுகள்..!

கோயில் நுழைவாயிலில் அப்போது தங்கதேர் தயாரிக்கும் பணிக்கான ஆயத்த வேலைகள் நடந்துகொண்டிருந்தன!

கோயிலின் கருவறையில் பிரும்மாண்டமாக,கம்பீரமாக நிற்கும் சுப்ரமணிய சுவாமி!



பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும்படியான உருவ அமைப்பு,வழிபட்டு கோயில் பிரகாரம் சுற்றி வந்து,பாம்பாட்டி சித்தரை வழிபட,படிகளில் கிழிறங்கி சென்றால் வரும் குகைக்கோயில்!

வரும் வழியில் சிலரின் மூலம் பெற்ற தகவல்களாக, கோயிலுக்கு நேர் பின்புறம் மலையில் கார்த்திகை தீபத்தன்று விஷேசமாக இருக்கும் என்பதும்,ஆனால் கடினமான பாதையில் பயணித்துதான் அங்கு செல்லமுடியும் என்பதும், மலையை பார்த்து வியக்கத்தான் முடிந்தது எங்களால்!

அந்த நாள் முதல் என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமிக்க தொடங்கியது மருதமலை!

வருடம் ஒரு முறை கேரளா டூர் (இதப்பத்தி தனி தொடராத்தான் போடணும்.!) செல்கையில் எப்படியாவது நண்பர்களை சரிக்கட்டி, மருதமலை தரிசித்துதான் தொடங்குவோம் அல்லது முடிப்போம்!

ஒரு சமயம் பகுதி நேர பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வுக்கு செல்ல வேண்டிய சூழல் காரைக்குடியில் தேர்வு மையம் இருந்தாலும் ஊர் சுத்த வேண்டி சென்றது கோவைக்கு!

வெகு சீக்கிரமாக தேர்வை(!) முடித்து கொண்டு, மருதமலையிலிருந்து ஆரம்பித்து, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக பழனியில் முடித்தோம் எங்களின் இரண்டு நாள் டூரை!

நீங்களே சொல்லுங்கள் எங்களுக்கா படிக்க இடம் கிடைத்திருக்கும்..?!

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அவன் மனசு வெச்சிருந்தான்னா ஒரு கோவைக் கல்லூரியிலேயே கிடைத்து இருக்குமே!! :))

said...

நீங்களே சொல்லுங்கள் எங்களுக்கா படிக்க இடம் கிடைத்திருக்கும்..?!"

முருகா ஆண்டாவா, நம்ம ஆயில்யனுக்கு நல்ல படியா இன்ஜினியர் சீட் கிடைச்சா, அந்த முதல் படத்தில் இருக்கும் படியில் மேலிருந்து கீழே அவரை உருட்டி விடுகிறேன்.
(நீங்க முதல் பதிவில் யாரும் உங்களை ஓட்டதான் கூடாதுன்னு தான் சாமிகிட்ட வேண்டிக்கிட்டீங்க, உருட்ட கூடாதுன்னு சொல்லவே இல்லையே:)

said...

//இலவசக்கொத்தனார் said...
அவன் மனசு வெச்சிருந்தான்னா ஒரு கோவைக் கல்லூரியிலேயே கிடைத்து இருக்குமே!! :))
//

கூடவே இருந்தா அருமை புரியாதுன்னு கொஞ்சம் தள்ளி நிக்க வைச்சி பார்த்திருக்காரு...!!??

கிட்டக்க பார்க்கறதோட,தூரத்திலேர்ந்து பார்த்தா மனசுக்கு சுகமாயிருக்குங்க!

said...

//குசும்பன் said... //

ஆரம்பிச்சிட்டீங்களா குசும்பன்

நடத்துங்க..!

நானும் உங்களை உருட்றதுக்கு இல்ல ஓட்றதுக்கு எதாவது மேட்டர் சிக்குமான்னு தான் பார்க்குறேன் பாட்ட மாட்டேங்குது! மாட்டும்...!!!

Anonymous said...

what is on the other side of that mountain range...i have been to that temple once..and I love to visit again and again....
very peaceful (when I went) and i didn't see forcing vendors either...