எங்க ஊரு பில்டர் காபி !

காலையில் 5.00 மணிக்கு சீர்காழியின் "அருள் தரு சரவண பவனென்னும் முருகனின் அடியினை பணி மனமே" கேட்க ஆரம்பிக்கும், எங்கள் வீட்டு டேப்பிலிருந்து அந்த தெருவுக்கே..!

எனக்குள் உள்ளுக்குள் ஆஹா...! அப்பா கிளம்பிட்டாருடான்னு, அலறி அடிச்சுக்கிட்டு, தெருவுக்கு போனா மப்ளர தலையில் முண்டாசு ஸ்டைல்ல கட்டிக்கிட்டு சைக்கிள்ல ரெடியா நிப்பாரு? (அப்படி ஹோட்டல் போயி தீரும்பி வந்தப்ப எடுத்த போட்டோ முன்னாடியய போட்டுட்டேன்!)

நீயும் வர்றீயாடா?

ம்.. நானும் வருவேன்!

சரி வா பின்னாடி உட்காரு! என்னதான் பின்னாடி உட்கார வைச்சாலும்,நாஞ்சில் நாட்டிலிருந்து கொத்ததெரு வருவதற்குள் ஒரு பத்து தடவையாவது,தூங்குறீயாடா? கேள்வி வந்துக்கிட்டே இருக்கும்!

எனக்கு எரிச்சலா இருக்கும்! அதெல்லாம் இல்லை நீ போப்பா..!

சைக்கிள் மணிக்கூண்டு வருவதற்குள், எதிர்ப்படும் பால்காரன்,பேப்பர்க்காரன் போன்றவர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு வந்தாலும் என்னைய செக் பண்றதுக்கு மட்டும் அலுத்துக்க மாட்டாரு!

காளியாக்குடி ஹோட்டல் அம்பிதான் கல்லாவில் அமர்ந்திருப்பார்!
தம்பி சாருக்கு ரெண்டு காபி ஸ்ட்ராங்கா..!


நுரைப்பொங்க வரும் காபியை எடுத்து சூட்டைஆற்றப்போக, அதெல்லாம் வேணாம் இங்க கொடுன்னு, வாங்கி அந்த சூட்டோடயே நான் பர்ஸ்ட் குடிச்சி முடிச்சிட்டு இன்னொன்னு கிடைச்சா நல்லாயிருக்குமேன்னு கேட்டா, அதெல்லாம் நிறையா குடிச்சின்னா அப்புறம் தலைமுடியெல்லாம் வெள்ளையாகி கிழவனாகிடுவ சொல்லி நிறுத்துவார்!

இப்படியே காபி தேடி ஊர் சுற்ற 8 வய்தில் கிளம்பியவன் மயிலாடுதுறையில் அத்தனை ஹோட்டல்களிலும் காபி டேஸ்ட் அத்துபடியாச்சு!

காளியாக்குடி காபி அப்ப நல்லாருந்துச்சு..! அப்புறமா மயூராவை தேடிப்போக ஆரம்பித்தேன்! இந்த மயூராவுல சாப்பிடுறத விட வேற என்ன ஸ்பெஷல்ன்னு பார்த்தீங்கன்னா – காலண்டர்தான்!

ஒட்டல் புல்லா காலண்டர் மாட்டி தொங்கவிட்டிருப்பாங்க! அதுமட்டுமில்லாம அத்தனை காலண்டர்களிலும் கரெக்டா அன்றைய தேதியோட..!

காபி மாஸ்டர் பார்த்தீங்கன்ன ரொம்ப சிம்பிளா எதோ குளிக்கறதுக்கு கிளம்பிக்கிட்டிருக்கற மாதிரிதான் ஒரு துண்ட கட்டிக்கிட்டு நிப்பாரு!

டபராவில் ஏற்கனவே டிகாஷன் ரெடியா இருக்கும்,ஸ்ட்ராங்க் பார்டிக்களுக்கு,டபுள் ஸ்ட்ராங்க ஆளுங்க பார்த்தே கண்டுபிடிச்சு அது மாதிரி போட்டு கொண்டு வந்து வைப்பாரு!

இப்பவும் நீங்க ஐந்து மணிக்கு அங்க போனீங்கன்னா யாராவது காபிக்கு வெயிட்டிங்ல்ல இருப்பாங்க! சாம்பிராணி மணம் கமழ,அந்த சூடான காபி குடிக்கறது எவ்ளோ சுகம் தெரியுமா?

அதற்கப்புறம் அர்ச்சனா ஹோட்டல் வந்துச்சு, இப்ப காபி குடிக்கறதுல, சில சமயங்களில் குழப்பம் வர ஆரம்பிக்கும் அளவு அஙகேயும் டிகிரி காப்பி கிடைக்க ஆரம்பிச்சுது!

ஆனாலும் ஒரு ரசனையோட குடிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா, காலை 5 மணிக்கு மயூராதான் அதுபோல மாலையில் அர்ச்சனாதான்னு பொழப்பு போனது!

இது மட்டுமில்லாம, அப்பப்ப அய்யப்பன்,ஆரி(றி)யபவன், ரயிலடி ஜீ.வி.எஸ்ன்னு தேடி போறதுண்டு!

இப்ப இங்க வந்ததிலிருந்து, அத நினைச்சு, நினைச்சு நெஸ்காபி குடிச்சிக்கிட்டிருந்தேன் – போன மாசம் வரைக்கும்...!! ( ஹைய்யா....! இன்னொரு போஸ்ட் ரெடி..!)

ஆமாம் காபி குடிச்சா எங்க அப்பா சொன்ன மாதிரி, கிழவனாயிடுவேனா...???

21 பேர் கமெண்டிட்டாங்க:

said...

காபி மணம் எத்தனை மண்ணின் மைந்தர்களை இழுக்கிறது என்றுப் பார்ப்போம் :-)

said...

//ramachandranusha(உஷா) said...
காபி மணம் எத்தனை மண்ணின் மைந்தர்களை இழுக்கிறது என்றுப் பார்ப்போம்
//
மத்தவங்க இருக்கட்டும்!
உங்க ஹீரோ என்ன சொன்னாங்கன்னு?! சொல்லுங்க முதல்ல...!

said...

//இப்ப இங்க வந்ததிலிருந்து, அத நினைச்சு, நினைச்சு நெஸ்காபி குடிச்சிக்கிட்டிருந்தேன் – போன மாசம் வரைக்கும்//

inga vanthathukku appuramum neskaappi thaana.... black coffee try pannaliya?

said...

//black coffee try pannaliya?//
நெஸ்காபி குடிச்சிக்கிட்டிருந்தேன் – போன மாசம் வரைக்கும்//

said...

அடுத்த போஸ்ட ஒண்ணு ரெடியாகியிருக்கு ஸோ அதனாலதான் அந்த - போன மாசம் வரைக்கும்!!!!!!!!!

said...

காளியாக்குடி முதல் டிகிரி filter coffee சுவையே தனிதான்

said...

காபிய நினைவு படுத்தினதுக்கு ரொம்ப நன்றி.. நானும் ஒரு காப்பி (?) பதிவு எழுதிட்டேன்.

said...

காபிய நினைவு படுத்தினதுக்கு ரொம்ப நன்றி.. நானும் ஒரு காப்பி (?) பதிவு எழுதிட்டேன்.

said...

காபி குடிக்காவிட்டாலும் கிழவனாயிடுவிங்க. அதனால் பயமில்லாம அளவோட அனுபவியுங்க காபியின் சுவையை..

Anonymous said...

அடடா அடடா அடடாஆஆஆஆஆ ... நா காளியாகுடி, ஐயப்பன் மற்றும் கிருஷ்ணா ஹோட்டல் (பஸ்ஸ்டாண்ட் ஒட்டியே இருக்குமே, அது) காப்பி வரைக்கும்தான் குடிச்சிருக்கேன். இன்னும் சிலவும் இருக்கலாம், ஆனா நினைவில்லை.

இருந்தாலும் நம்ம ரிலையன்ஸ் காபி பொடில (நெறய பீபரியோட கொஞ்சமே கொஞ்சம் சிக்கிரி கலந்த) போடற வீட்டு காப்பியோட மணமும் சுவையும் ... ஆஹா ...

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு கண்டுபிடிப்பு பத்தி படிச்சேன். காபில நெறய anti-oxidants இருக்கறதால cancer தடுக்க உதவுதாம்.

So enjoy our filter coffee ....

அன்புடன்
முத்து

said...

படத்திலுள்ள காபியின் குணம் மணம் அருமை - காபி மறந்தவன் எல்லாவற்றையும் மறந்தவனாகிறான்.

Anonymous said...

சின்ன வயசுல ஒவ்வொரு தடவை நாங்க எங்க சொந்த ஊருக்குப் (திருவெண்காடு) போகும் போதும், எங்க அப்பா காலங்கார்த்தால 7 மணிக்கு மாயவரத்த cross பண்ணுற மாதிரி ப்ளான் பண்ணுவாரு - எல்லாம் காளியாக்குடி ஃபில்டர் காஃபி + ரவா தோசைக்காக. இன்னைக்கும் ஃபில்டர் காஃபின்னா சின்ன வயசுல குடிச்ச காளியாக்குடி காஃபி தான் நினைவுக்கு வருது.

Anonymous said...

don't you get coffee powder in middle east?

said...

//இப்ப இங்க வந்ததிலிருந்து, அத நினைச்சு, நினைச்சு நெஸ்காபி குடிச்சிக்கிட்டிருந்தேன் – போன மாசம் வரைக்கும்//


இப்ப இங்கெ(யும்) சரவணபவன் வந்துருச்சு:-)))))

சரியா?

said...

ஹூஹூம், எங்காளுக்கு காளியாங்குடி என்றால் "அல்வா" தான் நினைவுக்கு வரும் :-)

said...

முப்பத்துமூன்று வயசு வரை காபி ருசியே அறியாதவள். இப்ப ஒரு நாளைக்கு குறைந்தச்து நாலு காபியாவது அருந்துகிறேன். அதுவும் காபிடேயில் ப்ரஷ்ஷாக அரைத்து டிக்காக்ஷன் போட்டு!
தப்புத்தான் என்று தெரிந்தும்.

said...

//7 மணிக்கு மாயவரத்த cross பண்ணுற மாதிரி ப்ளான் பண்ணுவாரு //

நாங்களும் அது மாதிரி நிறையா பிளான் பண்ணி வாக்கிங்க் போறது வெளியூர் போறதுன்னு ச்சே அதெல்லாம் ஒரு காலமப்பா...!!!!

said...

//don't you get coffee powder in middle east?/

ரொம்ப கஷ்டம் நம்ம ஊரு காபி பவுடர் வாங்கிறத்துக்கு இங்க கத்தார்ல

said...

//துளசி கோபால் said...
//இப்ப இங்க வந்ததிலிருந்து, அத நினைச்சு, நினைச்சு நெஸ்காபி குடிச்சிக்கிட்டிருந்தேன் – போன மாசம் வரைக்கும்//


இப்ப இங்கெ(யும்) சரவணபவன் வந்துருச்சு:-)))))

சரியா?
//


இல்லையே அக்கா!
தப்பு!
தப்பு!

said...

//ramachandranusha(உஷா) said...
ஹூஹூம், எங்காளுக்கு காளியாங்குடி என்றால் "அல்வா" தான் நினைவுக்கு வரும் :-)
//

எனக்கும் ஆசைதான்! ஆனா அந்த அதி காலை வேளையில அல்வா கேட்ட்டா அப்பா அடி பின்னி பெடலெடுத்துடுவாரே...!!!!????

said...

//நானானி said...
தப்புத்தான் என்று தெரிந்தும்.
//
தப்பே கிடையாது!
கன்டினியூ!
கன் டினியூ!

தப்புன்னு ஃபீல் பண்ணா அது நாலு காபிதானங்கற விஷய்த்தில மட்டும்தான் இன்னும் கூட டிரைப்பண்ணலாம்...!