இளம் பிராயத்தில் (பிரளயத்தில்)

காலையில 8.00 மணிக்கு, அடிச்சி துவைச்சி, காயப்போடாத குறையா எங்க மூணு பேரையும் பாட்டி ரெடி பண்ணி விட்டுருப்பாங்க! மூணு பேரும் மூணு திசைக்கு நிப்போம், எல்லாரையும் ரெண்டு கையில புடிச்சிக்கிட்டு, மேற்க பார்த்து நடக்கா ஆரம்பிப்பாங்க அம்மா!

இப்படியே கிட்டதட்ட ஒன்பது வருஷம் நடந்து போய், கீழநாஞ்சில் நாடு டூ புதுத்தெரு வரைக்கும் எல்லாருக்கும் அறிமுகமாகி போன முகமாயிட்டேம்னா பாருங்களேன்!

எங்க அண்ணனும் அக்காவும் தான் அப்ப 1984ல்ல ஸ்கூல்ல படிச்சிக்கிட்டு இருந்தாங்க, நான் சும்மா ஒப்புக்கு சப்பாணி கேஸ் ஸ்கூலுக்கு போயி படுத்து தூங்கிட்டு, மதியம் தின்னுட்டு, திரும்பவும் தூங்கிட்டு, எழுந்து வர்றதுதான் வேலை!

சில் சமயங்களில் என்னோட அலறல் அலாரத்தை வைச்சித்தான் சில வீடுகள்ள பசங்களை ஸ்கூலுக்கு அனுப்ப தயார் பண்ணுவாங்கனா பார்த்துக்கோங்களேன்!?

காலையில வீட்லேர்ந்து எல்லோரும் ஒண்ணா கிளம்பினாலும் நான் மட்டும் வேகமா ஒடிப்போய் கரெக்ட்டா புலிமார்க் சீயக்காய்தூள் வாசல்கிட்ட போய் நின்னுக்கிட்டு,அங்க அப்போ இருந்த ஒரு தென்னை மரத்தில மூணு கிளைகள பார்த்து ரசிச்சிக்கிட்டிருப்பேன்! ( ஒரே டய்த்தில் இதுல ஏறி எப்படி தேங்காய் பறிக்காலம்னு????)

அதுக்குள்ள எங்க வீட்டு இரண்டு வானரங்களும்,அம்மாவும் சத்தம் போடாம என்னைய கிராஸ் பண்ணிடுமவாங்க! தூரத்தில ஏ.வி.சி ஹாஸ்டலுக்கிட்ட போயி நின்னுக்கிட்டு கூப்பிடுவாங்க!

இந்த இடைப்பட்ட ஏரியாவிலதான் எனக்கு ரொம்ப புடிச்ச இடங்களான சப் கலெக்டர் பங்களா & காலேஜ் ஹாஸ்டல் இருக்கு!

பெரிய இடம் சுத்தியும் ஃபென்ஸ் கட்டி நடுவுல, அந்த காலத்துல் ஸ்டைல் பங்களா.
ரோட்ல போறப்ப பாக்குறதுக்கே அவ்ளோ அழகா இருக்கும்!

அதுக்கு நேர் எதிரா ஹாஸ்டல் பில்டிங் அழகான நுழைவாயில் உள்ள போனா, மூணு நாளு பில்டிங் அங்கயும் நல்ல பெரிய பரப்பளவுல் இடம் விஸ்தாரமா இருக்கும்! ஆனா இப்ப அது அனேகமா எல்லாம் உடைஞ்சு சிதைஞ்சு இருக்கும் 1992 லயே அந்த ஹாஸ்டல குளோஸ் பண்ணிட்டாங்க!

அதுக்கு அடுத்த ஸ்பாட்ன்னா கொத்த தெரு சுமைதாங்கிதான்! ரொம்ப தூரம் கையில் பாரத்தோட போறவங்க அங்க வைச்சுக்கிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு போவங்கன்னு சொல்லுவாங்க! ஆனா உண்மை என்னான்னு தெரியாது! அங்க போயி அது மேல ஏறி ஒக்காரணும்னு ரொம்ப நாளா ஆசை ஆனா ஹைட் இல்லாததால சும்மா நின்னு வேடிக்கை பார்த்திட்டு போறதோட சரி!

கடைசியா பொணம் போற சந்துக்கிட்ட( ரெகுலர் ரூட் இதுதான் எங்க ஊருக்கு) பாமா சைக்கிள் கம்பெனியில் போய் நின்னுக்கிட்டு, சின்ன சைக்கிள பார்த்து ஒரு ஏக்கப்பார்வை!

வயசு அதிகமானத்துக்கப்புறம் பார்வைகளில் மாற்றங்கள் வந்தது - வரத்தானே செய்யும்!

பெரும்பாலான நாட்கள் இந்த ரூட்டுதான் இதுக்குமேல ஊருக்குல்ல எங்கயும் போனது கிடையாது! போகவிட்டதும் கிடையாது! ஏன்னா நாம் அப்ப சும்மா சூப்பரா கொழுக்மொழுக்குன்னு நல்ல கலரா இருப்பேனாம்! யாரவது தூக்கிட்டு போயிடுவாங்கன்னு பயம்!
(உண்மையிலேயே நான் சின்ன வயசுல
செவப்புதான்,
செவப்புதான்,
செவப்புதான்!
ப்ளீஸ் நம்புங்கப்பா...!!!!)

கிட்டக்க இருந்தப்ப ரசிக்க முடியாத விஷயங்கள இப்ப நினைச்சு நினைச்சு பாக்கறப்ப, ஏதோ எல்லாம் கைய விட்டு போயிடுச்சோன்னு ஒரு ஃபீலிங்ஸ்!

இருக்காதா பின்னே! நாம் வாழும் வாழ்க்கையின் தத்துவமே,பலவற்றை விட்டு வருவதுதானே!

9 பேர் கமெண்டிட்டாங்க:

said...

உங்க போட்டோவை பார்த்தா உங்களை டெக்கரேட் செய்யவே ரொம்ப நேரம் ஆகும் போலவே!!!
(உங்க வீட்டில் யாரும் இன்டீரியர் டெக்கரேசன் கோர்ஸ் படிச்சு இருக்காங்களா?)

said...

அபி அப்பா(வை) ஓட்டிய சைக்கிள்தானே அது ?
;-))

said...

நல்ல நினைவுகள். இந்த வாரம் முழுவதும் மலரும் நினைவுகள் இருக்கும்னு நினைக்கிறேன்.
(Firefox இலும் சரியாயிடுச்சு. நன்றி)

said...

//குசும்பன் said...
உங்க போட்டோவை பார்த்தா உங்களை டெக்கரேட் செய்யவே ரொம்ப நேரம் ஆகும் போலவே!!!
//
இருடி! ராசா உனக்கு இருக்கு!

ஏதோ என்னால முடிஞ்சது! டிரைப்பண்றேன்!

said...

//வித்யா கலைவாணி said...
நல்ல நினைவுகள். இந்த வாரம் முழுவதும் மலரும் நினைவுகள் இருக்கும்னு நினைக்கிறேன்.//

ஆமாக்கா இப்படியே ஒட்டிட்டு போயிடலாம்ணு ஒரு முடிவு!

//(Firefox இலும் சரியாயிடுச்சு. நன்றி//

ரொம்ப சந்தோஷம்! அனேகமா டெக்னிகல் பிராப்ளம் இல்லை நான் தான் தப்பு பண்ணிருக்கேன்!

said...

தென்னை மரத்துல கிளையா?... மெதுவா சொல்லுங்க ஆயில்யன்.நம்ம கத்தர் பதிவர் கானகன் கேட்டா கோவிச்சிக்கப்போறாரு..ஹா..ஹா...
(ஆம நம்ம கத்தாருல பனைமரந்தான இருக்கு.. இப்பவும் எதாவது சிந்தனை வருதா?..ஹிஹி....)
உங்க மலரும் நினைவுகள படிக்கும் போது ,நானும் அங்க இருப்பது போல உணர்ந்தேன்.. நல்லாயிருக்கு.தொடருங்க...
அன்புடன் ரசிகன்.

said...

//ரசிகன் said...
தென்னை மரத்துல கிளையா?... மெதுவா சொல்லுங்க ஆயில்யன்
//

ஆமாங்க மெதுவாத்தான் சொன்னேன் நீங்க அப்படியே கப்சிப்ன்னு மேட்டர வுட்டுதள்ளுங்க! ஒரு மரம் மூணு ஆக இருக்கும்!

said...

//ஒரு மரம் மூணு ஆக இருக்கும்!//

ஆஹா நானே எடுத்துகொடுக்கறேன் போலிருக்கு!
மூன் ஆக இருக்காது 3 நம்பர்ஸ் இருக்கும்ங்கோ!

said...

மலரும் நினைவுகளாக, பள்ளி சென்ற சிறு வயதின் அனுபவங்களை நினைத்து அசை போடுவது ஆனந்தம் தான். நான் அசை போட்ட பதிவுகள் இங்கே :
http://cheenakay.blogspot.com

நேரமிருப்பின் சென்று பார்க்கவும்