Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்







உலகின் மூலை முடுக்குகளில்,

வாழ்க்கையின், நம்பிக்கை கீற்றின்;

ஏதோ ஒரு நுனி பிடித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும்;

உணர்வால் அன்னையரான அனைவருக்கும்,

எம் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !

மயிலாடுதுறை - விட்டாச்சு டிரெயினு!

இன்று 23/04/2010 மாலை 6.30 மணிக்கு அகல ரயில்பாதையில் ரயில் வண்டியின் பயணம் தொடங்கியது! கிட்டதட்ட 3 வருடங்களை கடந்த மீட்டர்கேஜ் - பிராட்கேஜ் இருப்புப்பாதை அகலமாக்குதல் திட்டம் ஒரு வழியாக நிறைவேற்றம் பெற்றிருக்கிறது!

மயிலாடுதுறை மக்களுக்கும் சுற்றியுள்ள ஊர்களை சார்ந்திருப்போருக்கும் மேலும் கும்பகோணம் தஞ்சாவூர் மக்களுக்கும் தற்போதைய சூழலில் [ அணைக்கரை பாலம் வலுவிழந்த நிலையில் பேருந்துகள் கிட்டதட்ட 50 கி.மீ சுற்றி சென்றுகொண்டிருக்கிறது] நிச்சயம் மகிழ்ச்சியான செய்தியாகவே இந்த செய்தி அமைந்திருக்கிறது இன்று!

திட்டம் சிறப்பாக[!?] நிறைவேற்றம் பெற பங்கு பெற்ற மத்திய & மாநில அரசு ஊழியர்களுக்கும்,பணிகளை சிறப்பாக செய்து முடித்த தனியார் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் மயிலாடுதுறை மக்களின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !


ஆட்டோ கேட்


கம்யூட்டர் அப்படின்னா என்னான்னு தெரியாத காலகட்டத்தில ஆட்டோகேட் படிங்கன்னு அட்வைஸ் மட்டும் கேட்டு தலையாட்டிக்கிட்டிருந்த மாதத்தின் ஏதோ ஒரு சுபயோக நன்னாளில் மயிலாடுதுறை பாரத் கம்யூட்டர்ஸின் படியேறி (ஆமாங்க மூணாவது மாடி) சேர்ந்த படிப்பு ஆட்டோகேட் கூட படிக்கிற மக்கள்ஸ் - ஒன்லி ஆண்கள் :( - கோபாலு பாக்ஸ்புரோ பேசிக்கு விண்டோஸு அப்படின்னு ஏதேதோ டாஸ் புராம்ப்ட்ல செஞ்சுக்கிட்டிருக்கா நாங்களும் (ரெண்டு பேர்தான்) ஆரம்பிச்சோம் டாஸ் ஆப்ரேடிங்க் சிஸ்டம்ல ஆட்டோகேட் ரீலிஸ் 11 login கொடுத்து எதோ ஒரு பாஸ் வேர்டு கொடுக்கணும் அப்புறம் கட்டாயம் logout செஞ்சுட்டு வரணும் இதுதான் பர்ஸ்ட் இன்ஸ்ட்ரக்ஷன்!

இருந்த 7 சிஸ்டத்தில ஒரே ஒரு சிஸ்டம் மட்டும்தான் விண்டோஸ் 95இயங்குறது மத்ததெல்லாம் டாஸ்! ஆட்டோகேட்ல படம் போடறதா இருந்தாஒன்லி இடது வலது மேலும் கீழும் அப்படின்னு கீ போர்டு தான் பயன்படுத்தணும்! (மவுஸ்ன்னா என்னான்னே தெரியாத வகையில படிச்சு முடிச்சு பழகஆரம்பிக்கும்போதுதான் அதனோட மகத்துவம் புரிஞ்சுது !)

3 மாச கோர்ஸ்ன்னுதான் ஜாயின் பண்ணுனோம் என்னவோ தெரியல பாடம்சொல்லி தர்றவருக்கு எங்க மேல நம்பிக்கை இல்லையோ அல்லதுஇவுனுங்களை அப்படியே வுட்டுடப்புடாதுன்னு வாத்தியார் முடிவு செஞ்சாரேதெரியல ஒரு வருசத்துக்கு அரை மாசம் குறைச்ச அந்த அளவுக்கு ரொம்பவேபடிச்சோம்!

பாடமாக சொல்லி கொடுத்த விசயங்கள் ஆட்டோகேட் ரீலிஸ் 12 ஆகஇருந்தாலும் பயிற்சி பெற்றது ரீலிஸ் 11 (புக்கு கிடைச்ச அளவுக்கு சாப்ட்வேர்கிடைக்கறது அப்போ அவ்ளோ ஈசியில்ல இப்ப சர்வசாதாரண விசயமாகிடுச்சு - ஆச்சர்யப்படக்கூடிய வகைகளில் ஒரிஜினல் ரீலிஸ் ஆனாதும் கூடவே காப்பிஅடிச்சு அனுப்பிடறாங்க! (நானெல்லாம் கம்பெனி வாங்கி வைச்சிருக்கிறதாம்லயூஸ் பண்றோம்!) புத்தகங்களும் கூட இணையத்தில் நிறையவே கிடைக்கின்றஎன்ன ஒன்று பொறுமை அதிகம் தேவை படித்து பயில்வதற்கு....!

இதே டைம்ல ஒரிஜினல் வைச்சுக்கிட்டு சொல்லிக்கொடுக்கிற கம்பெனிக்காரங்க (CADD CENTER) காலேஜ் பாலிடெக்னிக்குன்னு கடை பரப்ப ஆரம்பிச்சாங்க! எங்கபாலிடெக்னிக்கலயும் வந்து ஒரு நாள் டெமோவெல்லாம் பண்ணினாங்க, ஏதோகிளாஸ் கட் ஆனா சரின்னு நினைச்சு போய் உக்காந்து படம்பார்த்துக்கிட்டிருந்தேன், கம்யூட்டர்ல எல்லாமே புதுசாவே தெரியுது ஏன்னா அதுரீலிஸ் 12 புது வர்ஷன் என்ன என்னமோ சொல்லுறாங்க...?!

எனக்கு எங்க கம்ப்யூட்டர் செண்டர் கேட் வாத்தியார் மட்டும் மினுங்கி மினுங்கிதெ()ரியிறாரு,எண்ட் கார்டு போடற டைம்ல யாரெல்லாம் ஆட்டோகேட்படிக்கிறீங்க கை தூக்குங்கன்னு கேள்வி வர நண்பர்களெல்லாம் ரொம்பபெருமையா என்னைய மட்டும் கை காமிக்க,எனக்கோ ஒரே ஆனந்த கண்ணீருநாம ஒண்ணு படிக்கிறதும் இங்க ஒண்ணு பாக்குறோம்ன்னு ) அப்படியேசமாளிச்சு பாலன்ஸ் பண்ணிட்டு கமுக்கமா உக்காந்திட்டேன்! அந்த டைம்ல ஒருஉந்துதல் இருந்துச்சு எப்படியாச்சும் அந்த விசயத்தை தெரிஞ்சிடணும்ன்னு... !

அன்னிக்கு ஆரம்பிச்ச தேடல்தான் ஒரு 2 அல்லது 3 வர்ஷன் சிடி புடிச்சு அதைஇன்ஸ்டால் செஞ்சு படிச்சு ஒரு வழியா தேறி வந்தாச்சு! இப்ப ரீலிசாகியிருக்கிறஆட்டோகேட் 2010 நினைச்சுபார்த்தாலே எல்லாமே அதிசயம் ஆச்சர்யமாவேஇருக்கு!

ஓவ்வொரு ரீலிஸ்களிலும், ஆட்டோகேட் மேம்படுத்தி ஏகப்பட்ட புதியநுட்பங்களை இணைத்து கொண்டு வரும்போது எப்பூடியெல்லாம்யோசிக்கிறாங்கப்பான்னு பிரமிக்க வைக்கிது! அதிலும் 2010 வர்ஷன் அட்டகாசம்!

கிட்டதட்ட 10 வருடங்களுக்கும் மேலாக தொழில் ரீதியாக என்னுடனேபயணித்துக்கொண்டிருக்கும் ஆட்டோகேட் மென்பொருளுக்கும் (ஆட்டோகேட்நல்லாவே டெவலப் ஆகிடுச்சு பட்....?!) அது பற்றிய முயற்சிகளில் தீவிரமாகஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துக்கும் இது ஒரு நன்றி கடன்!

மதுரை காமெடி பாய்ஸ் - த.மு.எ.ச கலை இலக்கிய இரவில்....

1994களில் வருடந்தோறும் ஒரு இனிய இரவில் நடந்துக்கொண்டிருந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் கலை இலக்கிய இரவு எனக்கு புதிது.

இத்தனைக்கும் வீட்டுக்கு போகும் சாலையின் குறுக்கேதான் பந்தலிட்டு அழகிய ஓவிய பின்ணணியில் மேடை அமைந்திருப்பார்கள் ஆனால் ஏனோ சில வருடங்கள் கழித்துதான் இந்த விழாவினை காணும் ஆர்வம் வந்துது சில சினிமா பிரபலங்களும் கூட வந்ததுண்டு! ஆனால் எனக்கு ஆர்வத்தை வரவழைக்கும் விஷயமாக சொல்லப்பட்டது மதுரை காமெடி பாய்ஸ் குழுவினரின் நிகழ்ச்சியும்,கரிசல் குயிலின் பாடல்களும் திண்டுக்கல் சக்தி குழுவினரின் தப்பாட்டமும்தான்!

பலரும் சிலாகித்து பேசிய விஷயங்கள்தான் இவை மற்றபடி முற்போக்கு எழுத்தாளர்களின் விமர்சன பேச்சுகள்,பல அனல் பறக்கும் பேச்சுகள் எனவும் போய்க்கொண்டிருக்கும் இனிய இரவு

இரவு 8 மணி தொடங்கி அதிகாலை 5.00 மணி வரைக்கும்மான நிகழ்ச்சிகளில் உள்ளூர் சிறுவர் சிறுமியரின் ஆடல் பாடல்களும் கூட உண்டு!

சரியாக பலருக்கும் தூக்கத்தை வரவழைக்கும் நேரத்தில்தான் - அதுவரைக்கும் அனல் பறக்கும் பேச்சுகள்தான்! - மதுரை காமெடி பாய்ஸ் குழுவினர் மேடைக்கு அழைக்கப்படுவார்கள் சுமாராக 5 அல்லது 7 பேர் கொண்ட குழுதான் அது அனைவரும் வெவ்வேறு இடங்களில் பணி புரிபவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மாணவர்கள்.


இவர்களுக்கு அடிப்படையில் ஆக்கமும் ஊக்கமும் அளித்தது முனைவர் கு.ஞானசம்பந்தமாம் அவ்ரும் கூட இந்த கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டதுண்டு!

இன்றைக்கு நாம் காணுகின்ற கலக்கப்போவது அல்லது அசத்தபோவது யார் போன்ற நிகழ்ச்சிகளினை அப்போதே அரங்கேற்றி அதிரசெய்தவர்கள்தான் இந்த குழுவினர்!

வகை வகையான நகைச்சுவை காட்சிகளி அனைத்து நடிகர்களையும் அந்த விழா மேடைக்கு அழைத்து வந்தவர்கள்! மக்களை சிலமணி நேரங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்கள்! எவ்வளாவோ பேர் வாழ்த்தியதை நேரிலும் கண்டிருக்கிறேன்!

திரையுலகும் டிவியுலகும் இன்னும் வானொலியும் ஆக்ரமித்துவிட்ட இக்காலத்தில் அவர்கள் தம் பணியை மக்களை மகிழ்விக்கும் சேவையினை தொடர்கிறார்களா என்று சரியாக தெரியவில்லை? ( மதுரை மக்களுக்குத்தான் தெரிந்திருக்கும் தற்போதைய சுழல் என நான் நினைக்கிறேன்!)

அன்றைக்கு நன்றி சொல்லி வாழ்த்த முடியாவிட்டாலும், என் மனதில் பதிந்திருக்கும் நன்றியினை இங்கு இப்போது தெரிவித்துகொள்ள ஆசைப்படுகிறேன்! ரொம்ப பழைய நன்றியென்றாலும் கூட மனத்துக்கினிய விஷயம் எனக்கு..!

அங்கு பார்த்த ஒரு காட்சியினை ஒத்த ஒரு பாடல் நிகழ்வு என்னை மிகவும் கவர்ந்தது இது




நன்றி சொல்லும் நேரம்...!

நன்றி சொல்லும் நேரம்!

நானாக நானிருந்த காலம் போய்,

வீணாகி போகாத காலமாக இந்த நாட்கள்;

வரலாற்று பெயராக மாற்ற வேண்டுமென்ற ஆவல்

ஆனால் வர வேண்டுமே! அதற்கேற்ற பொருள் - என் பதிவில்

நகர்ந்து விட்டது நாட்கள்!

தகர்ந்து விட்டது தமிழ்மணம் நட்சத்திர ஆசை!

நகரும் நாட்களுக்கு நன்றி சொல்ல நினைக்காத மனம்தான்

எல்லோருக்கும் உண்டு.!

நகராமல் இப்படியே இருந்துவிடட்டுமே, என்று!

நகராமலே இருந்தால், அதற்கு பெயர் நரகமாகிவிடக்கூடுமே...!

நகர்வு இருக்க வேண்டும்

நன்மை செய்யும் நகர்வாகவே..!

என் நகர்வு வரும் நட்சத்திரப்பயணிக்கு,

நலமாக அமையவேண்டும்!

நாளும் நல்லது சொல்வோம்

நாளும் நல்லது செய்வோம்

நாளும் நலமுடன் வாழ்வோம்!

நாளும் நல்லவராக வாழ்வோம்!

நலம் பல செய்வோம்! – எல்லோருக்கும்!

வைத்தா டீ ஸ்டால் - மயிலாடுதுறை

மணிக்கூண்டு பார்க்கத பொண்ணும்;

வைத்தா கடை டீ குடிக்காத ஆணும்;

மயிலாடுதுறையில இருந்ததா சரித்திரமே இல்லைங்க!

அப்படியொரு பிரபலமான கடை!

இத்தனைக்கும் பத்து பேர் ஒண்ணா சேர்ந்து போனா அப்புறம் வர்றவங்க லைன் கட்டி ரோட்லதான் நிக்கணும்!

அந்த மாதிரியான இடம்தான் இருந்தாலும், டெயிலி வந்து போற கூட்டம் எண்ண முடியாது!

எனக்கு வைத்தா கடை அறிமுகமானது 1985களில் வெளியூருக்கு (வைத்தீஸ்வரன்கோவிலுக்குத்தாங்க!) போய் வரும்போதெல்லாம் சைக்கிள் ஸ்டாண்ட கணக்கு பண்ணி எங்க அப்ஸ் சுருக்கா இங்கயே காபி அல்லது டீ வாங்கி கொடுத்து அழைச்சிட்டு வருவாரு!

கொஞ்சம் வருசம் கழிச்சு நாமளே தனியா போக ஆரம்பிச்சாச்சு!

காலேஜ் பரீட்சைக்கு படிக்கறதுக்குன்னு லீவு போட்டு வெளிய எங்கயும் போகாம, வுட்ல உக்காந்து படிச்சு சாயங்காலம் 6.00 மணிக்கு வைத்தாவுக்கு போய் சூடா ஸ்ட்ராங் டீ சாப்பிட்டு வந்தா அப்புறம் போகும் டைம் 12.00 வரைக்கும்!

இந்த டெக்னிக் என் பிரதர்கிட்டயிருந்து நான் சுட்டது! அவன் படிக்கற டைம்ல திடீருன்னு பத்துமணிக்கு கதவு திறக்கிற சத்தம் கேக்கும் என்னாடா பண்றான்னு ஒருநாள் கேக்கறச்சா "சைக்கிள எடுத்துக்கிட்டு தடதடன்னு மிதிச்சிக்கிட்டு போன பாதிதூக்கம் போயிடும் அப்புறம் ஒரு டீ குடிச்சிட்டு திரும்பவந்தா விடிய விடிய படிக்கலாம்ன்னு, சென்னான்!

படிக்கற காலத்துல இப்படின்னா! கொஞ்ச காலம் ஊர்ல வேலை பார்க்கும்போது வைத்தா டீக்கடைக்கும் எனக்கும் இன்னும் கொஞ்சம் நெருக்கம் அதிகமாயி,காலையில ஒரு விசிட், பதினொரு மணிக்கு ஒரு விசிட் மதியத்தில எப்போதாவது சாய்ங்காலம் ஒரு விசிட்ன்னு ஆகிப்போச்சு! அதுவும் சும்மா தனியாயெல்லாம் போயி நின்னு குடிக்கறது கிடையாது! பிரெண்ட்ஸ் ஒவ்வொரு மூலையில இருப்பாங்க ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும் இரண்டரை ரூபா டீக்கு cost benefit ratio போட்டு பார்க்காமலேயே,பெட்ரோல் செலவுப்பண்ணிக்கிட்டு வருவாங்க!

டீக்கடையுடனான அனுபங்கள் தொடரும்....!

நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு..!


இது நாள் வரையில் நான் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டேன், நானா இப்படி செய்வது.? என்று எனக்கே என்னை பற்றி ரொம்ப பெருமையாகிடுச்சுங்க!

வந்த புதிதில், பல இடங்களில் நான் பலரால் வித்தியாசமாக பார்க்கப்படுகிறேன் என்பதனை என் உள்ளுணர்வு எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும் ஆனால் என்ன செயவது நான் வந்த வழி என்று என் விதியினைத்தான் நான் நொந்துகொள்வேன்.ஆனால் வெகு விரைவிலேயே நாம் இப்படி ஆவேன்! என்று நினைக்கவேயில்லை.
(என்னாடா இவன் இப்படி கிறுக்குறானே டென்ஷனாகதிங்க)

முதல் நன்றி! அறுசுவைக்கு!

அடுத்த நன்றி! முகமறியா, சமையல் செய்முறைகளினை, அளிக்கும் பெண்கள்.

ஒரு விதத்தில் எனக்கு இவர்கள் என் அம்மாவினை போன்றே தெரிகிறார்கள்! ஏனெனில் நம் அம்மாவினை தவிர வேறு யாரிடமும்,நம்மால் சமையல் பழக, தெரிந்து கொள்ள முடியாது.! (எனி அப்ஜெக்ஸன்?!)

அயல்நாடுகளில், பணிக்கு செல்லும் என்னை போன்றவர்கள் முதலில் பாதிக்கப்படுவது உணவு பிரச்சனையில்தான்! அதுவும் சைவ உணவு வகைகளினை மட்டும் எடுத்து உண்ட எனக்கு இது மிகப்பெரும் பிரச்சனையானது.

வெஜ் சாப்பாடு இருக்கான்னு கேட்டா,எரிக்கற மாதிரி பார்த்துட்டு,பூரிக்கு செஞ்சு மீந்த கிழங்கையும், கடலையயும் போட்டு ஒரு அப்பளத்த வைச்சு கொடுப்பாங்க! அதுவும், வெள்ளிகிழமையில எல்லா கடையிலயும் அசைவம்தான்!

இதனால பல வெள்ளி கிழமைகள் நான் உண்ணாவிரதம் இருந்துள்ளேன்..!

இங்கு கத்தாரில், பெரும்பாலன கடைகளில் நம்ம கேரளாக்காரங்க இருந்தாலும், சைவ உணவு வகைகள் என்பது இங்கு எளிதான விஷயமன்று! அதுவுமில்லாமல்,அசைவ உணவுகளை விட விலையும், அதிகம் அதனால் இங்கு பெரும்பாலனோர் வெகு சீக்கிரத்திலேயே அசைவத்திற்கு மாறிவிடுகின்றனர்!

கடைசியாக எடுத்தமுடிவுதான், எனக்கு நானே சமைக்கும் திட்டம்!

ஸ்டார்டிங் எப்போதும் எனக்கு நல்லா வரும், ஆனா ஃபினிஷிங்தான் சொதப்பும், ஆனாலும் மனச தளரவிடாம அந்த ஐட்டங்கள சுட, சுட, சாப்பிட்டு முடிச்சாத்தான் ஒரு திருப்தி.( ஆறி போன எவன் தின்பான்!)

இப்படி நான் இஷ்ட்டப்பட்டு சமைச்சு,கஷ்ட்டப்பட்டு சாப்பிட்டு வாழ பழகிகிட்டேன்!

ஒருநாள் கூகுளில் தமிழில் விளையாடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டதுதான் இந்த அறுசுவை.

இப்போது எனக்கு இதுதான் சமையல் கலை கற்றுக்கொள்ளும் இடம்!

அடுப்பு பத்த வைக்குறதுக்கு முன்னாடி வெப்சைட் ஒபன் பண்ணிவைச்சுக்கிட்டாதான் எல்லாம் சரியா வரும்ங்கறது நான் கத்துக்கிட்ட முதல் பாடம்!

இந்த சைட்ட நான் பார்க்காத நாட்கள்னா, விரத நாட்கள்தான் என்பது இன்றைய நிலைமை..!

திக்கெட்டும் அறுசுவை மணம் பரப்பும் இவ்விணையம் புறப்படும் இடம் எங்கள் மாவட்ட தலைநகர் என்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!

நன்றிகளுடன் திரும்பி பார்க்கிறேன்..!

நாள் 24.09.06

நேரத்திற்கு வரவில்லையென்றாலும் சீக்கிரத்திலேயே கொண்டு வந்து விட்டுச்சென்ற அந்த கால் டாக்ஸி டிரைவருக்கும்;

நான் கண் கலங்காமல் இருக்க, தங்களுக்குள்ளேயே கிண்டலடித்து சிரித்துக்கொண்டிருந்த என் உயிர் நண்பர்களுக்கும்

கண் கலங்கினாலும் தன்னைத்தானே தேற்றிக்கொண்ட என் தாய்க்கும்;

அந்த நாள் வரையில் கலங்கிய நிலையில் பார்த்திராத, எனக்காக

கண் கலங்கி நின்ற என் சகோதரனுக்கும்;

கண் கலங்க நின்றிருந்தவனின், சோகத்தை பார்வையால் பரிமாறிக்கொண்ட, வரிசையில் நின்றிருந்த, வேறொரு நாட்டுக்கு சென்ற அந்த சகோதரிக்கும்;

ஒரு ரூபாய் தந்து தொலைபேசியில் தொலைவில் நின்றிருந்த என் குடும்பத்தோடு தொடர்பு கொள்ள செய்த அந்த் சகோதரனுக்கும்;

முன்பின் முகம் பாராமல் தம் நாட்டிலிருந்து வ்ருகிறான் எனற காரணத்திற்காக எனக்காக வந்து காத்திருந்த எனது உயர் அதிகாரிக்கும்;

அந்த இரவிலும் என்னுடன் இருந்து எனது தங்குமிடத்தை த்யார் செய்து தந்த வங்கத்து நண்பனுக்கும்;

ரம்லான் மாதத்தில் தனக்கா இருந்த உணவினை, முதல் வேளை உணவாக எனக்கு கொடுத்த தமிழகத்து நண்பனுக்கும்;

தமிழ் நாட்டிலிருந்து வரப்போகிறான் ஒருவன் என்று கேள்விப்பட்ட நாள் முதலே என்னைக்காண ஆவலுடன் இருந்த,

வந்த நாளிலிருந்தே, எனக்கு உணவும் கொடுத்து,என் பிரித்துயரத்தை நீக்கி,என்னுடனே உண்டு உறவாடி வரும் தமிழ் ஈழத்து சகோதரர்களுக்கும்:

என் மனம் நிறைந்த,

நன்றி!

நன்றி!!

நன்றி!!!

Photo Sharing and Video Hosting at Photobucket

நாள் ; 24.09.07