குண்டு பல்பு...!

உலக நாடுகளின் கவனம் தற்போது இயற்கையின்,பூமியின் பக்கம் திரும்பியுள்ளது, என்ன பண்ணினா? பூமியோட ச்சூட்டயை குறைக்காலம்ங்கற மாதிரி எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க! சும்மா இப்படியே போய்க்கிட்டிருந்தா, அப்புறம் சுனாமிக்கும் ஆசிட் மழைக்கும் அடிமைப்பட்டு, அவதிப்படவேண்டியதுதான்னு ரொம்ப தெளிவா தெரிஞ்சுக்கிட்டாங்க!

நம்ம இந்தியாவில என்ன நிலைமைன்னா? இப்பத்தான் கொஞ்சம் லைட்ட முழிப்பு வந்திருக்கு!



Photo Sharing and Video Hosting at Photobucket



முதல்கட்டமா கல்கத்தாவில இப்பத்தான் ஆரம்பிச்சிருக்காங்க,வெப்பம் அதிகம் வெளிப்படுத்தும் பொருட்களை, நீங்க ரொம்ப பயன்படுத்துனிங்கன்னா அவ்ளோத்தான், அப்புறம் வங்காளத்துல பாதி வங்காள விரிகுடாக்குள்ள போயிடும் ஜாக்கிரதைங்கிற எச்சரிக்கையோட சுற்றுசுழல் ஆர்வலர்கள் பிரச்சாரத்தை ஆரம்பிச்சிருங்காங்க!



Photo Sharing and Video Hosting at Photobucket



அதன்படி முதல்ல குண்டு பல்புகள ஆப்(பு) பண்ணுங்க அப்பத்தான் 4% விகிதம் வரைக்கும் வர்ற கார்பன் டை ஆக்சைடு கட்டுபடுத்தலாம், அது மட்டுமல்லாமல் மின்சார சேமித்தலும் இதனால் சாத்தியம் என்று அறிவித்துள்ளார்கள்!

இன்னும் சில நாட்களில் இந்த பிரச்சாரங்கள் இந்தியாவின் அனைத்து மெட்ரோ நகரங்களிலும் நடைப்பெறும் என்று தெரிவித்துள்ளனர்!

லோக்கல் விழிப்புணர்வு

நம்ம ஊருலன்னு பார்த்தீங்கன்னா, பொதுவா எல்லார் வீட்லயும் குண்டு பல்பு சமையலறை,பாத்ரூம் போன்ற இடத்துலதான் இருக்கும்! பாத்ரூம்ல கூட பரவாயில்லை! குளிக்கறப்ப கொஞ்சம் சூடாத்தான் இருக்கட்டுமேன்னு விட்டுடலாம், ஆனா பாருங்க இந்த் சமையல் ரூம்ல,ஏற்கனவே, கேஸ் அடுப்புலேர்ந்து, கட்டின வீட்டுக்காரி ((இந்தாளு சமைக்காம, நம்மள போய் சமைச்சு கொட்ட சொல்றானேன்னு) வரைக்கும் ஹாட்டா இருப்பாங்க! அங்க போய் இன்னும் ஹாட்டா இருந்தா? என்னாதுக்கு ஆகும்...!


யோஜிங்கப்பா..!

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அப்ப இனி என்னை யாரும் சரியான டியுப் லைட்டுன்னு திட்டினா, சிரிச்சுக்கிட்டே நான் பூமியோட சூட்டை குறைக்க்கிறேனாக்கும் என்று சொல்லிடலாம்!!!

said...

குண்டு பல்புனால அது வாழும் போது பிரச்சனைன்னா, டியூப் லைட்டு, CFT இதுங்க எல்லாம் செத்தபிறகு பிரச்சனை, என்ன பிரச்சனையா? அதுல இருக்குற பாதரசத்தால சுற்று சூழல் கெடும்ங்கறாங்க.

இன்னும் இது சம்பந்தமா நெறைய படிக்கனும்.

said...

தகவலுக்குத்தான் பின்னுட்டத்துக்கு வந்தேன்.ஆனால் மேலே உள்ள குசும்புக்கு இடவேண்டியதாகி விட்டது.

Anonymous said...

Fouth generation, solid state lights will use only about 15 to 20% of energy than this gundo blub (first generation) and with life time of atleast 15 years. Initial cost is more, however with proper policy at the diposal,things shall(should)soon change.Otherwise our posterity will suffer a lot.Let wisdom prevail on all of us to turn towards renewable energy technologies & become carbon neutral even if it cost little more than dirty fossil fuels .