Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

கிரியேடிவிட்டி

நாம எது செஞ்சாலும் இந்த உலகம் நம்மளை ஒரு நிமிசம் உத்து பாக்கணும்!

- தீப்பொறி திருமுகம்

*******************************************************


ஜியாலஜி சப்ஜெக்ட்ல அசைன்மெண்ட் வைக்க சொன்னாங்க! ச்சும்மா சாதாரணமா காப்பி அடிச்சு கொண்டாந்து குப்பை மாதிரி போடவேண்டாம் எதாச்சும் கிரியேடிவா செஞ்சுட்டு வாங்கடா ராசாக்களேன்னு சொன்னாரு எங்க ஜியாலஜி லெக்சரர்!

முதன் முதலா கிரியேடிவ்வா செய்ய நினைச்சு செஞ்சது! - அப்ப டெக்னிகல் டிராயிங்க் வாத்தியாரை மனசுல நினைச்சுக்கிட்டு பென்சிலும் ஸ்கேலும் வைச்சுக்கிட்டு, பாஸ்ட் ஸ்ட்ரோக்ல ஃபாண்ட்ஸ் வரைஞ்சுட்டு கலர் அடிச்சு கலக்கலா கொடுத்தோமாக்கும்!


பட் லெக்சரர் எதிர்பார்த்த மாதிரி இல்ல போல ஒண்ணும் சொல்லாட்டியும் ஃபுல் மார்க் மட்டும் கொடுத்து மன்னிச்சு விட்டுட்டாருன்னு நினைக்கிறேன்!

டிஸ்கி:-
தொடர் பதிவுகளை பார்த்ததுமே காலேஜ் அசைன்மெண்ட் ஞாபகம் வந்திருச்சு! காப்பி அடிக்கிறது கூட ஒரே மாதிரியா இல்லாம பல வரிகளை பல இடங்களில் மாத்திப்போட்டு லெக்சரர் ஏமாத்துறதா நினைச்சு ஃபீல் பண்ணிய காலங்கள் ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!! :)

வீதியோரத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வழி வந்தோர்!


இன்றைய தினமணியின் முகப்பில் இப்படி ஒரு கட்டுரை!

தியாகம் தேசியம் என்று இன்னும் இந்த சொற்களோடு வாழ்ந்த தேசிய போராட்டத்தில் தம் வாழ்வினை அர்ப்பணித்த நல் உள்ளங்களுக்கு நம்மால் உதவ முடியாவிட்டாலும் கூட அவர்தம் மக்களுக்கு கூட நம்மால் சிறு உதவி செய்ய இயலாத சூழ்நிலையில் இருக்கிறோமே என்பதை எடுத்துச்சொல்லும் சேதி!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன் ஆகியோர் வசிக்க இடமின்றி சாலையோரத்தில் வாழ்கின்றனர்.

"மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' -என பாரதியார் தனது "சுதந்திரப் பயிர்' என்ற தலைப்பிலான கவிதையில் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை நினைந்து அன்றே உள்ளம் உருகிப் பாடி யிருந்தார்.

அப்படிப்பட்ட தியாகச்சுடர் சிதம்பரனாரின் மூத்த மகன் ஆறுமுகம். இவரது மகள் கமலாம்பாள். இவரது கணவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞான வடிவேலு.
இந்திய குடியரசுத்தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், ஞானவடிவேலு வுக்கு தொழிலாளர் நலத்துறையில் பணி வாய்ப்புக்கு ஏற்பாடு செய்தார்.

ஞானவடிவேலு-கமலாம்பாளின் மூத்த மகள் தனலெட்சுமி (52). மகன்கள் சங்கரன் (46), ஆறுமுகம் (40), சோமசுந்தரம் (40). தாய் இறந்த நிலையில் தந்தையே இவர்களை வளர்த்துள்ளார். அருப்புக்கோட்டையில் குடும்பக் கோயிலுக்குச் சொந்தமான வீட்டில் வசித்துள்ளனர். அப்போது, பங்காளிகளுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக கல்லூரணி என்ற ஊருக்கு வாடகை வீட்டில் குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் தனலெட்சுமி, சங்கரன் ஆகியோருக்கு திருமணமாகியது. சங்கரன் மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் பகுதியில் குடியேறி பெயிண்டிங் தொழில் செய்தார். அவரது சகோதரரான ஆறுமுகமும் உடன் வசித்தார்.

காதல் திருமணம் செய்த தனலட்சுமி கணவரைப் பிரிந்தார். 2003-ல் ஞானவடி வேலு இறந்துவிட்டார். ஆறுமுகம் பெயிண்டிங் வேலை செய்தபோது ஏற்பட்ட விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் திருமணமாகவில்லை.

கணவரும் பிரிந்து, ஆதரித்த தந்தையும் இறந்துவிட்டதால், மதுரை வந்த தனலெட்சுமி மூன்று மாவடிப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி முறுக்கு வியாபா ம் செய்தார். ஆனால் சொத்துப் பிரச்னை வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டைக்கு அடிக்கடி சென்றதால் வியாபாரத்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை.

மாதாமாதம் வாடகை தராததால் வீட்டைக் காலி செய்துவிட்டனர். தனலெட்சுமியின் சகோதரர் சங்கரனுக்கும் பெயிண்டிங் தொழிலில் போதிய வரு வாய் இல்லை.
அவராலும் வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார்.

இப்போது தனலெட்சுமியும் அவரது சகோதரர்களும் மூன்று மாவடி பஸ் நிலையம் அருகே உள்ள "கண்ணன் கருப்பன் ஆஞ்சநேயர் கோயில்' வளாகத்தில் தங்கியுள்ளனர்.
சங்கரனும், தனலெட்சுமியும் கிடைக்கும் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். அவரது சகோதரர் ஆறுமுகமும் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களை யாரென்று அப்பகுதியில் உள்ளோருக்குத் தெரியவில்லை.

வெட்டவெளியில் கோயிலுக்கு அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்ட மணல், செங்கல் இடையேதான் தன லெட்சுமியும், அவரது சகோதரர்களும் தினமும் இரவில் உறங்குகின்றனர் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.மழைக்காலத்தில் அங்குள்ள கடைகளின் முன்பகுதியில் தங்குவார்களாம். மழை பெய்தால் அன்று இரவு அவர்களுக்கு சிவராத்திரிதான். இந்தச் சூழலால் தற்போது தனலெட்சுமியும், அவரது சகோதரர்களும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என ஆதங்கப்படுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

காபி, வடையே காலை உணவு! தெருவோரத் தில் தள்ளுவண்டியில் விற்கப்படும் கேப்பை, கம்பங்கூழே பகலுணவு - என காலத்தைக் கழிப்பதாக விரக்தியுடன் விவரிக்கிறார் தனலெட்சுமி.

வ.உ.சி. வாரிசுகள் என உதவி கேட்டு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எதுவும் நடக்கவில்லை என்பதால் வெறுத்துப் போய்விட்டதாக தனலெட்சுமி விரக்தியுடன் சிரிக்கிறார்."ஏதாவது ஓர் இடத்தில் குறைந்த ஊதி யத்திலாவது என்னை வேலைக்கு சேர்த் துவிட முடியுமா?'' என நம்மைப் பார்த்து அவர் கெஞ்சியதைக் கண்டு கண்ணீர் தான் வருகிறது.சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஏதேதோ சலுகைகள் செய்ததாகக் கூறி வரும் தமிழக அரசுக்கும், வ.உ.சி. பெயரில் கட்சியும், மன்றமும் நடத்துவோருக்கும் இந்த தனலெட்சுமி போன்றோரது கஷ்டம் தெரியாமல் போனது எப்படியோ? வ.உ.சி. சிறையில் இழுத்த செக்கையும், அவர் பயன்படுத்திய பொருளையும்கூட பத்திரப்படுத்தி வைத்து பாதுகாத்துகொண்டிருக்கிறது தமிழக அரசு!
நன்றி - தினமணி

நான் அப்பவே சொன்னேன்ல - சைக்கிள் ஸ்டேண்ட்!

நம்மளோட நிலைமை;
பூமியோட நிலைமை;
நாட்டோட நிலைமை;
இதையல்லாம் கொஞ்சம் யோசிச்சு பார்த்தா கஷ்டமாத்தான் இருக்கு! :-(

எவ்ளோ பேர் சொல்லிக்கிட்டு இருக்காங்க! உங்க லைப் ஸ்டைல மாத்திக்கோங்கப்பா! மாத்திக்கோங்கப்பான்னு, ஆனாலும் அக்கம்பக்கத்தில் கடனை வாங்கியாவது வண்டி வாங்கி ஊர சுத்த சொல்லுது மனசு!

இப்ப வண்டி வாங்குறதுக்கு கடன் கொடுத்த காலமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இனி பெட்ரோல் வாங்குறதுக்கு பங்க்ல பாங்க் ஒபன் பண்ணி கடன் கொடுக்கற நிலைமை வர்ற வரைக்கும் ஆடுங்க மக்கா ஆடுங்க அப்படின்னுத்தான் சொல்லத்தோணுது! நம்ம ஆளுங்க விதவிதமான ஸ்பீடுகளில் & ஸ்டைல்களில் வண்டி மாடல் பார்த்து பார்த்து வாங்கறதுல்ல ஆர்வமா இருக்கோம்!

பெரிய பெரிய நாட்டுல இருக்கறவங்களெல்லாம் இப்ப சைக்கிள் சவாரி தான் அதிகம் செய்யிறாங்க! சைக்கிள் சவாரிகள் அதிகமான அதுக்கேத்த மாதிரி பார்க்கிங், பிராப்ளங்களையும், சைக்கிளை பத்திரமாவும் பாதுகாத்து அதே சமயத்தில் நல்ல இடவசதியோடயும் ரொம்ப ஈசியாக்கிற மாதிரி விதவிதமாவும் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க!

எது எப்படியோ போனாலும் ஒரு காலகட்டத்தில நாமும் இந்த மாதிரி ஒரு நிலைமைக்கு கண்டிப்பா வரப்போற நாளும் வரக்கூடும்ல அப்ப நமக்கும் இது மாதிரியான ஒரு ஏற்பாடும் வேண்டியிருக்கும்!



அதனாலதான் மக்களே! இப்பவே வெளிநாட்டுக்காரனுங்க ஐடியாவை மேலோட்டமா நான் சொல்லிடுறேன்! அப்புறம் உங்க திறமையில இத நீங்க நல்ல டெவலப் பண்ணி வைச்சீங்கன்னா வரும் கால வரலாற்று புத்தகத்தில உங்க பேர நல்ல அழுத்தமா பதிக்க முடியும்!

1.வண்டியை அப்படியே மேலாக்க நிப்பாட்டிடணும்
2.முன்னாடி சக்கரத்தோட லாக் ஆகிடுடற மாதிரி ஒரு அமைப்பு இருக்கு அது அப்படியே ஆட்டோமேடிக்கா லாக் பண்ணிக்கும்!
3.இப்ப நீங்க ஸ்டார்ட் பண்ணனும்
4.இப்ப நீங்க ஒரு கைரேகை வைக்கணும் ( இது திருட்டு போகாம இருக்க)
5.ஒ.கே பண்ணுனா வண்டி சர்'ருன்னு மேலே போயிடும்! (ஒரேடியா இல்லைங்க கொஞ்ச தூரத்துக்குத்தான்!)

குறிப்பு :- ”நான் அப்பவே சொன்னேன்ல” இது என்னோட ஹிஸ்டரி ரெபரன்ஸ்க்கு! :-)

ராமன் எபெக்ட்...?!

பதினெண்டு வருடத்துக்கு முன்பிலிருந்து ஆரம்பித்த வழிபாடு இன்று தற்காலிகமாக ,அரசின் குறுக்கீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

அரசின் தரப்பிலிருந்தோ சரியானதொரு விளக்கமும் தரப்படாத சூழல் இந்த ஜனநாயக நாட்டில்!

இச்செய்தி நடந்த இடத்திற்கும் நம்க்கும் ரொம்ப தூரம் என்றாலும் ஏதோ ஒரு வகையில் நம்மை தொடர்பு படுத்தும் விஷயம் தான்
பத்து தலை ராவணணை பற்றி பெரும்பாலும் தெரிந்திருப்பீர்கள்! ராமாயணத்தில பார்த்திருந்தாலும் சரி; இல்லை, சிவதாண்டவத்தில படிச்சிருந்தாலும் சரி! – எப்படியோ தெரிஞ்சிருந்தா சரி!

ஜோத்பூரில் தேவ்கோட் சமூகத்தை சார்ந்தவர்கள் ராவணணை தம் முன்னோர்களாக கருதி வழிபாடு செய்து வருகின்றனர்! இது ஒரு 18 வருஷமா நடந்து வருதாம்!

மெகரங்கார்க் (குளறுதுப்பா!!) கோட்டைக்கு அப்பரத்த சைடு இருக்கற இந்த கோவில்ல, எல்லா சாமிகளும் உண்டாம்!

சரி ரொம்ப வருஷாமாச்சே! கோவில கொஞ்சம் புதுப்பிச்சு கட்டுவோம்னு எல்லாம் சரி பண்ணி, அழகான ஜோத்பூர் கல்லில் செதுக்கிய, சிவனுக்கு பூஜை செய்வது போல் நிற்கும் ராவணன்சிலையை பிரதிஷ்டை பண்ண போறப்பத்தான் அதெல்லாம் முடியவே முடியாதுன்னு, காவி குரூப்ஸ் எதிர்க்க ஆரம்பிச்சு,

Photo Sharing and Video Hosting at Photobucket

ராஜஸ்தான் பிஜேபி கவர்ன்மெண்ட்தானே! - விளக்கம் எதுவும் சொல்லாம நிப்பாடிப்புட்டாங்க, கவர்ன்மெண்ட் ஆபிசருங்க!

தற்காலிகமாத்தான்னு சொன்னாலும் அடுத்து காங்கிரஸ் கவர்ன்மெண்ட் வந்தாத்தான் சாத்தியம் போல....!

அவங்கவங்க விரும்பற சாமியை கும்பிடறதுதானே சுதந்திரம்!

என்ன சனநாயக நாடோ..?

நாம எதாவது கரசேவை பண்ண முடியுமா இந்த மேட்டர்ல..?

சே குவாரா

Photo Sharing and Video Hosting at Photobucket

உலகம் முழுவதும் புரட்சிக்கு டிக்ஷினரியாக அடையாளம் காணப்படும் சேகுவராவின் 40ஆம் நினைவு தினம் இன்று

கியூபா புரட்சிக்கு வித்திட்ட பிடல் காஸ்ட்ரோவுக்கு உறுதுணையாக இருந்தவர் சேகுவாரா. புரட்சியின் முக்கிய கட்டமாக தனது கொரில்லா போர் முறையை பயன்படுத்தியதன் மூலம் இன்று புரட்சியாளர்களின் முன்னோடியாக கருதப்படுபவர்

அர்ஜென்டைனாவில் பிறந்து, புரட்சி வீரராக உருவெடுத்த சேகுவாரா, மெக்சிகோவில் பிடல்காஸ்ட்ரோவை சந்தித்தார். இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டது. பின்னர் கியூபா புரட்சியில் இருவரும் கைகோர்த்தனர்!

கியூபாவில் சில காலம் அமைச்சராக பணியாற்றிய சேகுவரா,தன் மனம் விரும்பும் பாதையை நோக்கிய பயணத்தை தொடரும் முடிவில். காஸ்டிரோவுக்கு குட்பை கடிதம் எழுதிவிட்டு, அடுத்த கட்ட புரட்சி போராட்டத்தை நடத்த பொலிவியாவிற்கு சென்று, அங்கு லத்தீன் அமெரிக்காவை எதிர்த்த புரட்சியில் அமெரிக்கா ஆதரவு பெற்ற பொலிவிய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்!

என்னை சொந்த மகனாக பாவித்து ஏற்றுக்கொண்ட கியூபா நாட்டினையும் உங்களையும் விட்டுப்பிரிகிறேன்! ஏகாதிப்பத்தியத்தை ஒழிக்க எனக்காக காத்திருக்கும் கடமைகளை நோக்கி செல்கிறேன், உங்களை பிரிகின்றேன், எனது குடும்பத்தை கியூபாவின் பாதுகாப்பில் விட்டுச்செல்கிறேன், என் வழியில் மரணம் வந்தால் அந்த நொடிப்பொழுதும் என் எண்ணங்கள் உங்களையும் என் நண்பன் பிடல் காஸ்டிரோவையும் நினைத்துக்கொண்டிருக்கும்..!

சே குவரா

காந்திஜி இங்கே, காந்தியம் எங்கே? - தினமணியிலிருந்து



Photo Sharing and Video Hosting at Photobucket



இந்தியாவுக்கு பெருமை அளிப்பவை எவை? இமயமும் குமரியுமா, கங்கையும் காவிரியுமா, வங்காள விரிகுடாவும் அரபிக் கடலுமா? - இல்லை. இந்நாடு பழங்காலத்தில் முனிவர்களாலும் ஞானிகளாலும் பெருமை பெற்றது. புத்தரால் புனிதமடைந்தது; மகாத்மாவால் மகிமை பெற்றது.

காந்தியடிகள் மறைந்தபோது அறிவியல்மேதை ஐன்ஸ்டீன் கூறினார்: ""இத்தகைய ஒரு மனிதர், இந்த மண்ணில் நடமாடினார் என்பதை வருங்காலத் தலைமுறையினர் நம்புவது கடினம்...'' ஆம், அவர் அப்படி வாழ்ந்தார். எளிமை, இரக்கம், தொண்டு, தியாகம் இவற்றின் மொத்த வடிவம், மதங்களைக் கடந்த மனிதநேயம், அகிம்சை, வாய்மை - அவரது ஆயுதங்கள்; ஏழை மனிதர்களுக்காக உழைப்பதே அவரது வழிபாடு.

"உலகுக்கு உபதேசிக்க, புதிதாக என்னிடம் எதுவும் இல்லை. மலைகள் எவ்வளவு பழைமையானவையோ அவ்வளவு பழைமையானவை சத்தியமும் அகிம்சையும்...'' என்றார் அவர்.

ஆண்டாண்டாக அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் நாம், அவரது கொள்கைகளை எண்ணிப் பார்க்கிறோமா? அவரது பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் அவரது கொள்கைகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது உண்டா? அகிம்சையும் சத்தியமும் அவர் பிறந்த மண்ணில் உயிரோடு இருக்கின்றனவா?

நாடெங்கும் குண்டுவெடிப்பு, வன்முறை, படுகொலைகள், கற்பழிப்பு, மர்மச்சாவு, அரசே நடத்தும் மதுக்கடைகள், கள்ளச்சாராயம், சட்டத்தை மீறும் காவல்துறை, நீதியே விலைபோகும் நிலை } இவற்றைக் காணும் நல்லவர்களின் மனம் பதறாமல் என்ன செய்யும்?

அடுத்த நாடுகளின் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த விரும்பும் அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம்; ஆதிபத்திய நாடுகளுடன் இந்திய கடற்பரப்பில் கூட்டுப்பயிற்சி; உலகத்துக்கே அகிம்சையை உபதேசித்த இந்தியா, இப்போது அன்பையும் அமைதியையும் இப்படித்தான் நடைமுறைப்படுத்துகிறது.

அணுஆயுதங்களின் அச்சுறுத்தலில் இருந்து உலகைக் காக்கவல்ல பாதுகாப்புக் கேடயம் அகிம்சையே. இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் அணுகுண்டால் ஹிரோஷிமா அழிந்தபோது காந்திஜி, சலனமின்றி இருந்தார். அவர் மனம் கூறியது: ""இப்பொழுது உலகம் அகிம்சையைக் கடைப்பிடித்தாலன்றி மனித இனத்தின் கதி தற்கொலையிலேயே போய் முடியும்...''

மதத்தின் பெயரால் நாடு பிளவுபட்டபோது, மகாத்மா கொண்ட கவலை சரிதான் என்று இப்போது நடக்கும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. இன்று நடக்கும் பயங்கரவாதச் செயல்களே வருங்கால வரலாறாக மாறி, கசப்புணர்வே தொடர்கதையாகும்.

அன்று நவகாளியில் நடைபெற்ற படுகொலைகள் நாடெங்கும் இன்றும் தவணை முறையில் தொடர்கின்றன. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை அரசு எவ்வளவு காலத்துக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது?

ஆறுதல் கூறுவதாலும் இழப்பீடு அளிப்பதாலும் இறந்த உயிர்களை மீட்டுவிட முடியுமா?

""என்னுடைய வீட்டின் எல்லாப் பக்கங்களும் சுவர்களால் மூடப்படுவதையும், சாளரங்களால் அடைக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை. என் வீட்டிற்குள் எல்லா நாடுகளின் பண்பாடும் இயல்பாய் பரவ வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இதில் எதுவும் என்னை முழுமையாக அடிமைகொள்ள நான் அனுமதிக்க மாட்டேன். என் இல்லத்தில் இறைவனின் மிக எளிய படைப்பிற்கும் இடம் உண்டு. ஆனால், நிறம், மதம், இனத்தால் எழும் தற்பெருமைகளுக்கு இடமில்லை...'' என்பது காந்தியடிகள் கருத்து.

மக்களை நெறிப்படுத்த உருவாக்கப்பட்ட மதங்கள், மார்க்கங்களை இன்று மனிதர்களை வெறிப்படுத்தப் பயன்படுத்தலாமா? அன்புமயமான உலகத்தை வம்புமயமாக மாற்றலாமா? சொர்க்கத்திற்கு வழிகாட்டுவதாகச் சொல்லிக் கொண்டு நரகத்தை நோக்கியே நடை போடலாமா?

கடவுளுக்காகப் போரிடுவதாகக் கூறுவதும், மதத்துக்காகத் தியாகம் செய்வதாகப் பேசுவதும் இறைவனைச் சிறுமைப்படுத்தும் செயல்கள். பிரபஞ்சத்தையே படைத்திட்ட, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு சக்தி என்று ஒத்துக்கொண்டுவிட்டு, அவருக்காக அழிவுச் செயலில் ஈடுபடுவது அறிவுடைமையாகுமா?

காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் நேசித்தார். "கடவுளின் குழந்தை' என்ற பொருள்தரும் "ஹரிஜன்' என்ற பெயரை வழங்கி, அப்பெயரிலேயே அவர்களை அழைத்தார்; அந்தப் பெயரில் ஒரு பத்திரிகையும் நடத்தினார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அவர்களின் நிலை என்ன? அவர்களுக்கென இடஒதுக்கீடு இருந்தும், அவர்களுடைய நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லை. தீண்டாமையும் சாதி வேற்றுமையும் தொடர்கின்றன. பல இடங்களில் இன்னும் தேநீர்க் கடைகளில் இரட்டைக்குவளை முறை நீக்கப்படவில்லை. அத்துடன் அரசியல் அதிகாரமும் அவர்களை நெருங்க விடவில்லை.

"மக்களாட்சியில் அதிக பலம் வாய்ந்தவர்களுக்கு இருக்கும் அதே வாய்ப்பு, பலவீனமானவர்களுக்கும் கிடைக்க வேண்டும். இதுவே மக்களாட்சியைப் பற்றி நான் கொள்ளும் கருத்து. ஆனால் அகிம்சை வழியினால் அன்றி, இதை என்றுமே அடைந்துவிட இயலாது...'' என்று சொன்ன அவரது கூற்று காற்றிலே கரைந்தது.

1947 அக்டோபர் 2. அவரது வாழ்நாளில் கடைசி பிறந்தநாள். தேசப்பிதாவுக்கு தங்கள் அன்பையும் வாழ்த்தையும் தெரிவிக்க நாள் முழுவதும் அவரது ஆதரவாளர்களும், நண்பர்களும், பார்வையாளர்களும் வந்தபடி இருந்தனர். அயல்நாட்டுத் தூதரக அலுவலர்களும் தங்கள் அரசுகளின் வாழ்த்துகளைத் தெரிவிக்க வந்தனர்.

ஆனால் அவர் மனதில் மகிழ்ச்சியில்லை. துயரமே குடிகொண்டிருந்தது. "வகுப்புக் கலவரம் தொடர்ந்தபடி இருக்கிறதே!' என்ற கவலை. அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தின் இறுதியில் அவர் பேசினார்:

""இன்று என்னுடைய பிறந்தநாள்; ஆனால் எனக்கு ஒரு துக்ககரமான நாள். நான் இன்னும் உயிரோடு இருப்பதற்காக வியப்பும் வெட்கமும் அடைகிறேன். நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் என்னுடைய வார்த்தையை மதித்தனர். ஆனால் இன்று நான் சொல்வதை யாரும் கேட்கத் தயாராக இல்லை...''

தாம் இருக்கும்போதே தம்முடைய பேச்சை யாரும் கேட்கவில்லை என்ற வருத்தம் காந்திஜிக்கு இருந்தது. இப்போது கேட்க வேண்டுமா? அவரது கொள்கைகள் தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்குத் தடையாக இருப்பதாகப் பலர் எண்ணுகின்றனர். ஆனால் அவரது பெயரும் - புகழும் தேர்தல் நேரங்களில் தேவைப்படுகிறது. பொய் அரசோச்சும் இடத்தில் உண்மைக்கு என்ன வேலை?

நம் தேசப்பிதா இப்போது எங்கும் இருக்கிறார். அரசு அலுவலகங்களில் புன்னகை செய்தபடி சுவரில் மாட்டப்பட்டுள்ள படங்களில் இருக்கிறார். ஆனால் அவரது கொள்கையான காந்தியம் எங்கே? தேடுவோம், தேடிக்கொண்டே இருப்போம்!

டெல்லி செங்கோட்டை எங்களுக்கே…!


இந்திய முகலாய வம்சத்தின் கடைசி மன்னராக – உருது கவிஞர் - இருந்தவர் அபு ஸஃபார் சிராஜீதின் முகம்மது பகதூர் ஷா ஸஃபார்

Photo Sharing and Video Hosting at Photobucket

இரண்டாம் அக்பர் ஷாவிற்கும் இந்துபெண்ணான லால்பாய்க்கும் பிறந்த மகன்.

1857ல் நிகழ்ந்த கலக புரட்சியில் சிப்பாய்களால் டெல்லி கைப்பற்றப்பட்டு, அங்கு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பொதுவான அரசராக அனைத்து குறு நிலமன்னர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்

சிப்பாய்கள் போராட்டம் முறியடுக்கப்பட்டபோது, ஹுமாயுன்னின் கல்லறைக்கு சென்று ஒளிந்திருந்தவரை பிரிட்டிஷ் படையினர் பிடித்து,அதற்கான தண்டனையை அவரது இரு மகன்களுக்கும் ஒரு பேரனுக்கும் தருகிறார்கள், எப்படிப்பட்ட தண்டனை தெரியுமா?

மூவரின் தலையை கொய்து அதை உணவுத்தட்டில் வைத்து தருகின்றனர் பகதூர் ஷாவிற்கு!

இந்த காரியங்கள் முடிந்து ஆட்சியிலிருந்து விலகும்முகமாக பிரிட்டிஷ் படையினால் கைது செய்யப்பட்டு 1858ல் மியான்மார் யாங்கூனிற்கு நாடு கடத்தப்பட்டு, கடைசியில் 1862ல் மரணத்தை தழுவுகிறார்!

பாபரால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய முகலாய வம்சத்தின் அரசாட்சி இவரால் முடித்துவைக்கப்படுகிறது!

சரி என்னடா திடீருன்னு இவரப்பத்தின்னு.. யோசிக்கிறீங்களா?

இருக்கே சங்கதி...!

Photo Sharing and Video Hosting at Photobucket


இவருடைய கொள்ளுப்பேரனுக்கும் பேத்திமுறை பொண்ணு, தற்போது கொஞ்சம் கடினமான சூழ்நிலையில் இந்திய அரசு தங்கள் குடும்பத்திற்கு சரியான முறையில் நிதியுதவி அளிக்கவில்லைன்னு சொல்லியிருக்காங்க!

உண்மையிலேயே கொடுமையன விஷயம்தாங்க 1920ல ரூ 10 உத்வித்தொகையாக கொடுத்த அரசு,அப்புறம் ரூ6 கூட்டி இப்ப ரொம்ப தாராள மனசோட ரூபாய் 400 கொடுக்குதாம்! இந்த அரசு கொடுத்துவரும் உதவித்தொகையை,மாற்றி கொடுக்கணும் இல்ல, அட்லீஸ்ட் டெல்லியிலுள்ள செங்கோட்டை எங்களுடைய குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட சொத்து சொல்லி அதற்குண்டான நஷ்ட ஈட்டையாவது கொடுக்கணுமுனு சொல்லி வழக்கு தொடர போறாராம்!

Photo Sharing and Video Hosting at Photobucket

மியான்மார் யாங்கூனில் இருக்கும் பகதூர் ஷாவின் கல்லறை மசூதி