கடவுளின் தேசத்தில் - கடற்கரை கோட்டையில்..!

Photo Sharing and Video Hosting at Photobucket

முழு பாடலையும் அர்விந்த சாமி உருகி,ஹரிஹரன் பாடிய அந்த பாடல் எடுக்கப்பட்ட இடம்!

பம்பாய் படத்தில் ஒரு பாடலில் இந்த கோட்டை வந்த பிறகே சுற்றுலாதளமாக பிரபலாமாக தொடங்கியது!

அது ஒரு மழைக்கால நேரமாக இருக்கக்கூடும்! எங்கும் பார்த்தீர்களென்றால் ஒரே பச்சைப்பசேல்தான்! நாங்கள் சென்றிருந்த நேரம் பச்சை புல்வெளிகளை காண் இயலாமல் ஏமாந்தாலும்,அவ்ளோ பெரிய கோட்டை மற்றும் கோட்டை சுவர்கள்,சுரங்கபாதை என கண்டு மனம் மகிழ்ந்தோம்..!

பாட்டுக்கேற்ற லொக்கேஷந்தான் நீங்கள் கூட வாய்ப்பு கிடைத்து போனீங்கன்னா உங்களுக்கும் கூட வரலாம் ஸேம் ஃபீலிங்க்ஸ்!


அந்த கோட்டையை சுற்றி எடுத்திருப்பார்கள் அந்த பாடலில், சுரங்கத்தில் நுழைந்து, நீண்ட தூரம் ஒடி வந்து சிறு மதில் துவாரம் வழியே கீழே நிற்கும், அர்விந்த் சாமியை விழுங்கும் கேமிரா!

இருவரும் கடைசியாக சந்திக்கும் இடம் தான் ஸ்பெஷல் லெக்கோஷன்! கடல் அலைகள் நம்மை உரசிச்செல்லும் அந்த சிறிய அழகிய கோட்டை மதில்கள்!

மதில் சுவர்களை ஆவேசமாக வந்து முத்தமிட்டு செல்லும் அலைகளின் பின்ணணியில், யாராவது ஜோடி கண்டிப்பாக போட்டோ எடுத்துக்கொண்டிருப்பார்கள்! – டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்ன?!

டைரக்டர் மணிரத்னமும் சரி, கேமராமேன் ராஜீவ்மேனனும் சரி, ரொம்ப ஃபீல் பண்ணி எடுத்த இடம்தான் அது இப்பவும் நீங்க அங்க போனீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு பீலிங்ஸாத்தான் இருக்கும்!

வரலாற்று சுவடுகளின் படி விஜயநகர அரசால் அமைக்கப்ப்ட்ட சந்திரகிரி,பெக்கல் கோட்டைகள் எதிரிகளிடமிருந்து மலபாரினை காக்கும் பொருட்டு, செயல்பட்டு வந்துள்ளது! கடைசியாக திப்புசுல்தானின் ஆளுகையில் இருந்துள்ளது!




பவுர்ணமி நாட்களில், நிலா வெளிச்சத்தில் அலையை ரசிக்க, அழகை ரசிக்க கூட்டம் கூடிக்கொண்டுதான் இருக்கிறது! கடவுளின் தேசத்தில்! (கடவுளே என்னையும் அழைத்துக்கொள்ளேன் உன் தேசத்திற்கு...!!!)

பெக்கல் போர்ட்க்கு நீ சொன்ன மாதிரியே நான் போனேன்! ஆனா எனக்கு ஒண்ணும் அந்தளவுக்கு ஃபீலிங்ஸ் தெரியலையேன்னு சொல்ற ஆளா நீங்க?

அப்ப உங்களுக்கு தேவாரத்திருத்தலங்கள் பத்தி பதிவு போடப்போறேன் அதை வந்து படிங்க ஒ.கேவா!

2 பேர் கமெண்டிட்டாங்க:

Anonymous said...

மிகவும் அருமையான இடம். நான் இரண்டு முறை சென்றிருக்கிறேன்.

//வரலாற்று சுவடுகளின் படி விஜயநகர அரசால் அமைக்கப்ப்ட்ட சந்திரகிரி,பெக்கல் கோட்டைகள் எதிரிகளிடமிருந்து மலபாரினை காக்கும் பொருட்டு, செயல்பட்டு வந்துள்ளது! கடைசியாக திப்புசுல்தானின் ஆளுகையில் இருந்துள்ளது!//

இந்த தகவல் தவறானது என்றே எண்ணுகிறேன். அந்த ஊர் மக்களிடம் விசாரித்தபோது, திப்பு சுல்தானால் கட்டப்பட்டதாகவே கூறினார்கள். சரி பார்க்கவும்.

said...

நல்ல இடம். இது போன்று கன்னியாகுமரிக்கு அருகில் அஞ்சு கிராமம் போகும் வட்டக்கோட்டை என்ற ஒரு இடம் உள்ளது. கடற்கரை ஒட்டி அழகான கற்கலால் கட்டப்பட்ட வட்ட வடிவமான இடம். இதன் மேல் ஏறி நின்று பார்த்தால் திருவள்ளுவர் சிலை ஒரு புறமும், கூடங்குளம் அணு மின் நிலையம் ஒரு புறமும் தெரியும். அழகான இடம்.