சாப்பிடுவோர் (சிவில்) இன்ஜினியர்களும் + சமூக சீரழிவும்...!

தமிழகத்தில் பல அரசுக் கட்டடங்கள், மேம்பாலங்கள் மற்றும் சாலைகளின் நிலைப்புத்தன்மை குறைவதற்கு ஒப்பந்ததாரர்களி டம் கமிஷன் பெறுதல் ஒரு முக்கிய காரணம்.

எந்தக் கட்டுமானப் பணியாக இருப்பினும், வேலைதொடங்கும் முன்பே, ஒப்பந்ததாரர்களிடம் 20 சதவிகிதம்வரை கமிஷன் பெறுவது வாடிக்கையாகி விட்டது.

ஒப்பந்தப்புள்ளிக்கான விண்ணப்பங்கள் கூட அரசியல்செல்வாக்கு படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைப்பதும், அவை மட் டுமே பரிசீலனைக்கு ஏற்கப்படுவதும் பொதுவான நடைமுறையாக உள்ளது.

இந்த ஒப்பந்தங்களை, குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே வழங்க அதிகாரம் படைத்தவர்களி டம் இருந்து வாய்மொழி உத்தரவு வரும் போது, அரசு அலுவலர்கள் நேர்மையான முறையில் ஒப்பந்தப்புள்ளிகளை நிர்ணயிப்பது இயலாத காரியமாகிவிடுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரத்துக்கு வருவோர் பலரும் பினாமி பெயர்களில் ஒப்பந்தப்பணியை ஏற்று, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றொருவர் மூலம் பணியை நிறைவேற்றுவது வழக்கமாகி விட்டது.

கட்டுமானப்பணியைப் பெறுவதற்கு அளிக்கப்படும் கமிஷன்போக, ஒப்பந்தத்தொகையில் 60 சதவிகித நிதி மட்டுமே பெரும்பா லான பணிகளில் செலவிடப்படுகிறது.இந்நிலையில், கட்டுமானத்தில் தரமற்ற பொருள்கள், மணல், சிமென்ட் கலவையில் சரியான விகிதம் இன்மை, கட்டுமானத்தில் நேர்த்தியின்மை உள்ளிட்ட குறைபாடுகளும் காணப்படுகின்றன.

நூற்றாண்டைத் தாண்டிய பல கட்டடங்கள் இன்றைக்கும் வலுவுடன் நிமிர்ந்துநிற்கக் காரணம், தரமான கட்டுமானப் பொருட்களும் உயர்தர தொழில்நுட்பங்களுமே.ஆனால் இன்றைய அரசுக் கட்டுமானங்களில் இவை அரிதான விஷயமாகிவிட்டது.

எந்த அரசு ஆட்சியில் இருந் தாலும், முந்தைய அரசின் கட்டு மானங்களைப் பராமரித்து பேணிக்காப்பது அதன் கடமை.

இத்தகைய நடைமுறைகளில் அரசு கவனம் செலுத்தாமல் இருப்பது, பல கட்டுமானங்கள் சீர்கெடக் காரணமாக உள் ளது.

வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் மட்டு மன்றி, அரசுக் கட்டடங்களின் பராமரிப்புக் கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி மிகக்குறைவு.இதற்கான ஒப்பந்தப் பணிகளை ஏற்க, எந்த ஒப்பந்ததாரரும் முன்வருவதில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

அரசு அவ்வப்போது பராமரிப்புப் பணிக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியை அதிகாரிகள் முறையாகச் செலவிடுவதில்லை. அவை வேறு செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

எங்கு கட்டடம் தேவைப்படுகிறதோ, அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை யும், அரசுக் கட்டடங்களையும் கட்டுவது நடைமுறையாக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்படும் நிலத்தின் ஸ்திரத்தன்மையை மண்ஆய்வு மூலம் அறிவதில் பொதுவாக ஆர்வம் காட்டுவதாகத் தெரிவதில்லை. சில தருணங்களில் மண் ஆய்வு, வெறும் சடங்காகவே முடிந்து விடுகிறது. மண்ஆய்வில் திருப்தி ஏற்படாத நிலையில் அந்த இடத்தில் கட்டடங்களைத் தவிர்க்க வேண்டும்; அல்லது மண்ணின் தன்மைக்கேற்ற கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம்.

கட்டுமானப் பணியின்போது தரஆய்வுகளில் கீழ்மட்டத்தில் மெத்தனம் காட்டப்படு வதும், உயர் அதிகாரிகளின் திடீர் ஆய்வின் போதே குறைபாடுகள் கண்டறியப்படுவதும் வருந்தத்தக்க விஷயம். கட்டுமானத் தரத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க உயர்நிலைக் குழுவை மாவட்டம்தோறும் அரசு அமைக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலத்துக்கு கட்டடத்தின் நிலைப்புத்தன்மை குறித்த உத்தரவாதத்தை ஒப்பந்ததாரரிடம் பெறவேண்டும். கட்டுமா னப்பணி ஒப்பந்தங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கமிஷன் கொடுக்கும் போக்கையும், உள்ளாட்சி அதிகாரங்களில் உள்ளவர்கள் பினாமி பெயர்களில் ஒப்பந்தப் பணிகளை எடுப்பதையும் கட்டுப்படுத்தினால் மட்டுமே, நிலைத்து நிற்கும், உறுதிமிக்க கட்டடங்களை வருங்காலங்களில் பார்க்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அரசின் தார்மிகப் பொறுப்பு.

நன்றி - தினமணி

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மத்திய கிழக்கு நாடுகளில் எத்தனையோ குறைகள் இருந்தாலும் இந்த பொதுப்பணிகளில் சாப்பிடுவோர் குறைவாகவே இருப்பார்கள் என நினைக்கிறேன்.நீங்க என்ன சொல்கிறீர்கள் ஆயில்யன்?

said...

ஓ சீரியஸ் பதிவா

சாரி நான் போயிட்டு வரேன்