பயணிகள் கவனத்திற்கு...!

நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் அமைத்த காலம், மாறி அனைத்து நடிகர்களும், இணையங்களில் வந்துவிட்ட காலமிது.!?அதிலும் நடிகைகளுக்குத்தான் அதிகம் என்பது கூடுதல் தகவல்!

ஆனால் ரயிலின் மீது இத்தனை ஆர்வம் கொண்ட ரசிகர்கள் தங்களுக்காகவே தொடங்கப்பட்ட இணையத்தளத்தில் இந்தளவுக்கு ஆர்வம் காட்டுவார்களா? என்று ஆச்சர்யத்தோடேதான் காண நேர்ந்தது இந்த தளத்தை..!

காலரி பார்த்ததும்.முதலில் நினைப்பு வந்ததே ஊர் பற்றி ஏதாவது செய்திகள் இருக்கிறதா? என்றுதான் - இருந்தது..! நான் கடந்த, இழந்த அந்த வாழ்க்கையை திரும்பவும் மனத்தடத்தில் ஒடச்செய்தன அந்த புகைப்படங்கள்!
காணக்கிடைக்காதது மட்டுமல்ல, நாம் நேரில் சென்று இது போன்ற புகைப்படங்களை எடுக்க முடியுமா? என்று கேள்வியை எழுப்பும் படங்கள்..!

அதுவும் அருமையான தலைப்புக்களில், நினைவுகளில் அசைபோடவைக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் கூட இதில் உண்டு!

ரயில் பற்றிய அனைத்து விபரங்களும் இதில் அடங்கியுள்ளன் மொத்ததில் பயணிகள், ரயில் பயணம் மீது ஆர்வம் கொண்ட ரசிகர்கள், இவர்களோடு இந்திய ரயில்வேயும் இணைந்து இந்த அருமையான இணையதளத்தை ரயிலோடு சேர்த்து இயக்கிக்கொண்டிருக்கின்றன!

எங்க ஊருக்கு வந்து போன ரயில்களில் ரொம்ப ஸ்பீடான வண்டி திருப்பதி எக்ஸ்பிரஸ். அதுல போறது ரொம்ப பெருமையான விஷயமா சொல்வாங்க, குறுக்கே தலை வைச்சு,படுத்தா அது நம்ம மேல போறதுக்குத்தான்...! (இதுல அடிபட்டா ரொம்ப பெருமையாம்...!) டேய்..! ரொம்ப ஆடாத அப்புறம் திருப்பதியில அடிப்பட்டுத்தான் சாகப்போறன்னு ஒரு பேச்சு வழக்கே உண்டு எங்க ஊரு ஜங்ஷன் பக்கம்!

திருப்பதி கொள்ளிடம் பாலத்த கிராஸ் பண்ற சவுண்ட பாருங்க சாரி கேளுங்க! சும்மா அதிருதுல்ல..! (கொள்ளிடம் பிளாட்பார்ம்ல நின்னா உடம்பு அப்படியே குலுங்கும்!)

ஒரு வருடத்திற்கு முன்பு அகல ரயில் பாதைக்காக மூடப்பட்ட மயிலாடுதுறை – விழுப்புரம் எப்போது முடியும் நாம் திரும்பவும் எப்போது அதில் பயணம் செய்யலாம்! என்ற மகிழ்ச்சி ஆர்வத்தை என்னுள் விதைத்துவிட்டது இந்த இணையத்தளம்!

குறிப்பு:
நான் படிச்சு வந்த கட்டிடவியல் ரயில்வே சப்ஜெக்ட்படி பார்த்தா நான் உபயோகித்த இந்த ரயில் வார்த்தை தண்டவாளாத்தை மட்டுமே குறிப்பிடும் சொல்! ஆனா பாருங்க எல்லாரும் ரயில்ன்னு சொல்லித்தான் பழகியிருக்கோம்! அப்படி சொன்னாத்தான் அதுல ஒரு தனி இன்பமே இருக்கு...!

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அருமையான தகவல் ;-))