சத்துணவு ஆயா!

காலை உணவின்றி வந்து சேரும் ஆயாவுக்கு வேலை பள்ளியில் மதிய உணவு சமைத்தல்;

வீட்டைப்பற்றி எதுவும் கவலைப்படாமல், வருபவருக்கு வேலை பள்ளி முழுதும் கூட்டி சுத்தம் செய்தல்;

தன் பிள்ளைகளின் உணவு தயாரிப்பது கூட எல்லா பிள்ளைகளுக்கும் சமைத்து அவர்கள் சாப்பிட்டதும், தன் வேலையை முடித்தபின் தான் வீட்டுக்கு சென்று சமைத்தல்!

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்று முழங்கி, அவர்தந்த உணவை எத்தனை நாள் முழுங்கியிருக்கிறேன்!

சம்பளமோ சாதரண தினக்கூலிக்காரர் வாங்கும் அளவுக்கூட கிடையாது..!

ஆனாலும் இவர்கள் எந்த நோக்கத்துக்காக இதை சேவையாக செய்கின்றனர்!

யாராவது நினைத்துப்பார்ப்பார்கள் என்றா? இல்லை ஆத்ம திருப்திக்காகவா?

புரியவில்லை! ஆனாலும் நினைத்துப்பார்க்கிறேன், சத்துணவு ஆயா வடிவில் இன்னுமொரு அன்னையை,

ஆத்ம திருப்தியுடன்..!!!

0 பேர் கமெண்டிட்டாங்க: