காலை 5.00 மணிக்கு பாதி தூக்கதிலிருக்கும்போது, அம்மாவும் பாட்டியும், டேய் காவிரி ஆத்துக்கு போய்ட்வர்றோம் தெரு கதவைப்பூட்டிக்கோவென்று சொல்லும் சப்தம் கேட்டு,தூக்கத்திலிருந்து எழும்போதே, அம்மா..! வரும்போது மயூரா பொங்கல் வாங்கிட்டுவர்றீயாம்மா? ன்னுதான் வார்த்தை வரும்!
அது போலவே 7. மணிக்கு சூடான பொங்கல் கொண்டு வந்து வைத்துதான் எழுப்புவார்கள்! இது பல வருடங்களுக்கு முன்பு வரை!
கடைமுழுக்கு பற்றி ஒன்றும் பெரிதாக தாத்பரியங்கள் அறிந்திருக்காவிட்டிலும் கூட அன்னைக்கு போய் காவிரியில குளிச்சா, நல்லதுங்கற எண்ணம் மட்டும் ரொம்ப கெட்டிய மனசுல் இறுகிப்போச்சு!
என்னதான் காலையில் காவிரி ஆற்றுக்கு சென்றுவந்தாலும் பாட்டிக்கு சாயங்காலமும் சென்று சாமி தீர்த்தம் கொடுக்கும் போது குளித்துவந்தால்தான் மனசுக்கு நிம்மதி! (ஏம்மா! அதான் காலையில போய் குளிச்சுவந்தாச்சுல்ல பின் திரும்ப எதுக்கு சாயங்காலமும்ன்னு சொல்றத கேட்கதபோது எங்களுக்கு கோபம்தான் வரும்! ஆனால் பெரியவர்களின் பிடிவாதம் என்பதே ரொம்ப நாட்கள் நினைத்திருந்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடல்லவா!)
காலை 10.00மணிக்கு கோவிலுக்கு செல்லும் நான் சாமி புறப்பாடாகி கோவில் வாசலிலிருந்து அந்த மடவளாக விளிம்புக்கு வர ஒரு மணி நேரமாவது ஆகும்! ஆம் அங்குதான் மிகவும் விமரிசையாக பலர் ஊர்களிலிருந்து வந்த நாதஸ்வர சக்ரவர்த்திகள் இறைவனை வணங்கி கச்சேரி செய்வார்கள் ( மல்லாரி ராகத்தில் போட்டிப்போட்டுக்கொண்டு பாடுவார்கள்ன்னு நினைக்கிறேன்!)
வீட்டுக்கு வந்து சாமி கிளம்பிவிட்டது என்று தகவல் சொன்னால் போதும் பரபரக்க ஆரம்பித்துவிடுவார் பாட்டி! இத்தனைக்கும் கோவிலிலிருந்து கிளம்பு உற்சவமூர்த்திகள் துலாகட்டம் சென்று சேர எப்படியும் சாயந்திரம் 5 மணியாகிவிடும்! வழி நெடுகிலும் நாதஸ்வர கச்சேரி தூள் கிளப்பிக்கொண்டிருக்கும்!
ஒரு வருடம் நானும் துலாகட்டத்தில் சாமி வருகையை எண்ணி காத்திருந்தப்போது, சுமார் 3 மணிக்கு முதலில் யானை வந்து சேர கூட்டம் பரபரப்பாகி ஆற்றை நிரப்பியது மக்கள் வெள்ளம் ஆனால் உற்சவ மூர்த்திகள் வந்து சேர்ந்ததோ 5 மணிக்கு மேல்தான்! அவ்ளோ நேரம் ஆச்சு கடைத்தெருவை கிராஸ் செய்து வர..!
ஒவ்வொரு வருடமும் இதே போன்ற நிகழ்வுதான் என்றாலும், இன்றும் கூட மிகுந்த உற்சாகத்தோடு கடைமுக உற்சவத்தில் ஆற்றில் மக்கள் வெள்ளம் கரை புரள்கிறது!
காவிரி அன்னை எம்மை காண வராமல் தவிக்கும் நாட்களில், வருணபகவான் வாரி வழங்குகிறான்
எம் மயிலாடுதுறை மக்களுக்கு வளங்களோடு நல் வாழ்க்கையையும் - மயூரநாதரின் கருணையால்...!
மயிலாடுதுறை துலாஉற்சவம் - கடைமுழுக்கு இன்னைக்கு!
படங்கள்- நன்றி sbalu
# ஆயில்யன்
Labels: ஆன்மீகம், மயிலாடுதுறை
Subscribe to:
Post Comments (Atom)
4 பேர் கமெண்டிட்டாங்க:
ஆகா! ஏதோ என்வீட்டு நிகழ்ச்சியினை காண்பது போல் இருந்தது நீங்க வர்ணிச்சது....
ஆமாம், துலா மாதம் முழுவதுமே காவேரி ஸ்னானம் சிறப்பு, ஏனெனில் இந்த மாதத்தில் கங்கையே காவிரிக்கு வருகிறாளாம் குளிக்க...
அதிலும் கடமுகமும், முடவன் முழுக்கும் (நாளை முடவன் முழூக்கு) சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.
காவிரிக் கரையோரங்களில் வாழ்பவர்கள் ஐப்பசி மாதம் காசி யாத்திரை செல்லமாட்டார்களாம் ஏனெனில் கங்கையே காவிரிக்கு வந்துவிடுவதால்...எனவே ஐப்பசி மாத காவேரி ஸ்னானம் என்பது கங்கா ஸ்னானத்தைவிட உயர்வாக சொல்லப் பட்டிருக்கிறது.
ஆயில்யா நானும் இது பற்றி பதிவு எழுதுகிறேன்!!நாளை நேரம் கிடைத்தால்!!
ஆயில்யன்
சுவராசியமான - பரிச்சயமான வட்டார பதிவு.
ஏனைய பதிவர்களுக்கு...?
'20 வருடம்' (பிறந்ததிலிருந்து!!) - 9 1/2 மைல் தொலைவில் வசித்திருந்தாலும் ஒரு தடவை கூட தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கூட போனதில்லை கடைமுழுகிற்கு. ( 10 மைலில் கோமதி தியேடர்...ஹி,ஹீ)
துலாகட்டத்திற்கு அருகிலிருக்கும் அம்மா மண்டபத்து படித்துறையில் ஒரு தடவை வழுக்கி விழ இருந்தது மட்டும் ஞாபகத்திலுள்ளது :)
மயூரா கஃபே யின் பளபளக்கும் பித்தளை தம்ளர்களும் மறந்து போகவில்லை ( circa 1972-76?)
கொஞ்சம் தெண்ணன்டை பக்கமாய் போனால், பயமூட்டும் கறார் ஜவுளி மேனேஜர் - ஒரு வடகரை பாய் முகமும் மறக்க முடியவில்லை ;))
வாசன் அண்ணே! அப்பப்ப வாங்க! உங்க அனுபவங்களை கொஞ்சம் பகிர்ந்துக்கொள்ளுங்க...!
Post a Comment