என் தலைவனுக்கு - எனது தன்னிலை வெளக்கம்..!


இதனால் சகலமானவர்களுக்கும் தெரி(அறி)விப்பது என்னவென்றால்.....!

என் தலைவன்...!

(அகில உலக ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றம்.)

என்னை மன்னிக்கவேண்டுகிறேன்...!!!

இப்ப இங்க வந்திருக்கும், இந்த விஷயம் புரியாதவங்களெல்லாம் ஏதோ வந்துட்ட்டோம், ஏதோ புரிஞ்ச மாதிரியே படிச்சு போவோம்னு ஆசைப்படாதீங்க! கொஞ்சமாவாச்சும் புரிஞ்சுக்கோங்க ஒ.கே..!

என் தலைவனால், மிகப் பிரும்மாண்டபமாக தொடங்கப்பட்ட நற்பனி(ணி) மன்றத்தில் சில கரைச்சல்கள் அல்லது குழப்பங்கள் இருப்பதாக சிலர் நினைத்துக்கொண்டிருக்கும், இத்தருணத்தில்,நான் இங்கு கூறிக்கொள்ள(கொல்ல) விரும்புவது ஒண்ணே ஒண்ணுதான்!

கொஞ்சம் அதீத ஆர்வத்தில் என் தலைவனின் தலையை விட, என் தலையை உயர்த்தி காட்டியதன் விளைவாய்,- எப்படி இவன் இப்படியெல்லாம் ஃபீல் பண்றான்னு - ரொம்ப ஃபீல் பண்ணி ஸ்ரேயா கோஷல் நேரிடையாக தொலைபேசிய விஷய்த்தை சொல்லாமல் இருந்துவிட்டேன் தலைமைக்கு..!

தப்புத்தான்!

அதனால் நான் ஏதோ எதிரணியாக மாறி அகில உலக ஸ்ரேயா நற்பனி(ணி) மன்றத்தை கைப்பற்ற போவதாக புரளி கிளம்பிய நிலையில்,தலைவனின் சந்தேகத்தை தீர்க்கும்பொருட்டும், தலைமையிடத்தில் எனது நம்பகத்தன்மையினை காட்டும், பொருட்டும் இவ்வறிக்கையை எல்லோருக்கும் தெரியும் வகையில் வெளியிட்டு என் தலைமையிடத்திடம் - பொதுவில் வைத்து - மன்னிப்பு கோருகிறேன்..!

என்றும் உற்ற தொண்டன(நா)ய் இருப்பேன் என்றும் இறுதி (ச்சே) உறுதி கூறுகிறேன்!

வாழ்க ஸ்ரேயா! வளர்க அமீரக மெயின் ஆபிஸ்!


இவண்!

பேரு கூட இனி போடாத உண்மைத்தொண்டன்.
அகில உலக ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றம்
கத்தாரிலிருந்து...!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//
வாழ்க ஸ்ரேயா! வளர்க அமீரக மெயின் ஆபிஸ்!
//
ரிப்பீட்டேய்!!

அகில உலக ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றம்
மங்களூர் கிளை...!

said...

//அகில உலக ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றம்
மங்களூர் கிளை...!/

என்னது மங்களூர் கிளையா?????

தலைவரிடமிருந்து இசைவு கிடைத்ததா?

தன்னிச்சையாக செய்ல்படவேண்டாம் ஸ்ரேயா புகழ் பாடி பதிவு'ங்கள் அப்போதுதான் மெயின் ஆபிஸ் கதவுகள் தொறக்கும்!

said...

உங்களின் ஆர்வத்தை கண்டு அகம் மகிழ்கிறேன் சிவா!

இன்னும் இதுபோல பல கிளைகள் உருவாக(க்க) வேண்டும் என்பதே அடியேனின் ஆர்வம்! அதுவே தலைவனுக்கும் மகிழ்ச்சி!!!