மயிலாடுதுறை பதிவர்கள் - என் மனதில்....! (பாகம் - 3 )

கொள்ளிடம் வாசன் எங்க ஊரு ஆளுதான் இவரும்னு சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமைதான்! 2003ல் வலைபதிவை துவங்கியவர்! உண்மையில் நான் கடந்த ஜுலை மாதத்தில்தான், தெரிந்துகொண்டேன்!அதுவும் அடிக்கடி தமிழ்மண உதவிக்கு சென்று வரும்போது கண்ணில் பட்ட இவரது பக்கத்துல, போய் பார்க்கும்போதுதான் தெரியும் சீனியர் பார்ட்டின்னு! (வலையுலகத்துக்குதாங்க!)

இதுவரைக்கும் நான் சொன்ன எங்க ஊருக்காரங்க திரும்பவும் தங்களோட பதிவுகளை துவக்கி கன் டினியூ பண்ணணும்ன்னு ரொம்ப ஆசையா கேட்டுக்குறேன்!
படிக்க ஆர்வமாகவும் இருக்கிறேன்!

அடுத்து அடிக்கடி வந்து அசத்திகொண்டிருக்கும் பதிவர்கள்

அபி அப்பா இவரைப்பத்தி நான் சொல்றதுக்கு என்னயிருக்கு! அதான் உலகமே சொல்லுதே! ஒவ்வொரு பதிவுக்கும் கலக்கல் காமெடி கன்பார்ம்ன்னு! மனுசன் பாருங்க பாரின்ல இருக்கோமென்னு கொஞ்சம் கூட கவலையே இல்லாதவரு மாதிரி ரகளை கட்டி அடிக்கிறாரு! (இந்த மாதிரி இருக்கறதுக்கும் சூழ்நிலை அமையணும்ங்க!)எப்படா இவரு போஸ்ட் வரும்னு நான் காத்திருக்க ஆரம்பிச்சது, இங்க நான் நெட் கனெக்ஷன் எடுத்த மே மாசத்திலேர்ந்து!படிக்கற வயசுல, நான் பரீட்சைக்கு படிக்கும்போதுதான் புல் நைட் ஸ்டடி பண்ணுவோம்! முதன் முதலா இருக்கற எல்லா பதிவுகளையும் படிக்கணும்னு பிலாக் ஸ்டடி பண்ணது இவர் பிலாக்தான்! குரங்கு ராதா மேட்டரும் சரி! (ஹைய்யா! எனக்கு தெரியுமே அந்த ராதாவ.!) இப்ப வந்த நீயெல்லாம் பொம்பளையாவும் சரி சூப்பரப்பு..!

உஷா ராமச்சந்திரன் அட இவங்க எங்க ஊரு மருமகப்பொண்ணுன்னு! இவங்க பதிவையும் + கமெண்ட்ஸ் வைச்சுத்தான் கண்டுபுடிச்சேன்ங்க! ரொம்ப காலமா, தமிழ் மணத்திலேயும், திண்ணையிலயும் எழுதிக்கிட்டு வர்றாங்க! அப்பப்ப நாட்ல நடக்கற விஷயங்கள பத்தி கொஞ்சம் நகைச்சுவை பூ தூவி பரிமாறிக்கிட்டிருந்தவங்க! இப்ப வர்ற பதிவெல்லாம் கிண்டல், நகைச்சுவைன்னு தூள் கிளப்ப ஆரம்பிச்சிருச்சி! அதுவும் இப்ப சமீபத்திய ஹிட் நட்சத்திரம் ஆனேனே! அப்புறம் பிலாக்கோபோபியா...! (ரொம்ப யோசிச்சிருப்பபங்க்ளோ!)
ஒரு தடவை எலுமிச்ச சாதம் பத்தி போட்ட பதிவ பார்த்து, நானும் செய்யலாம்ன்னு டிரைப்பண்ணி, புலியை பார்த்து பூனை சூடுப்போட்டுக்கிட்ட கதையாகிபோனேன்!

இவரின் கிழவி கதை படித்து நான் என் பாட்டியை நினைத்து அழுத நாட்கள்! இன்றும் அடிக்கடி என்னை அந்த கதை உள்ள பகுதிக்கு சென்றுகொண்டுதான் அழுதுகொண்டுதான் இருக்கிறேன்!

முத்துலெட்சுமி- எங்க ஊரு கவிதாயினி அக்கா முதல்ல பிடிச்சது அட்டகாசமான வரிகளில், தப்பு கணக்கிட்டு நாம் ஒன்று எதிர்பார்த்தால் ஒப்புமோ இயற்கை விதி? ஒழுங்கு அமைப்புக்கேற்றப்படி அப்போதைக்கு அப்போதே அளிக்கும் விளைவு! இதை உணராதவர்கள்தான் கன்னத்தில் கை வச்சுக்கிட்ட குந்தியிருப்பாங்கன்னு! கொடுக்கற மெசேஜ் சூப்பர்! கவிதைகளும் அதற்கேற்றார்போல படங்களும் நல்ல ரசனை அசத்துங்க அக்கா! அசத்துங்க ஊருக்கும் பெருமை சேருதுல..!!

இவர்களை தவிர்த்து இன்னும் சிலரில், ஆன்மீக உலகின் S.K , மற்றும் நடுவில லீவு விட்டு ரிடர்ன் ஆகியிருக்கும் சதுக்கபூதம் (இதுவரைக்கு பேர் காரணம் சொல்ல்வில்லைன்னு நினைக்கிறேன்!)

மயிலாடுதுறை மண்ணிலிருந்து ஒரு PUSH கொடுத்து வெளிநாடுகளுக்கு பறந்து, அங்கிருந்துகொண்டே மண்ணின் மணம் முகர்ந்துகொண்டிருக்கின்றனர்! அவர்களில் சிலரது பதிவுகளுக்கு சென்றதுண்டு, சில இப்பத்தான் தெரியுது! நான் ஜுனியர்தானே அதனால் சீனியர்கள தேடி தேடி கண்டுபிடிச்சு, வணக்கும் சொல்லிக்கிட்டிருக்கேன்! என் நல்ல நேரம் என்னைய யாரும் இதுவரைக்கு கூப்பிட்டு வச்சு ராக்கிங் பண்ணலைப்பா அதுவரைக்கும் எஸ்கேப்...!!!

குறிப்பு:-அமீரகத்து குசும்பனும் மயிலாடுதுறைன்னு சொன்னாலும், ஐ.டி புரூப் காமிச்சாத்தான், ஒத்துக்கொள்ளப்படும் என்ற என் பிலாக்விதிப்படி, அபி அப்பாவை தகுந்த ஆவணங்களை பர்சனலாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது! (அப்புறம் இருக்குடி ராசா உனக்கு! – குசும்பன் வாரமே கொண்டாடி இன்டீரியர் & எக்ஸ்டீரியர் பண்ணிடுவோம்...! )

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

"என் நல்ல நேரம் என்னைய யாரும் இதுவரைக்கு கூப்பிட்டு வச்சு ராக்கிங் பண்ணலைப்பா அதுவரைக்கும் எஸ்கேப்...!!!"

ஹலோ நாங்க எல்லாம் சேர்ந்து உங்களை ஸ்டார் ஆக்கி தினம் மாஞ்சு மாஞ்சு பதிவு போட வெச்சு இருக்கோமே அதுக்கு பேரு என்னா சொல்வீங்க...

புரியாத புள்ளையா இருக்கீங்களே!!!
இதுவே ராகிங் தான் ராசா!

said...

குறிப்பு:-அமீரகத்து குசும்பனும் மயிலாடுதுறைன்னு சொன்னாலும், ஐ.டி புரூப் காமிச்சாத்தான், ஒத்துக்கொள்ளப்படும்! என்ற என் பிலாக்விதிப்படி, அபி அப்பாவை தகுந்த ஆவணங்களை பர்சனலாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது!/////

அபி அப்பாவிடம் அல்ரெடி "கொடுக்க"வேண்டியர்தை "கொடுத்து"விட்டேன்,கேட்டு சரி பார்த்துக்கவும்:))))


(அப்புறம் இருக்குடி ராசா உனக்கு! – குசும்பன் வாரமே கொண்டாடி இன்டீரியர் & எக்ஸ்டீரியர் பண்ணிடுவோம்...! )

ஹி ஹி ஹி இன்னும் நீங்க நான் போட்ட அந்த கமெண்டை மறக்கலையா? ஹி ஹி ஹி:)
விட்ட ரூம் போட்டு அழுவீங்க போல...

said...

அபி அப்பா இல்லாம மாயவரம் பதிவர்கள் பாகத்தை முடிச்சிடுவீங்களோனு நினைச்சேன். நல்ல வேளை தப்பிச்சிட்டீங்க.

said...

மறக்க முடியுமாஆஆஆ

said...

ஆயில்யன், மருமகளுக்கும் இட ஒதுக்கீடு செஞ்சதுக்கு நன்றி. என் அப்பாவின் பெயர் ராமசந்திரன். அதனால் இன்ஷியலை விரித்து ராமசந்திரன் உஷா ஆகிவிட்டேன் (அதனால் ராமசந்திரன், உஷாவுக்கு முன்னால் வரும்) கிழவி கதையை ரசித்ததற்கு நன்றி. இந்த லிங்க, படித்துப்பாருங்கள். ஒரு கிழவரின் கதை. வெற்றி என்ற பெயரில் கணையாழியில் வந்தது.
http://nunippul.blogspot.com/2006/01/2006.html

said...

நன்றி ஆயில்யன்..யாராவது அந்த சைடுல போட்ட பாட்டை ரசிப்பாங்களான்னு யோசிக்கிறதுண்டு அந்த கவலை தீர்ந்தது இன்னிக்கு...
எங்கருந்து பிடிச்சேன்னு கூட மற்ந்து போச்சு அதோட கருத்து சூப்பரா இருக்கவே ப்ளாக்ல போட்டு வச்சேன்..

said...

யப்பா... எல்லா மாயவரத்துக்காரங்களும் சேந்து கும்மியடிக்கிறிங்களா? அடிங்க, அடிங்க.காளியாக்குடிக்கு இனி மவுசு ஏறிடும்னு நெனக்கிறேன். அந்தப்பக்கம் போய் ரொம்பவே வருசமாய்டுச்சி. பஸ் ஸ்டாண்ட கொஞ்சம் நல்லாக்கனாங்கனா தேவல. சென்னை விமான நிலையத்திலேரந்து ஊருக்குப் போனா மாயவரத்துல ஒரு காப்பி அடிச்சிட்டுத்தான் கிளம்புரது. திருச்சி போக ஆரம்பிச்சதிலிருந்து அது மிஸ் ஆய்டுச்சி.

said...

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். சதுக்க பூதம் என்பது சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு பாத்திரம். தவறு செய்பவர்களை தண்டிக்கும் பூதம் அது. இன்னும் பல்கலைகழக நினைவுகளை பற்றி பதிவு எழுதவில்லையா?