அரசியல் இட ஒதுக்கீடு - பெண்களுக்கு சுத்த வேஸ்ட்டு!!??

33 சதவீகித இடஒதுக்கிட்டின் அடிப்படையில் கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்கள்,மேயர் ஆரம்பித்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் வரை உள்ள பெண் உறுப்பினர்கள் தங்களது வழக்கமான பணிகளை வீட்டில் இருந்து கவனித்துக்கொள்ள, கணவன்மார்கள் தான் கவர்ன்மெண்ட்க்கு மக்களின் பிரதிநிதியாக பணி ஆற்றுகிறார் அரசு அலுவலங்களில், யாரும் கேள்வி கேட்பது கிடையாது! (எந்த லட்சணத்தில் அலுவலங்கள் இருக்குங்கறது நமக்கு தெரிஞ்ச விஷயம்தானே!)

மக்கள் பிரச்சனைகளில் பெண் தலைவர்கள் களம் இறங்கி பணியாற்ற வரும் தயக்கம் என்னதான் படித்திருந்தாலும் கணவர் பேச்சுக்கு கட்டுப்பட்ட வாழ்கை (சார் சொல்றபடி செஞ்சுடுங்க..!) குடும்பத்தை கவனிப்பதுதான் முக்கியம் மற்றவை பிறகுதான் – நல்லதுதான் போட்டியிடுவதற்கு முன்பே அல்லவா யோசித்திருக்கவேண்டும்

அலுவலகங்களில் யாரும் இதை பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை!

உண்மையாத்தான் சொல்றேன் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து, பஞ்சாயத்துலேர்ந்து மேயர் வரைக்கும்,எம்.எல்.ஏவிலேருந்து மினிஸ்டர் வரைக்கும் பதவி கொடுக்கறது சுத்த வேஸ்ட்!

சும்மா..! ஒப்புக்கு சப்பாணி மாதிரியான கேரக்டர்ல நடிக்கறதுக்கு எதுக்குங்க இட ஒதுக்கீடு?

நீங்களே பாருங்க! மினிஸ்டரோட அவரு வீட்டுக்காரருக்குத்தான் எங்கயும் மரியாதை! அவர் சொல்றத கேட்டு தலைமை செய்லகத்திலேர்ந்து, கீழ் மட்டத்தில வரைக்கும் தலையாட்டுற அரசு அலுவலர்கள்! நீ யாருய்யான்னு? கேட்க ஒரு நாதி கிடையாது? ஐ.ஏ.எஸ்களும் அடங்கித்தான் கிடக்குறாங்க!

பொம்பளைய செலக்ட் பண்ணா கொஞ்சம் நல்லவிதமா ஊருக்கு நன்மைய செய்வாங்கன்னுத்தான் நினைக்கறாங்க மக்கள் ஆனா நடக்கறது – எல்லாத்தையும் நடத்திகாட்றது அந்தம்மாவேட வீட்டுக்காரங்கதான்! அந்தம்மா எப்போதும்போல வீட்டு வேலையில கவனமா இருப்பாங்க!

அப்புறம் எதுக்கு வேஸ்ட்டா பெண்களுக்குன்னு தனியா ஒரு இட ஒதுக்கீடு!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இது சும்மா காரசாரமான விவாதத்தை தொடக்க முயற்சியா இல்ல உண்மையிலேயே உங்க கருத்தா!!!???
ஆயிரக்கணக்கான வருஷம் உள்ளேயே இருந்தவங்க வெளில வரணும்னா கொஞ்ச நாள் ஆகுங்க. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாதான் இருக்கணும். எடுத்தோம் கவுத்தோம்னு உடனே இழுத்து மூடிட முடியுமா சொல்லுங்க.

said...

//கையேடு said... //
காரசாரமான மேட்ட்ர்லெல்லாம் ஒண்ணுமில்லைங்க! இந்த போட்டோ கிராமசபா கூட்டத்தப்ப எடுத்தது எங்க ஊர்லதான்!

அங்க இப்ப பெண் பிரசிடெண்ட் ஆனா எல்லா அலுவல்களும் அவங்க வீட்டுக்காரர்தான் நீங்களே பாருங்களேன் போட்டோவ...!!!!