காலை வேளைகளில் சின்னகடைத்தெருவில் அந்த பகுதியை கடக்கும் போது எப்போதும் கேட்கும் மனத்துகினிய அந்த நாதஸ்வரம்+தவில் ஒசை! மங்கல ஒசை!
இந்த நாதஸ்வர ஒசை பொறந்த இடம்னு நம்ம பழைய தஞ்சை மாவட்டத்ததான் சொல்லணும்!. இந்த வாத்தியத்தில் அதிக பிரபலமானதும் எங்க மாவட்டத்துக்காரங்கதான்!
திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்ரமணியம் பிள்ளை இவர்களின் சிஷ்ய கோடிகள்தான் மாவட்டம் ஃபுல்லா இறைஞ்சு + நிறைஞ்சு இருக்கறது!
அதுல, எங்க ஊரு ஸ்பெஷல் பார்ட்டிகள்ன்னு சொன்னா,
"செம்பனார் கோவில் சகோதரர்கள்" என்றழைக்கப்ப்டும் எஸ்.ஆர்,ஜி.குரூப்ஸ் அல்லது எஸ்.ஆர்.குரூப்! ரெண்டு குரூப்புமே அண்ணன் தம்பி வழிமுறைதான்!
இந்த தவில் நாதஸ்வரம் விஷயங்களெல்லாம் எதாவது கல்யாணம், வீட்டு விசேஷங்கள் இல்லாட்டி கோவில் திருவிழாக்கள்ன்னுதான் பார்த்து பழக்கம்! அது மாதிரி அடிக்கடி, பார்த்து தெரிஞ்ச முகங்களானவங்கதான் இவங்க!
இப்போதைக்கு அஞ்சாவது தலைமுறை ஆளுங்க வாசிச்சிக்கிட்டிருக்காங்க!
பிரபலமான எல்லா நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் தவில் வித்வான்களோடு இணைந்து பல கச்சேரிகளை கலக்கியவர்கள்!
நாலவது தலைமுறை சம்பந்தம் & ராஜண்ணா பிரதர்ஸ்க்கிட்ட, முறைப்படி கலை கற்றுக்கொண்டவர்க்ள் இப்போ வெவ்வேறு இடங்களில் தங்கள் திறமையில், ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள்!
வருடந்தோறும் விமரிசையாக கொண்டாடப்படும் ஐப்பசி விழாவின், இறுதி வாரத்தில் நடக்கும் ஊஞ்சல் உற்சவம், திருத்தேர் விழாக்களில் இவர்கள்தான் ஸ்பெஷல்!
ஐப்பசி கடைசி நாள் கடைமுழுக்கு அன்று, பெரிய கோவிலில் காலைல 10 மணிக்கு ஆரம்பிக்கும், சுவாமி ஊர்வலத்தில், வெளியூர்களிலிருந்து வரும் மற்ற நாதஸ்வர வித்வான்களுடன் சேர்ந்து, போட்டிப்போட்டுக்கொண்டு பாடும் மல்லாரி ராகத்திற்கு கூடும் கூட்டத்தை காண, அட..! அடுத்த வாரம் நீங்க நேர்லயே போய்த்தான் பாருங்களேன்..!
சுவாமி ஊர்வலம் கடைவீதிகளை வலம் வந்து மாலையில் 4 மணிக்கு இவர்களின் தீர்த்த மல்லாரியுடன் தீர்த்தம் கொடுத்து துலாகட்டத்தில முடியும்!
அதோ போல தருமபுர ஆதீனத்தில் நடக்கும் குருபூசை விழாவிலும் இவர்கள்தான் பிரதான கலைஞர்கள்!
தம் உயிர்காற்றை உருக்கி, ஊதி, அதன் மூலம் தம் சந்ததிக்கு உணவிடும் இவர்களுக்கும்,
இவர்களுக்கு துணை நின்று, ஊருக்கே மங்கல ஒசை முழங்கும் அந்த நாதஸ்வரத்துக்கும்,
நாம் மரியாதை செய்வோம்..!
மங்கல ஒசை எங்கும் முழங்கவும் செய்வோம்..!
LINK TO THIS MATTER - என்னோட கணக்குப்படி, அபி அப்பா வீட்டுக்கும் சில வீடுகள் தள்ளி, இவங்க் வீடு இருக்குன்னு நினைக்கிறேன்!
அபி அப்பா மேலதிக தகவல்கள் உண்டா...????
1 பேர் கமெண்டிட்டாங்க:
அட,நாதசுரம் பற்றிய எழுத்தா? வாசிக்க காதில் ஒலிக்கிறது.
எனக்கு மிகப் பிடித்த வாத்தியம்.
எங்கள் ஈழ தவில் வித்துவான் மறைந்த தட்சணாமூர்த்தி பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா??
என் மிக நீண்ட ஈழ நாதசுர தவில் வித்துவான்கள் பற்றியது, இங்கே படிக்கலாம்.http://koodal1.blogspot.com/2006/03/156.html
Post a Comment