அதிகாலையில் எங்கோ வேலைக்கு செல்லும் அந்த வெள்ளைச்சட்டை வெள்ளை பேண்ட்க்காரர்...!
அவசரரவசரமாக ஆட்டோவை நிறுத்தி அமர்ந்த இடத்திலிருந்தே விழிபட்டு செல்லும் அந்த ஆட்டோக்காரன்..!
பக்திமணம் கமழ் நெற்றி நிறைய விபூதி பூசி வந்து மெதுவாக கும்பிட்டு செல்லும் அந்த கார் டிரைவர்..!
மிக்க பொறுமையாக ஒவ்வொரு இடத்திலும் விளக்கேற்றி வழிபாடு நடத்தி செல்லும் அந்த யூனியன் இன்ஜினியர்!
தினந்தோறும் காலை வந்து கோவிலை கழுவி விட்டுச்செல்லும்,அந்த வயதான அம்மா..!
கம்பீரமான குரலில் பாடியபடியே வரும் அந்த ஊனமுற்ற மனிதர்..!
கோவில் வாசலில் கடை போட்டாலும்,முதலில் வந்து ஒரு பந்து பூவை சாத்திச்செல்லும் அந்த பூக்காரம்மா!
என வந்துசெல்லும், ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கும்போது, ஒரு வேலையுமின்றி, ஊர் சுத்திவரும் நம்க்கும் எதாவது நல்லது நடக்கும் என்று ஆரம்பித்ததுதான் பிரசன்ன மாரியம்மன் தரிசனம் – தினந்தோறும்..! – நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு...!
பிரசன்ன மாரியம்மன் @ மயிலாடுதுறை
# ஆயில்யன்
Labels: ஆயில்யன், ஆன்மீகம், நினைவுகளில்..
Subscribe to:
Post Comments (Atom)
3 பேர் கமெண்டிட்டாங்க:
படத்தோட பதிவுபோட்டதுக்கு ரொம்ப நன்றி ஆயில்யன்..
அங்க சைடுல ஒரு பேச்சியம்மன் சாமி இருக்குமே ... சின்னதுல ரொம்ப பயம் அந்த சாமி பாத்து ...ஏன்னு தெரியாது.. அதைப்பத்தி எதோ சொல்லி இருக்கனும் யாராச்சும்.. மறந்துடுச்சு..
கூட்டமா இருக்கும் சமயம் சாமி ய நினைச்சு வெளிய செருப்புக்கடைக்கு முன்னாலேயே ஒரு கும்பிடு போட்டு போனது உண்டு.
ஆயில்யன்,
மயிலாடுதுறை பதிவர்கள் பத்தி எழுதும்போது நம்ம ஊரு முத்துலட்சுமி பத்தி எழுதினீங்களா? இல்ல மறந்துட்டுதா?
அப்புறம நம்ம உஷா ராமச்ந்த்ரன்?
அன்புடன்,
சீமாச்சு..
சீமாச்சு அண்ணே பார்ட் 3ல அவங்கள்லெல்லாம் உங்களை பார்ப்பதற்கு காத்திக்கிட்டிருக்காங்க
Post a Comment