வைத்தா டீ ஸ்டால் - மயிலாடுதுறை

மணிக்கூண்டு பார்க்கத பொண்ணும்;

வைத்தா கடை டீ குடிக்காத ஆணும்;

மயிலாடுதுறையில இருந்ததா சரித்திரமே இல்லைங்க!

அப்படியொரு பிரபலமான கடை!

இத்தனைக்கும் பத்து பேர் ஒண்ணா சேர்ந்து போனா அப்புறம் வர்றவங்க லைன் கட்டி ரோட்லதான் நிக்கணும்!

அந்த மாதிரியான இடம்தான் இருந்தாலும், டெயிலி வந்து போற கூட்டம் எண்ண முடியாது!

எனக்கு வைத்தா கடை அறிமுகமானது 1985களில் வெளியூருக்கு (வைத்தீஸ்வரன்கோவிலுக்குத்தாங்க!) போய் வரும்போதெல்லாம் சைக்கிள் ஸ்டாண்ட கணக்கு பண்ணி எங்க அப்ஸ் சுருக்கா இங்கயே காபி அல்லது டீ வாங்கி கொடுத்து அழைச்சிட்டு வருவாரு!

கொஞ்சம் வருசம் கழிச்சு நாமளே தனியா போக ஆரம்பிச்சாச்சு!

காலேஜ் பரீட்சைக்கு படிக்கறதுக்குன்னு லீவு போட்டு வெளிய எங்கயும் போகாம, வுட்ல உக்காந்து படிச்சு சாயங்காலம் 6.00 மணிக்கு வைத்தாவுக்கு போய் சூடா ஸ்ட்ராங் டீ சாப்பிட்டு வந்தா அப்புறம் போகும் டைம் 12.00 வரைக்கும்!

இந்த டெக்னிக் என் பிரதர்கிட்டயிருந்து நான் சுட்டது! அவன் படிக்கற டைம்ல திடீருன்னு பத்துமணிக்கு கதவு திறக்கிற சத்தம் கேக்கும் என்னாடா பண்றான்னு ஒருநாள் கேக்கறச்சா "சைக்கிள எடுத்துக்கிட்டு தடதடன்னு மிதிச்சிக்கிட்டு போன பாதிதூக்கம் போயிடும் அப்புறம் ஒரு டீ குடிச்சிட்டு திரும்பவந்தா விடிய விடிய படிக்கலாம்ன்னு, சென்னான்!

படிக்கற காலத்துல இப்படின்னா! கொஞ்ச காலம் ஊர்ல வேலை பார்க்கும்போது வைத்தா டீக்கடைக்கும் எனக்கும் இன்னும் கொஞ்சம் நெருக்கம் அதிகமாயி,காலையில ஒரு விசிட், பதினொரு மணிக்கு ஒரு விசிட் மதியத்தில எப்போதாவது சாய்ங்காலம் ஒரு விசிட்ன்னு ஆகிப்போச்சு! அதுவும் சும்மா தனியாயெல்லாம் போயி நின்னு குடிக்கறது கிடையாது! பிரெண்ட்ஸ் ஒவ்வொரு மூலையில இருப்பாங்க ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும் இரண்டரை ரூபா டீக்கு cost benefit ratio போட்டு பார்க்காமலேயே,பெட்ரோல் செலவுப்பண்ணிக்கிட்டு வருவாங்க!

டீக்கடையுடனான அனுபங்கள் தொடரும்....!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

\\வைத்தா கடை டீ குடிக்காத ஆணும்;//

ஆமாமா நான் எல்லாம் அங்க டீ குடிச்சதே இல்லை..

said...

முத்துலட்சுமி - மணிக்கூண்டு பாத்திட்டீங்களா

ம்ம்ம் - நாங்க சாயந்தரம் டூரிங் தியேட்டெர்லே மாலைக்காட்சி பாத்துட்டு, ராத்ரி 10 மணிக்கு படிக்க ஆரம்பிச்சா ஒரு 2 மணி போலெ காபி/டீ குடிக்கப் போவோம். அப்புறம் 4 மணிக்கெல்லாம் படுத்துடுவோம். அதெல்லாம் இப்போ முடியுமா ??

said...

சூப்பர் ஆயில்யன்

மயிலாடுதுறை சிவா...