திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்தில் தோன்றுகிற கார்த்திகை ஜோதிதான் பிரபஞ்சத்திற்கே அக்னி சக்தியை அளிக்கிறது. மேலும் வானில் திகழ்கிற கோடானு கோடி நட்சத்திரங்களும் நம் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும், நாம் அறிந்தும் அறியாமலும் எண்ணற்ற கோள்களுக்கும் ஒளி சக்தியை அளிப்பது திருவண்ணாமலை கார்த்திகை தீப ஜோதிதான். திருவண்ணாமலை ஜோதிக்கு நிகர் வேறெதுவும் இல்லை. பஞ்சபூத லிங்கத்தில் அக்னி லிங்கமாய் முதன்மையாய் விளங்குவது திருவண்ணாமலையாம் அருணாசலமே. திருக்கார்த்திகை தீபம் அண்ட சராசரங்களுக்குமே, ஒளிவிளக்கான திருவண்ணாமலை ஜோதி ஏற்றப்படுகிறது.
இந்த தீப ஜோதி தரிசனத்தைப் பார்ப்பவர்கள் கோடானு கோடி புண்ணியத்தைப் பெறுவதுடன் அண்ணாமலையாரின் அருள் பெற்று அனைத்துத் துன்பங்களும் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள். கார்த்திகை மகா தீபத்தைக் காண, மாநில மக்கள், உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டவர்களும் வருகின்றனர். இந்தக் கண்கொள்ளா நிகழ்ச்சிகள் வானொலி மூலமும், தொலைக்காட்சி மூலமும் உலகெங்கும் ஒலி ஒளிபரப்பாகின்றன.
ஆண்டுதோறும் தீபத் திருவிழாவின் பத்தாவது நாள் விழாவாக அதிகாலை அருணாசலேசுவரர் கோயிலில் பரணி தீபமும், பிரதோஷ காலத்தில் அர்த்தநாரீஸ்வர மூர்த்தி எழுந்தருளிக் காட்சி கொடுக்கும் நேரத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.இந்த நேரத்தில் வீதியில், வீட்டில் மலையைச் சுற்றியுள்ள 20 கி. மீ. தொலைவில் உள்ள கிராமங்களிலும், பட்டிதொட்டிகளிலும், வீடு, கங்கைக் கிணறு, மாடம், நிலம் என அனைத்து இடங்களிலும் தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள். "அண்ணாமலைக்கு அரோகரா' என அனைவரும் வேண்டுவார்கள்.
நன்றி - சிஃபி தமிழ்
இனிய பக்தி நிறைந்த நன் நாளில்,
தமிழும்,பக்தியும் இசையோடு சேர்ந்த இனிய குரலில், நித்யஸ்ரீ பாடலில்..!
இறைவனை துதிப்போம்
இன்பம் துய்ப்போம்!
அண்ணாமலைக்கு அரோகரா...!
# ஆயில்யன்
Labels: ஆன்மீகம்
Subscribe to:
Post Comments (Atom)
3 பேர் கமெண்டிட்டாங்க:
//மேலும் வானில் திகழ்கிற கோடானு கோடி நட்சத்திரங்களும் நம் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும், நாம் அறிந்தும் அறியாமலும் எண்ணற்ற கோள்களுக்கும் ஒளி சக்தியை அளிப்பது திருவண்ணாமலை கார்த்திகை தீப ஜோதிதான்.//
இந்தக் கூற்றை நீங்க நம்புறீங்களா? யாரோ அரைகுறை எழுதினதைக் கேள்வி இல்லாமல் உங்களால் அப்படியே எடுத்துப் போட்டுவிட எப்படி முடிகிறது?
//சுந்தரவடிவேல் said... //
இதெல்லாம் உருவகப்படுத்துதல் மேட்டர்தான் டக்குன்னு புரியறமாதிரி சொல்லணும்னா
பில்ட்-அப் மேட்டர்கள்தான்!+
சரி இத விடுங்க! நித்யஸ்ரீ பாட்டு எப்படி இருக்கு?
ஆயில்யன் வள்ளுவம் பக்கம் வாருங்களேன் அண்ணாமலையாரை ஆராதித்திருக்கிறேன்....
Post a Comment