துலா ஸ்பெஷல் – கடைமுழுக்கு கடைத்தெரு

தெருவின் பாதி தூரத்தில் ஆரம்பித்து முடிவு வரை சுமாராக 500 மீ தொலைவுக்கு இரு பக்கமும் கீற்றுக்களால் தடுக்கப்பட்ட தற்காலிக கடைகள் முளைக்க் ஆரம்பித்துவிடும் 15 நாட்களுக்கு முன்பே!

எல்லா விளையாட்டு சாதனங்கள் அழகு பொருட்கள் இப்படியாக எல்லா பொருட்களும் வந்து குவிந்துவிடும்! தினமும் சாயங்காலங்களில் பலரது வீடுகளிலும் கடைமுழுக்கு கடைக்கு போயிட்டு வர்றேன் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்!

ஊருக்கே அதான் பெரிய திருவிழா நிறைய கூட்டம் கூடும் கடைவீதிகள்! இத்தனைக்கும் திருவிழாவின் மெயின் ஸ்பாட் துலா கட்டத்தையும் காவிரியையும் காணாத கூட்டம் கடைகளில் பேரங்களில் காலம் கழித்துக்கொண்டிருக்கும்!

பெரிய ராட்சத சைஸ் ராட்டினங்கள் (10 – 15 அடி இருக்கும் அதான் எங்க ஊர்ல பெரிய ராட்டினம்!) துப்பாக்கி வைச்சுக்கிட்டு பலூன் சுடறது, சோப்பு கரைசல்ல முட்டை விடறதுன்னு, எல்லாம் மக்களும் அலைந்துக்கொண்டிருக்கும் நாட்கள்தான் இந்த மாசத்தில் - மயிலாடுதுறையில்!

வருட வருடம் எதாவது ஸ்பெஷல் பொருட்களை வாங்க முடிவெடுத்து அதற்க்காக நாயாக அலைந்து திரிவதுதான் எனது வழக்கம்! பின்ன என்னாங்க அதற்கு முந்தைய வருஷம் கடைமுழுக்கு கடைகயில எதாவது வித்தியாசமான பொருள் பக்கத்து வீட்டு பையன் வாங்கியிருப்பான்! (அத என்கிட்ட கொண்டு வந்து காமிச்சுட்டுத்தான் மத்த வேலையே பார்க்குற கேரக்டர் அவனுக்கு!? ) அந்த பொருள் என் மனசில பதிஞ்சு அதப்பத்தி வீட்டுக்கு வேண்டுகோள் விடுத்து அது ஒ.கே ஆகறப்ப அந்த பொருளை அடுத்து வர்ற கடை முழுக்குலதானே வாங்க முடியும்! – அதுவும் கிடைச்சாத்தான்?!

அபபடித்தான் ஒரு பொருள் வாங்க ரொம்ப பிரயத்தனப்பட்டு வாங்கி வீட்டுக்கு எடுத்துபோறதுக்குள்ள அக்குவேறு ஆணி வேற வந்துடுச்சி! ரொம்ப பீல் பண்ணுனேன்....!!!

பின்னாளில் அலுவலில் இருக்கும்போது காவிரி பிரியிற ஆறுபாதி வாய்க்காலோட தூரம் அளக்கணும்ப்பா போயிட்டு வான்னு சொன்ன அதிகாரி மீது வந்த கோபத்தை விட அந்த கருவி மீது வந்த வெறுப்புத்தான் அதிகம்..! முன்பு நான் எதுக்கு ஆசைப்பட்டேனோ அதையே வெறுக்கவும் வேண்டிய சூழலை உண்டாக்கிய உபகரணம்! – இதான்!


Photo Sharing and Video Hosting at Photobucket

(கவர்ன்மெண்ட் கண்காட்சி போல ஒரு வட்டத்துக்குள்ளயே சுத்தற இடத்துக்குள் கடைமுழுக்கு கடைகளை அடக்கிவிட்டது அரசு– இது இப்போதைய நிலைமை!)

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அப்ப முன்ன மாதிரி வரிசையா இல்லையா இப்பல்லாம் .. அடப்பாவமே.. பட்ஜெட் போட்டு நானும் தம்பியும் எல்லாம் வாங்குவோம்..பில்டிங் செட்.. சைனீஸ் செக்கர்ஸ்.. தோடு பாசி வளையல்..
வட்டவட்டமாய் பென்சில் பேனாவால் விதவிதமா கோலாம்போடுமே அது பேரு தெரியல.. அய்யோ முழுக்குக்கடை முழுக்குக்கடைன்னு என்ன கொண்டாட்டமா இருப்போம் அப்பல்லாம்.. ஜாலியா இருக்கும்.. ஹ்ம்..

said...

ஆமாம் அக்கா!

இப்ப பியர்லெஸ் தியேட்டர் பக்கத்துல உள்ள இடத்துலதான் கடையெல்லாம்

said...

//வட்டவட்டமாய் பென்சில் பேனாவால் விதவிதமா கோலாம்போடுமே அது பேரு தெரியல//

எனக்கு பேரு தெரியலை ஆனா அத் வைச்சுத்தான் படிக்குற புக்கு புல்லா பூ டிசைன் போட்ட்டு விளையாடுவோம் நாங்க

said...

டேய் பசங்களா! அக்கா, தம்பி எல்லாம் என்னை வெறுப்பேதறது மாதிரியே இருக்குப்பா எனக்கு:-((