சஷடி ஸ்பெஷல் - திருவிடைக்கழி முருகன் கோவில்

மயிலாடுதுறையிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் 9 கி.மீ செம்பனார்கோவிலிலிருந்து பிரியும் மேமாத்தூர் சாலையில் சென்றால் 3 கி.மீ இடது புறம் திரும்பி மஞ்சளாற்றின் கரைகளில் அழகான தார்சாலையில் வளைவு நெளிவுகளில் வளைந்து நெளிந்து,கொண்டேஏஏஏஎ சென்றால், சரியாக 12வது கிமீ ஒரு கோபுரம் அகலத்தில் சிறிதாக உயரமாக தெரியும்!அங்குதான் திருப்புகழ் பாடப்பெற்ற இறைவன் முருகன் காட்சி + அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார் - (நேரடியாக திருக்கடையூர் வந்து, அங்கிருந்து தில்லையாடி வந்தால் எளிதாக இருந்தாலும் அதைவிட இந்த ரூட் எதுக்குன்னா? வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சாலையில் வருவதென்பது எவ்ளோ சுகமானதுன்னு அனுபவிச்சு பார்க்கத்தான்...!) தேவாரப்பாடல்களில் திருவிசைப்பாவில் பாடல் பெற்ற ஸ்தல்ம் கூடுதலாக அருணகிரிநாதரால் முருகன் அருளை பெற, திருப்புகழினால் பாடப்பெற்ற இடமும் கூட இது! புராணத்தில் சூரன் மகன் இரண்யாசுரனை அட்டாக் செய்த இடமாக கூறப்படுகிறது!

ஸ்தல் விருட்சமாக, வாசம் தரும் குரா மலர்களை கொண்ட குரா மரம் ஸ்தல விருட்சமாக அமைந்துள்ளது.

தைப்பூசத்திற்கு, சுவாமிமலையிலிருந்து நடைப்பயணமாக பக்தர்கள் திருவிடைக்கழி வருவது பெரிய விழாவாக நடைபெறுகிறது! அது மட்டுமல்லாமல் சஷ்டி விழாவும், சுற்றுபுற கிராம மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூட இங்கு வெகு விமரிசையாக நடைப்பெற்றுவருகிறது!
முன்பு பஸ் வசதி ரொம்ப குறைவாக இருந்து, கால நேரம் தெரியாமல் காத்திருந்த காலங்கள் மனதில் நினைவாடுகின்றன! அந்த பிரச்சனைகள் இப்போது இல்லவே இல்லை அடுத்தடுத்து பஸ்கள் அல்லது மினி பேருந்துகளால் அமர்க்களப்படுகின்றது!

பெரும்பாலும் திருக்கடையூர் கோவிலை தரிசிக்க வருபவர்கள் இந்த கோவிலை தவறவிடுவதில்லை! இந்த கோவில் தெற்குவீதி (மெயின் ரோடும் அதான்) பார்த்தால் தில்லையாடி சிவன் கோவில் அதற்குபக்கத்திலேயே தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம் வாசலில் காந்தி சிலை!

இங்கு சென்றால், கண்டிப்பாக ஒரு மனநிம்மதியுடன் திரும்பலாம் அது உறுதி!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மூன்று வருடங்கள் முன்பு சென்றது நினைவில் வருகிறது. அழகான படத்துக்கு நன்றி.

said...

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி - எதிர்பார்த்திருந்தேன் முன்பே...!!!

சஷ்டி நாளில் நான் சென்ற ஆனால் அதிகம் செய்திகளில் இடம்பெறாத தலங்களை பற்றி எழுதும் ஒர் ஆர்வம்தான் இந்த பதிவு படங்கள் tamil virutual university யிலிருந்து எடுத்து போட்டிருக்கிறேன்

said...

அருமையான பதிவு. முருகன் படம் வெளியிட்டதற்கு மிக்க நன்றி.

அருணகிரிநாதரால் பாடப்பட்ட ஸதலம் என்றீர்கள்... கோவிலில் எழுந்தருளியுள்ள முருகபெருமான் குறித்த திருப்புகழ் பாடல் கைவசம் உள்ளதா...?

said...

நன்றி இளவரசன்!

பாடல் 792 ( திருவிடைக்கழி )

ராகம் - ....; தாளம் -

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான


அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத்
தடர்பொய்க் குருதிக் ...... குடில்பேணா

அவலக் கவலைச் சவலைக் கலைகற்
றதனிற் பொருள்சற் ...... றறியாதே

குணகித் தனகிக் கனலொத் துருகிக்
குலவிக் கலவிக் ...... கொடியார்தங்

கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற்
குலைபட் டலையக் ...... கடவேனோ

தினைவித் தினநற் புனமுற் றகுறத்
திருவைப் புணர்பொற் ...... புயவீரா

தெளியத் தெளியப் பவளச் சடிலச்
சிவனுக் கொருசொற் ...... பகர்வோனே

கனகச் சிகரக் குலவெற் புருவக்
கறுவிப் பொருகைக் ...... கதிர்வேலா

கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக்
கழியிற் குமரப் ...... பெருமாளே.

said...

எனக்கு மிக பிடித்த பாடல் இது


பாடல் 798 ( திருவிடைக்கழி )

தனத்த தானன தனதன ...... தனதான

மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே

வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே

கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே

கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும்

தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா

சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா

திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே

திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே.

said...

NOW MINI BUS AVAILABLE FORM SEMBAI.