தேசிய நெடுஞ்சாலைகள் - போகும் பாதை தெரியவில்லை!



தங்க நாற்கர சாலை இந்தியாவை இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் இணைக்க ஆரம்பிக்கப்பட்ட பெரிய தேசிய நெடுஞ்சாலைதிட்டம்! தொழில்வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கான அடிப்படை கட்டுமான வசதியினை தருவதே இதன் அம்சம்! திட்டம் துவங்கி, நெடுஞ்சாலை நடைப்போட்டுக்கொண்டிருக்கிறது

ஆம்! மிக மெதுவாக..!

எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆரம்பித்து அதே வேகத்தில் முடித்திருந்தால், பல கோடிகள் லாபமாகியிருக்ககூட்டும் cost benefit ratioவின் படி! ஆனால் அப்படி நடந்தால் நமக்கும் மத்தவங்க்ளுக்கும் என்ன வித்யாசம்ன்னு நினைச்சிருப்பாங்க போல அலுவலர்கள்! மெல்லப்போ மெல்லப்போவென்று பாடிக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறார்கள்!

தங்க நாற்கர திட்டம் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைத்துறையால் செய்ல படுத்தப்பட்ட மற்ற நெடுஞ்சாலைகள் திட்டம் அனைத்துமே இந்த நிலையில்தான் உள்ளது..!.

நிலம் ஒதுக்குவதில் பிரச்சனை;


நிலம் அப்புறப்படுத்துவதில் பிரச்சனை ;


வன இலாகவின் அனுமதி பெறுவதில் பிரச்சனை ;


ரயில்வேயின் அனுமதி பெறுவதி பிரச்சனை,


இதையெல்லாம் கடந்து வந்தால், காண்டிரக்டர்களை தேர்வு செய்வதில் குழப்பங்கள்,அப்படியே தேர்வு செய்தாலும் அவர்களை நீக்கவேண்டிய சூழல் என வரிசையாக காரணங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை அடுக்கிக்கொண்டே சென்றாலும் தீர்வுக்கான வழிவகைகள் பற்றி ஆராயாப்படாமல் வழக்கமான அலுவல்களோடே இயங்கிகொண்டிருக்கின்றன!

இந்த வருடத்தில் தோராயமாக 33000 கி.மீகள் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டிய நான்கு வழிப்பாதை திட்டங்களில் இதுவரை 8000 கி.மீ பணி கள் தொடங்கியுள்ளன, சுமார் 7500 கி.மீக்கான பணிகள் ஆரம்பிக்கப்படவேண்டிய சுழலில் மீதமுள்ளவை இதுவரையில் செயல்வடிவில் இறுதி பெறாத நிலைதான்!

இதனால் கடந்த 2004 - 2005ல் சுமார் 81% முன்னேற்றத்தில் இருந்த திட்டங்கள் இந்த 2006 -2007 ஆம் ஆண்டில் 49% வந்து கிழிறங்கிக்கொண்டிருக்கின்றன!

இதுக்குத்தான் நான் சப்ஜெக்ட் சம்பந்தமாவே உள்ளாற (உளற) போகறது கிடையாது!

பாருங்க..! படிக்கறப்ப இருந்தா மாதிரியே இப்பவும் ஒரு எழவும் எனக்கு புரியமாட்டேங்குது! உங்களுக்கு எதாவது புரியுதா...???

9 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பேஷ்! பேஷ்! இப்படி தான் இருக்கனும்.
எனக்குத் தெரிந்து மதுரை - நாகர்கோவில் இடையேயான தேசிய நெடுஞ்சாலைப்பணி பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் தான் நடக்கிறது.

said...

//வித்யா கலைவாணி said...
பேஷ்! பேஷ்! இப்படி தான் இருக்கனும்.
//
அக்கா! சப்ஜெக்ட் சம்பந்தமான என் பதிவா?
இல்லை நெடுஞ்சாலை திட்டங்களா?

said...

டி. ஆர். பாலுவுக்கு சேது சமுத்திரம் சணடை போடுவதில் தான் இப்போது கவனம்.

said...

நான் ஒவ்வொரு வாரமும் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை போகுறது உண்டு. ஒரு வாரம் போறப்ப, ஒரு பக்கம் ரோடு போடறதா சொல்லி, பஸ்ஸ எல்லாம் ரோட்டோட இன்னொரு பக்கம் அனுப்புவாங்க. மறு வாரம் போறப்ப, அந்த இன்னொரு பக்கத்துல ரோடு போடறதா சொல்லி, பஸ்ஸ மறுபக்கத்துல திருப்பி விடுவாய்ங்க. அதுக்கு அடுத்த வாரம், இது அப்படியே தலை கீழா நடக்கும். நானும் ஒரு வருஷமா பாத்துட்டு வர்ரேன். இன்னும் ரோடு போட்ட பாடில்ல...

said...

அரசு இயந்திரம் மெதுவாகத்தான் செயல்படும். நமது மக்களின் மனநிலை - திட்டத்தினைச் செயல் படுத்தும் போது ஏற்படும் சிறு அசெளகரியங்களைக் கூட பொறுத்துக் கொள்ளாத மன நிலை. என்ன செய்வது.

said...

//அரசு இயந்திரம் மெதுவாகத்தான் செயல்படும். நமது மக்களின் மனநிலை - திட்டத்தினைச் செயல் படுத்தும் போது ஏற்படும் சிறு அசெளகரியங்களைக் கூட பொறுத்துக் கொள்ளாத மன நிலை. என்ன செய்வது.//

அய்யா தங்கள் தலைமுறையினர் அரசாங்க தாமதங்களை சகித்துக்கொள்ளலாம். ஆனால், இந்தத் தலைமுறையினரான எங்களுக்கு அந்தப் பொறுமை இல்லை.

நானும் 'அமேரிக்காவில்' இது மாதிரி கட்டமைப்பு சரிபார்க்கும் பணிகளைக் கண்டிருக்கிறேன்.

1. வேலை தொடங்க 3-6 மாதங்களுக்கு முன்பே அறிவிப்புக் கொடுத்துவிடுவார்கள்.
2. முடிந்தமட்டில் அந்தப் பாதையிலேயே போக்குவரத்து நெறிப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படும்.
3.வேலைகள் பெரும்பாலும் போக்குவரத்து அதிகமில்லாத இரவு நேரங்களில் நடைபெறும்.
4. வேலை நடைபெறும் இடங்களில் சத்தமோ, புழுதியோ அதிகம் எழாதவாறு பார்த்துகொள்வார்கள்.
5. அனேகமாக சொன்ன கால வறையரையில் வேலையை முடித்துவிடுவார்கள்.

இவற்றை இங்கும் எதிர்பார்ப்பது தவறா?

said...

நண்பர் பெத்த நாயுடு,

அமெரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பு நோக்காதீர்கள். ஆப்பிள் ஆப்பிள் தான் - ஆரஞ்சு ஆரஞ்சு தான். இரண்டுக்குமே நன்மை தீமைகள் உண்டு. ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு நம் நாடு. இங்கு சுதந்திரம் அதிகம். நமது பெருமையே பொறுமை தான். நாம் வளர்ந்திருக்கும் சூழ்நிலை, கலாச்சாரம், அனுபவிக்கும் கட்டற்ற சுதந்திரம், மக்கட்தொகை - சற்றே சிந்தியுங்கள். சுற்றுப்புற சூழ்நிலை சுத்தமாக வைத்திருக்கிறோமா ??

நமது அரசியலை அவர்கள் அரசியலோடு ஒப்பிடாதீர்கள்.

மொத்தத்தில் we get, what we deserve. Thats all

said...

எங்கே செல்லும் இந்த பாதை? எப்போ எப்போ அது சரியாகும்?
விடை தெரியாத கேள்வி இது.

அன்பே சிவம் படத்தில் மாதவன் கேட்பது போல் ஒழுங்காக வருமான் வரி கட்டும் குடிமக்கள் தான் கட்டும் பணத்திற்கான் கணக்கை பெரும் நாள் வருமா?

said...

இந்த நெடுஞ்சாலைப்பணிகளில் வழக்கம் போல் கொஞ்சம் தாமதம் இருந்தாலும் சீர் செய்யப்பட்ட சாலைகளில் பயணிக்கும் பொழுது பயனுள்ளதாகவே இருக்கிறது. மாறுதல் வரும்..
"நானும் 'அமேரிக்காவில்' இது மாதிரி கட்டமைப்பு சரிபார்க்கும் பணிகளைக் கண்டிருக்கிறேன்"
சரிதான் நம்ம வீட்டு முற்றத்தில் தான் நாம் கோலமிட முடியும்..