நன்றி சொல்லும் நேரம்...!

நன்றி சொல்லும் நேரம்!

நானாக நானிருந்த காலம் போய்,

வீணாகி போகாத காலமாக இந்த நாட்கள்;

வரலாற்று பெயராக மாற்ற வேண்டுமென்ற ஆவல்

ஆனால் வர வேண்டுமே! அதற்கேற்ற பொருள் - என் பதிவில்

நகர்ந்து விட்டது நாட்கள்!

தகர்ந்து விட்டது தமிழ்மணம் நட்சத்திர ஆசை!

நகரும் நாட்களுக்கு நன்றி சொல்ல நினைக்காத மனம்தான்

எல்லோருக்கும் உண்டு.!

நகராமல் இப்படியே இருந்துவிடட்டுமே, என்று!

நகராமலே இருந்தால், அதற்கு பெயர் நரகமாகிவிடக்கூடுமே...!

நகர்வு இருக்க வேண்டும்

நன்மை செய்யும் நகர்வாகவே..!

என் நகர்வு வரும் நட்சத்திரப்பயணிக்கு,

நலமாக அமையவேண்டும்!

நாளும் நல்லது சொல்வோம்

நாளும் நல்லது செய்வோம்

நாளும் நலமுடன் வாழ்வோம்!

நாளும் நல்லவராக வாழ்வோம்!

நலம் பல செய்வோம்! – எல்லோருக்கும்!

13 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இந்த வாரம் முழுவதும் அருமையான பதிவுகளைத் தந்தற்கு நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

said...

//நாளும் நல்லவராக வாழ்வோம்!

நலம் பல செய்வோம்! – எல்லோருக்கும்//

ஆயில்யன் நன்று சொன்னீர்கள்.

படத்தில்

இரட்டை குழந்தைகளா ?

அழகாக இருக்கிறார்கள்.

said...

நன்றி சொல்வதென்பது நல்லவர்களின் நற்பண்புகளில் ஒன்று. தவறாது செய்த நண்பர் ஆயில்யனுக்கு வாழ்த்துகள். ஒரு வார காலத்தில் அதிகம் பதிவுகள் இட்டவராக இருக்கும் என நினைக்கிறேன்.

said...

நல்ல கும்பிடு போட்டீங்க ஆயில்யன் ...அந்த குட்டீஸ் கும்பிடு என்ன அழகு...

said...

நன்றி வித்யாக்கா!


நன்றி கோவியாரே!
ஆம் இரட்டை குழந்தைகள்தான் அவனுங்க பண்ண விஷமங்கலெலாம் புகைப்படங்களாக வரும் பின்னாளில்...!


நன்றி சீனா அய்யா!
தங்களின் வருகை எனக்கு பெரியோரின் ஆசிகளாக...!
எங்க குடும்பத்தில, ஒரு தாத்தா இருக்காங்க அவங்க பேரு சீனாதானா ( பழைய தஞ்சை டிஸ்டிரிக்ட் பழக்கமோ..!!!)

said...

நன்றி முத்துலெட்சுமியக்கா!

said...

//ஆயில்யன் said...
நன்றி வித்யாக்கா!//
ஆயிலயன் அண்ணா. என்ன இதெல்லாம். குட்டிப் பொண்ணைப் போய் அக்கானு. மாயவரம் வந்து அண்ணிகிட்ட புகார் செய்வோம்.ஆமா

said...

//வித்யா கலைவாணி said...
//ஆயில்யன் said...
நன்றி வித்யாக்கா!//
ஆயிலயன் அண்ணா. என்ன இதெல்லாம். குட்டிப் பொண்ணைப் போய் அக்கானு. மாயவரம் வந்து அண்ணிகிட்ட புகார் செய்வோம்.ஆமா
//
சரி தங்கச்சி! ஆமாம் அது யாரு அண்ணி? அப்ப உங்க அண்ணன் மயிலாடுதுறைதானா சொல்லவேயில்லை!

said...

எல்லா பதிவுகளை படிச்சிட்டேன்...

ரசிக்கும் படியான பதிவுகள்..அருமையான தொரு வாரம் ;)

வாழ்த்துக்கள் :)

யாருங்க அந்த ரெண்டு குட்டி..கலக்கல் ;)

said...

நன்றி கோபிநாத்!

அந்த குட்டீஸ் எதிர் வீட்டு பசங்க...!

அதுல பார்த்தீங்களா ஒருத்தன் பார்க்கிற பார்வைய..! கலக்கலா இருக்குல்ல!

said...

ஒரு வாரமா நானும் பார்க்கிறேன்... பதிவுகளாப் போட்டுத் தள்ளிக்கிட்டு இருக்கீங்க. 'இந்த வாரம் பதிவுகள் வாரம்' என்று ஏதாவது முடிவு எடுத்து இருக்கீங்களா? சும்மா சொல்லக்கூடாது... எல்லாமே நல்ல பதிவுகள். இன்னும் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நன்றி. வாழ்த்துக்கள். உங்கள் நல்ல பணி தொடரட்டும்.

said...

வணக்கம் வந்தனம்! நீங்க முதல் பதிவில் சொன்னபடியே யாரும் உங்களை ஓட்டாம இருந்தோம் பார்த்தீங்களா? :))

said...

//குசும்பன் said... //

ஆமாமாம்!!!
பார்த்தேன்!
பார்த்தேன்!!!????