பாடாத ரேடியோக்கள் & டேப்புகள், பழைய இத்துப்போன சைக்கிள்கள்,பெரிய பெரிய மருந்துப்பாட்டில்கள், மற்றும் இன்னும் பிற உபயோகப்படுத்தப்பட்டு பின்பு, உபயோகிக்கமுடியாத நிலையை அடைந்த பொருட்களை அடைகாத்து வைத்திருக்கும் மனிதர்களை நீங்கள் கண்டிப்பாக சந்தித்திருக்ககூடும்!
ஒரு பிரயோசனமில்லவிட்டாலும் கூட அதை இழக்க மனமின்றி இருக்கும் மனிதர்கள்!
அப்படியே சிலரால் தூக்கி எறியப்படும் பொருட்கள் இதே மனநிலை கொண்ட மற்ற மனிதர்களால் கைப்பற்றப்பட்டு, மீட்டு கொண்டு வந்து வீட்டில் அடைத்து வைப்பவர்களும் உண்டு!
இதே மன நிலையில்தான், இப்போது நமது மத்திய அரசாங்கமும் செயல்பட போகின்றது!
உலகநாடுகளிலிருந்து வீணான பொருட்களை பெற்று அதைக் கொண்டு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது! ஆனால் இதனால் வரும் காலத்தில் உலகிலில் இருந்து வரும் குப்பை பொருட்களின் கூடாரமாகத்தான் நம் நாடு மாறிப்போகுமே ஒழிய இதனால் வேறு பலனேதும் இல்லை! அது மட்டுமின்றி கவர்ன்மெண்ட் சொல்வது, போல 60 சதவீகிதமான பொருட்கள் மறு சுழற்சி முறையில் உபயோகிக்ககூடிய பொருட்கள்தான் எனற கான்செப்ட் ஒ.கேதான்! என்றாலும் பிரித்தெடுக்கப்படும் உபயோகிக்ககூடிய பொருட்களை தவிர மற்ற பொருட்களை எப்படி நாம் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்போகிறோம் எனபது ஒரு பெரிய ?
ஏற்கனவே சுற்றுசுழல் ஆர்வலர்கள்,அறிஞர்கள் என பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பான கருத்துக்கள் அரசை சென்றடைந்திருக்கும் நிலையில், என்ன விதமான முடிவு என்பது இனிமேல்தான் தெரியும்!
எது எப்படியோ, வரும் காலங்களில் நாட்டை குப்பையாக்குவதாக இருந்தாலும் சரி,கோபுரத்து உச்சியில கொண்டு போய் வைக்கிறதா இருந்தாலும் சரி, எல்லா முடிவும் அரசியல்வாதிகள் கையில்தானே இருக்குது…?!
குப்பைகளின் கூடாரமாகப்போகும் இந்தியா..!
Subscribe to:
Post Comments (Atom)
9 பேர் கமெண்டிட்டாங்க:
//ஏற்கனவே சுற்றுசுழல் ஆர்வலர்கள்,அறிஞர்கள் என பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பான கருத்துக்கள் அரசை சென்றடைந்திருக்கும் நிலையில், என்ன விதமான முடிவு என்பது இனிமேல்தான் தெரியும்!//
எதற்கெடுதாலும் சுற்றுச்சூழலை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவிப்பது என்பது உலகலவில் இன்று ஒரு பொழுது போக்கு போல் ஆகிவிட்டது. சுற்றுச் சூழல் மீது ஆர்வம் காட்டுவதும் அதற்கு பங்கம் வாராமல் பாதுகாப்பதும் உண்மையில் வரவேற்கக் கூடியது தான். ஆனால் எதற்கெடுதாலும் இதை காரணம் காட்டி எதிர்பது ஆரோக்கியமானது இல்லை.
எந்த திட்டமாக இருந்தாலும் அதில் பாதகமான அம்சங்கள் நிச்சயம் இருக்கும். அதை எபப்டி தீர்க்க ஆலோசனை வழங்குவதை விடுத்து வெறுமனே எதிர்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கு?
மேலும் தங்களை சுற்றுச் சூழல் ஆர்வலர்களாக காட்டிக் கொள்பவர்கள் அதற்கு பங்கம் விளைவிக்கும் பொருட்களை உபயோகிப்பதில்லயா என்ன? பிளாஸ்டிக் கப்பில் தேனிர் அருந்திக் கொண்டு சுற்றுச் சூழல் பற்றி பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கு?
பொடியன் உங்களின் கருத்து சாதரண பொடியர்கள் சொல்வது போன்றே இல்லை!?????
என்னமோ சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்த்துட்டாங்கன்னா உடனே அந்த சப்ஜெக்ட குளோஷ் பண்ணிடுதா கவர்ன்மெண்ட்டு..???/
இது வழக்கம்போல ஒரு அலாரம்தான் முழிச்சுக்கறதும் முழிச்சுக்காததும் அரசியல்வாதிகள் கையில்தானே...!
//ஆயில்யன் said...
பொடியன் உங்களின் கருத்து சாதரண பொடியர்கள் சொல்வது போன்றே இல்லை!?????//
இப்போ என்ன? பாராட்றிங்களா இல்ல திட்றிங்களா? :(((
( இப்பொ சொல்லுங்க .. நான் பொடியன் தானே..?:P )
வாழ்த்துகிறேன் :)))))
கண்டிப்பா நீங்க
பொடியனே
இல்லை...!
இல்லை...!!
இல்லை...!!!
உபயோகிதத பொருட்களை மீள உபயோகப்பதால் பொதுவாக உலக சுற்றுப்புற சூழலுக்கு நன்மையே. உற்பத்திக்கு பதிலாக உபயோகப்படுத்திய பொருட்களை பாவிப்பதின் ஊடாக கழிவாகும் பொருட்களின் அளவு குறையும். ஆனால் உற்பத்தி செய்தவர்களே அதை செய்யலாம். அதை இந்தியா வாங்கும் போது இந்தியாவில் குப்பைகளின் அளவு கணிசமானளவு கூடவே செய்யும். இருந்த போதும் இந்தியாவின் பொருளாதார சிக்கலுக்கு இதில் நன்மையான விசயங்கள் இருக்கலாம். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அரசியல் வாதிகள் லஞ்சம் வாங்கி குப்பைகளை இங்கே கொட்டுங்கள் என்றாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை. எவ்வகையான பாவனைப்பொருட்களை கொண்டுவரப்போகின்றார்கள் அதனால் நன்மைகள் என்ன என்பது தெரியாதவரை குழப்பமே.
எலக்ட்ரானிக் சர்க்யூட்களில் இருக்கும் காரீயத்தை ஒன்றுமே செய்ய முடியாது. அது கேன்ஸரை உருவாக்கும் முக்கிய பொருளாகும். பின்விளைவுகளில்லாமல் மறுசுழற்சி செய்ய முடியும் என்ற அதை அந்தந்த நாடுகளே செய்து கொள்ளாலாமே?. எந்த நாடும் இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதை செய்யாது. அதை இந்திய அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். என்ன செய்வது? இதையெல்லாம் யோசிக்கக்கூடிய மத்திய சுகாதார அமைச்சருக்கு சினிமாவில் சிகரெட் பிடிப்பதும் வேணுகோபாலோடு சன்டை போடுவதுமே முக்கிய பணிகள். தலை விதி.
இப்போதுதான் பிரஞ்சுத் தொலைக்காட்சி சென்னைவரும் கணனிக் கழிவுகள் பற்றி ஒரு நிகழ்ச்சி காட்டியது, அதில் ஐரோப்பாவிலிருந்து ஆபத்தாக கழிவுகள் அனுப்ப அனுமதியில்லை என்பதால், மத்தியகிழக்கில் இருந்து அனுமதியுண்டென்பதால், போலிச் சான்றிதழ்கள் தயாரித்து கப்பல் கப்பலாக கழிவுகள் வருவதாகவும், புதுப்பேட்டை எனும் இடத்தில் முகமட் என்பவர் ஒரு பழைய கணனியை 1.60 யூரோவுக்கு வாங்கி, 40 யூரோ சதம் லாபம் காண்பதாகவும்.
பாதுகாப்பு விதியெதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. அதில் வேலைசெய்பவர்கள் பலருக்கு தான் பயங்கரமான பின்விளைவுகளுடன் வேலைசெய்வது தெரியாமல் வேலை
செய்வதாகவும் கூறினார்கள்.
இதன் பின்னணியில் சிலமத்திய அமைச்சர்களும்,2 அதிகாரிகளும் உள்ளதாகவும் அதில் ஒரு அதிகாரியிடம் இதில் ஆபத்து உண்டெல்லவா?? எனக் கேட்டபோது
அது பற்றி விசாரிப்பது என் வேலையல்ல!! என பதிலளித்ததுடன்
தேவையில்லாமல் தன் வேலைநேரத்தை வீணாக்குவதாக எகிறிக் குதித்தார்.
பார்த்துக் கொண்டிருக்க வேதனையாக இருந்தது. வேலியே பயிரை மேயுது.
புண்ணிய பாரதம் எலும்புக் கூட்டு குப்பை மேடாகி விடுமோ என வேதனையாக உள்ளது.
//அமர பாரதி said... ///
நீங்க சொல்றது நிசந்தாங்க!
வந்த ரெண்டரை வருசத்துல் ரெண்டு பேரும் நிறைய தடவை சண்டை போட்டுக்கிட்டு நிக்கிறாங்க!
சிகரெட் பிடிக்கிறது மட்டும்தான் தலையாய பிரச்சனைன்னு தலையில வைச்சிக்கிட்டு திரியிறாரு அமைச்சரு!
என்னமோ போங்க...???
///யோகன் பாரிஸ்(Johan-Paris) said... ///
யோகன் அய்யா முடிந்தால் அது போன்ற ஒளிபரப்புகளை வலையேற்றுங்களேன்....!
Post a Comment