இந்த தலைவரு காமெடி பண்றாரா..?!!

அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து.அது சம்பந்தமாக கருத்து தெரிவித்துள்ள கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன்
"தமிழகத்தில் முன் விரோதம் மற்றும் பகைமை உணர்வு காரணமாக கொலைகள் நடந்து வருவது கவலை அளிக்கிறது. அதேநேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இப்போதுதான் நடப்பதுபோல் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது முற்றிலும் தவறானது.

இதுபோன்ற பிரச்னைகள் இந்தியா முழுவதும் உள்ளது. இதற்கு தீர்வு காண அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றியுடன் நிராகரிக்கிறது. இந்த பிரச்னைக்கு இது சரியான தீர்வாக அமையாது. இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமான சமூக விரோதிகளை ஒழிக்கவேண்டும். தன்னை பாதுகாக்க முடியாத தலைவர்கள் நாட்டு மக்களை எப்படி பாதுகாப்பார்கள்? அரசியல் தலைவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுத்தால் பொதுமக்களை பாதுகாப்பது யார்? இதற்காக பயன்படுத்தப்படும் படை பலத்தை கொண்டு சமூக விரோதிகளை ஒழிக்க வேண்டும். தலைவர்கள் விரும்பினால் அவர்களுக்கு துப்பாக்கி வழங்கலாம்."

தமிழகத்தில நடக்கற முக்கால்வாசி கட்டபஞ்சாயத்து,கொலை எல்லாத்துக்கும் பேக் கிரவுண்டே அரசியல் வியாதிகளாலத்தான்னு எல்லாருக்குமே தெரியுது!

இது ஒவ்வொருத்தருக்கும் துப்பாக்கி கொடுத்தா...?

ஹை! உண்மையிலேயே ஜாலியாத்தான் இருக்கும்! என்ன ஒண்ணு சினிமாவில அப்புறம் துப்பாகி சண்டை இருக்காது! அப்படியே இருந்தாலும், அந்தளவுக்கு இந்த காமெடிய விட சினிமா துப்பாக்கி காமெடிய மக்கள் ரசிக்க மாட்டங்கல்ல.!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//தமிழகத்தில நடக்கற முக்கால்வாசி கட்டபஞ்சாயத்து,கொலை எல்லாத்துக்கும் பேக் கிரவுண்டே அரசியல் வியாதிகளாலத்தான்னு எல்லாருக்குமே தெரியுது!//
உண்மையிலேயேவா?
//ஹை! உண்மையிலேயே ஜாலியாத்தான் இருக்கும்//
என்ன கொல வெறியோ!

said...

தம்பி,
அவரு, தலைவர்களோட பாதுகாப்புச்செலவை (எல்லாம் நம்ம பணம் தாங்க!) முன் வைத்து அப்படிச் சொல்லியிருக்கலாமில்ல ? இப்பல்லாம், பல அரசியல்வாதிகள் பந்தாவை காட்டிக்கத் தான் நிறைய செக்யூரிட்டி வேணுமுன்னு அலையறாங்க, வரிப்பணம் எப்டியெல்லாம் வீணாப் போறது பாருங்க :(
எ.அ.பாலா

said...

//enRenRum-anbudan.BALA said...
தம்பி,
அவரு, தலைவர்களோட பாதுகாப்புச்செலவை (எல்லாம் நம்ம பணம் தாங்க!) முன் வைத்து அப்படிச் சொல்லியிருக்கலாமில்ல ?
//

பாலா அண்ணே!

மொத்தத்துல, இவங்கலெல்லாம் நடக்கறத பத்தியோ அல்லது நடத்தி காமிக்ககூடிய விஷயத்த பத்தியோ கருத்தே சொல்ல மாட்டங்களா :(((