ஊர் ஸ்பெஷல் – தேர் திருவிழா - இன்னைக்கு..!


ஒரு வாரத்துக்கு முன்பே தெரிந்துவிடும் கொத்த தெரு ஆட்கள் அனுமார் கோவில் வாசலில் காலையில் கூட ஆரம்பித்தாலே தேருக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியதற்கான சிக்னல் கிடைக்கும்!

தேருக்காக சாரம் கட்டிய சவுக்கை மரங்களினுடாக புகுந்து வருவது என்னமோ இமயமலைய டச் பண்ணுன சந்தோஷம் வரும்!

ஐப்பசி மாதம் தேர் திருவிழான்னா வர்ற சந்தோஷம் ஒரு ரூபாயிக்கு விக்கும் பலூனை வாங்கி தட்டலாமேன்னுதான்! அது மாதிரியே பலூன் வாங்கி வந்து கடைசியாக சுருங்கி குட்டியூண்டு ஆகும் வரைக்கும் அத வைச்சு விளையாடுவேன் இது ஒரு வாரத்துக்கு ஒடும்!

இப்ப ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியிலருந்து எங்க ஊருக்கு பெரிய அழகான மரத்தேர் செஞ்சி உபயமா கோவில்லுக்கு கொடுத்திருக்காங்க அது யாரோ மன்னர்குடி வகையறாவம் யார்ன்னு தெரிய்லை! நல்லாயிருக்கட்டும்!
அது ஆடி வர்ற அழகே தனிதான்!

சின்ன வயசுல தேர் பார்க்குற ஸ்பாட்டுன்னா அது சின்னகடைத்தெரு தொங்கலில் இருக்கும் சியாமளா மாரியம்மன் கோவில் வளாகம்தான்! உள்ள நின்னுக்கிட்ட்டு பார்த்தா ரொம்ப பாதுகாப்புன்னு பாட்டி சொன்னதால அந்த சுவற்றின் சிமெண்ட் ஜாலிகளுக்கிடையில் முகத்தை மாட்டிக்கொண்டு பார்த்தது!

பெரிய மனுசனானதுக்கப்புறம் ஸ்பாட்டு மாறிப்போச்சு! தேரை விட தெற்கு வீதி பிகர்தான் முக்கியமென்ற காலம் வந்தது! அதே இடம் தொடர்ந்தது கல்யாணம் ஆகும்வரை – அந்த பிகருக்கு!

திரும்பவும் ஆன்மிக பாதையில் ஸ்ட்ராங்காக அடிவைத்ததும் கோவிலிலிருந்தே சாமி பக்கதில் நின்று சென்றது ஆரம்பமாகியது! தேர் சக்கரங்களினூடாக முட்டு போடும் அந்த மனிதர்களின் உற்சாகத்துடன் சேர்ந்து குரல் கொடுத்து வந்தவன் காலச்சக்கரத்தில் உள்ளே புகுந்து சக்கையாகி இப்ப இங்க.....!!!!

எனக்கும், இந்த கொடுமைய(பதிவ) படிக்கறவங்களுக்கும் அந்த மாயூரநாத சுவாமி சமேத அபயாம்பிகை அருள் புரிவாராக!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அன்புள்ள ஆயில்யன்,நலமா? இன்று தஙகளின் தேர்திருவிழா பதிவுப்பார்ததேன்.தஙகள் ஊரில் நடக்கும் ஐப்பசி மாத குடமுழுக்கு மிகவும்
சிறப்பாக இருக்கும்.உறவினர்கள் அனைவரும் வருவார்கள்.மிகவும் மகிழ்ச்சியாகஇருக்கும்.இப்போது எல்லாம் மாறிவிட்டது.
த‌ம்பி தாங்க‌ள் கூறிய‌ப‌டியே BLOG ஆர‌ம்பித்துவிட்டேன்.என் ப‌திவைப்பார்து த‌ன்க‌ளின் க‌ருத்தைக்கூறவேண்டும்.மிகுந்த‌ ஆவ‌லில் உள்ளேன்.பிழைகளிருக்கும்.
பிரிய‌முட‌ன் சீனி.ஜெய‌பால்.

said...

அன்பிற்கு இனியவன் said.....

அன்புள்ள ஆயில்யன்,நலமா? இன்று தஙகளின் தேர்திருவிழா பதிவுப்பார்ததேன்.தஙகள் ஊரில் நடக்கும் ஐப்பசி மாத குடமுழுக்கு மிகவும்
சிறப்பாக இருக்கும்.உறவினர்கள் அனைவரும் வருவார்கள்.மிகவும் மகிழ்ச்சியாகஇருக்கும்.இப்போது எல்லாம் மாறிவிட்டது.
த‌ம்பி தாங்க‌ள் கூறிய‌ப‌டியே BLOG ஆர‌ம்பித்துவிட்டேன்.என் ப‌திவைப்பார்து த‌ன்க‌ளின் க‌ருத்தைக்கூறவேண்டும்.மிகுந்த‌ ஆவ‌லில் உள்ளேன்.பிழைகளிருக்கும்.
பிரிய‌முட‌ன் சீனி.ஜெய‌பால்.

said...

அருமை ஆயில்யா! அதுசியாமளா மாரியம்மன் இல்லை காளியம்மன்! அதே ஜல்லி இடுக்கு வழியா பார்த்தவன் தான் நானும்! அதுக்கு பின்ன வடம் இழுக்க ஹோய் ஹோய்ன்னு கத்த முட்டு கட்டை போட....அந்த பொன்ணுங்களுக்கு ஜீரோவா காமிக்க எத்தனை கஷ்டமப்பா::-))

said...

ஓ....! நீங்க ஜீரோவா காமிக்க பிரயத்தனப்பட்ட ஆளா!
நானெல்லாம் ஹீரேவாக ஆசைப்பட்டவங்க...!?!??!

said...

//அந்த பொன்ணுங்களுக்கு //

பொண்ணுக்கு or பொண்ணுங்களுக்கு

ரைட்டா இல்ல ராங்கா???

said...

//பிழைகளிருக்கும்.
பிரிய‌முட‌ன் சீனி.ஜெய‌பால்.//


ஆமாம் பிழைகள் கூட சில சமயங்களில், உங்களை பலருக்கு பிரியப்படுத்தும்

வாழ்த்துக்களுடன்...!

வாங்க! அசத்துங்க!!!!