லுக் தி புக் – இந்தியா டுடே (பாகம் 2)

Photo Sharing and Video Hosting at Photobucket

இந்தியா டுடேயில் சிறுகதை பகுதிகளும் உண்டு (அத்தனை நெருக்கமான வரிகளில் சிறுகதை படிக்க வராமல் பயந்து ஒடியவன் நான்..!)

கடைசி பக்கத்துக்கு முன்பக்கத்துல நாலு காலம் விட்டு சினிமா,டிவி,மற்றும் மிஸ்லேனியஸ் மேட்டரகள போட்டு நிரப்பி,கடைசி பக்கத்துலதான் கமர்சியல் விஷயங்களான (புக் முழுசும் படிச்சி வெளிய வர்றவன் கொஞ்ச நாள்ல அரசியல் பித்தோ அல்லது விமர்சன் குளறுபடிகளோ அல்லது வித்தியாசமான தமிழை பழக ஆரம்பிக்காமலோ இருக்க..) கொஞ்சூண்டு பாலிவுட் ஃபிகர்களின் படங்களுடன் மங்களம்!

பெரும்பாலும் புலனாய்வு ரீதியிலான அரசியல் கட்டுரைகளும்,ஹாட் டாபிக்கின் அஸ்திவாரம் வரை சென்று,செய்தி சேகரிக்கும் விதமும் மிகப்பிரபலமானது.

வித்தியாசமான கோணங்களில் செய்தி சேகரித்தலும் அவ்வப்போது உண்டு!

எனக்கு நன்றாக ஞாபகத்தில் உள்ள விஷயம் உலககோப்பை போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் பெங்களூரில் மோதிக்கொண்ட நாளில் இந்தியா டுடே பத்திரிக்கையாளர் பாகிஸ்தானில், ஒரு ஊரில் அனைவரும் டிவியில் அந்த போட்டியினை கண்டு ரசித்துக்கொண்டிருந்ததை பற்றி எழுதியிருந்தார் ஒரு கட்டத்தில் அமீர் சோகைல் பிரசாத்தை பார்த்து எதோ சொல்ல, அடுத்த பந்தில் அவர் அவுட்டாகி வெளியேறுவார்! இந்தியாவில் பிரசாத்தின் சாதனையாக மகிழ்ந்த, அந்த நேரத்தில் பாகிஸ்தானில் அமீர் சோகைல் பணம் வாங்கிக்கொண்டு அவுட்டாகி செல்வதாக் கூறியதாக, அந்த நிருபர் எழுதியிருந்தார்!

அதுபோலவே ஊருக்கு போன போது “நல்ல மரியாதை” கிடைத்தது அமீர் சோகைலுக்கு!

அமைதிப்படை வெளியேறியது சம்பந்தமான கட்டுரைகள் இலங்கை அகதிகள், ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமான புலனாய்வு கட்டுரைகள் அது பிளான் பண்ணியதற்கான காரணங்கள் சம்பவங்கள், திமுக லிங்க் செய்யும் விஷயங்கள் மற்றும் தற்கொலை செய்துகொண்ட சிவராசன் டைரி மேட்டர்கள் பெரிய பரபரப்பை உண்டாக்கின!

பாகிஸ்தானில் இப்ப வந்திறங்கிய பெனசிரின் அப்போதைய அராஜக ஆட்சி பற்றியவை, அவ்வப்போது வெளிவரும் பாகிஸ்தான் இந்தியா பற்றிய ஆய்வுக்கட்டுரைகள்! உலக நாடுகளில் நடைபெறும் வரலாற்று சம்பவங்கள் மண்டல் கமிஷன் பற்றிய ஆய்வுக்கட்ரைகள் (அந்த தீ பற்றி எரியும் மனிதன், புகைப்படம்!மறக்க முடியுமா?)

Photo Sharing and Video Hosting at Photobucket


ஒரு நேரத்தில் செக்ஸ் சம்பந்தமான கட்டுரைகள்,
ஒரு நேரத்தில் விடுதலைப்புலிகள் இந்தியா குறிப்பாக தமிழகம்
ஒரு நேரத்தில் ஜெயின் கமிஷன்
ஒரு நேரத்தில், சந்திராசுவாமி
என. இன்னும் காரம் சுவை குறையாமல் போய்க்கிட்டே இருப்பது இந்தியா டுடேவின் சாதனையா அல்லது இந்தியாவின் சாதனையா..?!

1 பேர் கமெண்டிட்டாங்க:

Anonymous said...

எங்க வீட்டிலேயும் இந்தியா டூடேதாங்க....ஆனா, நெறய ஸ்பெல்லிங் மிஸ்டேக்....மொழிபெயர்ப்பு தவறுகள்....