சைவதமிழ் வளர்த்துக்கொண்டிருக்கும் பழமையான மடங்களில் தருமை ஆதீனம் முக்கியத்துவம் வாய்ந்தது!
17ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட குருஞான சம்பந்த குருமூர்த்தி சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சைவ மடம், தெய்வத்தமிழ் மன்றம் நிறுவி சைவதமிழ் வளர்த்து வருவதோடு, தமிழ் திருமுறைகளையும்,சைவ சமயம் தொடர்பான நூல்களையும் கடந்த 1941 முதல், மூலம் மற்றும் விளக்க உரையுடன் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது.
1985களில் சிறுவனாக இருந்தப்போது, ஞாயிற்று கிழமை மதியங்களில் இந்த மடம் அமைந்திருக்கும் தருமபுரத்தில்தான் பொழுது போகும்! நேர்த்தியாக திட்டமிடப்பட்ட நான்கு வீதிகளை மையமாக வைத்து அமைந்த, யாழ்முரிநாதர் திருக்கோயில், அருகிலேயே ஆதீன மடம் அதனுள் அமைந்த கோயில் சொக்கநாதர்.
மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து தரங்கம்பாடி சாலையில் சென்றால் சரியாக மூணாவது கி.மீல் இடது பக்கம் அலங்கார வளைவுடன் ஆரம்பிக்கும் தருமபுரத்தின் எல்லை!
அலங்கார வளைவுக்கு நேர் எதிரே ஒரு தோட்டம் அதனுள் அமைந்திருக்கும் பிள்ளையார், பெரும்பாலானோர் இந்த கோவிலை அறிந்திருக்கமாட்டார்கள்! ஆனால் சாலை வழியே செல்பவர்களின் கண்களையும் மனதையும் கவரும் வகையிலான சின்ன கோவிலின் தோற்றம்! அதன் அருகிலே தற்போது ஆதீனத்தின கல்லூரி செய்ல்பட்டுக்கொண்டிருக்கிறது!
எதிரே குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி,பள்ளி மைதானமென பெரிய பரப்பளவில் அமைந்திருந்தாலும், சில வகுப்புகள் இன்னும் மரத்தடியில்தான்!
ஆதீன பங்களாவிலிருந்து தொடங்கும் மேலவீதி நேரே சென்றால் இடது புறத்தில் முன்பு ஆதீனங்களாக இருந்தவர்களின் நினைவிடங்கள் பெரிய தோட்டங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது!
ஆதீன கல்லூரி விரிவுப்படுத்தப்பட்டு செயல்பட துவங்கியபோது, கல்லூரி மாணவர்கள் அந்த பகுதிகளை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டனர்!
வினாயகரை வணங்கி உள்ளே சென்றால் யாழ்முறிநாதர் கோவில் கொஞ்சம் இருட்டாகத்தான் இருக்கும் பார்த்துதான் போகணும்! அவரை தரிசித்து பிரகாரம் சுற்றி வந்தால் துர்க்கையம்மன் சன்னதி கருவறையின் முன்னால் சிறிய ஃபவுண்டைன் ஆனால் இது நாள் வரையில் அதில் தண்ணீர் இருந்து நான் பார்த்ததில்லை!
அதையொட்டி துர்க்கையம்மன் சந்நிதி,வெள்ளிகிழமைகளிலும் ஞாயிற்றுகிழமைகளிலும் மட்டும் நல்ல கூட்டம் கூடும்! மற்றைய தினங்களில் நிசப்தமான இனிய சூழலை நான் மிகவும் ரசித்ததுண்டு!
வருடந்தோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் குருபூசை விழாவில் மடத்தினுள் அமைந்திருக்கும் சொக்கநாதர் சன்னதியில் 108 சிவாச்சாரியார்கள் சிவபூஜை செய்து வழிபாடு செய்துவருகின்றனர்! மற்றுமொரு ஸ்பெஷல் கஜபூஜை என சொல்லப்படும் யானைகளுக்கான சிறப்பு பூஜை! (வருஷம் வருஷம் எதாவது ஒரு யானை ரகளை பண்ணிக்கிட்டுத்தான் இருக்குது! அதுவும் அந்த திருக்கடையூர் குட்டி யானை பண்ணும் விளையாட்டுகளுக்கு நிறைய பேர் ரசிகர்கள்!
தருமை ஆதீனத்தின் கட்டுப்பாடின் கீழ் 27 பெரிய கோவில்களும் மற்றும் சிறியகோவில்கள்,உள்ளன. ஆதீனத்தின் கீழ்வரும் கோவில்களுக்கு சொந்தமான விளைநிலங்கள் பலரால் கையகப்படுத்தப்பட்டு, உபயோகிக்கப்பட்டு வந்தாலும் இது நாள் வரையில் குத்தகை பணங்களாக பெறப்படுவது மிக சொற்ப தொகை! நீதிமன்றத்தில் பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன! வைத்தீஸ்வரன் கோவில் பிரகார பகுதிகளில் முன்பொரு காலத்தில் குத்தகை நெல்களை கொட்டி அளப்பார்களாம் அந்தளவுக்கு வருமானம் கடந்த 1998ல் நடந்த கும்பாபிஷேகத்தின் போது அப்பிரகாரம் அனைத்தையும் கூரை போட்டு மூட சொல்லி விட்டது தருமபுர ஆதீனம்!
மக்களிடமிருந்து வந்த குத்தகை நின்றுபோன நிலையில் அவ்ளோ பெரிய இடத்தை கோவிலுக்கு வரும் மக்கள் பயன்படுத்திகொள்ள வசதியாக...!
3 பேர் கமெண்டிட்டாங்க:
தமிழ் மொழி மூலம் கோவில் கும்பாபிஷேகம் குறித்த வழக்கில் தருமை ஆதீன வக்கீல், "கடவுளுக்கு சென்னை பாஷையில் மந்திரம் சொன்னால் தான் புறியுமா?" என்று கேட்டதாக கேள்வி. உண்மையா?
தமிழ் வளர்த்த தருமை ஆதினம் பற்றிய அருமையான பதிவு - படங்களும் பிரமாதம். மலரும் நினைவுகளான பதிவு
i remember my college days...
that time i am study at AVC,
a beautiful queen Study at Adhinam School(10th)...
what a great love?....
thankz for ur article...
(we are married and now we have
sweet doughter also)
Post a Comment