சஷ்டி ஸ்பெஷல் – குடுமியான் மலை

வருடந்தோறும் வரும் கோடை விடுமுறைகளில் புதுக்கோட்டையில்தான் சுமார் இருபது நாட்களுக்குமேல் அத்தை வீட்டில் தஞ்சம்! அங்குதான் சைக்கிள் ஓட்டுவதிலிருந்து சாமி கும்பிடுவது வ்ரை நன்றாக கற்றுக்கொண்டது! வாரம் வெள்ளி ஞாயிற்றுகிழமைகளில் ஏதெனும் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வருவது வழக்கம்! (ஊரைச்சுத்தி கோவில்கள் இருக்கும் எங்க ஊருல எனக்கு சாமி கும்பிடற எண்ணம் அப்ப வர்லை..!)

அப்படி ஒரு நாள் சென்ற இடம்தான் குடுமியான் மலை முருகன் கோவில்! காலையிலேயே தயிர்சாதம் புளிசாதம் என கை நிறைய் பைகளை நிரப்பிக்கொண்டு,கிளம்பியாச்சு டவுன் பஸ்ல,ஒரு ஒருமணி நேரம் போயிருக்கும் ஊர் வந்துச்சு! அண்ணாந்து பார்த்தா மலை உச்சியில ஒரு சின்ன கோவில்!

சீக்கிரம் நடங்கன்னு சொன்னதும் உற்சாகத்துல ஓடியவனை, அத்தை அதட்டும் குரலில் டேய்..! கையில செருப்பு எடுத்துக்கோ இல்லை இங்கயே போட்டுட்டு வான்னு மிரட்ட..! (செருப்பு போட்டுக்கிட்டு படியேறக்கூடாதாம்!) எதுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ் மாதிரி கையிலன்னு படி ஆரம்பிக்கிற இடத்துலயே போட்டுட்டு படி ஏற ஆரம்பிச்சாச்சு!

கோவிலுக்கு போனா ஒருத்தரும் கிடையாது! அப்படியே இருட்டில முருகன் தெரியுறாரன்னு உத்து உத்து பார்த்துக்கிட்டுருந்தேன்..!

கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு குருக்கள் ரொம்ப பாவமா நடந்துவந்துக்கிட்டிருந்தாரு! அவருக்கு அடிவாரத்திலதான் வீடாம் யாரோ நாலு பேரு மலையேறிப்போயிருக்காங்களேன்னு பரிதாபப்பட்டு வந்தவர நானும் பரிதாபமாத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன்! (சரியா கவனிக்க ஆளில்லாத கோவில்களெல்லாம் இது மாதிரி ரொம்ப பேர பார்த்துருக்கேன்! என்ன நிர்பந்த்துக்கு இவங்க இவ்ளோ கஷ்டப்பட்டு இவ்ளோ தூரம் வந்து வேலை பார்க்கணும்ன்னு,மனசுக்குள்ள தோணும்...?)

கொஞ்ச நேரத்திலயே, கொஞ்சம் பயத்துடனே சாமி கும்பிட்டு முடிச்சு, பிரசாதம் வாங்கிக்கிட்டு,நாங்க எடுத்துவந்த சாதத்தையும்,எடுத்து வயித்த நெப்பிக்கிட்டு நல்ல புல் கட்டுல இறங்கும்போதுதான் இவ்ளோ நேரம் நான் ஆடுன ஆட்டத்துக்கு, சோதனை வந்தது! அது கோடைக்காலம்னு முன்னாடியே சொன்னோன்ல, சுமார் 11.00 மணிக்கு மேல மலைப்பாதையில நடக்கறதும், மாரியம்மன் கோவில்ல தீ மிதிக்கிறதும் ஒண்ணுதானே..!

என் அத்தை எம் மேல பரிதாபப்பட்டு ஒரு துண்டு கொடுத்தாங்க அதை எடுத்துகிட்டு வேகமா ஒடி வந்து,துண்ட போட்டு அது மேல நின்னு திரும்ப திரும்ப அது மாதிரியே செஞ்சு ஒரு வழியா வந்துசேர்ந்தேன்...!
என்ன தான் அப்ப கஷ்டப்பட்டாலும் இப்ப இங்க உக்காந்துக்கிட்டு சஷ்டியும் அதுவுமா நினைச்சு பார்க்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு!

உங்களுக்கு வாய்ப்பு இருக்கா? அப்ப போய் பாத்துட்டுவாங்களேன் தமிழ்கடவுளை...!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//உங்களுக்கு வாய்ப்பு இருக்கா? அப்ப போய் பாத்துட்டுவாங்களேன் தமிழ்கடவுளை...!//

நமக்கு வாய்த்தது எல்லாம் இணையத்தில் கிடைப்பதே :)

தோஹாவில் திருப்புகழ் வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு நடக்குது போல.. எதனாச்சும் கேள்விப்பட்டிங்கன்னா சொல்லுங்க.

said...

//நமக்கு வாய்த்தது எல்லாம் இணையத்தில் கிடைப்பதே :)//
நன்றி! நான் கூட அப்ப சாமி கும்பிட்ட காலங்கள நினைச்சுத்தான் காலத்த ஓட்றேன்!

//தோஹாவில் திருப்புகழ் வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு நடக்குது போல.. எதனாச்சும் கேள்விப்பட்டிங்கன்னா சொல்லுங்க//
அப்படியா?!
பட் இங்க தமிழ் நிகழ்ச்சிகள் சம்பந்தாம தெரிஞ்சுக்கறதுக்கு
சோர்ஸ் கிடையாது! ரெண்டாவது இருக்கற இடத்துக்கும் நடக்கற இடத்துக்கும் கண்டிப்பா போய் சேர்றது கஷ்டமான விஷயமாகிப்போச்சு! (சிவாஜிக்கு பார்த்ததோட சரி!)

said...

போக வேண்டும் என்ற விருப்பத்தைத் தூண்டி விட்டிருக்கிறது உங்கள் பதிவு. பணக்காரக் கோயில்களுக்குப் போகும் மக்கள் இது போன்ற கோயில்களுக்கும் செல்ல வேண்டும். அதுதான் முறை.