கடலோர கவிதைகள்..!

படித்த பெண், படிக்காத ஆண், இருவருக்குள்ளும் எழும் காதல் க(வி)தை!

பாரதிராஜா உருவாக்கிய புதுக்கவிதை!

காலை முதல் மாலை வரை எந்த நேரத்திலும், படத்தின் ஏதேனும் ஒரு பாடலை கேட்டாலே, மனம் குதூகலிக்க வைத்தது இளையராஜவின் இசைக்கு வைரமுத்துவின் கவிதைகள்!

படத்தில் ரேகாவிற்கு டீச்சராக உத்யோகம் - டீச்சர்களை பார்த்து குடை புடிச்சாங்களா? இல்லை இந்த படம் பார்த்ததுக்கப்புறம் டீச்சர்ஸெல்லாம் குடை புடிக்க ஆரம்பிச்சாங்களான்னு கொஞ்சம் குழப்பம்தான்!

டிபன் பாக்ஸ் எடுத்துப்போக மறந்தாலும் குடை எடுத்துபோக மறக்காத டீச்சர்களை நான் கண்டதுண்டு! அதை போன்ற கதாபத்திரத்திலும் ரேகா ரொம்ப அழகா நடிச்சுருப்பாங்க!

லொகேஷனும் பார்த்தீங்கன்னா..!? குளச்சல் முட்டம் ஏரியா டீச்சர் நெனைச்சா, உடனே கடற்கரைக்கு வந்து காத்து வாங்குவாங்கல்ல!

எல்லா படத்தில வர மாதிரியும் கெஸ்ட் ரோல்ல ராஜா (இப்ப எங்கப்பா ஆளையே காணும்?)

மற்ற விஷயங்களையெல்லாம் ரொம்ப டீடெயில போய் பார்க்கணும்னு தேவையே இல்லை! படத்தின் பாடல்களே உங்களுக்கு தெளிவாக்கிவிடும் படம் பற்றி...!


கொடியி்லே மல்லியபூ, மனக்குதே மானே, ஜெயச்சந்திரனின் குரலில் ஆரம்பிக்கும் பாடலுக்கு, ஜானகி குரல் இணையும் போது என்ன ஒரு ஆனந்தம்!




அருமையான கதை!

அதற்கேற்றார் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் !

இவையனைத்தும் அழகாக அரங்கேற்றப்பட்ட முட்டம் கடற்கரை!

மனதை உருக்கும் இசையில் என

அனைத்து அம்சங்கள் சேர்ந்து ஒரு படம் வந்தால் என்னவாகும்?

மனசு சிறகடிக்கும்..!

மகிழ்ச்சி பொங்கும்..!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பாரதிராஜாவின் காலம் என்ற காலப்பகுதியில் வந்த அருமையான படங்களில் ஒன்று. இம்மாதிரிப் படங்களை இனிமேல் பாரதிராஜாவே படைக்கமுடியுமா என்பது சந்தேகமே.

பாட்டின் நடுவில், கடலுக்குள் போன சத்யராஜை தேடிப் பதைபதைக்கும் ரேகாவின் கண்கள் காட்டும் நடிப்பே, பாரதிராஜாவின் நுணுக்கமான இயக்கத்துக்கு ஓர் சான்று

said...

தலைவர் சத்யராஜ் நடித்த 'கடலோரக் கவிதைகள்' படத்தினைப் பற்றிய நினைவுகளைத் தட்டி எழுப்பியதற்கு நன்றி.

தீவிர சத்யராஜ் ரசிகனான் நான் ஒரு விஷயத்திற்காக உங்களது இந்தப் பதிவைக் கண்டிக்கவும் செய்கிறேன்... அது எப்படி சார், "பாரதிராஜா உருவாக்கிய புதுக்கவிதை, இளையராஜவின் இசைக்கு வைரமுத்துவின் கவிதைகள், ரேகா ரொம்ப அழகா நடிச்சுருப்பாங்க,
எல்லா படத்தில வர மாதிரியும் கெஸ்ட் ரோல்ல ராஜா, அருமையான கதை, அதற்கேற்றார் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள்,
இவையனைத்தும் அழகாக அரங்கேற்றப்பட்ட முட்டம் கடற்கரை,
மனதை உருக்கும் இசை....." என்றெல்லாம் குறிப்பிட்ட நீங்கள், ஒரு வார்த்தை, இல்லை ஒரு வார்த்தை.... அண்ணன் சத்யராஜைப்பற்றி... சின்னப்பதாஸாகவே வாழ்ந்த சத்யராஜைப் பற்றிக் குறிப்பிட்டீங்களா சார்............ நீங்க நிறைய பதிவுகள் போட ஆரம்பிச்சுட்டீங்க... வாழ்த்துக்கள்.. ஆனா எப்படி ஸார், சத்யராஜைக் குறிப்பிட மறந்துபோனீங்க.

படத்திற்குப் backboneஏ சத்யராஜ்தான் சார்....

//பாட்டின் நடுவில், கடலுக்குள் போன சத்யராஜை தேடிப் பதைபதைக்கும் ரேகாவின் கண்கள் காட்டும் நடிப்பே, பாரதிராஜாவின் நுணுக்கமான இயக்கத்துக்கு ஓர் சான்று//

கனா பிரபா, நீங்க சொன்னது சரிதான். ஆனா, அதே காட்சியிலே, திடீரென்று சத்யராஜ் ஒரு மீனுடன் வெளிப்பட்டு அப்பாவித்தனமாக ஜெனிபர் டீச்சர் முன்னாடி சிர்ப்பாரே... அது சூப்பர்ப் ஆக்டிங்க் இல்லை? frame-to-frame தலைவர் கலைக்கிய காவியம் அது.