வாங்க..! சாண்ட்விச் சாப்பிடலாம்..!

காபி குடிச்ச டேஸ்ட்டு, இத்தனை நேரமும், இருந்திருக்கும் நினைக்கிறேன்..!? இப்ப கொஞ்சம் லைட்டா, பசிக்க ஆரம்பிச்சிருச்சில்ல? வாங்க ஒரு சாண்ட்விச் சாப்பிடலாம்...!

நான் ரொம்ப நாளா டிரை பண்ணி கடைசியா கண்டுபிடிச்சேன்ங்க கரெக்ட்டான பேரு ஃபலாபல் - சாண்ட்விச்ன்னா இதுதான் இங்க கத்தார்ல.! எல்லாருக்கும் காலை உணவு!

இது அரபிக்களின் பாரம்பரிய உணவு ஐட்டம்ங்களில் ஒண்ணு! ஆனா பாருங்க நம்ம தமிழ் ஆளுங்க இத கொஞ்சம் கொஞ்ச்ம பேரு மாத்தி மாத்தி கடைசியா பலாபழமாக போறதுக்கு இன்னும் கொஞ்ச நாள்தான்!

பொதுவாக இங்கு காலை வேளைகளில் இந்த ஐட்டம்தான் பலரது பசியை போக்கும் பிரேக் பாஸ்ட் ஐட்டம்..!



Photo Sharing and Video Hosting at Photobucket


படத்த பார்த்த எதோ மசால் வடை மாதிரி இருக்கேன்னு தானே பார்க்குறீங்க..!


அதே, அந்த ஒரு காரணம்தான் நான் இத, வாங்கி சாப்பிட காரணமா இருந்தது - இப்பவும் இருக்கறது!



Photo Sharing and Video Hosting at Photobucket


இது மசால் வடை மாதிரி! ஆனா, அந்த டேஸ்ட்ல கொஞ்சமா கசக்குது என்னான்னு தெரியலை!

எப்படி பண்றாங்கன்னு சொல்றேன் கேளுங்க..!

ஏறகனவே நான் உங்களுக்கு குப்பூஸ் காமிச்சிருக்கேன்! அதுல ஒரு ரெண்ட எடுத்து (பொதுவா ஒண்ணுத்தான் ஆனா நான் ரெகுலர் கஸ்டமருங்கறாதால ரெண்டு!)



Photo Sharing and Video Hosting at Photobucket


அதுக்கு நடுவாப்பல இந்த ஃபலாபல் ரெண்டு வைச்சு,கொஞ்சம் தக்காளி கொஞ்சம் பச்சைமிளகாய் கட் பண்ணி போட்டு,கொஞ்சம் கொ.கடலை பேஸ்ட் தடவி,அப்படியே கொஞ்சமா, ஹீட்டாக்கி, ரோல் பண்ணி கொடுத்துடுவாங்க! அத, அப்படியே வாங்கி தின்னுட்டு, ஒரு டம்ளர் தண்ணி குடிச்சா போதும், அடுத்த அஞ்சு மணி நேரத்துக்கு நோ பிராப்ளம்!

சரி இத, சாப்பிட்டு வேலைய பாருங்க! நான் ஆபிஸ் பக்கம் போய் தலைய காமிச்சிட்டு வந்திடுறேன்..!!!

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

\\சரி இத, சாப்பிட்டு வேலைய பாருங்க! நான் ஆபிஸ் பக்கம் போய் தலைய காமிச்சிட்டு வந்திடுறேன்..!!!\\

எந்த ஆபிஸ்க்கு தமிழ்மண ஆபிஸ்க்கா!? ;)

said...

ஸொர்மா என்று கூட ஒன்று உண்டு. மட்டன் அல்லது சிக்கனை மொத்தமாக கம்பியில் கட்டி நெருப்பிற்கு அருகில் தொங்கவிட்டு அரிந்து குப்பூசில் வைத்துத் தருவார்கள். அதுவும் நல்லா தான் இருந்தது.

said...

சாண்ட்விச்சில் சைவம் உண்டு அசைவம் உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறுன்னு! மலையாளி ராகத்தோடதான் கேட்பான் நாங்கெல்லாம் மாமிச தின்ன மறுக்கற குரூப்பு! அதனால அதப்பத்தி நோ xபீரியன்ஸ் அக்கா!

said...

//இது அரபிக்களின் பாரம்பரிய உணவு ஐட்டம்ங்களில் ஒண்ணு!//

I dont think this food is the traditional one of Arabic people. What I find here more common among the Arabic people and the expats is the influence of western food habits thanks to KFC, McDonald, Hardees, etc.

enakkenavo... Garden, Vasantha Bhavan..nnu pOi nei roast, masaal dosainnu saapidathaan aasai.

//ஸொர்மா என்று கூட ஒன்று உண்டு//

amaaamaa...... kannapinnannu ஸொர்மா thinnuthaan kandapadi weight pOttuttaen...mmmm

said...

//I dont think this food is the traditional one of Arabic people. What I find here more common among//

உண்மைதான் கே.எப்.சி & மெக்டொனல்டு ல கூட்டம் கூடுறது!

ஆனா இந்த ஐட்டம் கிடைக்கற தோஹா ஸ்டேடியம் மற்றும் தோஹா ஜதீத் போன்ற இடங்களில் கார்கள் வரிசையில் நின்று வாங்கி செல்வதை கண்டதுண்டு நான்!

said...

கசக்குதா? அய்ய அப்ப உங்களுக்கு பழச கொடுத்து ஏமாத்துறாங்க போல(ரெகுலர் கஸ்டமர் என்பதால்)...

அப்படி எல்லாம் கசக்காதே நல்லா தான் இருக்கும்

said...

hello.... wherever u go around the world ... nothing will beat our idli ..... dosai.... amma arumai puriyatha chellam///?

said...

இல்லை; வேண்டாம்.