என்ஜாய் தீபாவளி - இதை மறந்து...?!

பார்கின்சன் நோய், மூளையின் வேலைத்திறனை குறைக்ககூடிய வகையில் செயல்ப்டக்கூடிய கொஞ்ச்சூண்டு அலுமினியம்!

கிட்னி செயல்படாதவாறு பார்த்துக்கொள்ளக்கூடிய கொஞ்ச்சூண்டு பொட்டாசியம்!

பித்தப்பையில பிரச்சனை பண்ற மாதிரி வேலை பார்க்கும் கொஞ்ச்சூண்டு செம்பு!

இதயத்தை இம்சைக்கட்டி அடிக்கற அளவுக்கும் கொஞ்ச்சூண்டு காரீயம்!
இது எல்லாம் இப்ப வரப்போகுது உஷாரய்யா! உஷாருன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க! அரசு சார தனியார் தொண்டு நிறுவனங்கள்!

ஏன்? கோக் பெப்சி மாதிரி வேற எவனாவது இத வைச்சு பிஸினஸ் பண்ணிக்கிட்டிருக்கானானு கேட்கறீங்களா?

நாமளே நமக்கு வைச்சுக்கற ஆப்புககளாம் இதெல்லாம்!

தீபாவளி அன்னைக்கு வெடிக்கிற வெடியிலேர்ந்து வர்ற புகையில் இருக்கற மேட்டர்களதானம் அம்புட்டும்! சத்தத்தை குறைக்கற மாதிரி வெடி வந்தாலும், இன்னும் புகைய குறைக்கற மாதிரி வெடி வர்லேன்னு ரொம்ப ஃபீல் பண்றாங்க சேவை அமைப்புக்கள் (அடப்பாவிகளா! போறப்போக்க பார்த்தா வெடிக்கு பதிலா வத்தியை கொளுத்தி வைச்சுக்கிட்டுதான் தீபாவளி கொண்டாடுனுமா?)

சரி..! தம்பி இவ்ளோ சொல்றீயே நீ என்ன செய்யப்போறேன்னு கேட்றீங்களா? நான் எப்பவும் சுத்தமான தமிழ் அரசியல்வாதிங்க!

சொல்றத செய்யமாட்டோம்!

சில சமயங்களில் சொல்லவும் மாட்டோம்!

செய்யவும் மாட்டோம்!!

காலையில அஞ்சு மணிக்கு வெடியை பத்த வைக்கலன்னா கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடும் அந்தளவுக்கு வெடிக்காரன்!