பில்டர் காபி? - இது துருக்கிஷ்ம்மா..!

சாதரணமா ஆபிஸ்க்கு, எதோ வந்தோமா எப்பவாவது டீ குடிச்சோமா, போனோமான்னுதான் இருந்துக்கிட்டு இருந்தேன்! கொஞ்ச நாள் வரைக்கும்!

ரமலான முடிஞ்சதுக்கப்புறம்தான், இந்த மிசிரிக்காரங்க,லாஸ்ட் 30 நாள்ல குடிக்க மறந்த டீ இன்ன பிற சமாச்சரங்கள் கேட்டு, வாங்கி அடிச்சு, தள்ளிக்கிட்டிருந்தாங்க!

நான் மட்டும் பாத்துக்கிட்டு சும்மா இருப்பேனா? நாமளும் ஸ்டார்ட் பண்ணுவோம்னு ஆரம்பிச்சதுதான்!

டீ பாய்க்கிட்ட மாமு..! எப்பவும் குடுக்கற டீ வேணாம் வேற எதாவது ரெடி பண்ணி எடுத்துட்டு வான்னு சொல்லி அடுத்த பத்தாவது நிமிசம் இந்த துர்க்கிஷ் காபி கொண்டு வந்தாப்ல.., வந்த வாசமோ காபிடா காபிடான்னுன் மனசு அடிச்சிக்குது!


அய்யோ காபியேதாங்க! வாசனை வைச்சே ஆஹா நாம தேடி அலுத்து போன ஐட்டம்டான்னு உள்ளுக்குள்ள ஒரு சந்தோஷம்! டக்குன்னு எடுத்து வாயில் வைக்கப்போன என்ன டீ பாய் தடுத்து கொஞ்சம் பொறுங்க அஞ்சு நிமிஷம் கழிச்சு குடிங்கன்னு சொல்ல, மோப்பம் புடிச்சிக்கிட்டே இருந்தேன்!
ஆரம்பிச்சிட்டேன்...!

காப்பி தூளை போட்டு நல்லா கொதிக்கவைச்சு அப்படியே கருப்பு கலருக்கு வந்தப்புறம், அப்படியே எடுத்து ஒரு ச்சின்ன கப்ல ஊத்தி,டேபிள கொண்டாந்து வைக்கும்போது, கிளம்புற காபி வாசனை என்னைய மயூரா ஹோட்டல் டபுள் ஸ்ட்ராங் காபிய ஞாபக்ப்படுத்திக்கிட்டே இருக்கும்! என்ன ஒண்ணு பால் மட்டும் மிஸ்ஸிங்!!

நான் நினைச்சத விட பல மடங்கு ஸ்ட்ராங்காவே, எனக்கு கிடைச்சிடுச்சிங்கோஓஓஒ.....!

(எங்க ஊர்க்காரங்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த விஷயத்தை எங்க வீட்ல சொல்லிப்புடாதீங்க! தலை வெள்ளையா போயிடும்டா வேணாம்டா ராசான்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க....!!!! )

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

mmmmmm குடிங்க குடிங்க - நல்லாத்தான் இருந்திருக்கும்

said...

படத்தில் காண்பித்த அளவு குடிக்கலைன்னு நம்புறேன். அது ரொம்பவே ஸ்ட்ராங்க ஆச்சே, அவங்க் குடுக்கிற கப் பார்த்தீங்க்ளா? எவ்வளவு சின்னதா இருக்கு..

said...

ரொம்பல்லாம் இல்லைங்க டெய்லி ரெண்டு தடவை மட்டும்தான்!!

said...

உவ்வே! எனக்கு வேண்டாங்க!இது பில்டர் செய்யாத காபி.காபின்னா சில்வர் டபரா செட்டுல ரெண்டு தடவ ஆத்தினோமா.அந்த நுரையோட குடிச்சோமான்னு இருக்கணும்.கோவை கவ்ரிசங்கர்,மதுரையில காலங்கார்த்தால பெரிய கிளாஸ்ல அப்ப சுடச் சுட கொடுப்பாங்க அதுக்கு பேரு காப்பிங்க!