கோழி :-(

எங்களின் வாழ்க்கையும் பூஜ்யத்திலிருந்தேதான் - முட்டையில் ஆரம்பிக்கும் வாழ்க்கை!

எங்களின் கூட்டத்தோடே குதூகலித்திருக்கும் சில கால வாழ்க்கை!

சிறகுகள் இருந்தும் பறக்க இயலாத பறவைகள் நாங்கள்!

பறக்க நினைத்தாலும் பறக்க இயலாத பறவைகளாய் நாங்கள்!

பறக்க மட்டுமல்ல சுதந்திரமாக நடக்க கூட முடியாத நாங்கள்!

சுதந்திர காற்றை எங்களால் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரையிலும் சுவாசிக்க முடிவது இல்லையே ஏன்...?

உங்களால் மட்டுமே முடிகிறது மிக விரைவிலேயே எங்களின் வாழ்க்கை பயணமும்,

கொஞ்சம் யோசியுங்களேன்.......!
உங்களால் உங்களுக்கும் நலம்!

உங்களால் எங்களுக்கும் நலம்!

கோபம்


சடக்கென்று வந்து செல்லும் ஒரு விஷயம் சென்ற பின் தெரியும் அதன் வடுவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளின் விபரங்களும்! நமக்கு பிடிக்காத ஒன்றினை மற்றவர் செய்யும் போதுதான் பெரும்பாலும் கோபம் வெளிப்படுகிறது.

பெரும்பாலான மனிதர்கள் கோபம் அடைந்து அதை வெளிக்காட்டிய பின்னர் சில மணி நேரங்கள் கழித்தோ அல்லது சில நாட்கள் கழித்தோ கூட தமது கோபம் நினைத்து வருந்துதல் அல்லது தவறு என கண்டறிகிறார்களாம் இன்னும் சிலர் தம்மை நினைத்து கேலியாக சிரித்துக்கொள்கிறார்களாம்! இதைத்தான் கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்று நம் பெரியவர்கள் சொன்னார்களோ என்னவோ....!?

பிடிக்காத வேலையில் மற்றவர்கள் ஈடுபடுதல், பிடிக்காத வேலையில் ஈடுபட்டல் இவைகளால் தான் ஆத்திரம் அல்லது கோபம் குபுக்கென்று வந்து வார்த்தைகளாய் விழுகிறது சில சமயங்களில் அடிதடிகளாய் கூட அரங்கேறுகிறது.

கோபத்தின் வெளிப்படுத்துவதில், பெரும்பாலனோரின் ஆதரவோடு முதலிடத்தில் இருப்பது ச்வுண்டுவுடுதல் - காட்டு கத்தல் கத்தினால் மனுசன் சரியான கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தப்பட்டுக்கொள்ளவேண்டுமாம்!

அருகிலிருக்கும் பொருட்களை உடைத்தல்,
கண்ணாடிகளை தூள் தூளக்குதல்,

இதெல்லாம் நார்மலா நடக்குறது நம்ம ஊரு ஸ்டைல் கோபங்கள் எல்லாம்,

பாத்திரங்களை வீசுதல் - பூரிகட்டைகளை பற்றி தெரியாதவர்களா இருக்கிறார்கள் நம் வலைபதிவுலகில்:-)
நாற்காலிகளை உடைத்தல்,
சுவரில் முட்டிக்கொள்ளுதல் - இதிலும் சிலர் ரொம்ப ஜாக்கிரதையாக தலையாணை வைத்துக்கொண்டு முட்டுபவர்களும் உண்டு!
இப்படித்தான் வெளிப்படுத்தப்படுகிறது. இதையும் தவிர்த்து அதிக பட்ச கோபங்கள் ஆபத்தான் முறையிலும் கூட வெளிப்படுத்தப்படுகிறது!

எனக்கு ரொம்ப கோபம் வரும் ஆனால் வெளியில காட்டிக்கவே மாட்டேன் என்று பெருமைக்கொள்ளும் மக்களுக்கு மரியாதையாக கோபத்தை நிறுத்திக்கொள்ளுங்கள் உங்களுக்குத்தான் நிறைய நோய்கள் வர வாய்ப்பிருக்கிறதாம்!

சரி கோபத்தை எப்படி நிப்பாட்டறதுன்ன்னு கேட்டா?

கோபத்தை நிப்பாட்டுவது உடனே சாததியமில்லாத விசய்ம், அதை கட்டுபடுத்தும் முயற்சிகளை முதலில் மேற்கொள்ளுங்கள் !

கோபத்தின் ஆதிக்கம் அதிகரித்தால், பிடிக்காத செயல்களும் தொடர்ந்தால், அந்த இடத்தினை விட்டு உடனே அகன்றிடவேண்டும்! என்று சிலர் அறிஞர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்!

ரொம்ப பெஸ்ட்டுன்னு சொல்லணும்னா 1,2,3....... தானாம்! இதுதான் நல்ல வொர்க் -அவுட் ஆகி கோபத்தை அவுட் செய்கிறதாம்!

அப்படியும் கோபம் இருந்தால் நன்றாக மூச்சினை உள்ளிழுத்து வெளி விடுங்கள் சில நிமிடங்களுக்கு.....!

இன்னும் கொஞ்சம் கோபம் இருந்தால் எதாவது பாட்டு கேளுங்கள் அல்லது பக்தி மார்க்கத்திற்கு சென்றுவிடுங்கள்!

இல்லப்பா இன்னும் கூட எனக்கு கோபம் இருக்குப்பா என்ன பண்றதுன்னு கேட்டா ஒரே முடிவுதான்...!

போய் செவுத்துல முட்டிக்கோங்கப்பா!

எல்லாமே க்ளியர் ஆகிடும்! (பெறவு என்னங்க இதுக்கும்மேலயுமா ஒரு மனுசனுக்கு கோபம் இருக்கும்!)

கேரளம் - எனக்கு இஷ்டமாயீட்ட ஸ்தலத்திலிருந்து......!

நம்ம என்னதான் குறை சொன்னாலும் பாருங்க எனக்கு வல்லிய இஷ்டமாயீட்ட பூமியிலேர்ந்துதான் மக்கள் - பெரும்பாலும் ஆண்கள் - போய் காலகணக்கின்றி சம்பாத்தியம் அரபு நாட்டு காசை அன்னை மண்ணுக்கு அனுப்போ அனுப்புன்னு அனுப்பிக்கிட்டே இருக்காங்களாம்!

இந்த மாதிரி மாநிலத்தோட வருவாயின் மூன்றாவது சோர்ஸாக எனக்கு இஷ்டமாயீட்ட ஸ்தல மக்கள் ,அங்க நினைச்ச நேரத்துக்கு ஸ்ட்ரைக்கு பண்ண முடியுது நினைச்ச நேரத்துக்கு மழைப்பெய்து நினைச்சு நினைச்சு பெருமூச்சு விடும் அளவுக்கு அழகிய பெண்களின் அவதாரங்கள் அந்த பூமியில் திகழ்ந்துக்கிட்டிருக்கு!

வெளிநாடுகளிலிருந்து எண்ட கேரளத்து மக்களிடமிருநது வரும் தொகை சுமாராக 40சதவீகிதம் வெளிநாட்டு வருவாயாக உள்ளதாம் நம் தேசத்துக்கு !

2 மில்லியன் மக்கள் நிரந்தரமாக வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகிறார்களாம்,சுமார் ஒரு மில்லியன் மக்கள் சும்மா போய்க்கிட்டும் வருமானத்தை சம்பாதித்து வந்துக்கொண்டும் இருக்கிறார்களாம்!

இந்த மக்களின் உழைப்பில் பெறும் பணம் கேரளாவின் வளர்ச்சியை எளிதாக எடைப்போட்டுக்காட்டுகிறதாம், பெருகிவரும் கட்டிடங்கள் வியாபார ஸ்தலங்கள் மக்களின் வாங்கும் தன்மை பெருகுதல் என எல்லாவற்றிலும் அயல்நாட்டு பணம் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது.

பலரும் தாம் அரபு மண்ணில் சம்பாதித்த பணத்தை கொண்டு அன்னை மண்ணில் அழகிய வேலைப்பாடுகளமைந்த பழங்காலத்து முறையிலமைந்த வீடுகளை கட்டி மினி அரபு தேசமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்களாம்!
எனக்கும் கூட ஆசைதான்! யாராவது வீடு ”கட்டி” தருவார்களா..?

குறிப்பு:-

மக்கா! யாருக்காவது பொறாமை இருந்தா மெதுவா அந்த ஆமைய ஒட்டிக்கிட்டு அந்தாண்ட போயிடுங்க அதவிட்டுட்டு, என்ன ஆயில்யன் உங்க சேச்சிங்க போட்டோவா போட்டுருக்கீங்கன்னு? எதாவது சவுண்ட் வந்துச்சு.....?!

ஏப்ரல் 28ல் - இன்று மட்டுமல்ல, என்றுமே பாதுகாப்பாகவே பணியில் ஈடுபடுங்கள்!


பணியிடத்தில் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக தற்போது மாறி வருகிறது.!

காலையில் மிகுந்த உற்சாகத்துடன் வேலைக்கு செல்லும் மனிதர் திரும்பவும் அதே உற்சாகத்துடன் திரும்புகையில் குடும்பத்திற்கு மகிழ்ச்சிதானே!

பணிக்கு செல்லும் போதும் சென்ற பிறகும் பிறகு திரும்பும்போதும் நாம் ஒன்றை மட்டுமே நினைவில் கொள்ளவேண்டும் நாமாகவே தேவையற்ற ரிஸ்க்குகளில் ஈடுபடகூடாது!

ரிஸ்க்ன்னு சொன்னா எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு சொல்றவங்க அப்பால போய் ஒரு டீ ஊத்திக்கினு கம்னு கிடங்கப்பா!

பணியிடத்தில் விபத்து என்பது ஒரு சாதாரண செய்தி அல்ல,உயிர் இழப்பு,உடைமைகள் இழப்பு,உற்பத்தி திறனையும் இழப்பு என பெரும் சேதம் விளைவிக்கும் விஷயமாகத்தான் ஒரு சாதாரண விபத்து இருக்கிறது!

விபத்தினை தவிர்க்க பயன்படுத்த வேண்டிய பாதுகாப்பு சாதனங்களின் மதிப்பினை, விட பல மடங்கு மதிப்பு வாய்ந்தவை நாம் இழ்ந்த விஷயங்கள்!

அதிக அளவு ஒலி,அதிக அளவு ஒளி,அதிக அளவு வெப்ப உமிழ்வுகள் அதிக அளவு அதிர்வுகள் இவைகள் நம்மை உடல் ரீதியாக பெரிதும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றன.இவை அல்லாமல் எரிச்சல் அடைதல் மனச்சோர்வு அடைதல் போன்றவை மனரீதியாக பாதிப்புக்குட்படுத்துகின்றன.

மேலும் நம் கையாளும் பொருட்கள் விஷத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் மருத்துவ கழிவுகளில் உள்ள வியாதிகளை பரப்பும் விஷயங்கள் இவைகளும் நம்மை பயமுறுத்தும் பாதுகாப்பு அற்ற பணியிடத்து விஷயங்கள்!

அனைத்து பணியிடம் சார்ந்த விபத்துகளும் பெரும்பாலும் மனிததவறுகளாலேயே ஏற்படுகின்றன எனபது நிரூபணமான உண்மை!

எவ்வளவுதான் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் விழிப்புணர்வுகளை உண்டாக்கும் செயல்களை செய்தாலும் கூட பணியாளர்கள் அதை கடைப்பிடிப்பதில் காட்டும் அலட்சியம் இன்றும் இன்னும் கூட விபத்துகளின் விபரங்களை செய்திகளாய் தந்துக்கொண்டேதான் இருக்கின்றன!

நான் சென்னையில் கண்ட காட்சிகளாய் பணியிடத்தில் பாதுகாப்பு மேற்பார்வையாளர் வரும் சமயங்களில் மட்டுமே தலைப்பாகையுடன் காட்சியளித்து அவர் சென்ற பின்னர் அதை வீசி எறியும் அந்த மக்களுக்கு தெரியுமா அது சின்னஞ்சிறார்களின் விளையாட்டு அல்ல என்று!

மக்களுக்கு விழிப்புணார்வினை ஏற்படுத்தும் நோக்கில் பல ஆண்டுகளாக நிறைய ஆய்வுகளினை செய்து, ஒவ்வொரு பணியையும் மேற்கொள்ளும் முன்பு அந்த பணியில் நிறைந்திருக்கும் விபத்து வாய்ப்புக்களின் எண்ணிக்கை எப்படி ஏற்படகூடும் அவ்வாறு ஏற்பட்டால் எப்படி பாதுகாக்கலாம் என்று தீவிர ஆய்வுகளினை மேற்கொண்டே பல பெரிய பணிகளில் ஈடுபடுகின்றனர்! - இவ்விஷயத்தில் நம் நாட்டினை பொறுத்த வரையில் மத்திய அரசு சிறப்பாக கடைப்பிடித்து வருகிறது என்பது என் எண்ணம் - மாநில அரசினை பொறுத்தவரை பாதுகாப்பு அப்படின்னா என்னாப்பா? என்ற ரேஞ்சில் தான் இருக்கிறது(அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரும் அரசு துறைகள்)

சரி என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கணும்னு கேட்டா, வேலை இடங்களில் பாதுகாப்பு உபகரணங்களை உபயோகித்து அக்கறையுடன் பணியில் ஈடுபடுங்கள்!

ஒவ்வொரு முறையும் பணியில் ஈடுபடும்போதும் குடும்பத்தை நினைத்துக்கொள்ளுங்கள் செய்கின்ற செயல்களில் அலட்சியம் இருக்காது ஆர்வத்துடன் ஆபத்தின்றி செய்ய இயலும் என்கிறார்கள் இந்து துறையில் பாடம் நடத்த்திக்கொண்டிருப்பவர்கள்!

பணியாளர்களிடம் வேலை வாங்குபவர்களும் மிக்க கவனத்துடன் வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் தம் குடும்பத்து உறுப்பினர்களாக நினைத்து பழகவேண்டும் என்று கூறுகிறார்கள்!

நான் படித்த ஒர் ஆண்டு டிப்ளமோ தொழில்துறை பாதுகாப்பு சம்பந்தமான படிப்பில் சொல்லிக்கொடுக்கப்பட்ட விஷயங்களில், மிக முக்கியம் என்று சொன்ன விஷயம்!

சொன்னா கேட்டு நடந்துங்கோங்கப்பா!” இதுதாங்க!

என்னதான் மற்றவர்கள் நம் பாதுகாப்பினை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தாலும் நம் மீது நமக்குத்தானே அக்கறை வேண்டும்! நம்மை சார்ந்து வாழும் நம் குடும்பம் என நினைத்துப்பார்த்து வாழும் வாழ்க்கையினையும் செய்யும் பணியினையும் சிறப்பாக பாதுகாப்பாக செய்து மாண்புற வாழ்வோம்!

தந்தி கம்ப ஸ்டாப்புல இறங்கிக்கிறேன்ப்பா :-)

ஓவர் மப்புல வர்றவங்களுக்கு ஸ்டாப் அல்லது ஸ்டாப்பிங்க இது மாதிரி மின்கம்பங்களும் காம்பவுண்ட் சுவர்களும் முள் வேலிகளும் ரொம்ப யூஸ்புல்லாக இருந்தனவாம்!

சில சமயங்களில் அரசே ரொம்ப ஆய்வுகள் செய்து இன்னும் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யணும் அப்படின்னு நினைச்சதன் வெளிப்பாடுதான்ல இது!

அப்படியே நேர வந்து முட்டி விழுந்து அவங்கவங்க வீட்டுக்கு போறதுக்கு சூப்பரா இருக்குல்ல....!

கொஞ்சம் நினைச்சு பார்த்தா சிரிப்பா இருக்கு ஆனாலும் ...



படத்துக்கு பின் உள்ள சோகத்தில் சில...!

பட்டுக்கோட்டை அருகே நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட மேலமங்கனங்காட்டில் ஆர்.ஆர்.சாலை உள்ளது. இச்சாலையின் நடுவே பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மின்கம்பம் ஒன்று இருக்கிறது. மின் கம்பத்தில் விளக்கு பொறுத்தப்பட்டிருந்தாலும் வளைவான இடத்தில் உள்ள இந்த மின்கம்பத்தால் விபத்துகள் எந்நேரமும் ஏற்படலாம். மேலும் இச்சாலையில் ஒரு மினி பஸ்சும் செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த மின் கம்பத்தினை அகற்றி சாலையின் ஓரத்தில் நடும்படி ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் அதிராம்பட்டினம் மின்சார வாரியத்துக்கு கடந்த ஓராண்டாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது

கை நிறைய சம்பளம் வாங்குபவர்கள் - பகுதி 1

பல் டாக்டர்கள்:-

என்னதான் நாம கஷ்டப்பட்டு மத்தவன் பல்ல்லை ஒடைச்சாலும்,கரெக்டா இருக்கற மிச்ச மீதி பல்லுங்கள வைச்சு அழகான சீரமைச்சு தர்ற அட்வான்ஸ்டு டாக்டர்கள்தான் இப்போதைக்கு டிமாண்டல் இருக்கற ஆளுங்களாம்!

விண்வெளி விஞ்ஞானிகள்:-

வானத்தை பார்த்தேன்,அதில் பூமியை பார்த்தேன் பாடி திரியிற ஆளாக இருந்தவங்க இப்ப வானத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு பணக்கோட்டையில் உயர்ந்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறார்களாம் ஆஸ்ட்ரானமனி முடிச்சு ஒரு டாக்டர் பட்டம் வாங்கிய கையோடு வெளியே வந்தா கையில டாலர்களை திணிச்சு அப்படியே கொண்டுட்டு போயிட்றாங்களாம்!

தொழில் துறை சார்ந்த மனநல மருத்துவர்கள்:-

இப்போதைய சுழலுக்கு ஒரு ஆபிஸ்ல வேலை பார்க்கிறவங்க சும்மா ஒரு வாரம் வேலை பார்த்தாலே அம்புட்டு மக்களும் மனநலமருத்துவரை தேடித்தான் போகறாங்களாம்! பெரிய பெரிய கம்பெனிகள் ரொம்ப யோசனை பண்ணி எதுக்கு நாம் அவங்கள தேடிப்போகணும் ஒரு போஸ்டிங்க் போட்டுடாலம்னு தனியா அட்வைஸ்ரன்னு ஒரு போஸ்ட் கிரியேட் பண்ணிட்டு ஆளுங்கள தேடி அலையிறாங்களாம்!

கணக்கு வாத்தியார்:-

இந்த போஸ்ட்க்கு உலகம் முழுக்கவும் செம டிமாண்ட்டாம்! உண்மைதானே! - இப்ப நினைச்சா கூட பகீருங்குது! ஈவன் ஐ ஆம் ஆல்சோ திங்கிங்க் ஹெள ஐ பாஸ்ட்டு அவுட் ப்ரம் திஸ் சப்ஜெக்ட்! - (ரகசிய பாஷை! மொழி புரியாதவங்க மெயிலுங்க!)

அணு உலை இயக்குநர்கள்:-

உண்மையிலேயே ரொம்ப ரிஸ்க்கான வேலையாம் பின்விளைவுகள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்! அட கொட்டி கொட்டி குடுக்க தயாரா இருந்தா வாங்கி குவிக்க நம்ம ரெடிதானே!

அரசியல் ஆய்வாளர்கள்:-

நல்ல காசாம்! ஆய்வு செஞ்சு ஆய்வு செஞ்சு சம்பாதிக்கலாமாம்! உலக நாடுகளின் வரலாறு அப்புறம் உள்ளூர் வரலாறு இப்படி எல்லாத்தையும் கரைச்சு குடிச்சவங்களாம்!
நான் அடிக்கடி பிபிசி தமிழோசையில மட்டும்தான் கேள்விப்பட்டதுண்டு இந்த வாசகத்தை! ஆமாம் நம்ம தமிழ்நாட்டுல யாராவது இது மாதிரி இருங்காங்களாப்பா?

இதுல ஏதோ ஒரு பீல்டுல நாம இருக்கோம்ம்னு பெருமை பட்டுக்கிற மாதிரி இல்லையேன்னு ஒரே ஏக்கம் ஏக்கமா வருதுங்க அதான் பக்குனு ஒரு பார்ட்டா நின்னுப்போச்சி!

அடுத்த பார்ட்ல மிச்ச மீதி இருக்கறவங்களையும் அள்ளிட்டு வர்றேன்!

மதுரை காமெடி பாய்ஸ் - த.மு.எ.ச கலை இலக்கிய இரவில்....

1994களில் வருடந்தோறும் ஒரு இனிய இரவில் நடந்துக்கொண்டிருந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் கலை இலக்கிய இரவு எனக்கு புதிது.

இத்தனைக்கும் வீட்டுக்கு போகும் சாலையின் குறுக்கேதான் பந்தலிட்டு அழகிய ஓவிய பின்ணணியில் மேடை அமைந்திருப்பார்கள் ஆனால் ஏனோ சில வருடங்கள் கழித்துதான் இந்த விழாவினை காணும் ஆர்வம் வந்துது சில சினிமா பிரபலங்களும் கூட வந்ததுண்டு! ஆனால் எனக்கு ஆர்வத்தை வரவழைக்கும் விஷயமாக சொல்லப்பட்டது மதுரை காமெடி பாய்ஸ் குழுவினரின் நிகழ்ச்சியும்,கரிசல் குயிலின் பாடல்களும் திண்டுக்கல் சக்தி குழுவினரின் தப்பாட்டமும்தான்!

பலரும் சிலாகித்து பேசிய விஷயங்கள்தான் இவை மற்றபடி முற்போக்கு எழுத்தாளர்களின் விமர்சன பேச்சுகள்,பல அனல் பறக்கும் பேச்சுகள் எனவும் போய்க்கொண்டிருக்கும் இனிய இரவு

இரவு 8 மணி தொடங்கி அதிகாலை 5.00 மணி வரைக்கும்மான நிகழ்ச்சிகளில் உள்ளூர் சிறுவர் சிறுமியரின் ஆடல் பாடல்களும் கூட உண்டு!

சரியாக பலருக்கும் தூக்கத்தை வரவழைக்கும் நேரத்தில்தான் - அதுவரைக்கும் அனல் பறக்கும் பேச்சுகள்தான்! - மதுரை காமெடி பாய்ஸ் குழுவினர் மேடைக்கு அழைக்கப்படுவார்கள் சுமாராக 5 அல்லது 7 பேர் கொண்ட குழுதான் அது அனைவரும் வெவ்வேறு இடங்களில் பணி புரிபவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மாணவர்கள்.


இவர்களுக்கு அடிப்படையில் ஆக்கமும் ஊக்கமும் அளித்தது முனைவர் கு.ஞானசம்பந்தமாம் அவ்ரும் கூட இந்த கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டதுண்டு!

இன்றைக்கு நாம் காணுகின்ற கலக்கப்போவது அல்லது அசத்தபோவது யார் போன்ற நிகழ்ச்சிகளினை அப்போதே அரங்கேற்றி அதிரசெய்தவர்கள்தான் இந்த குழுவினர்!

வகை வகையான நகைச்சுவை காட்சிகளி அனைத்து நடிகர்களையும் அந்த விழா மேடைக்கு அழைத்து வந்தவர்கள்! மக்களை சிலமணி நேரங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்கள்! எவ்வளாவோ பேர் வாழ்த்தியதை நேரிலும் கண்டிருக்கிறேன்!

திரையுலகும் டிவியுலகும் இன்னும் வானொலியும் ஆக்ரமித்துவிட்ட இக்காலத்தில் அவர்கள் தம் பணியை மக்களை மகிழ்விக்கும் சேவையினை தொடர்கிறார்களா என்று சரியாக தெரியவில்லை? ( மதுரை மக்களுக்குத்தான் தெரிந்திருக்கும் தற்போதைய சுழல் என நான் நினைக்கிறேன்!)

அன்றைக்கு நன்றி சொல்லி வாழ்த்த முடியாவிட்டாலும், என் மனதில் பதிந்திருக்கும் நன்றியினை இங்கு இப்போது தெரிவித்துகொள்ள ஆசைப்படுகிறேன்! ரொம்ப பழைய நன்றியென்றாலும் கூட மனத்துக்கினிய விஷயம் எனக்கு..!

அங்கு பார்த்த ஒரு காட்சியினை ஒத்த ஒரு பாடல் நிகழ்வு என்னை மிகவும் கவர்ந்தது இது




எரிபொருள் இல்லா இரண்டு சக்கர வாகனங்களும் இனிய வாழ்வும்!

சைக்கிள் பெரும்பாலானோர் வாழ்வில் வெகு சகஜமாகவே வந்திருக்கும் சில சமயங்களில் சென்றிருக்கும் வாகனம்தான்!

எரிபொருள் பயன்படுத்தா இரண்டு சக்கர வாகனங்களால் மட்டுமே இந்த உலகினை மாறிவரும் தட்பவெப்பசூழலிலிருந்து பாதுகாத்து வரும் இளையதலைமுறைகள் நலமுடன் வளமுடனும் வாழ வழிவகை செய்யக்கூடிய விஷயங்களாம்!



உடல்நலத்திற்கும் ஏதுவானதாகவும் சுற்றுசுழலிற்கு ஏற்றதாகவும் மற்ற வாகனங்களை ஒப்பீடுகையில் விலை குறைவாகவும் இருப்பதால் இதற்கு முக்கியத்துவம் வருங்காலங்களில் அதிகரிக்ககூடும்!

இன்னுமொரு இரண்டு சக்கர வாகனம் கிராமங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துகொண்டிருக்கும் இரட்டை மாட்டு வண்டிகள்தான்!

மாறிவரும் காலத்துக்கேறப, எந்தவித யோசனையுமின்றி சுகமாக பயணிக்க வேண்டி, மாட்டு வண்டிகளை மறந்து டிராக்டர்களில் பயணித்து கொண்டிருக்கின்றனர் இன்றைய விவசாயிகளும் அவர்களால் விதைக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட நெல்மணிகளும் கூட.....!

எரிபொருள் இல்லா இரண்டு சக்கர வாகன பயணத்தை மீண்டும் மலர வைக்க தருணம் எதிர்பார்க்கவேண்டாம்...!

தொடர்வோம் பயணத்தை வரும் தலைமுறைக்கு வளமான வாழ்வினை வழங்கவேண்டி......!

ஹவாய் செருப்புகளும் இரண்டு மாதங்களும்!


எனக்கே எனக்காய் அதிகமாய் எடுக்கப்பட்ட பல ஜோடி நீலநிற செருப்புகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எனக்காக பட்ஜெட்டில் 15 ரூபாய் ஒதுக்கபட்டுவிடும்,அந்த காசினை கொடுக்கும் சமயங்களிலும் சரி,அதன் பின்னரும் சரி வரும் அட்வைஸ்களில் காலை தூக்கி நடடா! அதிகமாக இருக்கும்! - பிற்பாடுதான் உணர்ந்தேன் காலை தூக்கி நடக்க அதுவரையிலும் எனக்கு தெரிந்திருக்கவில்லை எதற்கு இரண்டு மாதத்திறகு ஒரு முறை எனக்கு 15 தேவைப்படுகிறது என்று!

ரோடு வலிக்க நான் நடந்தேனாக்கும் !

வெள்ளை நிறத்துடன் நீல நிற வாரினாலோ ஆனா அந்த ஜோடி ஹவாய் செருப்புகள் தான் இந்திய திருநாட்டில் இன்றும் பலருக்கு பாத காவலன் !

சிலருக்கு இது பாத்ரூம் செருப்பு என்ற வெறுப்பு கூட உண்டு ஆனால் அவர்களுக்கு தெரியாது இது கூட இல்லாமல் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இன்றும் உண்டு நம் நாட்டில் என்று..!

பள்ளிகளில் இலவச திட்டங்களில் பாத அணிகள் உண்டு என்றாலும் கூட அவரவர் அளவுக்கு வாய்ப்பது என்பது ரொம்ப கஷ்டம்தான். இன்னும் கூட நீஙக்ள் நம் பள்ளி குறிப்பாக கிராமங்களில் பல மாணவர்களும் செருப்பின்றி செல்வதை காண இயலும்! ஆள்பவர்கள் ஒருவருக்கும் கூட இதில் ஆர்வம் இல்லை ஒரு முறை காண்டிரக்ட் விட்டு கமிஷன் எடுத்துகொண்டால் எதையுமே கண்காணிக்கமாட்டர்கள் நம் தமிழ் அகத்து அரசியல்வாதிகள்!

வருடந்தோறும் இதன் தேவை அதிகரிப்பது ஏப்ரல் மற்றும் மே மாத காலங்களில்தான்! அதுவும் வெயில்காலத்தில் நம்மூர் சாலைகளில் போடப்பட்டிருக்கும் தாரினை நீங்கள் மொண்டு கூட எடுத்து செல்லலாம் அப்படியான ஒரு லட்சணத்தில்தான் நம்மூர் சாலைகள் பணி ஒப்பந்தகாரர்களின் செயல் இருக்கும் இந்த நிலைமையில், பாத அணி இல்லா பாதசாரிகளின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப்பாருங்களேன்!

இரண்டு கோட்டுத்துண்டுகள்

இளைய தலைமுறை இன்புற்றிருக்கும் இனிய பருவத்தில் மனதில் தோன்றும் எண்ணங்களெல்லாம் புதிதாய் இருக்கும் வயதில்,சீரியஸ்னஸ்ம் தெரியாத மொக்கையுமில்லாத காலகட்டத்தில்தான் ஒரு நண்பன் என்னிடம் கேட்டான்


டேய் ஒரு இரண்டு கோடுகள் போடுடா.....??

அப்படி நான் சொல்ற மாதிரி நீ கோடு போட்டின்னா.....

உனக்கு எவ்ளோ புரோட்டா வேணுமோ கேளு நான் அய்யப்பன் கடையில வாங்கிதர்றேன் ஒ.கே?

என்னாடா தானா வந்து மாட்டுறானேன்னு நானும் கொஞ்சம் கூட கிருத்துருவமா யோசிக்காமலே சடர்ர்னு ஒரு கோட்டை சயின்ஸ் நோட்ல போட்டு காட்டிட்டு வாடா புரோட்டா திங்க அய்யப்பன் ஹோட்டலுக்கு போகாலம்னு போகலாம்ன்னு சொல்ல?

அதுக்கு அவன் " நான் சொன்னது கோடு!

நீ போட்டது கோட்டு துண்டு அப்படின்னான்!

என்ன பயபுள்ள வித்தியாசமா பேசுதேன்னு லேசா ஒரு டவுட்டு! இப்ப நீ என்னாடா சொல்ல வர்றங்கறத்துக்கு,

நீ கோடு போட்டா போட்டுக்கிட்டேத்தான் போகணும் நிப்பாட்டினா அது கோட்டு துண்டுடாங்கறான்!


விவேகானந்தர் இல்லம் - ”அம்பலத்தில்”

அம்பலத்திலிருந்து "விவேகானந்தர் இல்லம்" பற்றி ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி கமலாத்மானந்தர்

இந்த விவேகானந்தர் இல்லத்திற்கும், விவேகானந்தருக்கும் என்ன தொடர்பு?
சுவாமி விவேகானந்தர் 1892-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக வந்தார். அப்போதுதான் அவர் 1892-ஆம் ஆண்டு டிசம்பர் கடைசியில், கன்னியாகுமரியில் இப்போது விவேகானந்தர் நினைவுச் சின்னம் இருக்கும் குன்றின் மீது அமர்ந்து தியானம் செய்தார். அங்கிருந்து அவர் மதுரைக்கு வந்தபோது, ராமநாதபுர அரசர் பாஸ்கர சேதுபதியைச் சந்தித்தார். ராமேஸ்வரம், பாண்டிச்சேரி வழியாக சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்தார்.
சென்னையில் அவர் மயிலாப்பூரில் தங்கினார்.சென்னையில் அவருக்குச் சீடர்கள் பலர் உருவானார்கள்.

சென்னையில் இருந்தபோதுதான் சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் நடைபெற இருந்த சிகாகோ சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்வதுப் பற்றி இறுதி முடிவெடுத்தார். சென்னை அன்பர்கள் தந்த ஊக்கத்தின் பேரில் அவர் அமெரிக்கா சென்றார்.

1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் நாள் சிகாகோவில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் அவருக்கு உலகளாவிய பெரும் புகழைத் தேடித் தந்தன. அதைத் தொடர்ந்து அவர் சுமார் 4 ஆண்டுகள் மேலை நாடுகளில் தங்கி, வேதாந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிறகு அவர் 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் இரண்டாம் முறையாகத் தமிழ் நாட்டிற்கு வந்தார். அப்போது அவர் பாம்பன், ராமேஸ்வரம், ராமநாதபுரம், மானாமதுரை, பரமக்குடி, மதுரை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியபடியே சென்னைக்கு வந்தார்.

சென்னைக்கு இரண்டாம் முறை வந்தபோது அவர் திருவல்லிக்கேணியிலுள்ள 'ஐஸ் ஹவுஸ்' என்ற கட்டிடத்தில் தங்கினார். அந்தக் கட்டிடம்தான் இப்போது 'விவேகானந்தர் இல்லம்' என்று அழைக்கப்படுகிறது.

விவேகானந்தர் இல்லம்... 1897-ஆம் ஆண்டு பிப்ரவரி 6 முதல் 14-ஆம் தேதி வரையில் ஒன்பது நாட்கள் சுவாமி விவேகானந்தர் இந்த ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் தங்கியிருந்தார். அப்போது அவர் சென்னையில் புகழ் பெற்ற ஆறு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

நம்நாடு அந்நியர் ஆதிக்கத்தில் இருந்தபோது கப்பலிருந்து வரும் ஐஸ் பார்களை அடுக்கி வைக்க ஏற்ற வகையில் இக்கட்டிடத்தை ஐஸ் கிடங்காகப் பயன்படுத்தி வந்தனர். அதனாலேயே "ஐஸ் ஹவுஸ்" என்ற பெயர் ஏற்பட்டது.

விவேகானந்தர் அங்கு தங்கியிருந்தபோது அந்தக் கட்டிடத்திற்கு "ஐஸ் ஹவுஸ்" என்றுதான் பெயர். பின்னர் விவேகானந்தரின் சீடரான பிலிகிரி ஐயங்காரால் வாங்கப்பட்டு "காஸில் கெர்னன்" (கருணை இல்லம்) என்ற பெயரைப் பெற்றது.

1963-ஆம் வருடம் விவேகானந்தரின் நூற்றாண்டு விழா சமயத்தில், இந்தக் கட்டிடத்திற்கு "விவேகானந்தர் இல்லம்" என்று தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியது.

1897-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் தங்கியிருந்தபோது அவரிடம் சென்னை அன்பர்கள், "சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஆரம்பியுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளை விவேகானந்தர் ஏற்றுக் கொண்டார்.
அதன்படி விவேகானந்தர் கல்கத்தா சென்றதும், ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரைச் சென்னைக்கு அனுப்பினார்.
சுவாமி ராமகிருஷ்ணானந்தர் 1897-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் நிறுவினார்.

1897-ஆம் ஆண்டு முதல் 1906 வரையில் சுமார் 10 ஆண்டுகள், காஸில் கெர்னன் கட்டிடத்தில்தான் ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தது.

அங்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தபோது ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களான சுவாமி சிவானந்தர், சுவாமி நிரஞ்சனானந்தர், சுவாமி திரிகுணாதீதானந்தர், சுவாமி அபேதானந்தர் ஆகியவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூத்தத் துறவிகளான மகான்கள் பலர் அங்கு வந்திருக்கிறார்கள். சகோதரி நிவேதிதாவும் அங்கு வந்திருக்கிறார்.

ஸ்ரீசாரதா தேவியாரின் சீடர்கள், சுவாமி விவேகானந்தரின் சீடர்கள் உட்பட பெரியோர்கள் பலர் காஸில் கெர்னனுக்கு வந்திருக்கிறார்கள்.

1902-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் சுவாமி விவேகானந்தர், பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் மகாசமாதி அடைந்தார். அதற்கு அடுத்தாண்டு அதாவது, 1903-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காஸில் கெர்னன் கட்டிடத்தில்தான் முதல் முறையாக "விவேகானந்தர் ஜயந்தி" கொண்டாடப்பட்டது.

இப்போது உலகில் எத்தனையோ இடங்களில் எவ்வளவோ பேர் விவேகானந்தஜயந்தியைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் உலகில் முதல் முதலில் விவேகானந்த ஜயந்தி கொண்டாடப்பட்ட இடம் என்ற பெருமை காஸில் கெர்னனுக்கு (கருணை இல்லத்திற்கு) மட்டும் உண்டு.
1897-ல் காஸில் கெர்னன் கட்டிடத்தில் மடம் ஆரம்பிக்கப்பட்டதே தவிர, அந்தக் கட்டிடம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குச் சொந்தமான கட்டிடம் அல்ல.

1906-ஆம் ஆண்டு காஸில் கெர்னன் கட்டிடம் ஏலத்திற்கு வந்தது. அப்போது அந்தக் கட்டிடத்தை விலைக்கு வாங்கக் கூடிய பண வசதி ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு இல்லை.

1906-ஆம் ஆண்டு விவேகானந்தர் இல்லத்திலிருந்து இப்போது மயிலாப்பூரில் இருக்கும் இடத்திற்கு மடம் மாறியது.

1963-ஆம் ஆண்டு விவேகானந்தர் நூற்றாண்டு விழா இந்தியா முழுவதும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அப்போது விவேகானந்தர் இல்லத்தின் அருகிலிருக்கும் விவேகானந்தர் சிலையை ஸ்ரீராமகிருஷ்ண மடம் நிறுவியது.

பிறகு 1986-ஆம் ஆண்டு இந்திய அரசு சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை 'தேசிய இளைஞர் தினம்' என்று அறிவித்தது. அப்போது முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 12-ஆம் தேதியன்று, விவேகானந்தர் இல்லத்தின் அருகிலிருக்கும் விவேகானந்தர் சிலை அருகில், விவேகானந்த ஜயந்தியை தேசிய இளைஞர் தினமாக மாணவ மாணவிகளுக்காக ஸ்ரீராமகிருஷ்ண மடம் கொண்டாடி வருகிறது.

அன்றைய தினம் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகள் நிறைய பேர் அங்கு கூடுவார்கள். அவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தும் வழக்கம் இருந்து வருகிறது.

விவேகானந்தர் இல்லத்தின் கட்டிடம் தமிழக அரசுக்குச் சொந்தமானது. அந்த இடத்தை நாங்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குத் தரும்படி கடந்த பத்து ஆண்டுகளாகவே தமிழ்நாடு அரசிடம் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1997-ஆம் ஆண்டு விவேகானந்தர் தாயகம் திரும்பிய நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, தமிழக அரசு விவேகானந்தர் இல்லத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது. தமிழக அரசு விவேகானந்தர் இல்லம் கட்டிடத்தை மட்டும்தான் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது. விவேகானந்தர் இல்லத்தைச் சேர்ந்த நிலப்பகுதியையும் தமிழக அரசு கொடுத்தால்தான், அங்கு இல்லத்தின் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியை ஆரம்பிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.

எனவே ஸ்ரீராமகிருஷ்ண மடம், இல்லத்தின் அருகிலிருக்கும் பகுதியையும் தரும்படி தமிழக அரசிடம் விண்ணப்பித்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாகவே இது தொடர்பாக ஸ்ரீராமகிருஷ்ண மடம் தமிழக அரசுடன் தொடர்பு கொண்டிருந்தது.

இப்போது 1998 டிசம்பர் மாதத்தில்தான் அந்த இடத்தை தமிழ் நாடு அரசு ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது. அப்படி டிசம்பரில் எங்களுக்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஜனவரி மாதமே விவேகானந்தர் இல்லத்தைச் சீரமைக்கும் பணியை ஆரம்பித்தோம்.

இந்தக் கட்டிடம் 1842-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடமாகும். இப்போது இங்கு கடந்த மூன்று மாதங்களாகக் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம்.இன்னும் ஆறு மாதத்தில் கட்டிடம் முழுவதையும் சீரமைக்கும் பணி முடிவடைந்துவிடும்.

விவேகானந்தர் இல்லத்தை இந்திய கலாசார மையம் ஆக்குவதற்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம் பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறது. இந்த இல்லம் சென்னை மாநகரத்தில் விவேகானந்தருக்கு ஒரு சிறந்த நினைவுச் சின்னமாக அமைய இருக்கிறது. இங்கு சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, அவர் உலகிற்கு வழங்கிய முக்கியச் செய்திகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு புகைப்படக் கண்காட்சியை அமைக்கயிருக்கிறோம். இங்கு விவேகானந்தரின் வாழ்க்கை, அவர் உலகிற்கு வழங்கிய முக்கியச் செய்திகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு புகைப்படக் கண்காட்சியை அமைக்கயிருக்கிறோம். இங்கு விவேகானந்தரின் கருத்துகள் ஆடியோ, வீடியோ கேசட்டுகள் மூலம் விளக்கப்படும். அதோடு இங்கு இளைஞர்களுக்கு இந்தியப் பாரம்பரியத்தின் கல்வியும், பயிற்சியும் அளிக்க இருக்கிறோம்.

சென்னையின் பெருமைக்கு மேலும் ஒரு பெருமையாக இந்த விவேகானந்தர் இல்லம் அமைய இருக்கிறது. இந்தப் பணி சிறந்த முறையில் அமைந்து, நாட்டு மக்களுக்குப் பல விதங்களிலும் பயன்படுவதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி உங்கள் எல்லோரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி:- அம்பலம்
***************************************************************************

இங்க வாங்க பெட்டிஷன் போடலாம்....

Online petition - Save Vivekananda Illam in Chennai

2ஆம் முறை தம் அ(பி)டிக்கும் நாம் !


நீங்கள் புகை பிடிக்காதவரா?

ஆம் எனில்,

நீங்களும் புகை பிடிப்பவர்தான்!

அட...! தம் அடிக்கறவங்க இழுத்து வெளியே விடற புகையை நீங்கள் இழுக்குறீங்க,
சுவாசிக்கிறீங்கள்ல அத தான் சொன்னேங்க!

நீங்களும் புகைபிடிப்பவர்கள் பிடித்து விடும் மிச்ச மீதி புகைகளை பிடிப்பவர்கள்தான்!

உண்மையாகவே நம்புங்கள் நாமும் இந்த புகை பழக்கத்தினால் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்!

இதுக்கு மேலை நாடுகளில் செகண்ட் ஹாண்ட் ஸ்மோக் - ரெண்டாவது வாட்டி இழுக்குறதுன்னு கூட சொல்லலாம் - என்றழைக்கிறார்கள் அதாகப்பட்டது ஒரு புகைபழக்கம் உள்ள நபர் தான் அனுபவித்து விடும் இன்பம் மெதுவாக காற்றில் கலக்கும் அதே சமயத்தில் இன்னொருவர் சுவாசித்து தனக்கு துன்பத்தை தேடிக்கொள்கிறார் அந்த நபர்தான் இந்த மாதிரியான செகண்ட் ஹாண்ட் ஸ்மோக்கர்கள்!

இதனால் பெரும்பாலும் நுரையீரல் தொடர்பான நோய்கள்,காது மூக்கு தொண்டை சம்பந்தமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்னு கண்டுபுடிச்சிருக்காங்களாம்!

என்ன ரொம்ப யோசனையா இருக்கா....???

நாம என்ன பண்ணமுடியும்?

முடியும்!

நிப்பாட்டணும் எல்லாரையும் நிப்பாட்டணும்

சிகரெட் புடிக்காதீங்கன்னு சொல்லி,

SMOKING INJURIOUS TO OTHERS HEALTH

சிந்தனையை சிதைக்கும் சிறுவர் டிவிக்கள் - தினமணியிலிருந்து



3 வயது குழந்தை முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை குழந்தைகளுக்கான சேனல்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கின்றனர்.விரும்பி பார்க்கின்றனர் என்பதைவிட அதில் மூழ்கிவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.இத்தகைய சேனல்களை மட்டுமே குழந் தைகள் விரும்பிப் பார்ப்பதால், அவர்களுக்கு வேறு எதன் மீதும் கவனம் செலுத்த இயலாத அளவுக்கு மூளையின் செயல்திறன் குறைகிறது.

படிக்கும் காலங்களில் படிப்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்துவதால், கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.மேலும் டிவி பார்ப்பதால் கண்பார்வை பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய சூழலும் உருவாகி விடுகிறது.

இத்தகைய குழந்தைகள் சேனல்களை பார்க்கும்போது, பெற்றோர்கள் அதை பார்க்காதே என அறிவுரை கூறினாலோ, அல்லது சேனல்களை மாற்றி னாலோ அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் ஒரே வீட்டில் 2, 3 குழந்தைகள் இருந்தால் குழந்தைகள் சேனல்களிலே எந்த சேனல்களை வைப்பது என்ற சண்டை வேறு.

இத்தகைய சேனல்களை தொடர்ந்து பார்ப்பதால் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. இதனால், அவர்களுக்கு நட்பு வட்டாரம் குறைகிறது. உறவினர்கள் வீட்டுக்குச் சென்று வரலாம் என பெற்றோர் அழைத்தால்கூட அவர்கள் வர மறுப்புத் தெரிவிக்கின்றனர். அப்படியே வந்தாலும் கூட அங்கு யாரிடமும் நன்கு பழகுவதில்லை.அங்கேயும் டிவி பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

உணவுவேளைகளில் சரியான நேரத்துக்கு சாப்பிடச் சொன்னால்கூட ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அரைகுறை சாப்பாடுதான். இதனால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்க ளுக்கு ஒரு விதத் தளர்வும், மன உளைச்சலும் ஏற்படுகின்றன.

சீரியலில் மூழ்கிக் கிடக்கும் பெண்களைப் போல இப்போது குழந்தைகள் சேனல்களால் வீடுகளில் பிரச்னைதான்.

இது தொடர்ந்தால் குழந்தைகளை இந்த மாதிரியான சேனல்கள் கற்பனை உலகத்திலே சுற்ற வைத்து விடும். பெற்றோர்களிடம் பாச உணர்வுடன் இருக்கவோ, சரியாக படிக்கவோ, விளையாட்டுத்திறனை அதிகரிக்கவோ அது தடையாக இருக்கும் . அவர்களின் மூளை செயல்திறனை மழுங்கடிக்கும்.
இத்தகைய சேனல்கள் குழந்தைகளுக்கு ஒரு போதைப் பொருள்போல ஆகிவிடும்.இதனால் வருங்கால சமுதாயமே பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதில் மத்திய, மாநில அரசுகள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி எப்படி ஆபாச சேனல்களுக்கு அரசு தடை விதிக்கிறதோ, அதேபோல இத்தகைய குழந்தைகள் சேனல்களுக்கும் உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும்.அவ்வாறு செயல்பட்டால் அன்றி, வருங்கால இந்தியா, வல்லரசு இந்தியா என்பதெல்லாம் பெயரளவில் சொல்லிக் கொள்ளலாமே தவிர, நடைமுறைக்கு சாத்தியமில்லை.

இன்றைய குழந்தைகள்தானே நாளைய இளைஞர்கள். அவர்கள் ஒரு நல்ல குழந்தையாக இருந்தால் மட்டுமே நல்ல இளைஞராக உருவாக முடியும். அப் போதுதான் ஒரு நல்ல இந்தியனாக வந்து இந்தியாவை வல்லரசாக உருவாக்க முடியும்.எனவே, அரசு இதைக் கருத்தில் கொண்டு, கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இனி குழந்தைகளுக்கு நேரம் அதிகமாகக் கிடைக்கும் என்பதால், அந்தச் சேனல்களில் மூழ்கிவிடாமல் இருக்கவும், உடனடியாக கவனித்து குழந்தைகள் சேனல்களை தடை செய்ய வேண்டும். அது விடுமுறை காலம் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் இத்தகைய சேனல்கள் தேவை இல்லை என்பதில் உறுதியுடன் செயல்பட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி - தினமணி

”இரண்டு”ங்கெட்டான் :-)


அப்படியே....! ஆச்சர்யமா போயிடுச்சு இவ்ளோ விசயங்கள் இருக்கா இதுலன்னு?!

ஓஹோ...! அதான் வ.வா. சங்கத்து ஆளுங்க ரொம்ப விவரமா போட்டிருக்காங்களோன்னு நினைச்சு அப்டியே பிரமிச்சு போயிட்டேன்ங்க!

நீங்க கூட இதப்பாத்தா அப்டியே ஷாஆஆக்காகி பிரமிச்சு மயங்கி......... போயிடுவீங்க! :-))

இதெல்லாம் நாம சாதாரணமா பிரயோகிக்கிற வார்த்தைகள்தானே!

எதாவது விட்டுப்போச்சுன்னா பின்னூட்டத்தில போட்டு தாக்குங்க! (சப்போஸ் ”இரண்டு”ல பரிசு கிடைச்சா மெயில் அனுப்புறேன் - பரிசு கிடைச்சுதுன்னு
ஒ.கே!)

இரண்டுங்கெட்டான் தனமா போச்சு!

இரண்டுங்கெட்டான் வயசாச்சு!

இரண்டுங்கெட்டான் நிலைமை ஆகிடுச்சு!

இரண்டுங்கெட்டான் நேரம் ஆயிடுச்சு!

இரண்டுங்கெட்டான் நாளகிடுச்சு

இரண்டுங்கெட்டான் ஊரால்ல இருக்கு

இரண்டுங்கெட்டான் பேச்சால்ல இருக்கு

இரண்டுங்கெட்டான் தலைமைகிட்ட மாட்டிக்கிட்டோம்!

இரண்டுங்கெட்டான் படமாடா அது!

இரண்டுங்கெட்டான் சேதி சொல்றான்!

இரண்டுங்கெட்டான் கலாச்சாரம் இது!

இரண்டுங்கெட்டான் மனசுப்பா உனக்கு!

இரண்டுங்கெட்டான் பொழப்பு பாக்குறேன்!

இரண்டுங்கெட்டான் சமூகம் இது!

இரண்டுங்கெட்டான் முறையால்ல இருக்கு

இரண்டுங்கெட்டான் முடிவாகிடுச்சு

இரண்டுங்கெட்டான் விஷயமாட்டம் இருக்கே!

இரண்டுங்கெட்டான் தீர்ப்பால்ல போயிடுச்சு!


இது இரண்டால் இந்த இரண்டுங்கெட்டான் வயசுக்காரனுக்கிட்டயிருந்து வந்த
இரண்டுங்கெட்டான் போஸ்ட்!

எதாச்சும் இரண்டு வார்த்தை சொல்லிட்டுப்போங்க!

புத்தூர் ஜெயராமன் கடை :-)


காத்திருத்தல் ரொம்பவும் கொடுமை. ஆனால், வாழ்வில் சுவையான அனுபவங்களைப் பெரும்பாலும் காத்திருந்தே பெற வேண்டியிருக்கிறது. இதுவரை என்னென்ன காரணங்களுக்காகவோ காத்திருக்க நேர்ந்திருக்கிறது. என்றாலும், புத்தூர் அனுபவம் உள்ளபடியே வித்தியாசமானது - ரசமானது!

சிதம்பரம் - சீர்காழி இடையேயுள்ள சின்ன கிராமம் புத்தூர். கொள்ளிடத்திலிருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கிறது. இந்த ஊரிலுள்ள ஒரு "கூரைக்கட்டு சாப்பாட்டுக் கடை'யில் அசைவச் சாப்பாடு ரொம்பவும் பிரசித்தம் என்றும் ஆனால், மதுரை வீரனே வந்தாலும் காத்திருந்தால்தான் அங்கு சாப் பிட இடம் கிடைக்கும் என்றும் ஒரு நண்பர் சொன்னார்.

பசிக்க ஆரம்பிக்காத ஒரு நண்பகல் வேளையில் புத்தூரை நோக்கிப் பயணமானோம். புத்தூர் கடைவீதியில் இறங்கி வழி கேட்ட நமக்கு, உள்ளூர்க்காரர் சுட்டிக்காட்டிய இடம் சற்றே பெரிய கீற்றுக்கொட்டகை.

பெயர்ப் பலகைகூட இல்லை. கடைக்கு வெளியில் போடப்பட்டிருந்த பந்தலில் வழியை மறித்து நிற்கிறது கூட்டம்.

""ஐயா, வரிசையில் மொதல்ல நிக்கிற நாலு பேரு உள்ள வாங்க.'' நமக்கு முன்னுள்ள வரிசை மெல்ல கரைய, பின்னுள்ள வரிசை நீண்டு கொண்டேயிருக்கிறது. இதற்குள் கடைக்காரருக்கு நாம் தகவல் தெரிவிக்க, அவர் நம்மை உள்ளே அழைத்துச் செல்கிறார்.கூட்டம் கொலைவெறியுடன் நம்மைப் பார்க்கிறது.

உள்ளே ரொம்பவும் சாதாரணமான மர பெஞ்சுகள், முக்காலிகளில் அமர்ந்து வியர்க்கவிறுவிறுக்கக் கருமமே கண்ணாக கனஜோராய் மீன் வறுவல், இறால் வறுவல் சகிதமாய் சாப்பாட்டை உள்ளே தள்ளிக்கொண்டிருக்கிறது கூட்டம். ஏற்கெனவே கடைக்காரர்களால் உள்ளே அழைக்கப்பட்ட அந்த நால்வரைக் கவனிக்கிறோம். தயிர்போட்டு சாப்பிடுபவர்கள் முன் இடத்தைக் கைப்பற்ற தயாராக நின்றுகொண்டிருந்தார்கள்.

நாம் கடைக்குப் பின்புறம் செல்கிறோம். கல்யாணவீட்டின் கொல்லைப்புறத்தில் போடப்பட்டிருக்கும் சமையல் கொட்டகைபோல் இருக்கிறது அந்தக் கடையின் சமையலறை. இறால், கோழி, வஞ்சிரம் மீன் துண்டுகளை வண்டியிலிருந்து இறக்கி கழுவிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் மசாலா போட்டு அவற்றைப் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குழம்பு, வறுவல், பிரட்டல் என அதுஅது போய்சேர வேண்டிய இடத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் வேறு சிலர்.

""இறாலுக்கு மெனக்கெடு அதிகம் சார். இறால் உரிக்கிறதுக்காகவே 10 பேர் இருக்கோம்'' என்கிறார் அவர்களில் ஒருவர்.சுடச்சுட தயாராகிக் கொண்டிருக்கும் மீன் குழம்பு வாசனை நம் நாசியைத் துளைக்கும் அந்த நேரத்தில் - இறால் வறுவல் "வா மகனே வா' என்று அழைக்கும் அந்த நேரத்தில் - பசி நம் வயிற்றில் பூதாகரமாய் கிளம்புகிறது. கடைக்காரர் சலுகையில் நமக்கும் ஓர் இடம் கிடைக்கி றது. அமர்கிறோம்.எளிமையான உணவுப் பட்டியல்.



சோறு, கறிக்குழம்பு, கோழிக்குழம்பு, மீன்குழம்பு, இறால்குழம்பு, ரசம், கீரை, வெங்காயப்பச்சடி. அவ்வளவே. வறுவல் பிரட்டல் எல்லாம் தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும்; மிக முக்கிய மாக கெட்டித் தயிரை. கேட்கக்கேட்கப் போடுகிறார்கள். புளிப்பு ஏறாமல் புளித்த தயிர் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது! வரிசையாய் குழம்பு, ரசம் ஊற்றி சாப் பிட்ட பின்னர், பொன்னி அரிசி சாதத்தில் கெட்டித் தயிரை நிறைய ஊற்றி வழியவழிய பிசைந்து இறால் வருவலையோ மீன் வருவலையோ தொட்டுக் கொண்டு சாப்பிடும் ருசி இருக்கிறதே..!

எத்தனையோ தொலைவிலிருந்து இந்த சின்ன கிராமத்துக் கடையைத் தேடி நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் ரகசியம் புரிகிறது.அருகில் அமர்ந்திருந்த கடை உரிமையாளர் பி. ஜெயராமனிடம் பேசினோம்.""அசைவச் சாப்பாடு சிறக்க இரண்டு விஷயங்கள் முக்கியம். மீனோ, கறியோ எதுவென்றாலும் உயிர்விட்டு நீண்ட நேரம் ஆகக்கூடாது. அதாவது கட்டு குலையக்கூடாது. சுத்தத்தில் பிசிறு கவுச்சி தங்கக்கூடாது. இதைக் கடைப்பிடித்தாலே பாதி ருசி வந்துவிடும். எங்கள் கடையில் வீட்டுப் பக்குவத்தில் மசாலா அரைத்துப்போட்டு விறகு அடுப்பில் சமைக்கிறோம்.தயிருக்கு ஒரு பங்கு பாலை அரைப் பங்கு பாலாக சுண்டக்காய்ச்சி உறை ஊற்றுகிறோம். வேறு எந்த ரகசியமுமில்லை'' என்றார்.வயிற்றைத் தள்ளிக்கொண்டு நாம் எழுந்த அடுத்த நொடி அந்த இடத்தில் துண்டு ஒன்று பறந்துவந்து விழுகிறது.திடுக்கிட்டு பார்க்கும் நம்மைப் பார்த்து துண்டை வீசியவர் சொல்கிறார்.

""என்ன மொறைக்குற, பசி வயித்தைக் கிள்ளுதுல்ல; நகருய்யா!''

நன்றி தினமணி

குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டிலு வேணாம்...! விட்டுடுங்க ப்ளீஸ்....!!


கனடா - கடும் நெருக்குதல்களுக்கு பிறகு, சரி இனி வரும் இளைய தலைமுறைக்கு அதிக ஆபத்துகளை ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்தாலும் கூடுமான வரை இனியும் பல்கி பெருக்க வைக்கவேண்டாம் என்ற பெரிய மனதோடு பிளாஸ்டிக் பாட்டில்களில் ஆன புட்டிகளை அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பால் புட்டிகளை தடை செய்து கனடா அரசு இன்று அறிவித்துள்ளது.

உலகிலேயே முதல் நாடாக முன்னின்று இந்த செயலினை செய்துள்ளதுகனடா!

சரி என்ன பிரச்சனை அந்த பிளாஸ்டிக் பாட்டில்லன்னு கேட்குறீங்களா?

பாட்டில்ல அதிக அளவு சூட்டோட தண்ணீரையோ அல்லது பாலையோ ஊற்றினால் அந்த வெப்பத்தினால் அந்த பிளாஸ்டிக்கில் உள்ள BPA சூடு தாங்கமுடியாம கோவிச்சுக்கிட்டு வெளிய வந்துடுமாம் (வெளியேன்னா புட்டி உள்ள!) அது உடல் நலத்துக்கு கெடுதலாம்!

BPA எனச்சொல்லப்படும் பைஸ்பினால் என்னும் ஒரு வேதிப்பொருள் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பாலிகார்பனோடின் முக்கியமான சேர்க்கை ஐட்டமாகும்!இதனால் தயாரிக்கப்படும் புட்டிகள் சீக்கிரத்தில் உடையாமல் கடினமாகவும் இருக்குமாம்

கனடாவில் பெரும்பாலான உணவுப்பொருட்கள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் இதில் அடைத்துதான் விற்பனை செய்யப்படுகின்றனவாம்!

கிட்ட தட்ட ஒரு வருடகாலமாக தன்னார்வ அமைப்புக்களின் தொடர் நெருக்குதல்களில், சிக்குண்ட கனடா அரசுக்கு இந்த புட்டிகளை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் வெகு காலமாக பயன்பாட்டில் இருக்கும் இந்த புட்டிகள் தீங்கு விளைவிக்க கூடியவை அல்ல,என்று சமாதானப்படுத்தியிருந்தாலும் கூட கடந்த இரு மாதங்களில் பொதுமக்களின் கருத்து கணிப்புகளின் மூலம் கடைசியாக முடிவெடுத்துவிட்டது! தற்போதைக்கு குழந்தைக்களுக்காக தயாரிக்கப்படும் புட்டிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது!

இத்தனைக்கும் உபயோகப்படுத்தும் அளவுக்குத்தான் இந்த வேதிப்பொருள் கலந்துள்ளது. இதனால் பெரும் ஆபத்து இல்லையென்று பிளாஸ்டிக் புட்டிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் கூறினாலும் கூட எதிர்காலத்தில் இது போன்ற விஷயங்கள் வளர வாய்ப்பளிக்ககூடாது என்ற முடிவோடு அரசாங்கம் கடுமையாக நடந்துக்கொண்டிருக்கிறது!

நம்ம ஊரு மக்கள் இதுல ரொம்ப புத்திசாலிங்க பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஆற வைத்து, தான் புட்டியில் ஊற்றிக்கொடுக்கிறார்கள் அதனால் வேதி வினை, வேற வினைக்களுக்கு வேலையே கிடையாது!


முடிஞ்சா, குழந்தைகளுக்கு இனி பாலை கிளாஸ் புட்டியில ஊத்தி கொடுங்களேன்....!

கொசுறு சேதி:
இது சம்பந்தமான தகவல் ஏற்கனவே நமது தமிழ்மணத்தின் மருத்துவ வலைபதிவர்களுள் ஒருவரான டாக்டர் புரூனேவின் ஆங்கில வலைதளத்திலும் உள்ளது !

ஏப்ரல் 18ல் சமூக கலாச்சார மரபுகளை மதித்து கொண்டாடுஙகள்!



ஏப்ரல் 18 உலக மரபு நாளாக உலக முழுவதும் 1982 ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

இந்த நாளில் இந்திய தொல்பொருள் துறை மக்களை நாடி தேடி வருகிறது நாட்டில் உள்ள பழங்கால மரபு கலாச்சாரங்களின் எச்சங்களினை பாதுகாக்க வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தியபடியே......!

முதல்கட்டமாக மத்திய பிரதேசத்தில் போபாலில் மட்டுமே உள்ள சுமார் 50 க்கும் அதிகமான பண்பாட்டு சின்னங்களில் மத்திய அரசின் கீழும் மாநில அரசிடமும் உள்ளவற்றை பாதுக்காப்பதே,இந்த ஆண்டின் மரபு நாளின் முக்கிய நோக்கமாக இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அறிவித்துள்ளது

இந்த நாளில் நாம் நம் மரபுகள் மற்றும் பண்பாடு சார்ந்த பழங்கால ஆதாரச்சான்றுகளின் அடியொட்டி அதை பாதுகாத்து இருக்கும் சமுதாயத்திற்கும் இனி வரும் சமுதாயத்திற்கும் நம் சமூக வாழ்வின் வரலாற்றினை அறியசெய்வோம் உலகுக்கு தெரிய செய்வோம்!

உலகையே எடுத்துக்கொண்டால் மொத்தம் 812 இடங்கள் இருக்கிறதாம் கலாச்சாரம் மற்றும் இயற்கையான அதிசயங்களாக அவை காட்சியளித்துக்கொண்டிருக்கிறதாம்!

நம் இந்தியாவில் மொத்தம் இருக்கும் 27 பண்பாட்டு சின்னங்களில் 5 இயற்கையாக அமைந்தவையாம் (படத்துல் போட்டிருக்காங்க!)



என்னதான் புதுபுது பில்டிங்குகள் வானை அளக்க நீண்டாலும், நமக்கு பழைய கட்டிடங்கள் மீது தானே எப்போதும் காதல் வருகிறது:-)

எனவே...

உலகுக்கு உன்னதம் சொன்ன நம் சமூக கலாச்சாரமரபுகளை காத்திருப்போம்!

பார்த்து பார்த்து பாதுகாத்து களித்திருப்போம்!

இனி...


நன்றி Archaeological Survey of India (ASI)