அடிமாட்டு விலைக்கு கறவை மாட்டை எதிர்ப்பார்க்கலாமா? - பார்க்கலாம்!

கோமாரி நோய் பாதிக்கப்பட்ட, கறவை மாடுகளை அடி மாட்டு விலைக்கு விற்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில்...!??

பெரும்பாலும் அடிக்கடி செய்திகளில் தென்படும் விஷயம்தான்! அதுவும் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த செய்திகள் சர்வ சாதாரணம்! சாதரணமாக பார்க்கும் நமக்கு இது அந்தளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது! ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட மாடுகளால் பாதிக்கப்ப்ட்டு பெரும் கடன் சுமைக்கு ஆளாகி பலர் விவசாய தொழிலையும் கிராமத்தையும் நிலத்தையும் விட்டு சென்றுள்ளனர் என்பது புள்ளி விவரங்களை கொண்டுதான் இதன் அபாயம் புரியும் சாதரணமாக கிராமங்களில் அந்தளவுக்கு சுகாதாரம் பேணும் வகையில் மாட்டு தொழுவங்கள் இல்லையென்றாலும், தினப்படி தொழுவத்தை சுத்தப்படுத்தித்தான் பிற வேலைகளை கவனிக்கின்றனர் ஒரு பயபக்தியும் இதற்கு காரணம்!

ஆனால் இதையெல்லாம் மீறி மாடுகளை இந்த கொடிய கோமாரி நோய் தாக்குகிறது சிறிது சிறிதாக பாதிப்பை ஏற்படுத்தும் இந்நோயால் மாடுகளின் அவதியினை காண் கஷ்டமாகத்தான் இருக்கும்!


மாடுகளின் கால்களிலும் வாயிலும் வரும் கொப்புளங்கள் பெரும் புண்களாகி பின் சில நாட்களில் மாடுகளால் தாங்க முடியாத அளவுக்கு ரணத்தில் கொண்டுபோய்விட்டுவிடுகின்றன!

மொத்ததில் இந்த நோய் வந்த மாடுகளை வைத்து கொள்வது என்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தை சீக்கிரத்தில் உண்டாக்க ஒரு எளிய வழிதான்!

பெரும்பாலானோர் அடி மாட்டு விலைக்கு தள்ளிவிடுவதை நிறைய இடங்களில் காணலாம்!

தற்போதைய சூழலில் விவசாயத்தோடு சேர்த்து இது போன்று மாற்று தொழில்களையும் சேர்த்து செய்வதால் ஒரளவுக்கு கடன் தொல்லையின்றி இருக்க நினைக்கும் விவசாயிகளுக்கு இந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாகவும் மீள இயலாத அளவு இழப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது!

தீர்வு காண்பதில் தீவிரம் காட்டவேண்டிய அரசு மருத்துவ முகாம்களை அவ்வப்போது நடத்திக்கொண்டிருந்தாலும், நிரந்தர நோய் தடுப்பு தீர்வுக்காண முயற்சிகள் இது வரைக்கும் இல்லை!?

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அரசு எந்திரம் அவ்வளவு வேகமாக நகராது.