மயிலாடுதுறை பதிவர்கள் - என் மனதில்....! (பாகம் - 2 )

புனைப்பெயரில் எழுதுவது என்பது எல்லோருக்குமே அலாதியான விஷயம்தான் அதுவும் கொஞ்ச காலத்துக்கு மட்டுமே நீடிக்கும்! ரொம்ப காலத்துக்கு பொறுமையா எழுத முடியாது! புனைப்பெயர்ல எழுதறத விட, அட இது நாந்தான்ப்பா சொல்றதுல அதைவிட அலாதியான இன்பம்தான்! ஆனா பாருங்க கிட்டதட்ட நாலுவருஷமா முகமூடியோடத்தான் எழுதுறாரு!
எங்க ஊர்க்காரரு..!
அவரும் முகமூடிய கழற்றலை!அதுக்கு காரணமா சொல்ற விஷயமும் - 'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால் - இன்னும் இருக்கறதும் உண்மைதான்!

நக்கல்,கிண்டல்,கேலி இன்னபிற சமாச்சாரங்கள் நிறைந்த பதிவுகள் ஒவ்வொரு முறையும்..! எனக்கு ரொம்ப பிடிச்சதுன்னா டைட்டில்கள்தான்...!

எதாவது பிரச்சனை வந்து ஆடி அடங்கும்போது இவர் ஒரு பதிவு போடுவாரு! பிரச்சனைக்குக் மங்களம் பாடற மாதிரியும் இருக்கும், அட, பிரச்சனை இன்னும் ஸ்டார்ட் பண்ணவேயில்லையான்னு? கேட்கற மாதிரியும் இருக்கும்!

ஒரு சமயம் எல்லாரும் 6 எழுதிக்கிட்டிருக்கறப்ப இவரு எழுதின ஆறு! அண்ணாமலை பல்கலை மாணவியை தற்கொலை பத்தின டீடெயில்டு பதிவு!

அட.. நம்ம காலேஜ்ன்னு! ஒரு பாச உணர்வை கொண்டு வந்து கொட்டிடுச்சு!

ஊர்க்காரருன்னு தெரியாத டைம்ல இந்த மூக்கு படத்து மேல ஒரு ஈர்ப்பு வந்து அடிக்கடி வந்து செல்லும் பக்கம் இவருடையது.!

அந்த காலத்துல (என்ன பண்றது! இப்ப இவரு மாசத்துக்கு ஒண்ணு இல்லாட்டி அரைன்னுதான் பிலாக்குறாரு! - இவரு மட்டுமா இந்த போஸ்டல் நான் சொல்லியிருக்கற எல்லரும்தான்!)

இவர் பக்கம் சென்றபிறகுதான், மற்ற பக்கங்களுக்கு போக, லிங்க் கொடுக்கும் முறை பற்றி புரிந்துகொண்டேன்!!

சுத்தமா, ஒதுங்கிடாம அப்பப்ப வந்து போயிட்டிருக்காரேன்னு ஒரு ஆறுதல்!

ஊர்ல உள்ள எல்லா கோவில்களிலும், இவர் பேர் அல்லது இவங்க குடும்ப பெயர் கண்டிப்பாக இருக்கும்!

முதலில் பேர் பழக்கமானதே, அந்த மாதிரி கோவில்களுக்கு செல்லும்போது பார்த்துத்தான்!
ஒரு பதிவில் பூம்புகார் சாலை குருமூர்த்தி ஸ்கூல் போட்டோஸ் பார்த்துட்டு, அட அவர்தானா, இவர்ன்னு ஒரு ஆச்சர்யம்! அதுக்கப்புறம்,அவர் போஸ்ட் போட்டா, நான் அங்க உடனே ஆஜர்!

அப்பப்ப, வந்து செல்லும் இவரின் பதிவுகள் என்னை, மயிலாடுதுறை சம்பந்தமான நினைவுகளை அதிகம் கிளறி விட்டு செல்லும் விஷயங்களாகின!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அட நீங்களும் நம்மூர் மற்றும் நம் பல்கலைகழகமா?நம்ம பல்கலைகழகத்தை பற்றி ஒரு நல்ல பதிவு போடுங்களே

said...

//சதுக்க பூதம் said...
அட நீங்களும் நம்மூர் மற்றும் நம் பல்கலைகழகமா?நம்ம பல்கலைகழகத்தை பற்றி ஒரு நல்ல பதிவு போடுங்களே
//

அட நீங்களும் மயிலாடுதுறைதானா????!!!

காலேஜ் பத்தி போடலாம் ஆனா நீங்க சொல்லியிருக்கற இந்த //நல்ல பதிவு//வார்த்தைதான் கொஞ்சம் யோசிக்க வைக்குது!

said...

அன்புத் தம்பி ஆயில்யா,
நல்ல பதிவுகள். நட்சத்திரப் பதிவரானதற்கு வாழ்த்துகள்..

சமீபத்தில் அபிஅப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த போது உங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

நலம் பல பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்களும் நல்லெண்ணங்களும்

அன்புடன்,
சீமாச்சு..

said...

//Seemachu said...
அன்புத் தம்பி ஆயில்யா,
நல்ல பதிவுகள். நட்சத்திரப் பதிவரானதற்கு வாழ்த்துகள்..
//
நன்றி அண்ணா..!!!
//சமீபத்தில் அபிஅப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த போது உங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.//

என்னது அபி அப்பாக்கிட்டேருந்து என்ன பத்தி கேட்டு தெரிஞ்சுக்கிட்டிங்களா அய்யோ! என்ன சொன்னாருன்னு கொஞ்சம் மெயிலுங்க! (நம்ம ஊர்லேர்ந்து சூப்பர் மொக்கை ஒருத்தர் வந்திருக்காரு சார்ன்னு சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்....??!!?!?!?)

said...

ஆயில்,

நட்சத்திர வாழ்த்துக்கள்!
நான் மயிலாடுதுறை இல்லைனாலும், பக்கம்தான்...

said...

வணக்கம் ஆயில்யன்

எனது பெயரை குறிப்பிட்டமைக்கு நன்றிகள் பல.

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?

மயிலாடுதுறை சிவா...