டூபாயில் பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஜூமைரா பீச் ரோட்டில் ஜில்லென்று ஜொலிக்க தொடங்கி விட்டது பேருந்து நிறுத்தம்!
ஆனா பாருங்க இப்ப சீசன கூல்ல்ல்ல்ல்.....!
(டூபாய் பத்தி - எனக்கு அங்க வேலை கிடைக்காததாலத்தான் நான் துபாய் கூட டூ விட்டுட்டேன்..!)
படங்கள் - X Press
டூபாயில் கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்...!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: செய்திகள்
குப்பைகளின் கூடாரமாகப்போகும் இந்தியா..!
பாடாத ரேடியோக்கள் & டேப்புகள், பழைய இத்துப்போன சைக்கிள்கள்,பெரிய பெரிய மருந்துப்பாட்டில்கள், மற்றும் இன்னும் பிற உபயோகப்படுத்தப்பட்டு பின்பு, உபயோகிக்கமுடியாத நிலையை அடைந்த பொருட்களை அடைகாத்து வைத்திருக்கும் மனிதர்களை நீங்கள் கண்டிப்பாக சந்தித்திருக்ககூடும்!
ஒரு பிரயோசனமில்லவிட்டாலும் கூட அதை இழக்க மனமின்றி இருக்கும் மனிதர்கள்!
அப்படியே சிலரால் தூக்கி எறியப்படும் பொருட்கள் இதே மனநிலை கொண்ட மற்ற மனிதர்களால் கைப்பற்றப்பட்டு, மீட்டு கொண்டு வந்து வீட்டில் அடைத்து வைப்பவர்களும் உண்டு!
இதே மன நிலையில்தான், இப்போது நமது மத்திய அரசாங்கமும் செயல்பட போகின்றது!
உலகநாடுகளிலிருந்து வீணான பொருட்களை பெற்று அதைக் கொண்டு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது! ஆனால் இதனால் வரும் காலத்தில் உலகிலில் இருந்து வரும் குப்பை பொருட்களின் கூடாரமாகத்தான் நம் நாடு மாறிப்போகுமே ஒழிய இதனால் வேறு பலனேதும் இல்லை! அது மட்டுமின்றி கவர்ன்மெண்ட் சொல்வது, போல 60 சதவீகிதமான பொருட்கள் மறு சுழற்சி முறையில் உபயோகிக்ககூடிய பொருட்கள்தான் எனற கான்செப்ட் ஒ.கேதான்! என்றாலும் பிரித்தெடுக்கப்படும் உபயோகிக்ககூடிய பொருட்களை தவிர மற்ற பொருட்களை எப்படி நாம் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்போகிறோம் எனபது ஒரு பெரிய ?
ஏற்கனவே சுற்றுசுழல் ஆர்வலர்கள்,அறிஞர்கள் என பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பான கருத்துக்கள் அரசை சென்றடைந்திருக்கும் நிலையில், என்ன விதமான முடிவு என்பது இனிமேல்தான் தெரியும்!
எது எப்படியோ, வரும் காலங்களில் நாட்டை குப்பையாக்குவதாக இருந்தாலும் சரி,கோபுரத்து உச்சியில கொண்டு போய் வைக்கிறதா இருந்தாலும் சரி, எல்லா முடிவும் அரசியல்வாதிகள் கையில்தானே இருக்குது…?!
# ஆயில்யன் 9 பேர் கமெண்டிட்டாங்க
மருத்துவ மாணவர்கள் போராட்டம்?
பெரிய திரையின் பின்னால் சுற்றி,
சின்ன திரையில் எண்ணங்களை சிதறவிட்டு,
செமஸ்டர் அரக்கனின் பிடியில் சிக்கி,
பருவ கோளாறுகளில் பங்கேற்று,
இளம்வயதில் இளமை கொண்டாட்டங்களே,
வாழ்க்கையாக்கி கொண்டு,
பல
வேடிக்கை மாணவர்களை போல - நாம்
வீழ்வோ மென்று நினைத் தீரோ...!?
போராட்டம் வெற்றி பெற
வாழ்த்துக்களுடன்....!
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க
Labels: செய்திகள்
புலி மார்க் சீயக்காய்தூள் – பாகம் #1
பெரிய இரும்பு கதவுகளை கொண்டு அடைக்கப்பட்ட வாசல் நான் அந்த கதவுகள் திறந்திருந்து நான் பார்த்ததே கிடையாது ஒரத்தில் இருக்கும் சிறு கதவின் வழியாகத்தான் அங்கு தொழிலாளர்கள் வேலைக்கு உள் செல்வதை சில சமய்ங்களில் கண்டதுண்டு! (பட்! அந்த கதவு அடிக்கடி திறந்து மூடப்பட்டாலும், நான் தினந்தோறும் பள்ளி செல்லும் நேரங்களில் மட்டுமே மூடியிருக்கும்! அப்புறம்தானே ஆபிஸ் டைம் ஸ்டார்ட் ஆகும்!)
கம்பெனியின் இரும்பு கேட்டில் பதியும் பார்வை அதைத்தொடர்ந்து அங்கு அமைந்திருக்கும் குடேவுனின் பெரிய ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் வழியாக பயணித்து,கண்கள் கூர்ந்து கவனிக்க,கால்கள் குத்திக்கொண்டு நிற்க செய்யும்படியான ஆர்வமூட்டும் அந்த பல கிளை மரங்களை கொண்ட தென்னை மரம்!
பள்ளிக்கூடம் போகமல் கட் அடித்த சந்தர்ப்பங்களில்,ஏண்டா ஸ்கூலுக்கு போனதானே படிச்சு பெரியவனாகி நல்ல வேலைக்கு போயி எங்கள காப்பத்த முடியும்னு! சொன்ன பாட்டியிடம்,நான் கஷ்டப்பட்டு புலிமார்க் சீயக்காய்தூள் கவர் ஓட்டியாவது உனக்கு சோறு போடறேம்மா என்று வீராப்பு பேசி பொழுதை கழித்த காலங்கள் கண்ணில் வந்து போகின்றன!
புலி மார்க் சீயக்காய் தூள் இல்லாத தீபாவளிங்கறது காவிரி கடைமடை மாவட்டங்களை பொறுத்த வரை நோ சான்ஸ்!
தீபாவளிக்கு முதல்நாள் இரவு, எல்லா பலகாரமும் செஞ்சாச்சான்னு கேட்கறத விட புலி மார்க் சீயக்காய்தூள் ரெடியாங்கற வாசகம்தான் பெரும்பாலான வீடுகளில் ஒலிக்கும்!
தினமும் காலை 8.00 மணிக்கு அந்த மூன்று சக்கர சரக்கு வண்டியை எடுத்துக்கொண்டு நான்கு திசைகளை நோக்கி பயணிக்கும் அந்த மனிதர்கள் கிட்டதட்ட சுற்றுவட்டாரத்தில் 25 கி.மீக்கும் மேல் பயணித்து கிராமங்களில் ஊர்களில் உள்ள கடைகளுக்கு சரக்கு போட்டு, பிரபலமாக்கிய கம்பெனிதான் புலிமார்க் சீயக்காய்தூள் கம்பெனி!
வருட வருடம் வரும் புலி மார்க் மஞ்ச கலர் புத்தாண்டு காலண்டரிலும், நோட்டுப்புத்தகங்களில் ஒட்டுவதற்கு கொடுக்கப்படும் லேபிள்களாலும்தான் எங்களுக்கு மத்தியில் அதிகம் பிரபலமானது – புலிமார்க் சீயக்காய்தூள் கம்பெனி!
அப்புறமா! மீதி நினைவுகளோடு வர்றேன்......!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: என் உள்ளத்தில், மயிலாடுதுறை
மாவீரர் நாளில்...!
தம் உயிர் விதைத்தவர்களை வணங்குவோம்!
வினைகளை எதிர்நோக்கி,
வெற்றிகளை பெற,
வீர வணக்கம்
சொல்வோம்....!
செய்வோம் .....!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: நினைவுகளில்..
என் தலைவனுக்கு - எனது தன்னிலை வெளக்கம்..!
இதனால் சகலமானவர்களுக்கும் தெரி(அறி)விப்பது என்னவென்றால்.....!
என் தலைவன்...!
(அகில உலக ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றம்.)
என்னை மன்னிக்கவேண்டுகிறேன்...!!!
இப்ப இங்க வந்திருக்கும், இந்த விஷயம் புரியாதவங்களெல்லாம் ஏதோ வந்துட்ட்டோம், ஏதோ புரிஞ்ச மாதிரியே படிச்சு போவோம்னு ஆசைப்படாதீங்க! கொஞ்சமாவாச்சும் புரிஞ்சுக்கோங்க ஒ.கே..!
என் தலைவனால், மிகப் பிரும்மாண்டபமாக தொடங்கப்பட்ட நற்பனி(ணி) மன்றத்தில் சில கரைச்சல்கள் அல்லது குழப்பங்கள் இருப்பதாக சிலர் நினைத்துக்கொண்டிருக்கும், இத்தருணத்தில்,நான் இங்கு கூறிக்கொள்ள(கொல்ல) விரும்புவது ஒண்ணே ஒண்ணுதான்!
கொஞ்சம் அதீத ஆர்வத்தில் என் தலைவனின் தலையை விட, என் தலையை உயர்த்தி காட்டியதன் விளைவாய்,- எப்படி இவன் இப்படியெல்லாம் ஃபீல் பண்றான்னு - ரொம்ப ஃபீல் பண்ணி ஸ்ரேயா கோஷல் நேரிடையாக தொலைபேசிய விஷய்த்தை சொல்லாமல் இருந்துவிட்டேன் தலைமைக்கு..!
தப்புத்தான்!
அதனால் நான் ஏதோ எதிரணியாக மாறி அகில உலக ஸ்ரேயா நற்பனி(ணி) மன்றத்தை கைப்பற்ற போவதாக புரளி கிளம்பிய நிலையில்,தலைவனின் சந்தேகத்தை தீர்க்கும்பொருட்டும், தலைமையிடத்தில் எனது நம்பகத்தன்மையினை காட்டும், பொருட்டும் இவ்வறிக்கையை எல்லோருக்கும் தெரியும் வகையில் வெளியிட்டு என் தலைமையிடத்திடம் - பொதுவில் வைத்து - மன்னிப்பு கோருகிறேன்..!
என்றும் உற்ற தொண்டன(நா)ய் இருப்பேன் என்றும் இறுதி (ச்சே) உறுதி கூறுகிறேன்!
வாழ்க ஸ்ரேயா! வளர்க அமீரக மெயின் ஆபிஸ்!
இவண்!
பேரு கூட இனி போடாத உண்மைத்தொண்டன்.
அகில உலக ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றம்
கத்தாரிலிருந்து...!
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க
Labels: மொக்கை, வெட்டி முயற்சி, ஸ்ரேயா
சமையல் குறிப்பு - நல்லாயிருக்கும் டிரைப்பண்ணுங்க!
இன்னிக்கு ஒரு சூப்பர் ஐட்டம் செஞ்சு, எல்லா பிளாக்கர்ஸ்ஸும் சாப்பிட்டு சந்தோசமா இருக்கவைக்க்ணும்னு ஒரு முடிவோடத்தான் இந்த சமையல் குறிப்பு
இது ரொம்ப சிம்பிளா செய்யிற ஐட்டம்தான் அதனால் ரொம்ப பீதியடையவேண்டாம் ஒ.கே!
இந்த ஐட்டம் செய்யுறதுக்கு மூலப்பொருடகள கூட நம்மக்கிட்ட ஏற்கனவே இருக்கற ஐட்டம்ங்கறதால பட்ஜெட் எகிறாது! இருக்கறத வைச்சே சமாளிச்சுடலாம்! ஒ.கே
டெய்லி காலையில செஞ்சு வைச்ச இட்லிய புல் கட்டு கட்டுனதுக்கப்புறமும் மீந்து போச்சேன்னு, எல்லாருக்கும் ஒரு ஃபீலிங் இருக்கும் அந்த மீந்து போன ஐட்டத்த வைச்சுத்தான் நாம் இந்த சூப்பர் ஐட்டம் செய்யப்போறோம்!
இட்லி எடுத்து கத்தியால கட் பண்ணி துண்டுகளாக்கியும் பிசைஞ்சுக்கலாம் இல்ல ரொம்ப கஷ்டமாயிருக்குன்னு நினைச்சா அப்படியே இட்லிய கையாலயே பிசைஞ்சு தனியா ஒரு பாத்திரத்துல எடுத்துவைச்சுக்கோங்க!
அகலமான பாத்திரத்தில,கொஞ்சம் நல்லெண்ணெய ஊத்தி,
கொஞ்சம் கடுகு,கொஞ்சம் கடலை பருப்பு, கொஞ்சம் சிவப்பு மிளகாய் எல்லாத்தையும் போட்டு லைட்டா வறுத்துக்கிட்டு, அப்புறமா பிசைஞ்சு வைச்ச இட்லிய எடுத்துப்போட்டு கொஞ்சமா தண்ணிய தெளிச்சு நல்லா கிளறிக்கிட்டே இருக்கணும்.
பத்து நிமிஷத்துல சூடானத்துக்கப்புறம் கிளறத நிப்பாட்டிட்டு, மூடி வைச்சுட்டு, மத்த வேலைகளை பார்க்காலம்,கொஞ்சமா கருகுற வாசனை வரும்போது வந்தா போதுமானது!
இப்ப இட்லி உப்புமா ரெடி!
நில்லுங்க! உடனே அரக்கப்பரக்க எடுத்து திங்க நீங்க என்ன அரபுநாட்டுலேர்ந்தா வந்திருக்கீங்க...? நோ...!
இது நம்ம ஐட்டம் கிடையாது!
இட்லி உப்புமாவ ஒரு தட்ல அழகா எடுத்து எறிஞ்சுடுங்க., - அது நம்மளுக்கு தேவையில்ல!
தோசை சுடுற கரண்டிய ஒரு கையில எடுத்துக்கிட்டு, வேல் படத்துல சூர்யா அருவா புடிக்கிற மாதிரி ஸ்டைலா புடிச்சுக்கிட்டு, இன்னொரு கையால பாத்திரத்த கொஞ்சம் ஸ்ட்ராங்கா புடிச்சுக்கிட்டு சுரண்ட ஆரம்பியுங்க!
நான் சொன்னபடியே கவனமா செஞ்சுருந்தா, நாம திங்கறத்துக்கு நிறைய ஐட்டம் கிடைக்கும்!
உங்களோட முழுத்தெம்பையும் அதுல காட்டி சுரண்டி எடுக்கணும் ( பாத்திரம் ஓட்டையான கூட பரவாயில்ல!)
எடுத்து பத்திரமா ஒரு துளி கூட சிந்தாம சிதறாம தட்ல போட்டு சாப்பிட்டுட்டு அப்புறம் வந்து சொல்லுங்க!
கருப்பு காந்தல் சூப்பரா இல்லையான்னு..???
# ஆயில்யன் 7 பேர் கமெண்டிட்டாங்க
Labels: மொக்கை, வெட்டி முயற்சி
தேசிய நெடுஞ்சாலைகள் - போகும் பாதை தெரியவில்லை!
தங்க நாற்கர சாலை இந்தியாவை இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் இணைக்க ஆரம்பிக்கப்பட்ட பெரிய தேசிய நெடுஞ்சாலைதிட்டம்! தொழில்வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கான அடிப்படை கட்டுமான வசதியினை தருவதே இதன் அம்சம்! திட்டம் துவங்கி, நெடுஞ்சாலை நடைப்போட்டுக்கொண்டிருக்கிறது
ஆம்! மிக மெதுவாக..!
எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆரம்பித்து அதே வேகத்தில் முடித்திருந்தால், பல கோடிகள் லாபமாகியிருக்ககூட்டும் cost benefit ratioவின் படி! ஆனால் அப்படி நடந்தால் நமக்கும் மத்தவங்க்ளுக்கும் என்ன வித்யாசம்ன்னு நினைச்சிருப்பாங்க போல அலுவலர்கள்! மெல்லப்போ மெல்லப்போவென்று பாடிக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறார்கள்!
தங்க நாற்கர திட்டம் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைத்துறையால் செய்ல படுத்தப்பட்ட மற்ற நெடுஞ்சாலைகள் திட்டம் அனைத்துமே இந்த நிலையில்தான் உள்ளது..!.
நிலம் ஒதுக்குவதில் பிரச்சனை;
நிலம் அப்புறப்படுத்துவதில் பிரச்சனை ;
வன இலாகவின் அனுமதி பெறுவதில் பிரச்சனை ;
ரயில்வேயின் அனுமதி பெறுவதி பிரச்சனை,
இதையெல்லாம் கடந்து வந்தால், காண்டிரக்டர்களை தேர்வு செய்வதில் குழப்பங்கள்,அப்படியே தேர்வு செய்தாலும் அவர்களை நீக்கவேண்டிய சூழல் என வரிசையாக காரணங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை அடுக்கிக்கொண்டே சென்றாலும் தீர்வுக்கான வழிவகைகள் பற்றி ஆராயாப்படாமல் வழக்கமான அலுவல்களோடே இயங்கிகொண்டிருக்கின்றன!
இந்த வருடத்தில் தோராயமாக 33000 கி.மீகள் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டிய நான்கு வழிப்பாதை திட்டங்களில் இதுவரை 8000 கி.மீ பணி கள் தொடங்கியுள்ளன, சுமார் 7500 கி.மீக்கான பணிகள் ஆரம்பிக்கப்படவேண்டிய சுழலில் மீதமுள்ளவை இதுவரையில் செயல்வடிவில் இறுதி பெறாத நிலைதான்!
இதனால் கடந்த 2004 - 2005ல் சுமார் 81% முன்னேற்றத்தில் இருந்த திட்டங்கள் இந்த 2006 -2007 ஆம் ஆண்டில் 49% வந்து கிழிறங்கிக்கொண்டிருக்கின்றன!
இதுக்குத்தான் நான் சப்ஜெக்ட் சம்பந்தமாவே உள்ளாற (உளற) போகறது கிடையாது!
பாருங்க..! படிக்கறப்ப இருந்தா மாதிரியே இப்பவும் ஒரு எழவும் எனக்கு புரியமாட்டேங்குது! உங்களுக்கு எதாவது புரியுதா...???
# ஆயில்யன் 9 பேர் கமெண்டிட்டாங்க
Labels: சிவில்
அண்ணாமலைக்கு அரோகரா...!
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்தில் தோன்றுகிற கார்த்திகை ஜோதிதான் பிரபஞ்சத்திற்கே அக்னி சக்தியை அளிக்கிறது. மேலும் வானில் திகழ்கிற கோடானு கோடி நட்சத்திரங்களும் நம் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும், நாம் அறிந்தும் அறியாமலும் எண்ணற்ற கோள்களுக்கும் ஒளி சக்தியை அளிப்பது திருவண்ணாமலை கார்த்திகை தீப ஜோதிதான். திருவண்ணாமலை ஜோதிக்கு நிகர் வேறெதுவும் இல்லை. பஞ்சபூத லிங்கத்தில் அக்னி லிங்கமாய் முதன்மையாய் விளங்குவது திருவண்ணாமலையாம் அருணாசலமே. திருக்கார்த்திகை தீபம் அண்ட சராசரங்களுக்குமே, ஒளிவிளக்கான திருவண்ணாமலை ஜோதி ஏற்றப்படுகிறது.
இந்த தீப ஜோதி தரிசனத்தைப் பார்ப்பவர்கள் கோடானு கோடி புண்ணியத்தைப் பெறுவதுடன் அண்ணாமலையாரின் அருள் பெற்று அனைத்துத் துன்பங்களும் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள். கார்த்திகை மகா தீபத்தைக் காண, மாநில மக்கள், உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டவர்களும் வருகின்றனர். இந்தக் கண்கொள்ளா நிகழ்ச்சிகள் வானொலி மூலமும், தொலைக்காட்சி மூலமும் உலகெங்கும் ஒலி ஒளிபரப்பாகின்றன.
ஆண்டுதோறும் தீபத் திருவிழாவின் பத்தாவது நாள் விழாவாக அதிகாலை அருணாசலேசுவரர் கோயிலில் பரணி தீபமும், பிரதோஷ காலத்தில் அர்த்தநாரீஸ்வர மூர்த்தி எழுந்தருளிக் காட்சி கொடுக்கும் நேரத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.இந்த நேரத்தில் வீதியில், வீட்டில் மலையைச் சுற்றியுள்ள 20 கி. மீ. தொலைவில் உள்ள கிராமங்களிலும், பட்டிதொட்டிகளிலும், வீடு, கங்கைக் கிணறு, மாடம், நிலம் என அனைத்து இடங்களிலும் தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள். "அண்ணாமலைக்கு அரோகரா' என அனைவரும் வேண்டுவார்கள்.
நன்றி - சிஃபி தமிழ்
இனிய பக்தி நிறைந்த நன் நாளில்,
தமிழும்,பக்தியும் இசையோடு சேர்ந்த இனிய குரலில், நித்யஸ்ரீ பாடலில்..!
இறைவனை துதிப்போம்
இன்பம் துய்ப்போம்!
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆன்மீகம்
இந்த தலைவரு காமெடி பண்றாரா..?!!
இதுபோன்ற பிரச்னைகள் இந்தியா முழுவதும் உள்ளது. இதற்கு தீர்வு காண அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றியுடன் நிராகரிக்கிறது. இந்த பிரச்னைக்கு இது சரியான தீர்வாக அமையாது. இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமான சமூக விரோதிகளை ஒழிக்கவேண்டும். தன்னை பாதுகாக்க முடியாத தலைவர்கள் நாட்டு மக்களை எப்படி பாதுகாப்பார்கள்? அரசியல் தலைவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுத்தால் பொதுமக்களை பாதுகாப்பது யார்? இதற்காக பயன்படுத்தப்படும் படை பலத்தை கொண்டு சமூக விரோதிகளை ஒழிக்க வேண்டும். தலைவர்கள் விரும்பினால் அவர்களுக்கு துப்பாக்கி வழங்கலாம்."
தமிழகத்தில நடக்கற முக்கால்வாசி கட்டபஞ்சாயத்து,கொலை எல்லாத்துக்கும் பேக் கிரவுண்டே அரசியல் வியாதிகளாலத்தான்னு எல்லாருக்குமே தெரியுது!
இது ஒவ்வொருத்தருக்கும் துப்பாக்கி கொடுத்தா...?
ஹை! உண்மையிலேயே ஜாலியாத்தான் இருக்கும்! என்ன ஒண்ணு சினிமாவில அப்புறம் துப்பாகி சண்டை இருக்காது! அப்படியே இருந்தாலும், அந்தளவுக்கு இந்த காமெடிய விட சினிமா துப்பாக்கி காமெடிய மக்கள் ரசிக்க மாட்டங்கல்ல.!
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க
Labels: மொக்கை
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன் - பதிவர்கள் குடும்பத்தோடு..!
நாகரீகமாக உடுத்தி, நெற்றியில் விபூதி இட்டு, கழுத்தில் இரட்டை வட செயின் சகிதம் எப்போதும் பளிச்சென்றுதான் இருப்பாள். எப்போதும் பிள்ளையார் பைத்தியமாக இருந்த பேரனோடு தான் எடுத்துக்கொண்ட போட்டோதான் பாட்டிக்கு பிடித்தமான போட்டோ. பிள்ளையார் இருந்தால்தான் போஸ் கொடுப்பேன் என்று அழுது அடம்பிடித்த பேரனை சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிலேயே இருந்த போட்டோவை கழட்டி பேரனிடம் கொடுத்துவிட்டு ஒரு கையில் பேத்தியையும் இன்னொரு கையில் போட்டோவையும் நழுவ விடாமல் பத்திரமாக பிடித்துக்கொண்டு பேரப்பிள்ளைகளே என்னுடைய உலகம் என்று முப்பது வருஷமாய் மனதுக்குள் தீர்மானம் செய்து வைத்திருந்த பாட்டிதான் எனக்கு மகளாக பிறக்கவேண்டும்.
இறைவனுக்கும், எம்மை ஈன்றவளின் தாய்க்கும் வைத்த கோரிக்கை நிறைவேறியது!
# ஆயில்யன் 23 பேர் கமெண்டிட்டாங்க
அடிமாட்டு விலைக்கு கறவை மாட்டை எதிர்ப்பார்க்கலாமா? - பார்க்கலாம்!
பெரும்பாலும் அடிக்கடி செய்திகளில் தென்படும் விஷயம்தான்! அதுவும் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த செய்திகள் சர்வ சாதாரணம்! சாதரணமாக பார்க்கும் நமக்கு இது அந்தளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது! ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட மாடுகளால் பாதிக்கப்ப்ட்டு பெரும் கடன் சுமைக்கு ஆளாகி பலர் விவசாய தொழிலையும் கிராமத்தையும் நிலத்தையும் விட்டு சென்றுள்ளனர் என்பது புள்ளி விவரங்களை கொண்டுதான் இதன் அபாயம் புரியும் சாதரணமாக கிராமங்களில் அந்தளவுக்கு சுகாதாரம் பேணும் வகையில் மாட்டு தொழுவங்கள் இல்லையென்றாலும், தினப்படி தொழுவத்தை சுத்தப்படுத்தித்தான் பிற வேலைகளை கவனிக்கின்றனர் ஒரு பயபக்தியும் இதற்கு காரணம்!
ஆனால் இதையெல்லாம் மீறி மாடுகளை இந்த கொடிய கோமாரி நோய் தாக்குகிறது சிறிது சிறிதாக பாதிப்பை ஏற்படுத்தும் இந்நோயால் மாடுகளின் அவதியினை காண் கஷ்டமாகத்தான் இருக்கும்!
மாடுகளின் கால்களிலும் வாயிலும் வரும் கொப்புளங்கள் பெரும் புண்களாகி பின் சில நாட்களில் மாடுகளால் தாங்க முடியாத அளவுக்கு ரணத்தில் கொண்டுபோய்விட்டுவிடுகின்றன!
மொத்ததில் இந்த நோய் வந்த மாடுகளை வைத்து கொள்வது என்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தை சீக்கிரத்தில் உண்டாக்க ஒரு எளிய வழிதான்!
பெரும்பாலானோர் அடி மாட்டு விலைக்கு தள்ளிவிடுவதை நிறைய இடங்களில் காணலாம்!
தற்போதைய சூழலில் விவசாயத்தோடு சேர்த்து இது போன்று மாற்று தொழில்களையும் சேர்த்து செய்வதால் ஒரளவுக்கு கடன் தொல்லையின்றி இருக்க நினைக்கும் விவசாயிகளுக்கு இந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாகவும் மீள இயலாத அளவு இழப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது!
தீர்வு காண்பதில் தீவிரம் காட்டவேண்டிய அரசு மருத்துவ முகாம்களை அவ்வப்போது நடத்திக்கொண்டிருந்தாலும், நிரந்தர நோய் தடுப்பு தீர்வுக்காண முயற்சிகள் இது வரைக்கும் இல்லை!?
# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க
Labels: செய்திகள்
ஸ்ரேயா கோஷல் - இறுதி 2ம் பாகம்
மன்றம் ஆரம்பிச்சும், நாங்க எதிர்பார்க்கற ரெஸ்பான்ஸ் இன்னும் வரலைன்னு ஒரு ப்லீங்க்ஸ்!
நம்ம மக்கள்ஸ்க்கு எங்க தலவியோட அருமை தெரியாததும் இதற்கு காரணாம இருக்கலாம்னு ஒரு நினைப்பு!
2006 பிலிம் பேர் விருது சிறந்த பின்ணணி பாடகிக்கான விருது வாங்குன எங்க தலவி மேடையிலேயே பாடி அசத்திய காட்சிதான் இது!
இதற்கும் மேலயும், எங்க தலவி யாரையும் இம்ப்ரஸ் பண்ணலன்னா அதுக்கு காரணம்,
*****######******%%%%%&&&&&*********###******%%%%%&&&&& ###******%%%%%&&&&&
(தேர்தலில் படுதோல்வியுற்றப்பிறகு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், தமிழ் மக்களை விளிக்கும் வார்த்தைகள்தான் மேல இருக்கு ஒரு தடவை ஞாபகப்படுத்திபார்த்துங்கோங்க!)
# ஆயில்யன் 6 பேர் கமெண்டிட்டாங்க
ஸ்ரேயா கோசல் ஸ்பெஷல் - 2
பல பகுதிகளிலிருந்தும் வந்த எதிர்ப்பினைத்தொடர்ந்து, (ஏன் போட்டோ இல்லை? ஏன் போட்டோ இல்லை? )
இதோ உங்களுக்காக ஸ்ரேயா கோசலே மேடையில் தோன்றி பாடும் .....!
மன்றத்தில் இணைய...!
தொடர்புக்கு,
தள - குசும்பன்
மெயின் ஆபிஸ் - அமீரகம்.
ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம் - கத்தார் கிளை
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஸ்ரேயா
ஸ்ரேயா கோசல் ஸ்பெஷல் - இறுதி
இந்த பாட்டுத்தான் சூப்பர்ன்னு மனசுக்குப்பட்டாலும் என்னவோ தோணுச்சு வரிசையா ஸ்பெஷல் போட்டேன்! - (இத்தோட முடிச்சுக்கிறேன்!)
பட்! அதில ரெண்டு முக்கியமான சமாச்சாரம் இருக்கு!
1.என்னைய மன்றத்துல சேர்த்ததோட இல்லாம என்னையும் ஒரு நிர்வாகி ஆக்கி அழகுப்பார்க்கும் நண்பர் குசும்பர இம்ப்ரஸ் பண்ணறதுக்கும் (கும்மி குரூப்ல இவரோட ரெகமண்டேஷன் இருந்தா உடனே அட்மிஷனாம்?)
2.எங்க வித்யா அக்காவை கும்மி உறுப்பினராக்கும் முயற்சி தள்ளி போயிருக்காம்..!? (அவங்க அமெரிக்கா பத்தி பதிலடி பதிவுகள் அப்புறம் சிந்திக்கவைக்கும் பதிவுகளில் கும்மி பேரைக்கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதால் இந்த முடிவாம்! இந்த சந்தர்ப்பத்துல நான் அப்ளிகேஷன் கொடுக்கறதுக்குத்தான் இத்தனை கஷ்டப்படுறேன்!!!)
(குறிப்பு:- இந்த விஷயம் ரகசியமானது யாருக்கிட்டயும் சொல்லவேணாம் குறிப்பா வித்யா அக்காகிட்ட...!!!!!!!!!!!)
ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம் - கத்தார் கிளை
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க
ஸ்ரேயா கோசல் ஸ்பெஷல் -1
தள - குசும்பன்
மெயின் ஆபிஸ் - அமீரகம்.
ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம் - கத்தார் கிளை
# ஆயில்யன் 5 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஸ்ரேயா
இன்னாப்பா இது..? - 2
திருவாரூர் மாவட்டம் பூராவும் பிரச்சனையே கூடுமான அளவில் பஸ் வசதி இல்லைங்கறதுதான், கஷ்டம் தெரிஞ்சவங்களே இப்படின்னா...??
# ஆயில்யன் 4 பேர் கமெண்டிட்டாங்க
Labels: செய்திகள்
துலா ஸ்பெஷல் – கடைமுழுக்கு கடைத்தெரு
தெருவின் பாதி தூரத்தில் ஆரம்பித்து முடிவு வரை சுமாராக 500 மீ தொலைவுக்கு இரு பக்கமும் கீற்றுக்களால் தடுக்கப்பட்ட தற்காலிக கடைகள் முளைக்க் ஆரம்பித்துவிடும் 15 நாட்களுக்கு முன்பே!
எல்லா விளையாட்டு சாதனங்கள் அழகு பொருட்கள் இப்படியாக எல்லா பொருட்களும் வந்து குவிந்துவிடும்! தினமும் சாயங்காலங்களில் பலரது வீடுகளிலும் கடைமுழுக்கு கடைக்கு போயிட்டு வர்றேன் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்!
ஊருக்கே அதான் பெரிய திருவிழா நிறைய கூட்டம் கூடும் கடைவீதிகள்! இத்தனைக்கும் திருவிழாவின் மெயின் ஸ்பாட் துலா கட்டத்தையும் காவிரியையும் காணாத கூட்டம் கடைகளில் பேரங்களில் காலம் கழித்துக்கொண்டிருக்கும்!
பெரிய ராட்சத சைஸ் ராட்டினங்கள் (10 – 15 அடி இருக்கும் அதான் எங்க ஊர்ல பெரிய ராட்டினம்!) துப்பாக்கி வைச்சுக்கிட்டு பலூன் சுடறது, சோப்பு கரைசல்ல முட்டை விடறதுன்னு, எல்லாம் மக்களும் அலைந்துக்கொண்டிருக்கும் நாட்கள்தான் இந்த மாசத்தில் - மயிலாடுதுறையில்!
வருட வருடம் எதாவது ஸ்பெஷல் பொருட்களை வாங்க முடிவெடுத்து அதற்க்காக நாயாக அலைந்து திரிவதுதான் எனது வழக்கம்! பின்ன என்னாங்க அதற்கு முந்தைய வருஷம் கடைமுழுக்கு கடைகயில எதாவது வித்தியாசமான பொருள் பக்கத்து வீட்டு பையன் வாங்கியிருப்பான்! (அத என்கிட்ட கொண்டு வந்து காமிச்சுட்டுத்தான் மத்த வேலையே பார்க்குற கேரக்டர் அவனுக்கு!? ) அந்த பொருள் என் மனசில பதிஞ்சு அதப்பத்தி வீட்டுக்கு வேண்டுகோள் விடுத்து அது ஒ.கே ஆகறப்ப அந்த பொருளை அடுத்து வர்ற கடை முழுக்குலதானே வாங்க முடியும்! – அதுவும் கிடைச்சாத்தான்?!
அபபடித்தான் ஒரு பொருள் வாங்க ரொம்ப பிரயத்தனப்பட்டு வாங்கி வீட்டுக்கு எடுத்துபோறதுக்குள்ள அக்குவேறு ஆணி வேற வந்துடுச்சி! ரொம்ப பீல் பண்ணுனேன்....!!!
பின்னாளில் அலுவலில் இருக்கும்போது காவிரி பிரியிற ஆறுபாதி வாய்க்காலோட தூரம் அளக்கணும்ப்பா போயிட்டு வான்னு சொன்ன அதிகாரி மீது வந்த கோபத்தை விட அந்த கருவி மீது வந்த வெறுப்புத்தான் அதிகம்..! முன்பு நான் எதுக்கு ஆசைப்பட்டேனோ அதையே வெறுக்கவும் வேண்டிய சூழலை உண்டாக்கிய உபகரணம்! – இதான்!
# ஆயில்யன் 4 பேர் கமெண்டிட்டாங்க
Labels: நினைவுகளில்.., மொக்கை
கிரெடிட் கார்டு பார்ட்டிகளுக்கு – தினமணியிலிருந்து....
சென்னையில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி தொடர்பான மோசடிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டு புள்ளி விவரப்படி கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போதைய நிலவரப்படி 2007-ல் இதுவரை சுமார் 19 வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. 32 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக தினந்தோறும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என்று போலீஸôர் தெரி விக்கின்றனர்.
நூதன மோசடி நடப்பது எப்படி? கிரெடிட் கார்டில் நூதன முறையில் தற்போது மோசடி நடந்து வருகிறது. பொதுவாக கிரெடிட் கார்டுகளுக்கு பாஸ்வேர்ட் எதுவும் தேவையில்லை.
சில வங்கிகள் இதற்கான சேவைகளை வழங்கி வருகிறது.நட்சத்திர ஹோட்டல்கள், கிளப் களில் இம்மாதிரியான சேவையைப் பெற முடியும். இதற்கு "கீ என்ட்ரி ஆப்ரேஷன்ஸ்' என்ற புதிய சாஃப்ட்வேர் முறை பின்பற்றப்படுகிறது.
இதன்படி கிரெடிட் கார்டு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு அமெரிக்காவிலோ அல்லது பிரான்ஸிலோ உள்ள ஹோட்டல்களில் தங்குவதற்கு அறைகளை புக் செய்து கொள்ள முடியும்.
இம்மாதிரியான சேவைகளில் மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளன. எனவே, கிரெடிட் கார்டுகளின் எண்களை யாருக்கும் தெரிவிக் கக்கூடாது. அதேபோல கிரெடிட் கார்டுகளின் இரு பக்க ஜெராக்ஸ் நகல்கள், சிவிவி எண் (கார்டு வேல்யூ வெர்ஃபிகேஷன்), கிரெடிட் கார்டின் பயன்பாட் டுக் காலம் குறித்து தகவல் தெரி விக்கக்கூடாது. ஆன்-லைன் மூலமாக இந்தச் சேவை நடைபெறுகிறது. ஆன்-லைன் மூலமாக நடைபெறும் இந்த மோசடியைத் தடுக்க வேண்டுமெனில், கிரெடிட் கார்டில் உள்ள சி.வி.வி. எண்களை கறுப்பு பேனாவால் எழுதி மறைத்துவிடவேண்டும். அதன்பின்னர் ஜெராக்ஸ் நகல் கொடுத்தால், மோசடி நடப்பது தவிர்க்கப்படும் என்று போலீஸôர் தெரிவிக்கின்றனர்
# ஆயில்யன் 2 பேர் கமெண்டிட்டாங்க
Labels: செய்திகள், நிகழ்வுகள்
மயிலாடுதுறை துலாஉற்சவம் - கடைமுழுக்கு இன்னைக்கு!
காலை 5.00 மணிக்கு பாதி தூக்கதிலிருக்கும்போது, அம்மாவும் பாட்டியும், டேய் காவிரி ஆத்துக்கு போய்ட்வர்றோம் தெரு கதவைப்பூட்டிக்கோவென்று சொல்லும் சப்தம் கேட்டு,தூக்கத்திலிருந்து எழும்போதே, அம்மா..! வரும்போது மயூரா பொங்கல் வாங்கிட்டுவர்றீயாம்மா? ன்னுதான் வார்த்தை வரும்!
அது போலவே 7. மணிக்கு சூடான பொங்கல் கொண்டு வந்து வைத்துதான் எழுப்புவார்கள்! இது பல வருடங்களுக்கு முன்பு வரை!
கடைமுழுக்கு பற்றி ஒன்றும் பெரிதாக தாத்பரியங்கள் அறிந்திருக்காவிட்டிலும் கூட அன்னைக்கு போய் காவிரியில குளிச்சா, நல்லதுங்கற எண்ணம் மட்டும் ரொம்ப கெட்டிய மனசுல் இறுகிப்போச்சு!
என்னதான் காலையில் காவிரி ஆற்றுக்கு சென்றுவந்தாலும் பாட்டிக்கு சாயங்காலமும் சென்று சாமி தீர்த்தம் கொடுக்கும் போது குளித்துவந்தால்தான் மனசுக்கு நிம்மதி! (ஏம்மா! அதான் காலையில போய் குளிச்சுவந்தாச்சுல்ல பின் திரும்ப எதுக்கு சாயங்காலமும்ன்னு சொல்றத கேட்கதபோது எங்களுக்கு கோபம்தான் வரும்! ஆனால் பெரியவர்களின் பிடிவாதம் என்பதே ரொம்ப நாட்கள் நினைத்திருந்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடல்லவா!)
காலை 10.00மணிக்கு கோவிலுக்கு செல்லும் நான் சாமி புறப்பாடாகி கோவில் வாசலிலிருந்து அந்த மடவளாக விளிம்புக்கு வர ஒரு மணி நேரமாவது ஆகும்! ஆம் அங்குதான் மிகவும் விமரிசையாக பலர் ஊர்களிலிருந்து வந்த நாதஸ்வர சக்ரவர்த்திகள் இறைவனை வணங்கி கச்சேரி செய்வார்கள் ( மல்லாரி ராகத்தில் போட்டிப்போட்டுக்கொண்டு பாடுவார்கள்ன்னு நினைக்கிறேன்!)
வீட்டுக்கு வந்து சாமி கிளம்பிவிட்டது என்று தகவல் சொன்னால் போதும் பரபரக்க ஆரம்பித்துவிடுவார் பாட்டி! இத்தனைக்கும் கோவிலிலிருந்து கிளம்பு உற்சவமூர்த்திகள் துலாகட்டம் சென்று சேர எப்படியும் சாயந்திரம் 5 மணியாகிவிடும்! வழி நெடுகிலும் நாதஸ்வர கச்சேரி தூள் கிளப்பிக்கொண்டிருக்கும்!
ஒரு வருடம் நானும் துலாகட்டத்தில் சாமி வருகையை எண்ணி காத்திருந்தப்போது, சுமார் 3 மணிக்கு முதலில் யானை வந்து சேர கூட்டம் பரபரப்பாகி ஆற்றை நிரப்பியது மக்கள் வெள்ளம் ஆனால் உற்சவ மூர்த்திகள் வந்து சேர்ந்ததோ 5 மணிக்கு மேல்தான்! அவ்ளோ நேரம் ஆச்சு கடைத்தெருவை கிராஸ் செய்து வர..!
ஒவ்வொரு வருடமும் இதே போன்ற நிகழ்வுதான் என்றாலும், இன்றும் கூட மிகுந்த உற்சாகத்தோடு கடைமுக உற்சவத்தில் ஆற்றில் மக்கள் வெள்ளம் கரை புரள்கிறது!
காவிரி அன்னை எம்மை காண வராமல் தவிக்கும் நாட்களில், வருணபகவான் வாரி வழங்குகிறான்
எம் மயிலாடுதுறை மக்களுக்கு வளங்களோடு நல் வாழ்க்கையையும் - மயூரநாதரின் கருணையால்...!
# ஆயில்யன் 4 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆன்மீகம், மயிலாடுதுறை
கடகத்திலிருந்து விட்டு விலகி.......! (துறை சார்ந்தது..?)
மீன ராசி
இது ஜோதிட "துறை" சார்ந்த பதிவுல போய் ரொம்ப நாளைக்கு நின்னுக்கிட்டிருக்க நீங்க ரெகமண்ட் பண்ணுவீங்களா, குசும்பா...??!!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆன்மீகம், வெட்டி முயற்சி
சாப்பிடுவோர் (சிவில்) இன்ஜினியர்களும் + சமூக சீரழிவும்...!
தமிழகத்தில் பல அரசுக் கட்டடங்கள், மேம்பாலங்கள் மற்றும் சாலைகளின் நிலைப்புத்தன்மை குறைவதற்கு ஒப்பந்ததாரர்களி டம் கமிஷன் பெறுதல் ஒரு முக்கிய காரணம்.
எந்தக் கட்டுமானப் பணியாக இருப்பினும், வேலைதொடங்கும் முன்பே, ஒப்பந்ததாரர்களிடம் 20 சதவிகிதம்வரை கமிஷன் பெறுவது வாடிக்கையாகி விட்டது.
ஒப்பந்தப்புள்ளிக்கான விண்ணப்பங்கள் கூட அரசியல்செல்வாக்கு படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைப்பதும், அவை மட் டுமே பரிசீலனைக்கு ஏற்கப்படுவதும் பொதுவான நடைமுறையாக உள்ளது.
இந்த ஒப்பந்தங்களை, குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே வழங்க அதிகாரம் படைத்தவர்களி டம் இருந்து வாய்மொழி உத்தரவு வரும் போது, அரசு அலுவலர்கள் நேர்மையான முறையில் ஒப்பந்தப்புள்ளிகளை நிர்ணயிப்பது இயலாத காரியமாகிவிடுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரத்துக்கு வருவோர் பலரும் பினாமி பெயர்களில் ஒப்பந்தப்பணியை ஏற்று, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றொருவர் மூலம் பணியை நிறைவேற்றுவது வழக்கமாகி விட்டது.
கட்டுமானப்பணியைப் பெறுவதற்கு அளிக்கப்படும் கமிஷன்போக, ஒப்பந்தத்தொகையில் 60 சதவிகித நிதி மட்டுமே பெரும்பா லான பணிகளில் செலவிடப்படுகிறது.இந்நிலையில், கட்டுமானத்தில் தரமற்ற பொருள்கள், மணல், சிமென்ட் கலவையில் சரியான விகிதம் இன்மை, கட்டுமானத்தில் நேர்த்தியின்மை உள்ளிட்ட குறைபாடுகளும் காணப்படுகின்றன.
நூற்றாண்டைத் தாண்டிய பல கட்டடங்கள் இன்றைக்கும் வலுவுடன் நிமிர்ந்துநிற்கக் காரணம், தரமான கட்டுமானப் பொருட்களும் உயர்தர தொழில்நுட்பங்களுமே.ஆனால் இன்றைய அரசுக் கட்டுமானங்களில் இவை அரிதான விஷயமாகிவிட்டது.
எந்த அரசு ஆட்சியில் இருந் தாலும், முந்தைய அரசின் கட்டு மானங்களைப் பராமரித்து பேணிக்காப்பது அதன் கடமை.
இத்தகைய நடைமுறைகளில் அரசு கவனம் செலுத்தாமல் இருப்பது, பல கட்டுமானங்கள் சீர்கெடக் காரணமாக உள் ளது.
வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் மட்டு மன்றி, அரசுக் கட்டடங்களின் பராமரிப்புக் கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி மிகக்குறைவு.இதற்கான ஒப்பந்தப் பணிகளை ஏற்க, எந்த ஒப்பந்ததாரரும் முன்வருவதில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
அரசு அவ்வப்போது பராமரிப்புப் பணிக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியை அதிகாரிகள் முறையாகச் செலவிடுவதில்லை. அவை வேறு செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
எங்கு கட்டடம் தேவைப்படுகிறதோ, அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை யும், அரசுக் கட்டடங்களையும் கட்டுவது நடைமுறையாக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்படும் நிலத்தின் ஸ்திரத்தன்மையை மண்ஆய்வு மூலம் அறிவதில் பொதுவாக ஆர்வம் காட்டுவதாகத் தெரிவதில்லை. சில தருணங்களில் மண் ஆய்வு, வெறும் சடங்காகவே முடிந்து விடுகிறது. மண்ஆய்வில் திருப்தி ஏற்படாத நிலையில் அந்த இடத்தில் கட்டடங்களைத் தவிர்க்க வேண்டும்; அல்லது மண்ணின் தன்மைக்கேற்ற கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம்.
கட்டுமானப் பணியின்போது தரஆய்வுகளில் கீழ்மட்டத்தில் மெத்தனம் காட்டப்படு வதும், உயர் அதிகாரிகளின் திடீர் ஆய்வின் போதே குறைபாடுகள் கண்டறியப்படுவதும் வருந்தத்தக்க விஷயம். கட்டுமானத் தரத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க உயர்நிலைக் குழுவை மாவட்டம்தோறும் அரசு அமைக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலத்துக்கு கட்டடத்தின் நிலைப்புத்தன்மை குறித்த உத்தரவாதத்தை ஒப்பந்ததாரரிடம் பெறவேண்டும். கட்டுமா னப்பணி ஒப்பந்தங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கமிஷன் கொடுக்கும் போக்கையும், உள்ளாட்சி அதிகாரங்களில் உள்ளவர்கள் பினாமி பெயர்களில் ஒப்பந்தப் பணிகளை எடுப்பதையும் கட்டுப்படுத்தினால் மட்டுமே, நிலைத்து நிற்கும், உறுதிமிக்க கட்டடங்களை வருங்காலங்களில் பார்க்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அரசின் தார்மிகப் பொறுப்பு.
நன்றி - தினமணி
# ஆயில்யன் 2 பேர் கமெண்டிட்டாங்க
Labels: செய்திகள்
சஷ்டி ஸ்பெஷல் - சித்தனாதன் விபூதி
அருத்தவமானது நீறு அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு;
பொருத்தமாவது நீறு புண்ணியம் அளிப்பது நீறு;
என்று திருஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகத்தில் புகழப்பெற்ற திருநீறு - துண்ணுறு (மரூஉ)- விபூதி யாக அழைக்கப்படும் அந்த வெள்ளை நிற பொருளுக்கு பெரும் மகிமை அல்லது மணம் பரப்ப ஆரம்பித்தது இந்த பழநி சித்தனாதன் நிறுவன தயாரிப்பில்தான் அதிகம் என்று கூட கூறலாம்!
பெரும்பாலும் கோவில்களில் அவரவர்க்ள் தம்மால் இயன்ற முறையில் விபூதிகளை தயாரித்து பிரசாதமாக விநியோகித்து வந்த சுழலில்,பிராண்டட் பிரபலமானது பழனி சித்தனாதன் தயாரிப்பு விபூதிதான்!
பழனிக்கு சென்று மொட்டை போட மறந்தாலும் மறப்பார்களே ஒழிய, அடிவாரத்து கடையில் விபூதி கிலோ கணக்கில் வாங்க எந்த பக்தருமே தவறுவது கிடையாது! அந்தளவுக்கு தெய்வீக மணத்துடன் விபூதியின் அடையாளமாகியது பழனி சித்தனாதன் வாசனை விபூதி! அது போலவே பழனி போய் வந்தேன் என்று யாரிடமாவது கூறினால அவர்களின் முதல் கேள்வி சித்தனாதன் விபூதி வாங்கிவந்தாயா? என்பதுதான்!
நல்ல பேரும் புகழும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெற்று விபூதி விற்பனையில் முன்ணணியில் இருந்துவருகிறது சித்தனாதன் விபூதி.
முருகன் புகழ்பாடும் சஷ்டி திருநாளில்,
விபூதி அணிவோம்! முருகன் தாள் பணிவோம்..!!!
# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆன்மீகம்
சஷ்டி ஸ்பெஷல் - ரமணி அம்மாள்
முருகனைப்பற்றிய பக்தி பாடல்கள் பலர் பாடியிருந்தாலும், பாடிக்கொண்டிருந்தாலும், சிலரது குரல்களில் மட்டுமே வெளியாகும் அந்த தெய்வீக மணம் வீசுவதை அனுபவிக்கமுடியும்! அப்படிப்பட்டவர்களில் இவரும் ஒருவர்!
பெங்களூர் ரமணி அம்மாள்!
இவரது பாடல்கள் மார்கழி மாத அதிகாலை வேளைகளில் ஒலிக்காத கோவில்களே இல்லை!
என்றைக்கும் நீடித்து இருக்கும் இவரது பாடலில் வெளிப்படும் பக்தி
எனக்கு மிகவும் பிடித்தமான, அதிகாலைவேளைகளில் விரும்பி கேட்கும் பல பாடல்களிலிருந்து ஒன்றினை நீங்களும் கேளுங்கள் சஷ்டியில் முருகன் வணங்குங்கள்...!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆன்மீகம்
ஊர் ஸ்பெஷல் – தேர் திருவிழா - இன்னைக்கு..!
தேருக்காக சாரம் கட்டிய சவுக்கை மரங்களினுடாக புகுந்து வருவது என்னமோ இமயமலைய டச் பண்ணுன சந்தோஷம் வரும்!
ஐப்பசி மாதம் தேர் திருவிழான்னா வர்ற சந்தோஷம் ஒரு ரூபாயிக்கு விக்கும் பலூனை வாங்கி தட்டலாமேன்னுதான்! அது மாதிரியே பலூன் வாங்கி வந்து கடைசியாக சுருங்கி குட்டியூண்டு ஆகும் வரைக்கும் அத வைச்சு விளையாடுவேன் இது ஒரு வாரத்துக்கு ஒடும்!
இப்ப ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியிலருந்து எங்க ஊருக்கு பெரிய அழகான மரத்தேர் செஞ்சி உபயமா கோவில்லுக்கு கொடுத்திருக்காங்க அது யாரோ மன்னர்குடி வகையறாவம் யார்ன்னு தெரிய்லை! நல்லாயிருக்கட்டும்!
அது ஆடி வர்ற அழகே தனிதான்!
சின்ன வயசுல தேர் பார்க்குற ஸ்பாட்டுன்னா அது சின்னகடைத்தெரு தொங்கலில் இருக்கும் சியாமளா மாரியம்மன் கோவில் வளாகம்தான்! உள்ள நின்னுக்கிட்ட்டு பார்த்தா ரொம்ப பாதுகாப்புன்னு பாட்டி சொன்னதால அந்த சுவற்றின் சிமெண்ட் ஜாலிகளுக்கிடையில் முகத்தை மாட்டிக்கொண்டு பார்த்தது!
பெரிய மனுசனானதுக்கப்புறம் ஸ்பாட்டு மாறிப்போச்சு! தேரை விட தெற்கு வீதி பிகர்தான் முக்கியமென்ற காலம் வந்தது! அதே இடம் தொடர்ந்தது கல்யாணம் ஆகும்வரை – அந்த பிகருக்கு!
திரும்பவும் ஆன்மிக பாதையில் ஸ்ட்ராங்காக அடிவைத்ததும் கோவிலிலிருந்தே சாமி பக்கதில் நின்று சென்றது ஆரம்பமாகியது! தேர் சக்கரங்களினூடாக முட்டு போடும் அந்த மனிதர்களின் உற்சாகத்துடன் சேர்ந்து குரல் கொடுத்து வந்தவன் காலச்சக்கரத்தில் உள்ளே புகுந்து சக்கையாகி இப்ப இங்க.....!!!!
எனக்கும், இந்த கொடுமைய(பதிவ) படிக்கறவங்களுக்கும் அந்த மாயூரநாத சுவாமி சமேத அபயாம்பிகை அருள் புரிவாராக!
# ஆயில்யன் 6 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆன்மீகம், நிகழ்வுகள், நினைவுகளில்..
இது கவர்ன்மெண்டா...?
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கல்வித்துறை சிறப்பாக பங்காற்றிவருகிறது! அதுலயும் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கறதுக்காக வேண்டி கவர்ன்மெண்ட்ல படிக்கிற புள்ளைங்கள,தனியார் பள்ளிக்கு டிரான்ஸ்பர் பண்ணி படிக்க சொல்ற கவர்ன்மெண்ட்டும் இருக்குங்க!
அங்க கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல படிக்கற பசங்கல அரசே பணம் உதவி சொஞ்சு தனியார் பள்ளிகளில் சேர்த்து அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு வசதி செய்துவருகின்றனர்!
சுமாராக 800 மாணவர்கள் வரும் கல்வியாண்டில் இந்த சிறந்த கல்வி தரும் தனியார் பள்ளிகளில் இணைய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்!
இதற்கு அந்த மாநில அமைச்சரும் மாணவர்கள் கல்வி விளையாட்டில் சிறந்து இருக்கும்போது அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைத்தான் இது என்று சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்!
எதுவாயிருந்தால் என்னங்க? அந்த 800 பேர தவிர்த்து மத்தவங்க மோசமான கல்வியைதானே (அரசின் வாதத்தின்படி) பெறமுடியும்!
இதெல்லாம் கவர்ன்மெண்டா இல்ல மெண்டல்களா?
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க
பிறந்தநாள் வாழ்த்துக்கள் – தொல்ஸ் aka அபி அப்பா!
எப்படி வாழ்த்தறதுன்னு! தெரியாமா உக்காந்திருக்கும்போது ஒரு பாட்டு அதுலேர்ந்து சுட்ட சில வரிகளோட...
அபி அப்பாவை வாழ்த்தி,
அண்ணணோட ஹார்ட்ட ஊர்க்கார பயபுள்ள எப்படி டச் பண்றான் பாருங்கப்பு...!!!
உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மியடிக்குது;
அடடாஆஆ எனக்காக அருமை குறைஞ்சிஹ
தரும மகராசா.....!!!!
மந்தையில நின்னாலும் நீங்க வீரபாண்டி தேரு.... ......!!
(பாட்டு நல்ல சிச்சுவேஷன் சாங்தான் போல....!!! இதே பீலிங்கோட முழு பாட்டும் கேட்டுப்பாருங்க! சூப்பரா இருக்கும்!)
# ஆயில்யன் 4 பேர் கமெண்டிட்டாங்க
சத்யமூர்த்தி பவன் = காமெடி தர்பார்..!??
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
சஷ்டி ஸ்பெஷல் – குடுமியான் மலை
வருடந்தோறும் வரும் கோடை விடுமுறைகளில் புதுக்கோட்டையில்தான் சுமார் இருபது நாட்களுக்குமேல் அத்தை வீட்டில் தஞ்சம்! அங்குதான் சைக்கிள் ஓட்டுவதிலிருந்து சாமி கும்பிடுவது வ்ரை நன்றாக கற்றுக்கொண்டது! வாரம் வெள்ளி ஞாயிற்றுகிழமைகளில் ஏதெனும் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வருவது வழக்கம்! (ஊரைச்சுத்தி கோவில்கள் இருக்கும் எங்க ஊருல எனக்கு சாமி கும்பிடற எண்ணம் அப்ப வர்லை..!)
அப்படி ஒரு நாள் சென்ற இடம்தான் குடுமியான் மலை முருகன் கோவில்! காலையிலேயே தயிர்சாதம் புளிசாதம் என கை நிறைய் பைகளை நிரப்பிக்கொண்டு,கிளம்பியாச்சு டவுன் பஸ்ல,ஒரு ஒருமணி நேரம் போயிருக்கும் ஊர் வந்துச்சு! அண்ணாந்து பார்த்தா மலை உச்சியில ஒரு சின்ன கோவில்!
சீக்கிரம் நடங்கன்னு சொன்னதும் உற்சாகத்துல ஓடியவனை, அத்தை அதட்டும் குரலில் டேய்..! கையில செருப்பு எடுத்துக்கோ இல்லை இங்கயே போட்டுட்டு வான்னு மிரட்ட..! (செருப்பு போட்டுக்கிட்டு படியேறக்கூடாதாம்!) எதுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ் மாதிரி கையிலன்னு படி ஆரம்பிக்கிற இடத்துலயே போட்டுட்டு படி ஏற ஆரம்பிச்சாச்சு!
கோவிலுக்கு போனா ஒருத்தரும் கிடையாது! அப்படியே இருட்டில முருகன் தெரியுறாரன்னு உத்து உத்து பார்த்துக்கிட்டுருந்தேன்..!
கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு குருக்கள் ரொம்ப பாவமா நடந்துவந்துக்கிட்டிருந்தாரு! அவருக்கு அடிவாரத்திலதான் வீடாம் யாரோ நாலு பேரு மலையேறிப்போயிருக்காங்களேன்னு பரிதாபப்பட்டு வந்தவர நானும் பரிதாபமாத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன்! (சரியா கவனிக்க ஆளில்லாத கோவில்களெல்லாம் இது மாதிரி ரொம்ப பேர பார்த்துருக்கேன்! என்ன நிர்பந்த்துக்கு இவங்க இவ்ளோ கஷ்டப்பட்டு இவ்ளோ தூரம் வந்து வேலை பார்க்கணும்ன்னு,மனசுக்குள்ள தோணும்...?)
கொஞ்ச நேரத்திலயே, கொஞ்சம் பயத்துடனே சாமி கும்பிட்டு முடிச்சு, பிரசாதம் வாங்கிக்கிட்டு,நாங்க எடுத்துவந்த சாதத்தையும்,எடுத்து வயித்த நெப்பிக்கிட்டு நல்ல புல் கட்டுல இறங்கும்போதுதான் இவ்ளோ நேரம் நான் ஆடுன ஆட்டத்துக்கு, சோதனை வந்தது! அது கோடைக்காலம்னு முன்னாடியே சொன்னோன்ல, சுமார் 11.00 மணிக்கு மேல மலைப்பாதையில நடக்கறதும், மாரியம்மன் கோவில்ல தீ மிதிக்கிறதும் ஒண்ணுதானே..!
என் அத்தை எம் மேல பரிதாபப்பட்டு ஒரு துண்டு கொடுத்தாங்க அதை எடுத்துகிட்டு வேகமா ஒடி வந்து,துண்ட போட்டு அது மேல நின்னு திரும்ப திரும்ப அது மாதிரியே செஞ்சு ஒரு வழியா வந்துசேர்ந்தேன்...!
என்ன தான் அப்ப கஷ்டப்பட்டாலும் இப்ப இங்க உக்காந்துக்கிட்டு சஷ்டியும் அதுவுமா நினைச்சு பார்க்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு!
உங்களுக்கு வாய்ப்பு இருக்கா? அப்ப போய் பாத்துட்டுவாங்களேன் தமிழ்கடவுளை...!
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆன்மீகம், சஷ்டி, நினைவுகளில்..
சஷடி ஸ்பெஷல் - திருவிடைக்கழி முருகன் கோவில்
மயிலாடுதுறையிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் 9 கி.மீ செம்பனார்கோவிலிலிருந்து பிரியும் மேமாத்தூர் சாலையில் சென்றால் 3 கி.மீ இடது புறம் திரும்பி மஞ்சளாற்றின் கரைகளில் அழகான தார்சாலையில் வளைவு நெளிவுகளில் வளைந்து நெளிந்து,கொண்டேஏஏஏஎ சென்றால், சரியாக 12வது கிமீ ஒரு கோபுரம் அகலத்தில் சிறிதாக உயரமாக தெரியும்!அங்குதான் திருப்புகழ் பாடப்பெற்ற இறைவன் முருகன் காட்சி + அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார் - (நேரடியாக திருக்கடையூர் வந்து, அங்கிருந்து தில்லையாடி வந்தால் எளிதாக இருந்தாலும் அதைவிட இந்த ரூட் எதுக்குன்னா? வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சாலையில் வருவதென்பது எவ்ளோ சுகமானதுன்னு அனுபவிச்சு பார்க்கத்தான்...!) தேவாரப்பாடல்களில் திருவிசைப்பாவில் பாடல் பெற்ற ஸ்தல்ம் கூடுதலாக அருணகிரிநாதரால் முருகன் அருளை பெற, திருப்புகழினால் பாடப்பெற்ற இடமும் கூட இது! புராணத்தில் சூரன் மகன் இரண்யாசுரனை அட்டாக் செய்த இடமாக கூறப்படுகிறது!
ஸ்தல் விருட்சமாக, வாசம் தரும் குரா மலர்களை கொண்ட குரா மரம் ஸ்தல விருட்சமாக அமைந்துள்ளது.
தைப்பூசத்திற்கு, சுவாமிமலையிலிருந்து நடைப்பயணமாக பக்தர்கள் திருவிடைக்கழி வருவது பெரிய விழாவாக நடைபெறுகிறது! அது மட்டுமல்லாமல் சஷ்டி விழாவும், சுற்றுபுற கிராம மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூட இங்கு வெகு விமரிசையாக நடைப்பெற்றுவருகிறது!
முன்பு பஸ் வசதி ரொம்ப குறைவாக இருந்து, கால நேரம் தெரியாமல் காத்திருந்த காலங்கள் மனதில் நினைவாடுகின்றன! அந்த பிரச்சனைகள் இப்போது இல்லவே இல்லை அடுத்தடுத்து பஸ்கள் அல்லது மினி பேருந்துகளால் அமர்க்களப்படுகின்றது!
பெரும்பாலும் திருக்கடையூர் கோவிலை தரிசிக்க வருபவர்கள் இந்த கோவிலை தவறவிடுவதில்லை! இந்த கோவில் தெற்குவீதி (மெயின் ரோடும் அதான்) பார்த்தால் தில்லையாடி சிவன் கோவில் அதற்குபக்கத்திலேயே தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம் வாசலில் காந்தி சிலை!
இங்கு சென்றால், கண்டிப்பாக ஒரு மனநிம்மதியுடன் திரும்பலாம் அது உறுதி!
# ஆயில்யன் 6 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆன்மீகம், சஷ்டி, நினைவுகளில்..
பாட்டு படிப்போமா...!?
அருணகிரிநாதரோட கந்தர் அந்தாதியில வர ஒரு பாட்டு இன்னைக்கு சஷ்டி தொடங்குதுல்ல! அதான் ஸ்பெஷல்!
திதத்தததத் திததத திதிதாதை தாததுத தித்தததிதா
திதததத்தத திதத திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் திததத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத திததிததி தீதீ திதிதுதி தீதொத்ததே
# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆன்மீகம்
முடிந்தது தீபாவளி..!
ஒரு மணி தாண்டியாகிவிட்டது!
மதிய உணவு வேலைகள் முடிந்துவிட்டன!
வெடித்த வெடி சப்தங்கள் கொஞ்ம் கொஞ்சமாக குறையத்தொடங்கிவிட்டன!
காலையிலிருந்து பார்த்த காட்சிகளே திரும்ப திரும்ப ஒலி(ளி)க்க தொடங்கிவிட்டன!
உற்சாகமாக உறவுகளுடன் இருந்த காலம் கழிந்துவிட்டது!
உறவுகள் பிரிவில் நெஞ்சம் கனக்கிறது..!
உறவாடியவர்கள் நேரங்கள் நெருங்க கண்டு, வாடி கொண்டிருக்கின்றனர்!
எல்லாம் சில காலத்திற்கான அர்த்தம் அறியத்தொடங்கிகொண்டிருக்கிறது...!
உலகம் புரியத்தொடங்குகிறது
இருப்பது சில மணி நேரங்களாகினும், உறவுகளை உள்ளத்துக்குள் வைப்போம் !
உதயமாகும் நாட்களில் உற்சாகத்தோடு செல்வோம் - வெல்வோம்!
(இது புடிக்கலைன்னா.! புடிக்கலன்னு சொல்லுங்க! அத விட்டுட்டு இப்படி முறைச்சு பார்த்தா.....??)
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: வெட்டி முயற்சி