Showing posts with label படம். Show all posts
Showing posts with label படம். Show all posts

ராவணன்


கொளுத்தியெடுக்கும் வெய்யில் காலத்தில் ரிஸ்க் எடுத்துத்தான் ஆகவேண்டுமா என்ற கேள்விகள் பல பத்து முறைகள் எழுந்தடங்கினாலும் பார்த்துடலாம்ன்னு நட்பு கை கொடுக்க ராவணனின் திரைக்களம் -தியேட்டருக்குத்தாங்க - புகுந்தோம்!

ப்ளாக்யெல்லாம் வைச்சுருக்கோம்ல அப்படின்னு ஒரு நினைப்பு வந்துச்சு அதான்...!

*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*


Ø செய்திகளில் பேசப்பட்டது போலவே ராமாயணம் கதையின் கருவே ராவணன் – குரங்கு சேஷ்டை செய்யும் கார்த்திக் விபீஷணனாக மாறும் தம்பி கண்டிப்பாக நம்பவைத்துவிடுகிறது - ஹீரோவின் கேரக்டரினை விட வில்லன் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏன் டைட்டில் வைச்சுருக்காங்கன்னு யோசிக்கவைச்சு பதிலும் சொல்லியிருக்காங்க! என்ன அதுக்குள்ள இண்டர்மிஷனா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு விறுவிறுப்பு

Ø சந்தோஷ் சிவனின் ஒளி ஓவியங்கள் - ஒரு டப்பா எஸ்.எல்.ஆர் கேமராவினை வைத்துக்கொண்டு அலைமோதிக்கொண்டிருக்கும் எனக்கெல்லாம் வியப்பினை தரவைக்கும்விதமான காட்சியமைப்புக்கள் ! ஒரு காட்சியில் ஐஸின் ஐஸ் ஹப்ப்படியோ சொக்கவைக்கிறது! கேரளத்தில் அவுட்டோர் லொக்கேஷன் செண்டிமெண்ட் மணி ரத்னத்திற்கு உண்டு என்பதை நிரூபிக்கும் அதிராம்பள்ளி!

Ø உசுரே போகுதே பாடல் ஒளி/ஒலிக்கதொடங்கும் காட்சிகளில் சற்றே மனதுக்கு நெருடலாய் ஆரம்பித்தாலும், மொத்தமாய் படம் முடியும் பொழுதினில் சாரி டூ திருவள்ளுவர் & அபிஷேக் பச்சன் ”பிறன் மனை பாராமை பேராண்மை ரூல்ஸெல்லாம் ஏத்துக்க முடியாம, ஐஸ்வர்யா ராய் பச்சனை மனதிலேற்றி அமர்த்திவிட்டது!



Ø பெருத்த பிரபு வீராவுக்கு அண்ணன் + அட்வைசராக கால்ஷீட் பிரச்சனையோ அல்லது காலதாமதமோ கண்டினியூட்டி சில இடங்களில் பிரபுவுக்கு தடுமாற்றம்

Ø மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தில் பார்க்க நினைத்துக்கொண்டிருக்கின்ற கேரக்டர் ரஞ்சிதா - ச்சே எக்ஸ்பெக்டேஷனெல்லாம் கிர்ர்ர்ர்ர்

Ø கந்தசாமி எஃபெக்ட் சவுண்ட் கொடுக்கும் மேனரிஷம் எப்படி மணி ரத்னம் அனுமதித்தார் - நிஜமாகவே விரும்பியிருப்பாரோ - ஆச்சர்யம்தான்!

Ø கட்டுமஸ்தான விக்ரம் கந்தசாமியில் விழுந்தவரை கண்டிப்பாக கரை சேர்க்கும்! ஹிந்தியில் ஐஸ்வர்யாவின் கணவராக நடிப்பதையும் பார்த்துவிடும் ஆவல் உண்டாகியிருக்கிறது!

Ø மிக எளிய உரையாடலினை வெளிப்படுத்தும் வசனங்களே! மனைவியினை சந்தேகப்படும் கணவனின் செயல் சாதுர்யமாக கையாளப்படுவதும்,கோபம் விட்டுபோகாமல் இருக்கவும், தீயவர்களிடத்தில் இரக்கம்/அன்பினை வெளிப்படுத்தாமல் இருக்கவும், இறைவனிடம் வேண்டும் கதாநாயகி வசனங்கள் - சுஹாசினி - மணி ரத்னம் கொடுத்து வைத்தவர் ரொம்ப அதிகம் பேசமாட்டாங்க போல அவுரு தங்கமணியும்..!

Ø கோடு போட்ட,கள்வரே கள்வரே,கடா கடா காட்சியமைப்புக்களிலும் தூள்! ரொம்ப சிலாகித்து பேசப்பட்ட உசுரே உசுரே கொஞ்சம் நிமிடங்களில், மயங்கி கிடக்கும் ஐஸ்வர்யாவினை மனதில் இருத்திவிட்டு செல்கிறது!

Ø ஹிஸ்டரியின் ஒன் லைன் தீம் வைத்துக்கொண்டு கரெக்டர்களையும் ஒத்துவருவதுபோலவே உருவாக்கிவிட்டு, அரசியல் இன்ன பிற ஹிஸ்டோரிக்கல் பிரச்சனைகள் எதுவுமின்றி வில்லனை ஹீரோவாக்கும் விசயத்தில் மணி ரத்னம் ஜெயித்திருக்கிறார்


*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*

கடைசியா தோணுச்சு:- ஒரே நேரத்தில ராவணன் ஹிந்தி தமிழ்ல ரீலிசானா மல்லு சேட்டன்மார் ஹிந்திக்குத்தான் போறாங்க செம்மொழி மாநாட்டுல சொல்லி இதுக்கு எதுனா தடை போடணும்

டிஸ்கி டெரரிசம் :- இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று அப்படின்னு பாடுன தேவன் மேல டெரர் கோபம் வர்ற அளவுக்கு உங்களை ஒரு பெண் சஞ்சலப்படுத்தினால் நீங்களும் ராவணனே!

பா & யப்பா!

13 வருடம்தான் வாழ்க்கை கொஞ்சம் அதிர்ஷ்டமிருந்தா இன்னுமொரு பத்து வருஷம் நிறைய அதிர்ஷடமிருந்தா 20 வருஷம் வாழ்ந்துட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்! இதுதான் progeria வோட பேசிக் பிரப்ளம்!

பொருத்தமா உக்கார வேண்டிய ஜீன்களில் கொஞ்சம் கோச்சுக்கிட்டு இங்கயும் அங்கயும் மாறிப்போய் உக்கார்ந்துடுச்சுன்னா அந்த குழந்தையோட வாழ்க்கையே மாறிப்போயிடும்!

ரொம்ப ரொம்ப rare கேஸ்தான் இந்த நோய் - அதிர்ஷ்டம்ன்னு கூட வைச்சுக்கிடலாம்! இந்த விசயத்தை ஒரு சப்ஜெக்டா வைச்சு ஒரு படம் அதுவும் இந்தி சூப்பர் ஸ்டார் வைச்சு எடுக்கறதுங்கறது சிம்பிள் மேட்டர் கிடையாது!

யு.எஸ்ல இருக்கிற ப்ரோகேரியா ரிசர்ச் பவுண்டேஷன் இந்த படத்தை பார்த்துட்டு இந்த படத்தை விளம்பரபடமா இந்த நோய் பற்றிய விழிப்புணர்ச்சி பிரச்சாரத்துக்கு பயன்படுத்த முடிவு செஞ்சுருக்காங்களாம்!

சாதிச்சிருக்காரு R. பாலகிருஷ்ணன் aka பால்கி !

எம்.பியிடம் அவார்டு வாங்கிட்டு வந்து படுத்துக்கிடந்து கையில அவார்டோட எழுந்து அம்மாவிடம் விவரிக்கும் இடங்கள்

ராஷ்டிரபதி பவனுக்கு போவதற்கு அப்பாவிடம் தேதி பேரம் பேசுவது

ராஷ்டிரபதி பவனுக்கு போயிட்டு திரும்பி வரச்சொல்லிட்டு அதற்கு சொல்லும் காரணம்!

ரொம்ப்ப்ப்ப்ப் க்யூட்டான அந்த சின்ன பொண்ணுக்கிட்டயிருந்து எஸ்ஸாகும் விநாடிகள் கடைசியில் காரணம் நமக்கு புரிபடும் தருணங்கள்

அபிஷேக் வித்யா பாலன் காதல் செய்யும் தருணங்கள்!

பாட்டியுடனான கொஞ்சல்கள்

என ரசிக்கும் கவிதை நிமிடங்கள் நிறையவே இருக்கின்றது பா - விடத்தில்!

இளையராஜாவின் பின்னணி இசையில் சில இடங்களில் சிலிர்ப்பு உணரப்படுகிறது !



முழுப்படத்தின் உயிரோட்டமான நடிப்பு வித்யா பாலனும் அமிதாப்பும் - அமிதாப் இந்தி பட உலகின் சூப்பர்ஸ்டார் ஒரு சிறு பையனாக வித்தியாசமான மேக்கப்புடன் வலம் வருகையில் அவருடன் இணைந்து அதுவும் அம்மா கேரக்டரில் நடிக்கவேண்டுமெனில் நிறையவே சிரமங்கள் இருக்கலாம் ஆனால் எந்தவிதமான சமரசங்களுமற்ற ஒரு அம்மாவாக கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார்!


”யப்பா”

இந்த பா பார்ப்பதற்கு முன்பே ஒரு சின்ன வரி வடிவம் - யாரு “பா”வை தமிழ்ல ரீமேக் செய்யப்போறான்னு” டிவிட்டர்ல ஒரு கொஸ்டீன் மாதிரி வந்துச்சு! சரி நாம படம் தயாரிக்காட்டியும் (அடேங்கப்பா ஆசையை பாரு) அட்லீஸ்ட் செலக்‌ஷன்லயாச்சும் உக்காருவோமேன்னு செஞ்ச படங்கள்தான்!


யப்பா - மேலும் ஒரு எடிட் செய்யப்பட்ட படம் மிக குறுகிய காலகட்டத்தில் - நேரத்தில் என்றே கூறவேண்டும்! - இணையத்தில் வெகு வேகமாக பரவியிருந்தது - இத்தனைக்கும் தனிப்பட்ட மெயிலாக அனுப்பப்பட்ட படம்! - இணையத்தில் பரவிய வேகம் என்னை ஆச்சர்யப்படுத்தியது! இது தொடர்பில், ”யப்பா” படங்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னிக்கவேண்டுகிறேன்!

ரீ - எண்ட்ரி!



பிரும்மாண்டம் என்ற வார்த்தை பிரயோகித்து பிரபலமானவர்!

தயாரிப்பாளராகி தனக்கு தானே கட்-அவுட் வைத்து கலக்கியவர்!

ஏற்றமாய் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று படுவேகத்தில் இறங்கி போனவர்!

எங்கு போனார் என்று நினைத்திருந்த வேளையில்....

ரீ - எண்ட்ரி!

வாழ்த்துக்கள் கே.டி. குஞ்சுமோன்!

திரையுலக உண்ணாவிரதப்போராட்டம் சில படங்கள்!






இது போன்ற நிகழ்வுகளால் கூட கொஞ்சமாகவேணும் தாக்கத்தினை ஏற்படுத்தி

எம் ஈழ மக்களினை அழிக்க விழும் குண்டுகளின் வேகம் கட்டுப்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கையோடு....!

இப்படியான வாழ்க்கையில்...!



நன்மை ஒன்று செய்தார்கள்!

நன்மை விளைந்தது!

வனஜா :-(

மனம் சந்திக்கும் முதல் பார்வையில் மகிழும் காதல் மட்டுமல்ல, சில நேரங்களில் மனம் கலங்கும் காட்சிகள் கூட இருக்கலாம் கவனமாகவே இருங்கள் என்று எப்பொழுதோ கேட்ட வார்த்தைத்தான் தோன்றியது இந்த படத்தினை காணுகையில்...!



மனம் தொட்ட படத்தினை சுட்டி, தொடர்ந்து செல்கையில், ஊருக்குள் அதுவும் ஒரு பெரிய பண்ணை வீட்டில் எப்படியாக அடிமை போன்ற ஒரு பணியில் வறுமை வாழ்க்கை பெற்ற மக்கள் ஈடுபடுத்தபடுகின்றனர் என்பதை அப்படியே நிழல் படங்களிலேயே உணர்வுபூர்வமாய் கதை பற்றிய செய்திகளை எளிதில் தெரிந்துக்கொள்ளலாம்! அத்தனை உயிரோட்டமான ஒளிப்படங்கள் அது மட்டுமல்ல முழுபடமும் கூட அத்தனை உயிரோட்டமாகவே மனதினை கனத்துப்போக வைக்கிறது!

வறுமை, சாதி ரீதியான வெறுப்புக்களையும் சேர்த்து, ஒரு முக்கிய பிரச்சனை பால்ய விவாகத்து பிரச்சனையும் கூட இந்த படத்தின் மையகருத்தாக்கி அருமையாக படைத்துள்ளனர் ஒளி - ஒலியுடன் கிட்டதட்ட இரு வருடங்களுக்கு முன்பு வந்த படமாம்! ( அப்படியே தொடர்ச்சியாக கூகுளாண்டவரை வேண்டியதில் படத்தினையும் கூட பார்க்கும் வாய்ப்பும் பெற்றேன்! - லிங்கெல்லாம் கொடுக்கப்பிடாது தப்பு!)






பெரும்பாலான உலக திரைப்பட விழாக்கள் அனைத்திலும் கடந்த இரு வருட காலங்களில் திரையிடப்ட்ட இந்த படத்தினை பற்றியும் அதன் ஒவ்வொரு நிழல்படங்களிலும் அதை பற்றிய குறிப்புக்களுடன் முழுமையானதொரு தகவல்களையும் கூட நீங்க இந்த வனஜா பிரத்தியோக இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்!

குறிப்பு:- ச்சும்மா ஒரு விளம்பரம் படம் நல்லா இருக்கு கண்டிப்பா வாய்ப்பு கிடைச்சா பாருங்க!

குங்க்ஃபூ பாண்டா :-)

டிஸ்கி:- இது விமர்சனம் அல்ல ஒரு வெளம்பரம் மட்டுமே!

போஸ்டர்ல அழகா போஸ் கொடுக்கிற பாண்டா கரடியை பார்த்ததுமே சரி ஏதோ வித்தியாசமாக இருக்கும்போல கண்டிப்பா போய் பாத்துடுவோம்னு ஒரு ஆசை வந்துச்சு!

பார்த்தாச்சு! - மனசுல கொஞ்சமா அந்த பாண்டா கரடியும் ஆக்கிரமிச்சிடுச்சு!

படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துக்குள்ளாற மனசுக்குள்ள ஒரு திக் பீதி! ஒரே கார்ட்டூன் கேரக்டர்ஸா போய்க்கிட்டிருக்கு! ஒண்ணுமே புரியல! ஆஹா ஏமாத்துட்டோம்டான்னு ஆகிப்போச்சு! சரி ஒரு பத்து நிமிஷம் பார்ப்போம் இல்லாட்டி போய் நல்லா ஒரு தூக்கம் போடலாம்னு நினைச்சு முடிக்கும்போது டமாருன்னு அந்த பாண்டா கரடி தூக்கத்திலேர்ந்து கீழ விழ - கனவாம் அதுல பழங்காலத்து சண்டை காட்சியாம்!

அழகான ஆசையாக சிரிக்க வைத்து பார்க்க வைக்கும் பாண்டா கரடி கேரக்ட்டர்! மற்றும் இன்ன பிற கேரக்டர்களும் உண்டு!


சொல்லிக்கொள்ளுமளவுக்கு மிகப்பெரிய காமெடி சீன்கள் கிடையாதுன்னு சொன்னாலும் கூட கண்டிப்பாய் சிரித்த முகத்துடனேயே உங்களை பார்க்க வைக்கும் படம்!

பாண்டா கரடியின் சண்டைகாட்சிகள் ரசிக்கவைக்கும் விதமாகவும் அதே சமயத்தில் சிரிக்கவும் வைத்திருக்கிறது! குறிப்பாய் அந்த பயிற்சி களத்து மாஸ்டருடனான சண்டை காட்சியும் கிளைமாக்ஸும் கலக்கல் கிராபிக்ஸ்த்தான்!

குழந்தை படங்கள் என்றால் பயங்கர முகத்துடன் படம் பார்த்து முடித்தபின்னும் பல வருடங்களுக்கு பயப்படவே வைக்குமான வில்லன் கேரக்டர்கள் கிடையாது! அதனால் பயப்படாமல் குழந்தைகளை பார்க்க வைக்கலாம்!

கலங்கலான தண்ணீரில் தெரியாத விஷயங்கள் நீர் தெளியும் போது தெரியும் போன்ற சின்ன சின்ன ரகசியங்களும், அவ்வப்போது தெளித்துப்போகும் நம்பிக்கை வரிகளில் வாழும் வாழ்க்கையின் நியதிகள்! ( ஒண்ணுமே இல்லை அப்படிங்கறதுதான் படத்துல டாப் சீக்ரெட் ஆன விஷயமே!)

எந்த வயசுக்காரர்க்ளும் சென்று படத்தை பார்க்கலாம் - சிரிக்கலாம் !

கிட்டதட்ட படம் ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்களுக்கு பின்னர் வந்திருக்கிறதாம்!

படம் தவிர்த்து, மற்ற சிறப்பு செய்திகளாக படத்தில் வரும் பிராணிகளுக்கு பின் குரல் கொடுத்திருப்பது மிக பிரபலமான நடிகர் நடிகைகள் - ஜாக்கி சான், ஆஞ்சலினே ஜூலி மற்றும் இன்ன பிற ஹாலிவுட் சமூகங்கள்!

தனது பலவீனங்களையே பலமாக மாற்றி எதிரியை பந்தாடுவதுதான் படத்தில் பாண்டாவின் கதாபாத்திரத்திற்கான கரு!அதற்கேற்றார்போலவே தொப்பையையும் குண்டான உருவத்தையும் முன்பு பலவீனமாக காட்டும் முயற்சிகளில் நன்றாகவே சிரிக்க வைத்துவிடுகிறார்கள்! (முதல் காட்சியிலேயே மல்லாந்து கிடந்துக்கிட்டு திரும்ப எழுந்திருக்க முடியாம திணறுவதை பார்த்தும் நல்லா சத்தமா சிரிச்சுப்புட்டேங்க...! அட நம்மள மாதிரியே எந்திரிக்க முடியாம தவிக்குதேன்னு!)

கிட்டதட்ட 1.15 நிமிடங்களுக்கான படம்! பார்க்கும் நேரத்தில் பெரும்பான்மையான நேரம் மனதில் மகிழ்ச்சியையும் மெல்லிய புன்னகையையும்

வரவழைக்கும் காட்சிகள்! சிம்பிளா சொல்லணும்னா போய் பாருங்க டயம் போறதே தெரியாது அவ்ளோதான்! ஆனா மிஸ் பண்ணாம கண்டிப்பாக பாருங்கள் உங்களின் குழந்தைகளோடு...!

ச்சும்மா ஒரு டிரெயிலரும் வேணும்னா பாருங்களேன்!


ஹாசிணி - WoRLD oF .:: MyFriend ::.


சந்தோஷ் சுப்ரமணியம் - ரொம்ப நாளைக்கு முன்ன வந்த பொம்மரில்லு தெலுங்கு படத்தின் தமிழாக்கம்!

படம் பார்க்கிறவர்களை ஏங்க வைக்கும் குடும்பசூழல் - விக்ரமன் டைப்பு குடும்பம்! - அட நம்ம சடகோபன் ரமேஷ் இதுலதான் அறிமுகமாம்! (இனி இதுபோல கேரக்டர்களிலேயே காணலாம்!)

படத்தோட முக்கியமான கேரக்டர்ஸ் ரெண்டு பேருதான் ஒண்ணு ஹாசிணி என்கிற ஜெனிலா aka ஹரிணி இன்னொன்னு பிரகாஷ் ராஜ்!

ஹரிணி (ஜெனிலா) - ஹாசிணி உலகமே மை ஃப்ரெண்ட்ஸ் நினைக்கிற கேரக்டர் எப்பவுமே துறுதுறுன்னு இருக்கற கேரக்டர் வழக்கம்போல இந்த கேரக்டருக்கும் குழந்தைகள்னா ரொம்ப இஷ்டம்! கதை சொல்றதுலேர்ந்து பாட்டு சொல்லிதர்றதுவர்ரைக்கும் எல்லாம் ஜாலி அருமையான பின்குரல் தேர்வு :-)

முக்கியமான விஷயம் சொல்லலையே ஹாசிணி காபி குடிக்கிற ஸ்டைலில் அழகிய ஜென் தத்துவத்தை ஞாபகப்படுத்துறாருங்க!

இன்னொருத்தர் பிரகாஷ் ராஜ்.

சின்னதாய் கேட்டால் பெரிதாய் நினைக்கும் தந்தை மகன் உறவிருக்கும் குடும்பங்களுக்கிடையில் சின்னதாய் கேட்டாலும் பெரிதாய் தரும் பெரும் பாசமிகு அப்பாவாய் அழகான நடிப்பில் பிரகாஷ்ராஜ்!

அப்படியே அப்போசிட்ட் சைடுல சந்தோஷாக நம்ம ஜெயம் ரவி வழக்கம்போலவே அவருக்கூட மூணு ப்ரெண்ட்ஸ் உணர்வுகள் + உணவுகளை பகிர்ந்துக்கொள்ள அருமையான நண்பர்கள் :-)

எல்லாம் சந்தோஷங்களும் சந்தோஷிற்கு கைகெட்டிய தூரத்தில் ஆனாலும் மனுசனுக்கு மனதில் இல்லை சந்தோஷம்!

சின்ன சின்ன சீண்டல்களின் கோபமும் அதன் கூடவே வரும் சாந்தமும் அப்படியே கொஞ்சம் தூரம் போய் நின்று கொண்டு கோபம் தவிர்ப்பதுவும் அட இந்த டெக்னிக் நல்லா இருக்கும்போல!

முதன் முதலாய் இருவரும் முட்டிக்கொண்டு சந்திக்கும் கோவிலிலாகட்டும் அல்லது முதன் முதலில் பழக டாப்லெஸ்(!?) பஸ்ஸில் போகும் போது போர்டை தட்ட முயலும் அந்த செய்கைகளிலும் ம்ம்ம் நல்லவே ஃபீல் பண்ணியிருக்காங்க!

கடைசிகட்டங்களில் சில துளி கண்ணீரினை காட்டிச்சென்றாலும் கூட,

சந்தோஷமாக பார்க்கலாம் சந்தோஷை அல்ல - படத்தையும் ஹாசிணியையும் :-)))

இன்னாப்பா இது...!?


பார்வை ஒன்றே போதுமே! - 1