காலம் ஒடிக்கொண்டிருக்கிறது
ஐயோ! மரணபயம் வருகிறது!
நான் ஒரு நாள் மடிந்து போவேன்!
அதற்குள் நான் அனுபவிக்கவேண்டும்!
ஆனந்தத்தில் புரளவேண்டும்
போய்விடு!
சுரண்டி தின்னாதே!
சூழச்சி செய்யாதே
என் நண்பர்களே ஓடி வாருங்கள்!
ஓ..! என் உயிருக்குரிய நண்பர்களே
உண்ணுங்கள்
தேன் வேண்டுமா?
பால் வேண்டுமா?
கனி வேண்டுமா?
தெவிட்டாது உண்ணுங்கள்
உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது
காலம் ஒடிக்கொண்டிருக்கிறது
நாம் ஒரு நாள் மடிந்து போவோம்!
இடைக்காலத்தை வீணாக்காதீர்!
உண்போம்!
புதுமை செய்வோம்!
பெருமை கொள்வோம்!
மற்றவர்களினிடத்திலிருந்து உயர்ந்து நிற்போம்
விந்தை கருவிகள் வேண்டியன செய்வோம்!
நாம் அனுபவிப்போம்
வாரி வழங்குவோம்!
நன்றி :- கண்ணதாசன் - போய் வருகிறேன்
8 பேர் கமெண்டிட்டாங்க:
உண்போம்!
(சமையலில்) புதுமை செய்வோம்!
(சமைத்ததை பதிவாய் இட்டு) பெருமை கொள்வோம்!
அவ்வ்வ்வ்வ்.. பாஸ்.. உங்கள பத்தி கண்ணதாசன் அன்னிக்கே எம்புட்டு தெளிவா சொல்லிட்டு போயிருக்காரு !!!!
இன்னிக்கு கண்ணதாசன் நினைவு நாளாச்சே.. என்னடா பாஸ் இன்னும் பதிவு போடலியே யோசிச்சிட்டிருந்தேன். கரெக்டா போட்டுட்டீங்க பாஸ் :D
கண்ணதசன் புகழ் பாடுவதென்றால் நேரம் போதாது
அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை
நினைவுறுத்தலுக்கு நன்றி ஆயில்ஸ்
நல்வாழ்த்துகள்
//தேன் வேண்டுமா?
பால் வேண்டுமா?
கனி வேண்டுமா?
தெவிட்டாது உண்ணுங்கள்//
தேன் பால் கனி இவற்றை ஒன்றாகக் கலந்து எத்தனை அழகழகான பாடல்கள் தந்தார் எத்தனை படித்தாலும் கேட்டாலும் தெவிட்டவே தெவிட்டாதவையாக..
பதிவுக்கு நன்றி ஆயில்யன்!
கண்ணதாசன் நினைவு நாளை நீங்கள் நினைவு கொண்டது அருமை ஆயில்யன். நேற்று நடிகர் சிவகுமாரின் பேச்சு கேட்ட ஆச்சரியத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.
கண்ணதாசனை எத்தனை தடவை கேட்டாலும் படித்தாலும் அலுக்காது. பதிவுக்கு நன்றி.
கண்டிப்பா நீங்க போடுவீங்கன்னு தெரியும்.
காலத்தால் அழியாத இவர் போன்றவர்களை நெஞ்சில் இருத்தி வைத்து பதிவால் வெளிப்படுத்தி பிறருக்கும் தெரியப்படுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களே !
பாலிருக்கும் பழமிருக்கும் தேனுமிருக்கும் அவன் பாட்டில்
திகட்ட திகட்ட உண்டோம், உண்கிறோம், உண்போம்.
காலத்தால் அழியாத நிரந்தரமான கவிஞன் அவன்.
ஆயில்யன்,
சதங்காவின் “சிறப்புத் தீபாவளி 2009” தொடர்பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்.
அலறாமல் பதறாமல் வந்து பதிவிடுங்கள். நன்றி!!
Post a Comment