கை கழுவியாச்சா...?


சாப்பிடப்போறதுக்கு முன்னாடி கை கழுவணுமா அட வேண்டாம் போப்பா..! என்ற மனத்தோடு இருந்த இளம் பிராயத்து நினைவுகள் இன்றும் எப்பொழுதாவது தலைதூக்குவதுண்டு. பரபரப்பான மனநிலையோ அல்லது பதட்டமான மனநிலையிலோ சாப்பிடும் சூழல் இருக்கும்போது இப்படித்தான் தோன்றும்! ஆமாம் என்ன கெட்டுப்போனதை தொட்டுட்டோம் போய் கை கழுவிட்டு வந்து சாப்பிடறதுக்க்...? அப்படின்னு மனசு சமாதானமாகிவிடும்.

முன்னாடி எல்லாம் சாப்பாட்டு தட்டை கழுவிட்டு வந்து சாப்பிடற வைபோகத்துல தட்டோட சேர்ந்து நம்ம கை அழுக்கும் போயிருச்சுன்னு மனசுக்குள்ள காம்ப்ரமைஸ் கோட்டை கட்டி வைச்சிருந்தேன் கை கழுவிட்டு சாப்பிடுங்க அப்படின்னு ரொம்ப தடவை சொன்னப்பிறகுதான் சரி நாமளும் கொஞ்சம் இந்த பழக்கத்தை ஃபாலோ பண்ணுவோம் அப்படின்னு சொல்லி கொஞ்சம் வருசமா நடைமுறைப்படுத்திக்கிட்டு வாரேன்!

நண்பர்களுடனான விருந்து வைபோகங்களில் கிண்டலாய் உபயோகிக்கும் வார்த்தைத்தான் அட என்னடா கை கழுவுறேன் கால் கழுவுறேன்னு எவண்டா கண்டுபுடிச்சான்னு சில பல சிரிப்பொலிகள் கிளம்ப காரணமாகியிருந்த கமெண்ட் மட்டுமே!

கை கழுவாம சாப்பிட்டா சகல நோய்களும் வந்து வாழ்ந்துட்டு போற அளவுக்கு உடம்பு படுவீக்காகிடுமாம்! மட்டும்மில்லாம உடலுக்கு ஒவ்வாத பொருட்களின் வெளியேற்றம் அதிகம் நடத்தும் வாந்தி பேதி போன்ற சம்பவமும் உண்டேய்!

இன்று 15 அக்டோபர் 2010 உலக முழுவதும் கை கழுவுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றியும், தீமைகள் தடுக்கப்படுவது பற்றியும் விழிப்புணர்வினை ஏற்படுத்த குறிப்பாக இளம் வயதினரிடம் இது போன்ற விசயங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் உலக நாடுகளுக்கான சுகாதார அமைப்பு பல்வேறு நிகழ்வுகளை மேற்கொண்டிருக்கிறது!

உங்களால் இயன்ற வரையில் உங்களுக்கு தெரிந்த அறிந்த சுற்றுவட்டார நட்புக்கள் உறவுகளிடமும் இந்த விசயத்தை சொல்லுங்க எல்லாம் ஒரு வெளம்பரம்தானே!


டெல்பின் டாக்டரம்மாவின் பார்வையில்...

வாங்க வாங்க.. கையை நனைச்சுட்டு போங்களேன்......

16 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ithukku ellam oru nall vanthuducha???? rightu:-))

said...

diwali vazthukkal!!!!!

said...

dress eduthacha?????

said...

பாஸ் இந்த சீனிலும் 2.00 நிமிஷத்தில் கை கழுவுறதன் அவசியத்தை சொல்றாங்க பாருங்க http://www.youtube.com/watch?v=eiZM4QgGe0g

said...

என்ன ஆயில்யன் நலமா??? இது கூட நல்ல விசயம்தான்.
தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

நல்ல பதிவு. தெரிந்தவரிடம் எல்லாம் சொல்லிடுவோம்:)!

said...

நல்லதொரு இடுகை. பயன் அடைவோம்.

said...

அதென்ன?....நான் போடலாம்னு நினைக்கிறதுக்குள்ளே போட்டுர்றீங்க பதிவை??????

said...

நல்ல பதிவு ;)

இலையுதிர்காலம் delphine அம்மா இதை பத்தி ஒரு பதிவும் போட்டுயிருக்காங்க. அதையும் பாருங்கள் முடிந்தால் பதிவின் லிங்கை உங்கள் பதிலும் போடுங்கள் அண்ணே ;)

வாங்க வாங்க.. கையை நனைச்சுட்டு போங்களேன்......

http://delphine-victoria.blogspot.com/2009/05/blog-post_16.html

said...

அட போங்க பாஸ் எல்லோரும் சீரியஸாகிட்டாங்க....அல்லது கை கழுவிட்டாங்க...

ஏன் பாஸ் எதெதுக்கு நாள் கொண்டாடருதுன்னு ஒரு வெவ....
சரி வேணாம் விடுங்க.

இனிய உங்களுக்கான மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் பாஸ்.

said...

நல்ல பதிவு.

Anonymous said...

நல்ல பதிவு ஆயிலு. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

said...

தீபாவளீகு கெட்க வென்டிய புதிய கேள்வி.. 'கை கழுவியாசா'.

அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

மானாட மயிலாட சிறப்பு நிகழ்ச்சி பாருங்கள்... தீபாவளி கொண்டாடுங்கள் :)

said...

நல்ல பழக்கங்களைச் சொல்வதற்குக் கூட ஒரு நாள் வேண்டி இருக்கிறது. அனைவரிடமும் சொல்லுவோம்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் - உலகத்தவர் அனைவருக்கும்

said...

நல்ல விஷ்யம்..முன்னாடில்லாம் பெரியவங்க சின்னக்குழந்தைகளுக்குத்தான் சொல்லிக்கொடுப்பாங்க..கை கழுவிட்டு சாப்பிடுங்கன்னு....இப்போ பெரியவங்கல்லாம் பிசியாகிட்டாங்க போல....:-)

said...

இன்றுதான் பார்கிறேன். நல்ல பதிவு. தேதிதான் தப்பா இருக்கு??!!

-வித்யா