Showing posts with label மீள்பதிவு. Show all posts
Showing posts with label மீள்பதிவு. Show all posts

சீர்காழி கோவிந்தராஜன்

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்;
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை;
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன,
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!

என்று கம்பீரமாக ஆரம்பமாகும் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஏதோ ஈர்ப்பு இளம் வயதிலிருந்தே தொடங்கிவிட்டது!


Photo Sharing and Video Hosting at Photobucket

காலை 5.00 மணிக்கு ஆரம்பிக்கும் எங்கள் வீட்டு டேப் ரெக்காடரின் அபிராமி அந்தாதி, அந்த தெருவுக்கே பக்தி மணத்தை கமழச்செய்து கொண்டு செல்லும்! அந்த தெரிவில் சுமார் 50 வீடுகளுக்கு மேல் இருந்தாலும், ஒருவர் கூட வந்து இந்த விஷயத்தை குறையாகவோ அல்லது தொல்லையாகவோ கூறியது கிடையாது, என்பது ஆச்சர்யமான விஷயம்தான்!

இத்தனைக்கும் பாடல் போடுவதுதான் அப்பாவுக்கு வேலை,டேப் பாட ஆரம்பித்ததும்,தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு இவர் கிளம்பிவிடுவார் காளியாக்குடியை நோக்கி.!

அந்த நாள் தொடங்கி இன்று வரை அவ்வப்போது சீர்காழியின் குரலில் லயித்திருப்பது எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகிவிட்டது!

எத்தனையோ பேர் வந்தாலும், எத்தனையோ சாமிபாடல்கள் பாடினனலும் இன்றும் கோவில்களில் சீர்காழியின் பழைய பக்தி பாடல்கள்தான் ஒலிக்கின்றன! (மார்கழியில் நீங்க செக் பண்ணி பார்த்துக்கலம்!)

லண்டனில் முருகன் கோவில் விழா கச்சேரியில் அவருக்கு அளித்த வரவேற்பு , அவர் பாடிய பாடல்கள், கண்ணதாசன் பிரத்யோகமாக எழுதிய,

உலகம் முழுதும் சென்றான் தொழில் நடத்த – தமிழன்
உள்ளமும் சென்றதம்மா தமிழ் நடத்த
கலையில் சிறந்த இசைக்கலை நடத்த –
நானும் கடலைக் கடந்து வந்தேன் தமிழ் வளர்க்க...

கரகோஷத்தின் பின்ணணியில் இப்பாடலும், ஆங்கிலத்தில் முருகனை துதித்து பாடிய பாடலும், எப்போது கேட்டாலும் உள்ளத்தில் மகிழ்ச்சியை தூவிச்செல்லும்!

வருடந்தோறும் நடக்கும் தருமையாதீன குருபூஜை விழாவின் ஹைலைட்டான விஷயமே சீர்காழி கச்சேரிதான்!

சுற்றுவட்டாரத்திலிருந்து மதியமே வந்த மக்கள், தருமபுர வீதி ஒரங்களில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் போது,சாலையில் புழுதியை கிளப்பிக்கொண்டு வரும் அந்த வெள்ளை அம்பாசிடார்!

சீர்காழி வந்துட்டாரு....!

காரை துரத்திக்கொண்டு, அவரை காண ஒடும், மக்கள் இன்னும் என் கண் முன்னால நினைவுகளில் நிழலாடுகிறார்கள்..!

தெய்வத்தமிழ் மன்றத்தில் தொடங்கும்,6.00 மணிக்கு தொடங்கும் கச்சேரி, 10.00 மணியை தாண்டியும் சென்றுகொண்டிருக்கும்.

இடையில் நேயர் விருப்பம் போல சீட்டுக்களில் வரும் பாடல்களும் உடனடியாக சீர்காழியின் குரலில் ஒலிக்கத்தொடங்கிவிடும்!

சின்ன்ஞ்சிறு பெண்போலே. .
வாக்குதரும் நல்வாழ்வுதரும்
திருச்செந்தூரில் கடலோரத்தில் ...
மயிலாக நான் மாறவேண்டும்
லார்டு முருகா லண்டன் முருகா.!

போன்ற பாடல்கள் வருஷா வருஷம் பாடினாலும் இந்த பாடல்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இன்று அவர் வாரிசு சிவசிதம்பரம் பாடும்போது கூட...!


எத்தனையோ பாடகர்கள் பக்தி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தாலும், இவரின் குரலில் உள்ள ஈர்ப்பினை இது வரை எவரும் தரவில்லை என்பதற்கு இன்னும கோவில்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் இவரின் பாடல்களே சாட்சி!

நினைவு நாளில்..




மார்ச்-23 நினைவுநாள்

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்







உலகின் மூலை முடுக்குகளில்,

வாழ்க்கையின், நம்பிக்கை கீற்றின்;

ஏதோ ஒரு நுனி பிடித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும்;

உணர்வால் அன்னையரான அனைவருக்கும்,

எம் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !

சிட்டுக்குருவிகள்


நமது வாழ்வுமுறை, கட்டட அமைப்புகளின் மாறுதலால் நம்மைச் சார்ந்து நம் வீடுகளில் நம்முடன் வாழ்ந்து வந்த சிட்டுக் குருவி இனங்கள் காணாமல் போய்விட்டன.

சங்க காலம் முதல் பாரதியார் பாடல்கள் வரை போற்றிப் புகழ்ந்த சிட்டுக் குருவிகள், இன்று நம்மைவிட்டு எட்டாத இடத்துக்குப் போய்விட்டன.

சிறுவயதில் மூத்த குடிமக்கள் வாழ்ந்த பழைய வீடுகளின் மூலை முடுக்கு சுவரின் பொந்துகளில் கூடுகட்டி கீச்...கீச்... என்று சத்தமிட்டபடி அங்கும் இங்கும் வீட்டுக்குள்ளேயே பறந்து செல்லும் சிறிய குருவிகள் இன்று எங்கே போய்விட்டன?

சுற்றுச்சூழல் மாறுதல்களால் நம் எதிர்கா லச் சந்ததியினருக்கு பல இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதில் சிட்டுக் குருவி இனமும் ஒன்று. இது பற்றிய விழிப்புணர்வில்லாமல் பல விஷயங்களால் நாம் கண்டுகொள்ளாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இதற்கு முக்கியமான காரணம் மாறி வரும் நமது கட்டட அமைப்புதான். வீடுகளில் உத்தரங்கள், காற்று துவாரங்கள், ஓட்டு வீடுகளில் ஓடுகளுக்கிடையே உள்ள சந்துகள் சிட்டுக் குருவிகளின் வாழ்விடமாக இருந்தன.

தானியங்களைப் புடைக்கப் பயன்படுத்திய முறங்களில் இருந்து விழும் குறுநொய், வீட்டு முற்றங்களில் பாத்திரங்களைக் கழுவும் போது அவற்றில் எஞ்சியிருக்கும் சோற்றுப் பருக்கைகளைச் சாப்பிட்டு குருவிகள் உயிர் வாழ்ந்து வந்தன.

உடலுக்கு வலிமை தரும் அந்த தானியங்களைச் சாப்பிடுவது குறைந்து பீசா, பர்கர், ஃபாஸ்ட் புட் கலாசாரத்துக்கு நாம் மாறிவிட்டோம்.

கல், குறுநொய் நீக்கப்பட்ட கம்ப்யூட்டர் அரிசி, கோதுமை என்றாகிவிட்டது. வீட்டுச் சமையல் அறைகளில் இருந்து சோற்றுப் பருக்கைகள் "சிங்க்' மூலம் நேராக பாதாள சாக்கடைக்குப் போய்விடுவதால் சிட்டுக் குருவிகளுக்கு உணவு என்பதே கனவாகிவிட் டது.

உணவு, வாழ்விடம் முற்றிலும் அழிந்து விட்ட நிலையில் நகரப் பகுதியில் இருந்து கிராமப்புறங்களுக்கு இவை குடிபெயர்ந்து விட்டன. சுமார் 10 முதல் 12 ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய இக்குருவிகள் ஊர்க் குருவிகள் என்றும் அழைக்கப்படும். ஆண்டு முழுவதும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். 3 முதல் 5 முட்டைகள் வரை இடும்.

சிட்டுக் குருவிகளுக்கு கூடு கட்டத் தெரியாது. வீடுகளில் உள்ள சந்து, பொந்துகளில் அருகம்புல், வைக்கோல், குப்பைகளில் உள்ள நார்க்கழிவுகள், பஞ்சு போன்றவற்றை திணித்து அவற்றில் முட்டையிடும். 27 நாட்களில் முட்டைகள் பொறித்து குஞ்சுகள் வெளியேவரும். முருங்கை, கருவேலமரம், அவரைக் கொடி, பூசணிக்கொடியில் உள்ள புழுக்கள் மட்டுமே சிறிய குஞ்சுகளுக்கு உணவு. புழுக்கள் உருவாகும் செடிகள் நகரத்தில் இல்லாமல் போய்விட்டன.

சிறிய பொந்துகளில் தங்கும் இந்தக் குருவிகளுக்கு குஞ்சுகள் பொறித்தவுடன் போதிய இடவசதி இருக்காது என்பதற்காக குஞ்சு களை கூட்டில் தனியாக விட்டுவிட்டு ஆண், பெண் குருவி மட்டும் வீட்டுக்கு அருகில் உள்ள குட்டையான மரங்களில் அமர்ந்து இரவுப் பொழுதைக் கழிக்கும்.

நன்றி - தினமணி

நன்றி - தினமலரில் இன்று 20.03.2010 வெளியான செய்தி

சிட்டுகுருவிகள் விஷயத்தில் நம் நடவடிக்கைகள் எல்லாமுமே மாறி விட்டன! தெருக்களில் விளையாட்டின் போது அல்லது விளையாட்டே சிட்டுகுருவி காண்பது என்றிருந்த நாட்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன! நமக்கே தெரியாமல் நாம் செய்யும் தீமைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது! தெரிந்த விஷயங்களாய் இது போன்ற சிட்டுகுருவிகளின் மறைவுகள் இருக்கும்போது தெரியாத எத்தனை எத்தனை உயிர்கள் நம்மால் காணமல் அடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றனவோ....???

பொங்கல் - பானையில் பொங்குவோம்!


ஒவ்வொரு வருடமும் ஜனவரி தமிழர்களுக்கு உற்சாகமான ஆரம்பம்தான் தையாக பிறக்கும் தமிழர் நாள்! அதுவும் காவிரி டெல்டாக்களில் தை பிற்ப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்த எந்த பண்டிக்கைக்குமே கொடுக்கமாட்டார்கள்!

பொங்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு மாட்டு வண்டிகளில் வந்து சேரத்தொடங்கும் மண்பானைகளின் வருகையில் மாலை நேரத்தில் பள்ளி விட்டு செல்லும் எங்களுக்கு பொங்கல் வரும் நாளையும் விடுமுறை வரப்போகும் வேளையையும் குறிப்பில் உணர்த்தும் மண் பானைகளின் வருகை!

எங்கும் பரந்த விற்பனை மையங்களாக அன்றி, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டு வந்து இறக்கும் மண் பானைகளை கிட்டதட்ட 15 நாட்களுக்கு,பானைகளை பத்திரமாக பாதுகாத்து,பனியிலேயே பானைகளோடு உறங்கி உண்டு,வாழ்க்கையை தொடரும் மக்கள்!

இத்தனைக்கும் சொற்பமான வருமானம்தான் அவர்களின் அந்த நேரத்து விற்பனையில் பெறமுடியும்!

நவீன நாகரிகத்தில் பொங்கல் பானையிலிருந்து குக்கர்க்கு மாறி,பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரலிட்ட மக்கள்,குக்கரின் விசில் சத்ததில் பொங்கல் கொண்டாடி, டிவிக்களில் வீழ்ந்துகிடக்கிறார்கள்!

வருடத்தின் ஒரு நாளில் நாம் ஏன் பானைகளை உபயோகித்து பயன்பெறக்கூடாது! அல்லது ஒரு ஏழைக்குடும்பம் பயன் பெற் உதவகூடாது ?

சிந்திப்போம்!

பானையில் வைத்து, பொங்கலை சுவைத்திருப்போம்!

வரும் தமிழர் திருநாளில்...!

2010ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்...!

கண்ணதாசன் !

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

ஐயோ! மரணபயம் வருகிறது!

நான் ஒரு நாள் மடிந்து போவேன்!

அதற்குள் நான் அனுபவிக்கவேண்டும்!

ஆனந்தத்தில் புரளவேண்டும்

போய்விடு!

சுரண்டி தின்னாதே!

சூழச்சி செய்யாதே

என் நண்பர்களே ஓடி வாருங்கள்!

ஓ..! என் உயிருக்குரிய நண்பர்களே

உண்ணுங்கள்

தேன் வேண்டுமா?

பால் வேண்டுமா?

கனி வேண்டுமா?

தெவிட்டாது உண்ணுங்கள்

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

நாம் ஒரு நாள் மடிந்து போவோம்!

இடைக்காலத்தை வீணாக்காதீர்!

உண்போம்!

புதுமை செய்வோம்!

பெருமை கொள்வோம்!

மற்றவர்களினிடத்திலிருந்து உயர்ந்து நிற்போம்

விந்தை கருவிகள் வேண்டியன செய்வோம்!

நாம் அனுபவிப்போம்

வாரி வழங்குவோம்!

நன்றி :- கண்ணதாசன் - போய் வருகிறேன்

LOVE பண்ண...!

பெரிய பெரிய விஷயங்கள் நாம் செய்யணும்னா அதுல வர்ற பெரிய சிறிய ரிஸ்குகளை நாம எதிர்த்து நின்னாலே போதும் பாதி கிணறு தாண்டினா மாதிரிதான்!

பெரும்பாலும் யாருக்கும் வருத்தப்படாம ஊரைச்சுற்றி திரியற கைப்பிள்ளைகளுக்குத்தான் நிறைய ரிஸ்க் மேனேஜ்மெண்ட் டெக்னிக்ஸ் தெரிஞ்சுக்கணும்! அப்பத்தான் சேதாரமே இல்லாம சிங்கிளா சிங்கம் மாதிரி சிலுப்பிக்கிட்டு திரியலாம்!

இங்க நாம லவ்வு டாபிக் மட்டும் எடுத்துப்போம்! அதுல முதலில் என்ன மாதிரியான ரிஸ்க்குகள் இருக்குன்னு கண்டுபிடிக்கணும்!

ஃபிகருக்கு அண்ணன் தம்பிகள் அல்லது சித்தப்பா பெரியப்பா யாராச்சும் இருக்காங்களா? இல்ல ஃபிகரு வீட்லயோ சும்மா ரெண்டு தடிமாடுகளை தீனி போட்டு வளக்கிறாங்களான்னும் கொஞ்சம் பேக் கிரவுண்டு பார்த்து வைச்சுக்கணும்! பார்ட்டீ எப்ப வெளியெ வருது எப்ப உள்ளே போகுதுன்னு டைமிங்க் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி இந்த மாதிரி பயமக்களோட டைமிங்க தெரிஞ்சுவைச்சுக்கணும்!

(இந்த டெக்னிக் பத்தி நான் விலாவாரியா ஒரு இடத்தில உளற போய்த்தான் இதை பெரிய மேட்டரா டெவலப் பண்ணி ஒரு தெத்துப்பல்லு பிகரா புடிச்சு போட்டு படம் எடுத்துட்டாரு ஒரு டைரக்கடரு! அது என்னமோ சுப்ரமணியபுரமோ காஞ்சிபுரமோ சரியா தெரியலை! சரி அதை விடுங்க!)

இப்ப நாம நமக்கு வரப்போற ரிஸ்குகளை பத்தி கொஞ்சம் மேட்டர் தெரிஞ்சு வைச்சிருப்போம்ல அதையெல்லாம் நம்ம ப்ரெண்ட்ஸ்களோடு ஒண்ணா சேர்ந்து உக்காந்து கலைச்சுப்போட்டு கிளாரிபிகேஷன் கேட்டுக்கிட்டு அவுங்கவுங்க அனுபவத்தையெல்லாம் நல்லா உன்னிப்பா கேட்டு தெரிஞ்சுக்கணும்!

இதுதான் ரொம்ப முக்கியம் நாளைக்கு உயிருக்கோ அல்லது உடம்புக்கோ ஆபத்துன்னா எப்படி கால்ல விழுந்து எஸ்ஸாகறதுங்கறதுலேர்ந்து கையில கட்டையை எடுத்துக்கிட்டு கைப்புள்ள ரேஞ்சுக்கு வீண் சண்டைக்கு போறது வரைக்கும் இங்கதான் தெரிஞ்சுக்க முடியும்!

நமக்கு வரப்போற ரிஸ்க்கு பத்தி நாம கொஞ்சம் விவரமா தெரிஞ்சுக்கிட்டதுக்கப்புறம் நம்மளால நம்ம ஃபிகருக்கு ஏற்படப்போற ரிஸ்க்குகள் என்னான்னும் நாம பிளான் பண்ணிக்கணும்! அது பத்தி அவ்ளோவா ஐடியா இல்லாததால அவுங்கவுங்க ஐடியாவுக்கே இதை பண்ணி பார்த்துடுங்க! (மீ எஸ்கேப்பூ!)

இனி எல்லாம் சுகமேன்னு ஒரு ஸ்டேஜ் வர வரைக்கும்த்தான் இந்த ரிஸ்கு எல்லாம் ஆனா இங்க நான் சொன்ன கொஞ்ச கொஞ்சம் ரிஸ்குகள் எல்லாமே ஜாலியா யூத் ஸ்டைல்ல நல்லா மொரு மொருன்னு ரஸ்க் சாப்பிடற மாதிரியே இருக்கும்! ( மொத்து விழுந்தாலும் வாங்கிக்கிட்டு அப்படியே ஃபிகர் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சா....! ரைட்டு .கே!)

இல்ல எனக்கு ரிஸ்க்கு எடுக்கவே பிடிக்காது! பயம் அல்லது அதை எடுக்காம நான் வாழ்ப்போறேன்னு சொன்னா சிங்கிள் லைன்ல ரிஸ்க் எடுக்காம வாழற வாழ்க்கையினை பத்தியும் சொல்லிடறேன்!

வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசி ”க்”

இரு கைகளை கொண்டு உழைத்து வாழ வேண்டும் அதுக்கு காரணமாக அமைவது நீங்க எடுக்கும் ரிஸ்க்குகள்தான் ! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


தந்தையர் தினம்


டிஸ்கி:- வலைச்சரத்தில் முன்புஅப்பாஎன்ற தலைப்பில் பதிவர்களின் பதிவுகளிலிருந்து எடுத்தாளப்பட்டவை மீள் பதிவாக தந்தையர் தினத்தில்...!

۞۞۞۞۞

வேண்டாம் ராஜா! வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல"

இளாவின் இந்த பதிவில் எல்லோருடைய அப்பாக்கள் மனத்தின் வெளிப்பாடுதான் இது !


۞۞۞۞۞


குடும்ப அமைப்புக்களால் பிரிந்திருக்கவேண்டிய சூழலில் தம் பெற்றோரை அருகில் இருந்தும் அடிக்கடி காண இயலாத சூழலில் அது பற்றிய தன் எண்ணங்களை குற்ற உணர்வுகளாய் வெளிப்படுத்தும் இந்த மகளின் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள்தான் - அன்பால் அன்பினை


۞۞۞۞۞

அவர் எனக்கு கண்டிப்பான அப்பாவாக இருந்ததில்லை. ஆனால் நான் கண்டிப்பான மகனாகவே இருந்திருக்கிறேன். இன்னமும் அவர் மீது அதிகமாக பிரியம் காட்டியிருக்கலாம் என்று இப்போது உணர்கிறேன். அவர் ஆசைப்பட்ட படியே வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். அது முடிவதற்குள்ளேயே அவசரப்பட்டு விட்டார். அவர் விருப்பப்பட்டபடி வீட்டுக்கு "குமரன் குடில்" என்று பெயர் வைக்க வேண்டும். - லக்கிலுக்கின் நைனா

۞۞۞۞۞

அப்பா .. இவர் பற்றி எழுத என்னில் ஆயிரம் கதைகளுண்டு. அப்பாவின் நினைவுகளை மேலதிகமாய் கிளர்த்தெழுப்பும் இன்னுமொரு நாள் வரும்வரை காத்திருக்கட்டும் அந்தக்கதைகள் இது கிருத்திகாவின் அப்பா பற்றிய பதிவு

۞۞۞۞۞

கோபியின் உள்ளம் சொல்லும் நல்ல பதிவுகளில் டைரிக்குறிப்புக்களாய் செம கலக்கலானது! உங்கள் கண்களும் கூட கொஞ்சம் கலங்கும்!

என்னையும், அம்மாவையும் தனியா விடாம உன்னோடவே வச்சுக்கிட்டு ஆதரவா பார்த்துக்கிட்டுயிருக்க பாரு. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன். எனக்கு தோண்றது எல்லாம் உனக்கு மேலும் எரிச்சல்கள் தராம போய் சேர்ந்துட்டா போதும்." என் கண் எல்லாம் கண்ணீர். அப்பாவை அப்படியே இறுக்க அணைச்சிக்கிட்டேன்.

அந்த அணைப்பில் ஒருவிதமான ஆதரவு கிடைத்தவுடன் வெகுநாளாய் மனதில் அடைத்திருந்த ஏதே ஒன்று உடைந்து ஓவென அழத்தொடங்கிட்டார் அப்பா. "எதுக்குப்பா அழுவுறீங்க. என்ன ஆச்சுப்பா"ன்னு கேட்டா பதிலே இல்ல. தெரியலன்னு திரும்பவும் ஓன்னு அழுவுறாரு. ரொம்ப நாளைக்குப்புறம் கண்ணீரின் சுவையை சுவைத்திருப்பார் அப்பா.

۞۞۞۞۞

தமிழ் ஈழத்து அப்பா பற்றிய மகளின் எண்ணங்கள் கவிதையாக,


களத்தில் இரு புத்திரரையும்

புலத்தில் மறு பிள்ளைகளையும்

தொலைத்து விட்டு

எங்கோ அந்தகாரத்துக்குள்

பிள்ளைப் பாசத்தைத் தேடித் தேடி

களைத்த உன் விழிகள்

பன்னிரண்டு வருடங்கள் கழித்து

என் முகம் பார்த்ததும்

கொட்டும் அருவியாகி

எனை நனைத்த போது

உனை அணைத்துத் தாயானேன்

۞۞۞۞۞

வெளிப்படுத்தும் அன்பைக்கூட நேரடியாக வெளிப்படுத்தாமல்

மற்றவரின் துணையுடன் மறைமுகமாய் காட்டும் அப்பா.!

மறைமுகமாய் ஒவ்வொருப்பிள்ளைகளின்

கதாநாயகனாய் தோன்றும் அப்பா.!

இவர் ராஜாவின் அப்பா

۞۞۞۞۞

நீ இனிமேல் பெரிய மனுஷி' என்று என்னை தனிமை படுத்தாமல் குழந்தை பருவத்தில் என்னுடன் பழகிய அதே தோழமையோடு நீங்கள் என்னுடன் பழகியபோது நான் எத்தனை பாதுகப்பாக உணர்ந்தேன் தெரியுமா???? என்று அப்பாவுடனான பாசத்தை அழகாய் வெளிப்படுத்தும் பதிவு, இவரின் பிரார்த்தனையான

"அப்பா, என்றும் உங்கள் இடத்தை என் வாழ்வில் யாராலும் நிரப்ப முடியாது, எனினும் என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள ஒர் துணையை தேடுவீர்கள்/தேடுகிறீர்கள் , அந்த நபரும் என் அப்பாவை போலவே இருக்க வேண்டும்" - இதுவும் கூட கண்டிப்பாக ஆண்டவனின் அருளால் அப்பாவின் துணையால் நலமாக நடந்தேறும் என்ற வாழ்த்துக்களோடு...

۞۞۞۞۞

எனக்கு ரொம்ப பிடித்த, அப்பாவின் மீதான தன் அன்பினை வெளிப்படுத்தும் யாத்தீரிகனின் இந்த கடிதம்

எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.

55 வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு ? இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை!

۞۞۞۞۞

அப்பா கோவை குப்புசாமி மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்காக, இலவசமாக மாதம் ஒரு நாடகத்தை மேடையேற்றுவார். நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட காலம் தங்க வேண்டி இருந்ததால், அவர்களுக்காக நகைச்சுவை நிகழ்ச்சி, நாடகங்கள் என்று ஏதாவது அரங்கேற்றி, நோயாளிகளின் மனப்பாரத்தை குறைப்பார். இங்கு தான் நான் அவரின் நாடகங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் புற்று நோயால்பாதிக்கப்பட்டவர்களுடன் தான் இருப்பார்.என்று தன் அப்பா பற்றிய எண்ணங்களை பற்றி பகிர்ந்துக்கொள்ளும் மங்கை அக்காவின் இந்த பதிவு

மாசறு பொன்னே வருக...!

எனக்கு ரொம்ப பிடிச்ச, உங்களுக்கும் கூட பிடிக்கும்னு நான் நினைக்கிற விஷயங்கள் நிறைய! இப்போதைக்கு அதுல ஒண்ணு!

மனத்திற்கினிய பாடல்! கண்டிப்பாக பாடலின் படம் எல்லோருமே தெரிந்திருக்ககூடிய பிரபலமான படம்தான்! இந்த பாடலின் மீது இவர் கொண்ட ஈடுபாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாய் மிக்க விருப்பத்துடன் இதற்கு விளக்கம் எழுதிக்கொடுத்த அய்யா குமரன் அவர்களுக்கும் நன்றி!

பாடல் பெற்ற தளத்தினை காண கீதம் சங்கீதம்!


மாசறு பொன்னே வருக



மாசறு பொன்னே வருக!
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக!
மணி ரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக!!

கோல முகமும் குறுநகையும்
குளிர்நிலவென நீலவிழியும்
பிறைநுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும்
(மாசறு)

நீர் வானம் நிலம் காற்று
நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம்
ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே!
திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே!
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!

பாவம் விலகும் வினையகலும்
உனைத்துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்



இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...! (அவ்ளோ சீக்கிரத்தில விட்டுடுவோமா???)

கானா பிரபாண்ணே! உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த பாடலை + வீடியோவோடு சேர்த்து வீடியோஸ்பதியில எல்லோருக்கும் போட்டுக்காட்டணும்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்!

18.06.2008

டிஸ்கி:- இன்னும் கா.பி அண்ணாச்சி பதில் பதிவு இடவில்லை என்பதனை சமூகத்திற்கு பதிவித்துக்கொள்கிறேன்!

18.06.2009

எளிமையாய் தியானம் - இனிமையாய் வாழ்க்கை - ரஜினி



இந்த கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க.

சில பேர் அதை ட்ரை பண்றாங்க. அதை கட்டுப்படுத்த முடியாது!

அதுக்கப்புறம் கட்டுப்படுத்த முடியாம, இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுது.

அது தேவையே இல்லை.

அதைப்பத்தி கவலைப்படாதீங்க!

காலையில எந்திரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க.

அப்படியே உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் ·பாலோ பண்ணுங்க.

அது எங்கயாச்சும் போகட்டும்.

எது பின்னால வேணும்னாலும் போகட்டும்

யாரு பின்னால வேணும்னாலும் போகட்டும்.

ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க. பிறகு எழுந்திடுச்சுடுங்க.

அதை கன்டினியூ பண்ணுங்க.

அதை பண்ண பண்ண அது அப்படியே வந்து மனசு உங்க கண்டோரல்ல வரும்.

அப்ப வந்து உங்க .இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பத்தி கான்ஸன்ட்ரேட் பண்ணமுடியும்.

இது எப்படின்னு சொன்னா... ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில்ல இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதானே புதுசா போடமுடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அதுவந்து இயற்கை. அதைப்பத்தி எந்த இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க போதும்'

- ரஜினிகாந்த்

அன்புள்ள ரஜினிகாந்த் & ராஜா !

1984ல் வெளியான, "அன்புள்ள ரஜினிகாந்த்"முதன் முதலில் நடிகரின் பெயரையே படத்திற்கு தலைப்பாக வைத்த பெருமையை,கொண்ட படம்.

ஒரு ஆங்கில படத்தின் கதைக்கரு,கெஸ்ட் ரோலில் நடிக்க முத்லில் அப்ரோச் செய்யப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர் அரசாங்க அலுவல் காரணமாக,நடிக்க மறுத்துவிட,டைரக்டர் கே.நட்ராஜ் தேர்வு செய்தது நெருங்கிய நண்பரான, ரஜினியை!

Photo Sharing and Video Hosting at Photobucket

பெற்றோரின் அரவணைப்பை அறியாத சிறுமி பெரும்பாலும் அனைவரையும் வெறுக்கும் கேரக்டர்,அங்கு நடைபெறும் விழாவிற்கு வரும் ரஜினியை காண ஆர்வமின்றி வெறுப்புடன் இருக்கும் சிறுமி பின்னர் அந்த ரஜினியை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொள்வார் பின்னர்பிறிதொரு சமயத்தில் ரஜினியின் "அன்னை ஒர் ஆலயம்" திரைப்படத்தை காணும் போது அதில் வரும் சம்பவங்கள், ரஜினியின் மீது அளவு கடந்த ப்ரியத்தை உண்டாக்கும்,(அ.ஒ.ஆ போன்ற ரஜினியின் படங்கள் இளம் வயதினரை ஈர்க்க ஆரம்பித்ததால்தான் அவருக்கு சேர்ந்த இம்மாம் பெரிய கூட்டமுன்னுகூட சொல்லலாம்)

இக்காட்சிகள் மட்டுமின்றி, இத்திரைப்படத்தில் பல காட்சிகள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்திருந்ததும், இப்படத்தின் வெற்றிக்கு காரணம்! ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் ஒரு சிறுவனை வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு தம்பதி தத்தெடுத்து செல்ல முற்படும், போது அந்த சிறுவன் மெல்ல தயங்கியபடியே, தன் நண்பர்களுக்கு விடை கொடுத்து செல்லும் காட்சியில், படத்தினை பார்த்தவர்கள் கண்டிப்பாக கண்கலங்கியிருப்பார்கள்!

பாடல்களில் கூட கதைக்கேற்ப ஒருவித சோகம் இழையோடும்.

லதா ரஜினிகாந்தின் குரலில் கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே...!

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்

தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை!
அன்பு எனும் நூலில் ஆக்கிய மாலை!

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா!
ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா!

ஜீவன் யாரும் ஒன்று, இங்கு யாரும் சொந்தமே
இதுதான் இயற்கை தந்த பாச பந்தமே!


கடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே!

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை!
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை!

ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்..
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர் பிறப்பில்...


உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வம!
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்!


கடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்

தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை!




ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ஒரு சிறு உதவியாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை பலரது மனதிலும் விதைத்த பாடல் என்றால் அது மிகையல்ல!




ராகதேவன் இளையராஜாவின் இனிய பிறந்த நாளில், வணங்கி அவர் இசையில் மகிழ்கிறோம்!

பயம்..!


நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி பிணைக்கப்பட்டிருக்கும் வலை;பலர் அளவுக்கு அதிகமாகவே பிணைத்துக்கொண்டிருப்பார்கள்.

பயம் எல்லோருக்குமே இயற்கைதான்! ஆனால் கண்டபடி பயப்படுவதும், அளவுக்கு அதிகமாக பயப்படுவதும், தினப்படி பயப்படுவதும் உடல்நிலையினை பாதிப்புக்கு கொண்டு வந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ள விஷயங்களாம்!

பயத்திற்கான காரணம் என்ன?

அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும்?

என்ன மாதிரியான தீர்வுகள் உண்டு?

என்ன மாதிரியான முடிவுகளை நாம் எடுக்க இயலும்

இப்படியாக எந்த ஒரு பயத்தை ஏற்படுத்தும் விஷயத்தையும் அலசி ஆராய்ந்து
காயப்போட்டால், பயத்தினால் ஒரு காயமும் உண்டாகாது மனத்தில்!

நம் வாழ்க்கை என்பது ஒரு பராமரிப்பு பயணம் அல்ல, வாழ்வில் புதுப்பரிணாமங்கள் வளர்ச்சிகள் தவறுகளை செய்தல், தவறுகளை திருத்திக்கொள்ளுதல் என வாழ்க்கை பயணம் அமையவேண்டும்!

பயம் கண்டு ஓடாதீர்கள்!

பயம் உங்களை கண்டு பயந்து ஓடும்படி செல்லுங்கள் வெல்லுங்கள்!

இன்னும் சில அறிஞர்கள் உங்களுக்கு பயம் வரணும்ப்பா!? அப்பத்தான் உங்களையே நீங்க கேள்வி கேட்டுக்க முடியும் அப்படின்னு அட்வைஸ் பண்றாங்க ஆமாங்க அதுவும் கூட சரிதானே!

ஒவ்வொரு முறை பயம் வரும்போதும் அது எப்படி நமக்குள் வந்தது? நாம் என்ன தவறு செய்தோம்? என்று நமக்குள்ளேயே கேள்விகள் எழவைக்க வேண்டும்!

சரி பயத்தை எப்படி ஈசியா போக்கலாம்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது!

ஆன்மீகம், காதல், நட்பு இப்படி பல வழிகள் இருக்கு ஆனால் அதை ஒவ்வொண்ணா விளக்கமா சொல்றதுக்கு எனக்கு இப்ப ரொம்ப பயமா இருக்கறதால மீ த எஸ்கேப்பு!

கோபம்...!


சடக்கென்று வந்து செல்லும் ஒரு விஷயம் சென்ற பின்புதான் தெரியும் அதன் வடுவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளின் விபரங்களும்! நமக்கு பிடிக்காத ஒன்றினை மற்றவர் செய்யும் போதுதான் பெரும்பாலும் கோபம் வெளிப்படுகிறது.

பெரும்பாலான மனிதர்கள் கோபம் அடைந்து அதை வெளிக்காட்டிய பின்னர் சில மணி நேரங்கள் கழித்தோ அல்லது சில நாட்கள் கழித்தோ கூட தமது கோபம் நினைத்து வருந்துதல் அல்லது தவறு என கண்டறிகிறார்களாம் இன்னும் சிலர் தம்மை நினைத்துப்பார்த்து கேலியாக சிரித்துக்கொள்கிறார்களாம்! இதைத்தான் கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்று நம் பெரியவர்கள் சொன்னார்களோ என்னவோ....!?

பிடிக்காத வேலையில் மற்றவர்கள் ஈடுபடுதல், பிடிக்காத வேலையில் ஈடுபட்டல் இவைகளால் தான் ஆத்திரம் அல்லது கோபம் குபுக்கென்று வந்து வார்த்தைகளாய் விழுகிறது சில சமயங்களில் அடிதடிகளாய் கூட அரங்கேறுகிறது.

கோபத்தினை வெளிப்படுத்துவதில், பெரும்பாலானோரின் ஆதரவோடு முதலிடத்தில் இருப்பது சவுண்டு வுடுதல் - காட்டு கத்தல் கத்தினால் மனுசன் சரியான கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டுமாம்!

அருகிலிருக்கும் பொருட்களை உடைத்தல், கண்ணாடிகளை தூள் தூளக்குதல்,இதெல்லாம் நார்மலா நடக்குறது!

நம்ம ஊரு ஸ்டைல் கோபங்கள் எல்லாம், பாத்திரங்களை வீசுதல் - பூரிகட்டைகளை பற்றி தெரியாதவர்களா இருக்கிறார்கள் நம் வலைப்பதிவுலகில்:-)

நாற்காலிகளை உடைத்தல்,சுவரில் முட்டிக்கொள்ளுதல் - இதிலும் சிலர் ரொம்ப ஜாக்கிரதையாக தலையாணை வைத்துக்கொண்டு முட்டுபவர்களும் உண்டு! இப்படித்தான் வெளிப்படுத்தப்படுகிறது. இதையும் தவிர்த்து அதிக பட்ச கோபங்கள் ஆபத்தான முறையிலும் கூட வெளிப்படுத்தப்படுகிறது!

எனக்கு ரொம்ப கோபம் வரும் ஆனால், வெளியில காட்டிக்கவே மாட்டேன் என்று பெருமைக்கொள்ளும் மக்களுக்கு மரியாதையாக கோபத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்...! உங்களுக்குத்தான் நிறைய நோய்கள் வர வாய்ப்பிருக்கிறதாம்!

சரி கோபத்தை எப்படி நிப்பாட்டறதுன்ன்னு கேட்டா?

கோபத்தை நிப்பாட்டுவது என்பது உடனே சாத்தியமில்லாத விசயம், அதை கட்டுப்படுத்தும் முயற்சிகளை முதலில் மேற்கொள்ளுங்கள் ! பிறகு மெல்ல குறைந்து, பின் உங்களிடமிருந்து விட்டு விலகும்!

கோபத்தின் ஆதிக்கம் அதிகரித்தால், பிடிக்காத செயல்களும் தொடர்ந்தால், அந்த இடத்தினை விட்டு உடனே அகன்றிடவேண்டும்! என்று சிலர் அறிஞர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்!

ரொம்ப பெஸ்ட்டுன்னு சொல்லணும்னா 1,2,3,4,5,6,7,8,9,10....... தானாம்! இதுதான் நல்ல வொர்க் -அவுட் ஆகி கோபத்தை அவுட் செய்கிறதாம்!

அப்படியும் கோபம் இருந்தால் நன்றாக மூச்சினை உள்ளிழுத்து வெளி விடுங்கள் சில நிமிடங்களுக்கு.....!

இன்னும் கொஞ்சம் கோபம் இருந்தால் எதாவது பாட்டு கேளுங்கள் அல்லது பக்தி மார்க்கத்திற்கு சென்றுவிடுங்கள்!

இல்லப்பா இன்னும் கூட எனக்கு கோபம் இருக்குப்பா என்ன பண்றதுன்னு கேட்டா ஒரே முடிவுதான்...!

போய் செவுத்துல முட்டிக்கோங்கப்பா!

எல்லாமே க்ளியர் ஆகிடும்! (பின்ன என்னங்க இதுக்கும் மேலேயுமா ஒரு மனுசனுக்கு கோபம் இருக்கும்!)

நல்லா பரீட்சை எழுதுங்க...!


காலையிலேயே எழுந்துவிடுங்கள்!

ரிலாக்சாக இருங்கள்!

உங்களுக்கு மட்டும் தான் பரீட்சை என்பதில் கவனத்தை வைத்துக்கொள்ளுங்கள் - குடும்பமே டென்ஷனாக இருக்க தேவையில்லைத்தானே!

உங்களுக்கு பிடித்த பேனாக்களை உங்கள் வசதிப்படியே வைத்துக்கொள்ளுங்கள்!

சிலரது வீடுகளில் பெற்றோர் புது பேனா வகையறாக்களை வாங்கி ஆசையோடு தருவார்கள் - பெற்றுக்கொள்ளுங்கள்!

ஆன்மீக ஈடுபாடு இருப்பினும் கொஞ்சம் கடவுளையும் கூ(கும்)ப்பிட்டுக்கொள்ளுங்கள்!

தேர்வுக்கு அரை மணி நேரம் முன்பே இருக்குமாறு சென்றுவிடுங்கள்!
(அன்றைய நாளில் இந்த மணித்துளிகள் வரையிலும் படிக்க வேண்டிய தேவையே இல்லை- தினமும் சரியாக படித்திருந்தால்!)

தேர்வு அறைக்குள் சென்று அமர்ந்து பின்னர் அக்கம் பக்கம் பார்த்து சிரிப்பதோ அல்லது பாடம் சம்பந்தமாக பேசுவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள்!

கையில் தேர்வு வினாத்தாள் பெற்றதும் அதை முழுவதும் மிகப்பொறுமையாக ஒரு முறை பாருங்கள்!

பிளான் செய்துகொள்ளுங்கள் எவற்றை முதலில் எழுதவேண்டும் என்று (தேவைப்பட்டால் மொக்கையை கடைசியில் வைத்துக்கொள்ளுங்கள்)

ரொம்ப பெரிய கேள்விகளுக்கான பதில்களில் உங்களது விடையின் சாரம்சத்தை முதலில் சிறு முன்னுரையாக்கி பின்னர் தெளிவாக எழுதுங்கள்!

எழுதுங்கள் நல்ல தெளிவான வார்த்தைகளை எளிதில் மற்றவர்களுக்கு புரியும் வகையில்!

புலவர்கள் பரம்பரையிலேயே வந்தாலும் கூட நீங்கள் எழுதப்போவது காகிதத்தில்தான் என்பதை உணர்ந்து,பேனாவை எழுத்தாணியாகவோ அல்லது காகிதத்தை ஒலைச்சுவடியாகவே தீர்மானித்து நினைத்துக்கொள்ளாதீர்!

நேரத்தை உத்தேசமாக கணக்கிட்டு ஒவ்வொரு வினாவிற்கும் பிரித்துக்கொண்டு தேர்வு முடிவடைவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பே போஸ்ட் புரொடெக்‌ஷனுக்கு தயாராகி விடுங்கள்!

கட்சி கலர்களோ அல்லது கண்ட கண்ட எரிச்சலை வரவழைக்கும் விதத்திலோ போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளை மேற்கொள்ளாதீர்கள்!

கடைசி நிமிடங்களில் சுருங்க சொல்லி விளக்கும் விதமான விடைகளுக்கேற கேள்விகளை எடுத்துப்போட்டு எழுதுங்கள்!

முடித்துவிட்டு வெளியேறுகையில் தேவையற்ற தேர்வு தாள் விவாதங்களை எழுப்பாமல்,

வீட்டுக்கு நடையை கட்டுங்கள்!

வெற்றி!!!

உங்கள் வாழ்க்கைக்கு வழியை காட்டும்!

இனிய ஆண்டில் - உதவிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்!



மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.

சேவை என்று தெரியாமலே, அனைவரும் நமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு, நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டும்!

நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை... இத்யாதி இருக்கின்றன. 'நம் சொந்த கஷ்டத்துக்கு நடுவில் சமூக சேவை வேறா!' என்று எண்ணக் கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறைக்க வழி உண்டாகும்.

ஒரு லாப- நஷ்ட வியாபாரமாக நினைக்காமலே பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மால் ஆனதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால், போதும். அதனால் பிறத்தியார் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்... நமக்கே ஒரு சித்த சுத்தியும் ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு, அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.

நம்மைப் போல் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லாரும் ஒரு சங்கமாக, ஒரே அபிப்பிராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம்.

அப்படிப் பலர் கூடிச் செய்யும் போது நிறையப் பணி செய்ய முடியும். இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல், சத்தியத்தாலும், நியமத்தாலும் காக்க வேண்டும்.

உதவி செய்பவர்களுக்கு ஊக்கமும் அத்தியாவசியம். மான- அவமானத்தை பொருட்படுத்தாத குணமும் வேண்டும்.

பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கின்ற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவிட வேண்டும்.

'வாழ்க்கைத் தொல்லைகளிடையே கொஞ்சம் உல்லாசமாகப் பொழுது போக்குவது ஒரு தப்பா' என்று கேட்பீர்கள்.

உங்களுக்குச் சொல்கிறேன்; பரோபகாரமாகச் சேவை செய்தால், அதுவே விளையாட்டு; அதுவே இன்பம்.

கண்ணதாசனிடமிருந்து,

அர்த்தமுள்ள இந்து மதத்தின் வழியாக...!

டிசம்பர் 26




மனதில் பதிந்த சோகத்தை

மறந்துவிட முடியாத நாளாக

இன்று டிசம்பர் 26

எதிர்காலம் நோக்கியது மட்டுமல்ல

என் பார்வை..!

என் சொந்தங்களை

கொன்ற காலனை

எப்படி வீழ்த்துவேன் என்ற பார்வையில்

என் தடம் பதிக்கின்றேன்....!

பயணத்தில் நான்...


நீண்ட நெடிய சாலை!

பாதை தெரிகிறது!

பயமும் தெரிகிறது!

தனி ஒருவனாக கடக்கப்போவதை நினைத்து!

யாருமில்லா இருபக்கங்களில்

யாரை நான் கூப்பிடுவேன்!

யாரை நான் கும்பிடுவேன்!

எங்கள் ஊர் அரசியல்வாதிகள்;

எண்கண் முன்னே என்னை பழித்து சிரிக்கின்றார்கள்;

யாருமே இல்லாத இடத்தில் போட்ட கும்பிடுக்காக

நான் அவர்களைப்பார்த்து எத்தனை முறை சிரித்திருப்பேன்..!

யாருமில்லா ஊராகத்தான் முதலில் தெரிகிறது!

பள்ளங்கள்தான் முதலில் கண்ணில்படுகின்றன,

ஒன்று மட்டும் உறுதியாகிறது.

போகும் பாதையில் பயங்கரம் இல்லையென்று;

தென்றல் காற்று என்னை தொட்டுச்சொல்கிறது,

நானும் செல்வேன் வெல்வேன் என்று..!

எதிர்கொள்ள யாருமில்லாவிட்டாலும்,

இதோ பயணம் தொடங்கிவிட்டேன்!

பாதையே மலர்களால் வேண்டாம்!

பாதையில் வரும் மரங்களாவது,

என் மீது மலர்களை உதிருமா..?



(ஜீவ்ஸ் அண்ணாச்சி தானாகவே முன்வந்து மெருகேற்றி தந்த படம் - இணைய நட்புறவு இணைந்த நேரமும் கூட!)

டிஸ்கி:-கடந்த வருடத்தில் இதே நாளின் நட்சத்திர வாரத்து பதிவு மீள் பதிவாய்...!