கூகுள்ல அலைஞ்சு திரிஞ்சு சூப்பரா ஒரு போட்டோவை சுட்டு அதுல என்னோட (இல்லாட்டி மல்லு ஃபிகர்) போட்டோவை போட்டு பேக்கிரவுண்ட் எல்லாம் சூப்பரா செட் பண்ணி கீழ அழகாய் வாழ்த்துக்கள்ன்னு டைப் செஞ்சுட்டு அதை அப்படியே ஒரு பத்து பதினைஞ்சு ப்ரெண்ட்ஸ்க்கு அனுப்பிச்சு வைச்சுட்டா ஹப்பாடான்னு ஒரு திருப்தி வரும்! அதுக்கு ரிப்ளை வருதோ அல்லது அந்த வாழ்த்து or போட்டோ யாரையாச்சும் ஈர்க்குதா அப்படின்னு எல்லாம் கவலைப்பட்டதே கிடையாது!- (ஒரே ஒரு முறை மட்டும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து அனுப்பிச்சதுக்கு ஒரு நண்பர் அதெல்லாம் நம்ம கலாச்சரம் இல்லைன்னு போட்டு கும்மிட்டாங்க!)
இயல்பாவே வாழ்த்து அட்டைகள் மேல ஒரு பிரியம் இருக்கறவங்களாலதான் தொடர்ந்து இது மாதிரி வாழ்த்து அட்டைகள் செஞ்சு அல்லது வாங்கி அனுப்பிச்சிக்கிட்டே இருக்கமுடியும்! இதை செய்யறதால என்ன பெருசா சாதிச்சுட்டோம் பதில் ஒருத்தங்க கூட போடமாட்டேங்கறாங்களேன்னு சில சமயம் தனக்கு தானே கேள்விகள் ரைஸ் ஆனாலும்,வெகு சீக்கிரத்துலயே அதை மறக்க வைக்கிற மாதிரி அடுத்து வர்ற விசேஷ நாளுக்கு என்ன செய்யலாம்ன்னுதான் யோசிக்க தோணும்! - லைஃப்ல இதெல்லாம் சாதா’ரண’மப்பான்னு போய்க்கிட்டே இருக்கணும்ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க :)
போட்டோஷாப்ல ரெடி பண்றது ஒரு ஸ்டைல்ன்னா இன்னும் சில பேர் ஓவியங்கள் வரையறது,படங்களில் சின்ன சின்ன மணிகளை கொண்டு ரொம்ப பொறுமையாக ஒட்டி அனுப்புவாங்க! -சூப்பரா இருக்கும் - முன்பெல்லாம் இப்படி வரும் ஓவியங்களை நிறைய பேர் ஆர்வத்தோட ஃப்ரேம் செஞ்சு,யாரு கொடுத்தான்னு பேர் எல்லாம் எழுதி வீட்ல மாட்டி வைச்சுப்பாங்க! இப்ப அதெல்லாம் ரொம்ப கம்மியாகிடுச்சு !
சரி இப்ப எதுக்கு இந்த பீலிங்க்ஸ் அப்படின்னு நீங்க கேக்கமாட்டீங்க இருந்தாலும் சொல்லவேண்டிய நிர்பந்தம் எனக்கு இருக்கே! (பின்னே எண்ட்கார்டு போடணும்ல!) இன்னிக்கு உலகம் பூரா வாழ்த்து அட்டைகள் கிரியேடிவா தாங்களாகவே தயாரிப்பவர்களை உற்சாகப்படுத்தணும்ன்னு உலக நாடுகள் சபை சார்பாக WORLD CARD MAKING DAY கொண்டாடுறாங்க அதான்!
வாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் ஆர்வம் நிறைய இருக்கறவங்க இந்த பக்கம்போனீங்கன்னா - ஏகப்பட்ட வித விதமான டிசைன் கார்டுகள் செய்யுறதுக்கு மாடல்கள் கொடுத்து - சோறு போட்டு குழம்பும் ஊத்துறாங்க! டிரை பண்ணி பாருங்க!




















