பழங்குடி மக்கள் - விழிப்புணர்வு நாள் - ஆகஸ்ட்டு 9

இயற்கை வாழ்க்கையின் மீது இஷ்டப்பட்டு வாழ நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு பிரிவு!

சலுகைகள் முழுதும் கிடைக்கப்பெறாமல் அது பற்றிய கவலைகள் ஏதுமின்றி அவர்களும் சரி, அரசும் சரி, தன் தினசரி கடமைகளினை நிறைவேற்றிக்கொண்டு செல்கின்றனர்!

இந்தியாவில் பழங்குடி மக்கள் எஸ்.டி ஆக்கப்பட்டவர்கள்! ஆனால் இவர்களின் வாழ்க்கை இன்னும் எம்டியாகவே இருக்கிறது!

நம் தமிழகத்தில் உள்ள பழங்குடி மக்களில் சிலரை பற்றி கொஞ்சம் விசயம் தெரிந்துக்கொளவோம்!

முண்டா! - இவர்கள் காடுகளினை சார்ந்திருந்த விவசாய நிலங்களில் விவசாயம் செய்துவந்தவர்களாம் மிக எளிதில் இவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களால் இப்போது இவர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கும் நிலைதான்! வில்லும் அம்புடனும் திரிந்த இவர்கள் அதை பெரும்பாலும் தங்களை தாக்கவரும் மனிதர்களினை திருப்பி தாக்கவே பயன்படுத்தி வந்திருக்கிறாங்களாம்! - அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கும்போல காட்டுல இருக்கற ஆளுங்கள விட நாட்டுல இருக்கற ஆளுங்க ரொம்ப விஷம்ன்னு !

கோயா! - இவர்கள் காடுகளில் விளையும் பழவகைகளினை முதலீட்டாக்கி அதை கொண்டு ஜீவனம் நடத்தியவர்கள்!

காணிக்காரர்கள் - மலையாள தமிழ்நாடு காடுகளில் இவர்கள் வாழ்ந்த கதையினை இவர்கள் பேசும் இரு மொழி கலந்த பேச்சு உங்களுக்கு உணர்த்தும்!

காடர் :- டாப் ஸ்லிப்ல் இவர்கள் வாழந்து வருகிறார்கள்! ஒட்டுமொத்தமாக தேசிய வனவிலங்கு பூங்காவாக மாற்றம் செய்ய வேண்டி டாப்ஸ்லிப்பில் வசிக்கும் இவர்களினை வெளியேற்ற கடும் பிரயத்தனம் செய்கிறது அரசு!

சோளகர் :- இவர்கள் பேச்சு மொழி கன்னடம் தமிழ் இவர்களை கிழங்கு வகை விவசாயம் இவர்களின் தொழிலாக ஒரு காலததில் இருந்து வந்தது!

இருளர் :- பாம்புகள் எலிகளை பிடிப்பதினை தொழிலாக சில சமயம் மேற்கொண்டவர்கள் தற்பொழுது விவசாய கூலிகளாக வேலை செய்து வருகின்றனர்!

இவர்களை போன்றே லம்பாடிகள் குறிச்சான்கள் என மேலும் நிறைய பிரிவினர் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் இவர்களுக்கெல்லாம் பொதுவான ஒரு விசயம்!



தம் வாழ்ந்த இடத்தினை,நிலத்தினை விட்டு தொழிலினை விட்டு பிறிதொரு இடத்துக்கு சென்றதாலும், இன்றும் பெரும்பாலோனோர் ஏழைகளாக அரசின் உதவிக்கு கை ஏந்தியபடியே காத்துக்கொண்டிருக்கிறார்கள்!

அவர்களின் காத்திருப்புக்கு கட்டாயம் நன்மை வந்து சேரட்டும்! அதுவே இது போன்ற பழங்குடியினருக்காக, உலகம் முழுவதிலும் விழிப்புணர்வு வேண்டி கடைப்பிடிக்கப்படும் இன்றைய நாளின் வெற்றியாக இருக்கும்!

******************************************************************************
சம்பந்தா சம்பந்தமில்லாதது!

தமிழக அமைச்சரவையில் இடம் வேண்டும் - தங்கபாலு தலைவர், காங்கிரஸ் தமிழ்நாடு

>>>

தமிழகத்தின் நலனுக்காக எத்தனை அவமானங்களையும் சந்திக்க தயார் - தமிழக முதல்வர், தமிழ்நாடு

0 பேர் கமெண்டிட்டாங்க: